என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அல்லு அர்ஜுன்"

    • இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
    • ரூ.800 கோடி செலவில் பான் இந்தியா அளவில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

    இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ரூ.800 கோடி செலவில் பான் இந்தியா அளவில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இத்திரைப்படம் பேரலல் யூனிவர்ஸ் கான்சப்டில் உருவாகியுள்ள கதைக்களமாகும். ஹாலிவுட்டில் அவதார் திரைப்படத்தை போல் இந்த படத்திற்காக ஒரு உலகத்தை கிராபிக்ஸ் தொழிநுட்ப உதவியுடன் உருவாக்கி வருகின்றனர். அல்லு அர்ஜுன் இப்படத்தில் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    இந்நிலையில், இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்திற்காக ஹாலிவுட் நட்சத்திரம் வில் ஸ்மித்திடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
    • இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது.

    ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

    பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக பெரும் பொருட் செலவில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் தீபிகா படுகோன் நடிக்க இருக்கிறார். இதற்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

    இந்த நிலையில், இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. இன்று சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழாவில், இயக்குநர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. டாக்டர் பட்டம் பெற்ற அட்லீ மேடையில் பேசும்போது, மிகவும் எமோஷனலாக உணர்வதாக கூறினார்.

     

    மேலும் அவர் சத்தியபாமா குழுமத்தின் உரிமையாளரான ஜேபி ஆர் ஐ பற்றி மிகவும் பெருமையாக பேசினார். "அவருடைய வாழ்க்கையில் இருந்து தான் பிகில் பட ராயப்பன் கதாப்பாத்திரம் உருவானது. என் அப்பா - அம்மா என்ன இயக்குனர் ஆகும் வரை பார்த்துக்கொண்டார்கள் என்றால், அதிலிருந்து இன்று நான் என்னவாக இருக்கிறேன் என்பதற்கு என் மனைவிதான் காரணம். நான் ஒரு நல்ல மனுஷனா மாறியதற்கு முக்கிய காரணம் என் மகன்.

    இதுதவிர என் அண்ணன் தம்பி பெயரை சொன்னால் தெரிச்சுடுவீங்க. என்னோட அண்ணன் தளபதி விஜய்" என அட்லீ கூறியதும் அந்த அரங்கமே அதிர்ந்தது. மேலும் தளபதி ஸ்டைலில் ஒரு குட்டி ஸ்டோரி கூறினார். அதில் கோயிலில் உள்ள படிக்கட்டிற்கும் கருவறையில் உள்ள தெய்வ சிலைக்கும் ஒப்பீட்டு ஒரு கதையை கூறினார். மேலும் " அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் மூலம் நம் திரையுலகம் பெருமைப்படும். அதற்கு நான் நம்பிக்கை கொடுக்கிறேன். மேலும் இதுவரை பார்த்திடாத அளவு பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது" என கூறியுள்ளார்.

    • மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பசில் ஜோசஃப்.
    • மலையாள சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பசில் ஜோசஃப். இவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது.

    பசில் ஜோசஃப் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இவர் நடிப்பில் வெளியான ஜெய ஜெய ஜெய ஹே, ஜான்.ஈ மேன், ஃபலிமி, நுன்னாகுழி மற்றும் சமீபத்தில் வெளியான சூக்ஷ்மதர்ஷினி மற்றும் பொன்மேன் மாபெரும் வெற்றியை பெற்றது. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான மரணமாஸ் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இவர் டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் நடிப்பில் மலையாள சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பசில் ஜோசஃப் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் திரைப்படத்தை இயக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் தற்போழுது அட்லீ இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
    • பெரும் பொருட் செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

    ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

    அல்லு அர்ஜுன் பிறந்தநாளான அன்று புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. பெரும் பொருட் செலவில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இத்திரைப்படம் பேரலல் யூனிவர்ஸ் கான்சப்டில் உருவாகியுள்ள கதைக்களமாகும். ஹாலிவுட்டில் அவதார் திரைப்படத்தை போல் இந்த படத்திற்காக ஒரு உலகத்தை கிராபிக்ஸ் தொழிநுட்ப உதவியுடன் உருவாக்கி வருகின்றனர். அல்லு அர்ஜுன் இப்படத்தில் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

    இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் தற்பொழுது இணைந்துள்ளார். இது தொடர்பாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அட்லீ தீபிகாவிற்கு கதை கூறுகிறார். மேலும் வேற்று கிரக வாசி கதாப்பாத்திரத்தில் தீபிகா நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒரு ஆக்ஷன் கதாப்பாத்திரமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

    • பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
    • பேரலல் யூனிவர்ஸ் கான்சப்டில் உருவாகியுள்ள கதைக்களமாகும்.

    ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

    அல்லு அர்ஜுன் பிறந்தநாளான அன்று புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

    இத்திரைப்படம் பேரலல் யூனிவர்ஸ் கான்சப்டில் உருவாகியுள்ள கதைக்களமாகும். இப்படத்தில் அல்லு அர்ஜுன் வேற்று கிரகத்தில் இருந்து வரும் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் நாளை (ஜூன் 7) காலை 11 மணிக்கு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் கடந்தாண்டு வெளியானது
    • அதிகம் வசூலித்த இந்திய திரைப்படங்கள் பட்டியலில் புஷ்பா 2 இடம் பெற்றுள்ளது.

    சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி பெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இதுவரை அதிகம் வசூலித்த இந்திய திரைப்படங்கள் பட்டியலில் புஷ்பா 2 இடம் பெற்றுள்ளது.

    இந்நிலையில் தெலுங்கானா கௌரவ விருதான கட்டார் விருதை அல்லு அர்க்ஜுன் வென்றுள்ளார். அல்லு அர்ஜுன்  சிறந்த நடிகருக்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. இதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கானா அரசுக்கும், படத்தின் இயக்குநர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் நன்றி தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    • அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
    • பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

    ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

    அல்லு அர்ஜுன் பிறந்தநாளான அன்று புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

    இத்திரைப்படம் பேரலல் யூனிவர்ஸ் கான்சப்டில் உருவாகியுள்ள கதைக்களமாகும். படத்தின் கான்செப்ட் ஷூட் சமீபத்தில் நடைப்பெற்றதாக கூறப்படுகிறது. அதில் நடிகர் அல்லு ஆர்ஜுன் பல வித்தியாசமான தோற்றத்தில் லுக் டெஸ்ட் எடுத்துள்ளனர்.

    இப்படத்தில் அல்லு அர்ஜுன் வேற்று கிரகத்தில் இருந்து வரும் கதாப்பாத்திரத்தில்ந் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் 12 வயதுள்ள ஒரு முக்கிய கதாப்பாத்திரம் இருப்பதாகவும் அதற்கு ஆடிஷன் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் இப்படத்திற்கு அல்லு அர்ஜுன் 200 கோடி சம்பளம் மற்றும் இயக்குநர் அட்லீ-க்கு சம்பளம் 125 கோடி ரூபாய் என தகவல்கள் பரவி வருகிறது.

    • அரவிந்த் கெஜ்ரிவால் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
    • கெஜ்ரிவால் மகளின் திருமணம் ஏப்ரல் 18 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

    டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவால், சம்பவ் ஜெயின் என்பவரை நேற்று திருமணம் செய்தார்.

    இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலின் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் சாமி பாடலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுடன் இணைந்து நடனமாடுகிறார்

    இதே போல், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இந்த நிகழ்வில் நடனமாடிய மற்றொரு வீடியோவும் இணையத்தில் வைரலானது.

    • அட்லி அடுத்து இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளார்.
    • இப்படம் ஒரு பேரலல் யூனிவர்ஸ் ஆக்ஷன் எண்டர்டெயினர் கதைக்களத்தில் உருவாக உள்ளது.

    தமிழில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இவர் கடைசியாக இயக்கிய 'ஜவான்' திரைப்படம் உலகளவில் ரூ. 1,100 கோடியை கடந்து அசத்தியது.

    இந்த நிலையில், இயக்குநர் அட்லி அடுத்து இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுன் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் அட்லீ இயக்கிய மெர்சல், பிகில் மற்றும் ஜவான் திரைப்படங்களில் இரு வேடங்களில் கதாநாயகர்கள் நடித்து இருப்பனர். அந்த வகையில் இப்படமும் அமையவுள்ளது.

    இப்படம் ஒரு பேரலல் யூனிவர்ஸ் ஆக்ஷன் எண்டர்டெயினர் கதைக்களத்தில் உருவாக உள்ளது. அல்லு அர்ஜுனின் 22 படத்தையும், அட்லியின் 6-வது படத்தையும் குறிக்கும் வகையில் #AA22xA6 என்ற ஹஸ்டேக்குடன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டிருந்தது.

