என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sai Abhyankkar"

    • ‘தங்கம்' என்ற படத்தில் நடித்த உன்னி சிவலிங்கம் என்பவர், இந்தப் படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
    • இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார்.

    மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருப்பவர், ஷான் நிகம். இவரது நடிப்பில் விளையாட்டை மையமாக வைத்து 'பல்டி' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. 'தங்கம்' என்ற படத்தில் நடித்த உன்னி சிவலிங்கம் என்பவர், இந்தப் படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இதன் மூலம் மலையாளத்தில் அவர் அறிமுகம் ஆகிறார்.

    இது தொடர்பாக, மலையாள முன்னணி நடிகர் மோகன்லால், சாய் அபயங்கரை மலையாள சினிமாவிற்கு வரவேற்பது போன்ற வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    கட்சி சேர புகழ், ஆச கூட போன்ற ஆல்ப பாடல்களுக்கு இசையமைத்ததன் மூலமாக கவனம் பெற்ற சாய் அபயங்கர், தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் 'டியூட்' சூர்யா நடிக்கும் 'கருப்பு' ராகவா லாரன்ஸ் - நிவின்பாலி நடிக்கும் 'பென்ஸ்' ஆகிய படங்களுக்கும், சிம்புவின் 49-வது படம், அல்லு அர்ஜூன் நடிப்பில் அட்லி இயக்கும் படம், சிவகார்த்திகேயன் படம் ஆகியவற்றிற்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஷேன் நிகாம் முக்கியமானவர்.
    • பல்டி படத்தை அறிமுக இயக்குநரான உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார்.

    மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஷேன் நிகாம் முக்கியமானவர். இவர் சில மாதங்களுக்கு முன் மெட்ராஸ்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் கலையரசன், நிஹாரிகா, ஐஷ்வர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    இந்நிலையில் ஷேன் நிகாமின் 25- வது திரைப்படமான பல்டி படத்தை அறிமுக இயக்குநரான உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார். இப்படத்தில் இவருடன் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் சாந்தனு பாக்கியராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

    இந்நிலையில் படத்தின் இசையை சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இது இவர் இயக்கும் முதல் மலையாள திரைப்படமாகும். இதற்கு ஒரு ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மோகன்லால் இவரை வரவேற்கும் படி ஆடியோ இடம்பெற்றுள்ளது.

    படத்தை சந்தோஷ் குருவில்லா தயாரிக்க தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் ஓனத்தை முன்னிட்டு வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

    • பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
    • பேரலல் யூனிவர்ஸ் கான்சப்டில் உருவாகியுள்ள கதைக்களமாகும்.

    ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

    அல்லு அர்ஜுன் பிறந்தநாளான அன்று புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

    இத்திரைப்படம் பேரலல் யூனிவர்ஸ் கான்சப்டில் உருவாகியுள்ள கதைக்களமாகும். இப்படத்தில் அல்லு அர்ஜுன் வேற்று கிரகத்தில் இருந்து வரும் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் நாளை (ஜூன் 7) காலை 11 மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
    • பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

    ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

    அல்லு அர்ஜுன் பிறந்தநாளான அன்று புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

    இத்திரைப்படம் பேரலல் யூனிவர்ஸ் கான்சப்டில் உருவாகியுள்ள கதைக்களமாகும். படத்தின் கான்செப்ட் ஷூட் சமீபத்தில் நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. அதில் நடிகர் அல்லு ஆர்ஜுன் பல வித்தியாசமான தோற்றத்தில் லுக் டெஸ்ட் எடுத்துள்ளனர்.

    இப்படத்தில் அல்லு அர்ஜுன் வேற்று கிரகத்தில் இருந்து வரும் கதாப்பாத்திரத்தில்ந் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் 12 வயதுள்ள ஒரு முக்கிய கதாப்பாத்திரம் இருப்பதாகவும் அதற்கு ஆடிஷன் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் இப்படத்திற்கு அல்லு அர்ஜுன் 200 கோடி சம்பளம் மற்றும் இயக்குநர் அட்லீ-க்கு சம்பளம் 125 கோடி ரூபாய் என தகவல்கள் பரவி வருகிறது.

