என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கரூர் கூட்டநெரிசல்: அல்லு அர்ஜுன் பாணியில் த.வெ.க. தலைவர் விஜய் கைது ஆவாரா?
    X

    கரூர் கூட்டநெரிசல்: அல்லு அர்ஜுன் பாணியில் த.வெ.க. தலைவர் விஜய் கைது ஆவாரா?

    • விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.
    • விஜயை கைது செய்ய வேண்டும் என்று நடிகை ஓவியா வலியுறுத்தியுள்ளார்.

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.

    தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விவகாரத்தில் விஜயை கைது செய்ய வேண்டும் என்று நடிகை ஓவியா வலியுறுத்தியுள்ளார். இதனால் விஜய் செய்யப்படுவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.

    தெலுங்கானாவில் புஷ்பா 2 பட வெளியீட்டின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி ரேவதி என்ற 39 வயது பெண் உயிரிழந்தது தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதே போல் தமிழ்நாட்டிலும் விஜய் செய்யப்படுவாரா? என்று அவரது ரசிகர்களும் த.வெ.க. தொண்டர்களும் அச்சம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×