    இந்த போஸ்டர் பிரபல ஹாலிவுட் படமான டூன் படத்தின் போஸ்டர் போலவே உள்ளது என்று இணையத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    அட்லி படம் என்றாலே அது பல படங்களின் காப்பியாக தான் இருக்கும் என்று நெட்டிசன்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் நிலையில், அவருடைய புதிய படத்தின் போஸ்டரும் காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

    • அட்லி, அல்லு அர்ஜுனை கதாநாயகனாக கொண்டு புதிய படத்தை ஒன்று இயக்க உள்ளார்.
    • ப்ரீயட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

    ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்டில் மற்றுமொரு படத்தை அட்லி இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    அதனை தொடர்ந்து அட்லி, அல்லு அர்ஜுனை கதாநாயகனாக கொண்டு புதிய படத்தை ஒன்று இயக்க உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

    இதனிடையே, அடுத்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவது தொடர்பான வீடியோவை அட்லி சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். ஆனால் படம் தொடர்பான எந்த தகவலையும் அவர் கூறவில்லை.

    இந்த நிலையில், அல்லு அர்ஜுன் பிறந்தநாளான அன்று புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இயக்குனர் அட்லி எக்ஸ் தள பக்கத்தில், அல்லி அர்ஜுனின் 22 படத்தையும், அட்லியின் 6-வது படத்தையும் குறிக்கும் வகையில் #AA22xA6 என்ற ஹஸ்டேக்குடன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

    ப்ரீயட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

    இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக தகவல் வௌியான நிலையில், அந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.

    இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசைக்கு படங்கள் வரிசைக்கட்டி நிற்கிறது.

    அதன்படி, சூர்யா 45, எஸ்டிஆர் 49, பென்ஸ், பிஆர்04, ஏஏ22Xஏ6 என அடுத்தடுத்து படங்கள் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரியளவில் வெற்றி பெற்றது.
    • அல்லு அர்ஜுன் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

    சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரியளவில் வெற்றி பெற்றது. இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

    இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுன் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு இன்று அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டது.

    இந்நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குநர் சுகுமார் தமிழில் எந்த நடிகரை வைத்து படத்தை இயக்குவீர்கள் என கேட்ட கேள்விக்கு. இயக்குநர் சுகுமார் " நான் தமிழில் திரைப்படம் இயக்கினால் நடிகர் விஜய் , அஜித் மற்றும் கார்த்தியை வைத்து திரைப்படம் இயக்குவேன்" என பதிலளித்துள்ளார்.



    • இயக்குநர் அட்லி அடுத்து இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளார்.
    • இப்படம் ஒரு பேரலல் யூனிவர்ஸ் ஆக்ஷன் எண்டர்டெயினர் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது.

    தமிழில் வெளியான 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இவர் கடைசியாக இயக்கிய 'ஜவான்' திரைப்படம் உலகளவில் ரூ. 1,100 கோடியை கடந்து அசத்தியது.

    இந்த நிலையில், இயக்குநர் அட்லி அடுத்து இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுன் இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் அட்லீ இயக்கிய மெர்சல், பிகில் மற்றும் ஜவான் திரைப்படங்களில் இரு வேடங்களில் கதாநாயகர்கள் நடித்து இருப்பனர். அந்த வகையில் இப்படமும் அமையவுள்ளது.

    இப்படம் ஒரு பேரலல் யூனிவர்ஸ் ஆக்ஷன் எண்டர்டெயினர் கதைக்களத்தில் உருவாக இருக்கிறது. படத்தின் ப்ரோமோ ஷூட் முடிவடைந்துள்ளதாகவும். வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ப்ரோமோவை படக்குழு வெளியிடவுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்நிலையில் சன் பிக்சர்ஸ் `தி மேக்னம் ஓபஸ்'  என்ற போஸ்டர் வெளியிட்டு விரைவில் அப்டேட் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது .நாளை படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் அட்லீ `இப்படத்தில் கண்டிப்பாக மக்களை சர்ப்ரைஸ் செய்வேன். இப்படம் இந்தியாவின் பெருமை மிக்க திரைப்படமாக இருக்கும்" என கூறியுள்ளார்.

    படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    ×