என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் God mode பாடல் வெளியானது
    X

    சூர்யா நடித்துள்ள 'கருப்பு' படத்தின் God mode பாடல் வெளியானது

    • கருப்பு படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

    ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.

    இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

    படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதியாகவில்லை. திரைப்படம் பொங்கலுக்கு வெளி வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் ரீ -ரெகார்டிங் பணிகளை சாய் அபயங்கர் முடித்துள்ளார்.

    இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருப்பு படத்தின் முதல் சிங்கிளான 'GOD MODE' இன்று வெளியானது.

    Next Story
    ×