லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடி இவரா?

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கப்பட உள்ளது.இந்த படத்தில் முன்னணி நடிகர்களையும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க திட்டமிடப்பட்டு வருகிறதாம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடி இவரா?
Published on

பல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், இந்தமுறை தமிழ் தாண்டி தெலுங்கில் களம் இறங்கியிருக்கிறார்.

அல்லு அர்ஜூன் நடிப்பில் அவர் புதிய படம் இயக்கப் போகிறார். இது அல்லு அர்ஜூனின் 23-வது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கப்பட இருக்கும் நிலையில், படம் பற்றிய புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது இந்த படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடிக்க பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை ஷ்ரத்தா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாகவும், அவரது தரப்பில் பச்சைக்கொடி காட்டவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதிரடி - ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் முன்னணி நடிகர்களையும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க திட்டமிடப்பட்டு வருகிறதாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com