    • சிம்பு அடுத்து நடிக்கும் STR49 படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
    • முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்ககூடிய திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

    சிம்பு அடுத்து நடிக்கும் STR49 படத்தை பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளதாகவும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

    இப்படம் மிகப்பெரிய மாஸ் மற்றும் கலக்கலப்பான திரைப்படமாக இருக்கும். வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல் ஒரு பக்கா கமெர்ஷியல் ஜாலி திரைப்படமாக இருக்கும். முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்ககூடிய திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார் நடிகர் சிம்பு. இன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துவிட்டு அதனுடன் புது அத்தியாயத்தை புது இசையுடன் தொடங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    சிம்பு தற்பொழுது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அட்லி, அல்லு அர்ஜுனை கதாநாயகனாக கொண்டு புதிய படத்தை ஒன்று இயக்க உள்ளார்.
    • ப்ரீயட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

    ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டில் மற்றுமொரு படத்தை அட்லி இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    அதனை தொடர்ந்து அட்லி, அல்லு அர்ஜுனை கதாநாயகனாக கொண்டு புதிய படத்தை ஒன்று இயக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

    இதனிடையே, அடுத்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவது தொடர்பான வீடியோவை அட்லி சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். ஆனால் படம் தொடர்பான எந்த தகவலையும் அவர் கூறவில்லை.

    இந்த நிலையில், அல்லு அர்ஜுன் பிறந்தநாளான அன்று புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இயக்குனர் அட்லி எக்ஸ் தள பக்கத்தில், அல்லி அர்ஜுனின் 22 படத்தையும், அட்லியின் 6-வது படத்தையும் குறிக்கும் வகையில் #AA22xA6 என்ற ஹஸ்டேக்குடன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    ப்ரீயட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

    இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக தகவல் வௌியான நிலையில், அந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.

    இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசைக்கு படங்கள் வரிசைக்கட்டி நிற்கிறது.

    அதன்படி, சூர்யா 45, எஸ்டிஆர் 49, பென்ஸ், பிஆர்04, ஏஏ22Xஏ6 என அடுத்தடுத்து படங்கள் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார்.
    • படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கிறார்.

    சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

    படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொள்கிறார். படப்பிடிப்பு பணிகள் தற்பொழுது ஐதராபாத் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது

    படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில் படத்தில் ஸ்வசிகா , மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி,அனகா மாயா ரவி நடிக்கவுள்ளனர்.

    படத்தின் இசையமைப்பு வேலைகள் தொடங்கியுள்ளது. இசையமைப்பாளர் சாய் அபியங்கரும் ஆர்.ஜே பாலாஜியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை அவர்களது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.
    • இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

    லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

    லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

    இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே ரெமோ, சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    சில நாட்களுக்கு முன் லாரன்ஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது .அந்த வீடியோவில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய யுனிவர்ஸுக்கு லாரன்ஸை வரவேற்கிறார்.

    இதனால் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு.வில் ஏற்கெனவே இருக்கும் கைதி டில்லி, விக்ரம், லியோ உள்ளிட்ட கதாபாத்திரங்களுடன் இந்த 'பென்ஸ்' கதாபாத்திரமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

    இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் குறித்து தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. கட்சி சேர மற்றும் ஆசை கூட போன்ற இண்டிபெண்டண்ட் பாடலை இசையமைத்து பாடியவர் சாய் அப்யங்கர். இவர் இசையமைத்த இரண்டு பாடலகளும் மிகப்பெரிய ஹிட்டானது.

    இவர் இப்படத்திற்கு இசையைக்கவுள்ளார். இதைக்குறித்து அவர் பேசும்பொழுது " பென்ஸ் திரைப்படம் டார்க் காமெடி மற்றும் கமெர்ஷியல் டச்சுடன் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படத்திற்கு ஒரு சர்வதேச இசையமைப்பை கொடுக்கவுள்ளோம். இதுவரை LCU படங்களில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரியளவில் ஹிட்டாகியுள்ளது. இதுவரை சாம் சி.எஸ் மற்றும் அனிருத் மட்டும் இசையமைத்த படங்களுக்கு நான் இசையமைக்கும் தருணம் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது" என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.
    • ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

    லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

    லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

    இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே ரெமோ, சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    சில நாட்களுக்கு முன் லாரன்ஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது .அந்த வீடியோவில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய யுனிவர்ஸுக்கு லாரன்ஸை வரவேற்கிறார்.

