VIDEO: என் மகள் நன்றாக பாடுவாள்... மேடையில் சாய் அபயங்கரிடம் வாய்ப்பு கேட்ட தேவயானி

சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஹிட் அடித்தது. சாய் அபயங்கர் இசையமைத்த டியூட், பல்டி ஆல்பங்கள் ரசிகர்களை கவர்ந்தன.
VIDEO: என் மகள் நன்றாக பாடுவாள்... மேடையில் சாய் அபயங்கரிடம் வாய்ப்பு கேட்ட தேவயானி
Published on

சாய் அபயங்கர், பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு - ஹரிணி தம்பதியின் மகன் ஆவார். சுயாதீன இசைக்கலைஞரான சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய 'கட்சி சேர' மற்றும் 'ஆச கூட' பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஹிட் அடித்தது.

இதையடுத்து அவர் இசையமைத்த டியூட், பல்டி ஆல்பங்கள் ரசிகர்களை கவர்ந்தன. இதனால் பல பெரிய நடிகர்களின் படங்களுக்கு தற்போது சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் வைத்து சாய் அபயங்கரிடம் தன மகளுக்கு நடிகை தேவயானி வாய்ப்பு கேட்டுள்ளார்.

மேடையில் சாய் அபயங்கரிடம் பேசிய தேவயானி, "முதலில் சாய் அபயங்கரின் அம்மா - அப்பாவின் ரசிகை நான். இப்போது சாய் அபயங்கரின் ரசிகை. என் மகளும் அவரின் ரசிகை தான். என் மகள் இனியா நன்றாக பாடுவாள். அவளுக்கு உங்களுடன் பாட வேண்டும் என்பது தான் கனவு. எதாவது வாய்ப்பு இருந்தால் என் மகளுக்கு கொடுங்கள்" என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com