என் மலர்

  நீங்கள் தேடியது "Allu Arjun"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 03-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'விக்ரம்'.
  • இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தார்.

  மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  அல்லு அர்ஜுன்

  அல்லு அர்ஜுன்

  இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 'தளபதி 67' படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிற்து.

  இதற்குமுன் தெலுங்கில் முன்னணி நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரபாஸ் ஆகியோரிடம் லோகேஷ் கனகராஜ் படம் குறித்த கதை விவாதத்தில் ஈடுப்பட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் சமந்தா, தற்போது பிரபல நடிகர் நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
  அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இதில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் வருகிற டிசம்பர் மாதமும், 2-ம் பாகம் அடுத்தாண்டும் வெளியாக உள்ளது.

  அல்லு அர்ஜுன்
  அல்லு அர்ஜுன்

  இந்நிலையில், புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஒரு குத்துப் பாடல் இடம்பெறுகிறதாம். அப்பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட முன்னணி நடிகைகள் சிலரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தற்போது நடிகை சமந்தாவை அப்பாடலுக்கு நடனமாட ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அப்பாடல் காட்சியை படமாக்க உள்ளார்களாம்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்கார் படத்தை அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கும் முருகதாஸ், அடுத்ததாக பிரபல நடிகரை வைத்து படம் இயக்க இருக்கிறார். #ARMurugadoss
  தமிழ், தெலுங்கு, இந்தித் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வரும் முருகதாஸ் கடந்த ஆண்டு விஜய்யை வைத்து சர்கார் படத்தை இயக்கினார். வசூல் ரீதியாக அந்தப் படம் வெற்றிபெற்ற நிலையில் தற்போது ரஜினிகாந்தைக் கதாநாயகனாக கொண்டு புதிய படத்தை இயக்கி வருகிறார்.

  இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து முருகதாஸ் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனைக் கதாநாயகனாக கொண்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.  இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக தெலுங்கில் சிரஞ்சீவியைக் கதாநாயகனாக வைத்து ஸ்டாலின் படத்தை இயக்கினார். அங்கு நல்ல வரவேற்பு பெற்ற அந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. 2017-ம் ஆண்டு மகேஷ் பாபுவைக் கதாநாயகனாக வைத்து ஸ்பைடர் படத்தைத் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கியிருந்தார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற 96 படத்தின் தெலுங்கு பதிப்பில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #96TheMovie #AlluArjun
  சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

  தெலுங்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நானி நடிக்க இருப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அல்லு அர்ஜுனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுனும் 96 படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறாராம். எனவே 96 படத்தின் ரீமேக் குறித்த அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   இதற்கிடையே 96 படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #96TheMovie #AlluArjun

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கு நடிகர்களான ராம் சரண், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் ஆகியோரின் படங்கள் தமிழ் நாட்டில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. #TeluguCinema
  ஒரே மாதத்தில் அடுத்தடுத்து மூன்று தெலுங்கு படங்கள் தென்னிந்திய அளவில் சாதனை வெற்றி பெற்றிருப்பதால் உற்சாகம் அடைந்து இருக்கிறது தெலுங்கு பட உலகம். ராம்சரண் நடிப்பில் ரங்கஸ்தலம், மகேஷ்பாபு நடிப்பில் பாரத் அனே நேனு, அல்லு அர்ஜுன் நடிப்பில் நா பேரு சூர்யா ஆகிய மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாகின. மூன்றுமே தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் என்பதால் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகின. மூன்றுமே பெரிய வெற்றியை ருசித்துள்ளன.

  கோடை விடுமுறையை குறி வைத்து இறக்கப்பட்ட இந்த படங்கள் வசூலில் சாதனை புரிந்துள்ளன. ஆந்திராவில் மட்டுமல்லாது சென்னையிலும் மூன்று படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது தமிழ் நடிகர்களுக்கு கலக்கத்தை வரவழைத் திருக்கும். 
  ரங்கஸ்தலம் படம் சென்னையில் முதல் 3 தினங்களில் 1.01 கோடி வசூலித்தது. அந்த வசூலை தாண்டி 1.15 கோடியை வசூலித்தது பாரத் அனே நேனு. இந்த இரண்டு படங்களையும் தூக்கி சாப்பிட்டு இரண்டே நாட்களில் ஒரு கோடியைத் தொட்டது நா பேரு சூர்யா படம். இந்த ஒரு மாதத்தில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரே வெற்றி ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ மட்டும்தான். இந்த வாரம் வெளியான படங்களில் இரும்புத்திரையும் நடிகையர் திலகமும் வெற்றி பெற்றுள்ளன. 

  தமிழ் சினிமா மார்க்கெட் மீது தெலுங்கு ஹீரோக்களுக்கு எப்போதுமே ஒரு கண் உண்டு. அல்லு அர்ஜுன் நடித்த நா பேரு சூர்யா படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிட்டார்கள். வசூலை பார்த்தது. மகேஷ்பாபுவின் பாரத் அனே நேனு படத்தை ரீமேக் செய்ய விஜய், விஷால், சூர்யா உள்ளிட்ட தமிழின் முன்னணி நடிகர்கள் ஆசைப்பட்டனர். ஆனால் அந்த படத்தை டப்பிங் செய்து தமிழில் வெளியிட சொல்லிவிட்டார் மகேஷ்பாபு. பிரபாஸ், ராணா, நானி, சந்தீப் கி‌ஷன், பவன் கல்யாண், ராம்சரண், நாகசதைன்யா உள்ளிட்ட பெரிய தெலுங்கு ஹீரோக்களும் தமிழில் படம் நடிக்க ஆசைப்படுகிறார்கள். சிலர் தாங்கள் நடிக்கும் தெலுங்கு படத்தை தமிழிலும் சேர்த்தே எடுக்க நிர்ப்பந்திக்கிறார்கள்.
  ×