    இதனால் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு.வில் ஏற்கெனவே இருக்கும் கைதி டில்லி, விக்ரம், லியோ உள்ளிட்ட கதாபாத்திரங்களுடன் இந்த 'பென்ஸ்' கதாபாத்திரமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

    இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் குறித்து தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. கட்சி சேர மற்றும் ஆசை கூட போன்ற இண்டிபெண்டண்ட் பாடலை இசையமைத்து பாடியவர் சாய் அப்யங்கர். இவர் இசையமைத்த இரண்டு பாடலகளும் மிகப்பெரிய ஹிட்டானது.

    இவர் இப்படத்திற்கு இசையைக்கவுள்ளார். இதுக்குறித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    இதைக்குறித்து அவர் பேசும்பொழுது " பென்ஸ் திரைப்படம் டார்க் காமெடி மற்றும் கமெர்ஷியல் டச்சுடன் இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படத்திற்கு ஒரு சர்வதேச இசையமைப்பை கொடுக்கவுள்ளோம். இதுவரை LCU படங்களில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரியளவில் ஹிட்டாகியுள்ளது. இதுவரை சாம் சி.எஸ் மற்றும் அனிருத் மட்டும் இசையமைத்த படங்களுக்கு நான் இசையமைக்கும் தருணம் மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது" என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தாண்டு தொடக்கத்தில் 'கட்சி சேர' என்ற பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டார்.
    • சாய் அபயங்கர் 'ஆசை கூட' என்ற பாடலை வெளியிட்டார். இந்தப் பாடலும் இணையத்தில் மிகப் பெரிய வைரல் ஆனது.

     

    தமிழ் திரையுலகில் பாடல்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருந்தே கொண்டே தான் வருகிறது. பாடல்களால் வெற்றிப் பெற்ற படங்களும் உண்டு, ஹிட் பாடல்கள் இல்லாதததால் வரவேற்பு பெறாத படங்களும் உண்டு எனலாம். தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி பெரும் எல்லைகளை தாண்டி செல்லும் நிலையில், திரை இசையில் பல்வேறு பிரிவுகள் உண்டாகி, அவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன.

    அந்த வரிசையில், சமீப காலங்களில் அதிகம் வைரல் ஆகும் புது வகை பாடல்களாக 'இண்டிபெண்டண்ட் பாடல்கள்' வெளியாகி வருகிறது. இதனால் சினிமா அல்லாது தனிமனிதனாக இசை ஆர்வம் கொண்டுள்ள பலருடைய திறமை இங்கு மக்களின் பார்வைக்கு வருகிறது. சினிமா பாடல்கள் அல்லாது இதுப்போன்ற இண்டிபெண்டண்ட் பாடல்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உருவாகி வருகிறது.

    அந்த வகையில் சாய் அபயங்கர் என்ற இளைஞன் இந்தாண்டு தொடக்கத்தில் 'கட்சி சேர' என்ற பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டார். இந்த பாடல் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது. இன்ஸ்டாகிராமில் உள்ள இன்ஃபூலுயன்சர்ஸ் இப்பாடலிற்கு நடனமாடி வீடியோ வெளியிட்டனர்.

    அதைத்தொடர்ந்து சாய் அபயங்கர் 'ஆசை கூட' என்ற பாடலை வெளியிட்டார். இந்தப் பாடலும் இணையத்தில் மிகப் பெரிய வைரல் ஆனது.

    யார் இந்த சாய் அபயங்கர்? சாய் அபயங்கர் பிரபல சினிமா பாடர்களான திப்பு மற்றும் ஹரினி அவர்களின் மகன் ஆவார். இந்த இளம் வயதிலேயே அவர் இசையமைத்த இரு பாடல்களும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

    இந்நிலையில் சாய் அபயங்கர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க பாக்யராஜ் கண்ணன் இயக்கவுள்ளார்.

    தமிழ் சினிமாவில் பல இளம் இசையமைப்பாளர்கள் இருந்தாலும் இந்த வாய்ப்பு சாய் அபயங்கருக்கு கிடைத்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா அவரது 16- வது வயதில் தனது முதல் படமான 'அரவிந்தன்'-க்கு இசையமைத்தார்.

     

    அனிருத் அவரது 22 வது வயதில் முதல் படமான 3 திரைப்படத்திற்கு இசையமைத்தார். சாம் சி. எஸ் அவரது 25 வது வயதில் முதல் படமான 'அம்புலி' திரைப்படத்திற்கு இசையமைத்தார். நிவாஸ் கே. பிரசன்னாவும் அவரது 25 வயதில் முதல் படமான 'தெகிடி' திரைப்படத்திற்கு இசையமைத்தார்.

     

    தற்பொழுது சாய் அபயங்கர் அவரது 21 வயதில் தன்னுடைய முதல் படமான பென்ஸ் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இளம் இசையமைப்பாளர்கள் பலர் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், சாய் அபயங்கர் மிகப் பெரிய படத்திற்கு இசையமைக்க இருப்பது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

    திரைத்துறையில் வாய்ப்பு கிடைப்பதும், அதனை தக்கவைப்பதை பற்றி அத்துறையை சேர்ந்த பலரும் கூறி கேட்டிருப்போம். அந்த வகையில், தன் கையில் மிகப் பெரிய வாய்ப்பை பெற்று இருக்கும் அபயங்கர் அதனை தன் திரைத்துறை பயணத்திற்கான வெற்றிப் படியாக மாற்றிக் கொள்வார் என எதிர்ப்பார்க்கலாம். அவரது வெற்றி பயணத்திற்கு நாமும் சேர்ந்து வாழ்த்துவோம்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
    • சூர்யா 45 படத்திற்கு ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில், சூர்யா நடிக்கும் 45-வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

    அதன்படி சூர்யாவின் 45-வது திரைப்படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்துது.

     


    இந்த நிலையில், சூர்யா 45 படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்தப் படம் பூஜையுடன் தொடங்கியது. இந்தப் படத்தில் லப்பர் பந்து புகழ் ஸ்வஸ்விகா நடிக்கவுள்ளார். இதைத் தொடர்ந்து படத்திற்கு ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

    இவர் இதற்கு முன் மெர்சல், பிகில், ஜவான், கில்லாடி போன்ற வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • சாய் அபயங்கர் பிரபல சினிமா பாடர்களான திப்பு மற்றும் ஹரினி அவர்களின் மகன் ஆவார்.
    • சூர்யா 45 படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

    தமிழ்நாட்டில் அண்மை காலங்களில் பல 'இண்டிபெண்டண்ட் பாடல்கள்' வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் சினிமா பாடல்கள் அல்லாது இதுப்போன்ற இண்டிபெண்டண்ட் பாடல்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உருவாகி வருகிறது.

    அந்த வகையில் சாய் அபயங்கர் என்ற இளைஞன் கடந்தாண்டு தொடக்கத்தில் 'கட்சி சேர' என்ற பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டார். இந்த பாடல் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது. 

    அதைத்தொடர்ந்து சாய் அபயங்கர் 'ஆசை கூட' என்ற பாடலை வெளியிட்டார். இந்தப் பாடலும் இணையத்தில் மிகப் பெரிய வைரல் ஆனது.

    சாய் அபயங்கர் பிரபல சினிமா பாடர்களான திப்பு மற்றும் ஹரினி அவர்களின் மகன் ஆவார். இந்த இளம் வயதிலேயே அவர் இசையமைத்த இரு பாடல்களும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.

    இதனால் சூர்யா 45 படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கரை தேடி வந்தது.

    கட்சி சேரா, ஆசை கூட வரிசையில் சாய் அபயங்கரின் 3 ஆவது இண்டிபெண்டண்ட் பாடலான 'சித்திரபுத்திரி' பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடல் ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×