என் மலர்
நீங்கள் தேடியது "Deepika Padukone"
- அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
- பெரும் பொருட் செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.
ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுன் நடிப்பில் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
அல்லு அர்ஜுன் பிறந்தநாளான அன்று புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. பெரும் பொருட் செலவில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இத்திரைப்படம் பேரலல் யூனிவர்ஸ் கான்சப்டில் உருவாகியுள்ள கதைக்களமாகும். ஹாலிவுட்டில் அவதார் திரைப்படத்தை போல் இந்த படத்திற்காக ஒரு உலகத்தை கிராபிக்ஸ் தொழிநுட்ப உதவியுடன் உருவாக்கி வருகின்றனர். அல்லு அர்ஜுன் இப்படத்தில் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் தற்பொழுது இணைந்துள்ளார். இது தொடர்பாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அட்லீ தீபிகாவிற்கு கதை கூறுகிறார். மேலும் வேற்று கிரக வாசி கதாப்பாத்திரத்தில் தீபிகா நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒரு ஆக்ஷன் கதாப்பாத்திரமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.
- இப்படத்தில் முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
- ‘ஸ்பிரிட்’ திரைக்கு வர தாமதம் ஏற்படும் என்றும் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது.
'அனிமல்' பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கும் படம் 'ஸ்பிரிட்'. மிக பிரமாண்டமாக எடுக்க உள்ள இப்படத்தில் கதாநாயகியாக தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டு இருக்கிறார். நடிகை தீபிகா படுகோனுக்கு கடந்த ஆண்டு இறுதியில் தான் குழந்தை பிறந்தது. அதனால் தற்போது படப்பிடிப்பிற்கு வருவதற்கு பல கண்டிஷன்களை அவர் போட்டுள்ளார். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பிற்கு வருவேன் என்றும் படப்பிடிப்பு 100 நாட்களுக்கு மேல் நீடித்தால், ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிற்கும் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இது பட இயக்குனருக்கும், குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து, 'ஸ்பிரிட்' படத்தில் இருந்து தீபிகா படுகோனை நீக்கிவிட்டு வேறு கதாநாயகியை படக்குழுவினர் தேடி வருகின்றனர்.
தீபிகாவின் கர்ப்பம் மற்றும் பிரசவம் காரணமாகவும், பிரபாஸின் காயம் மற்றும் பிற பட வேலைகள் காரணமாகவும் படம் ஏற்கனவே பல தாமதங்களைச் சந்தித்துள்ளது. இதனிடையே கதாநாயகியை தேடி வருவதால் 'ஸ்பிரிட்' திரைக்கு வர தாமதம் ஏற்படும் என்றும் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது.
- நமக்கு வரவேண்டிய ஆஸ்கார் விருதுகள் அபகரிக்கப்படுகின்றன.
- இந்திய சினிமா வரலாற்றில் நிறைய நல்ல படங்கள் வந்துள்ளன.
தமிழில் ரஜினியின் கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கமல்ஹாசன், பிரபாஸ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான கல்கி 2898 ஏடி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார்.
இந்த நிலையில் இந்திய படங்களுக்கு ஆஸ்கார் விருதுகள் கிடைக்காததற்கு தீபிகா படுகோனே வருத்தம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தீபிகா படுகோனே கூறும்போது, "இந்தியாவில் ஆஸ்கார் விருதுக்கு தகுதியான பல படங்கள் தயாராகி உள்ளன. ஆனால் அவற்றுக்கெல்லாம் ஆஸ்கார் விருது வழங்காமல் புறக்கணித்து விட்டனர்.
நமக்கு வரவேண்டிய ஆஸ்கார் விருதுகள் அபகரிக்கப்படுகின்றன. இந்திய சினிமா வரலாற்றில் நிறைய நல்ல படங்கள் வந்துள்ளன. அந்த படங்களுக்கும் அதில் நடித்த நடிகர் நடிகைகளின் திறமைகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. ராஜமவுலி இயக்கிய ஆர் ஆர் ஆர் படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். அந்த நொடிகள் எனக்கு முக்கியமாக இருந்தது. அந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்றாலும் ஒரு இந்தியராக அந்த வெற்றி மிகச்சிறந்ததாக தோன்றியது'' என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'பதான்' படத்தில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடித்துள்ளார்.
- இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு "பதான்" திரைப்படத்தின் முதல் பாடலான 'அழையா மழை' பாடல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்த பாடலில் தீபிகா நீச்சலுடையில், கவர்ச்சியாக நடித்து உள்ளார். இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே மீது எதிர்மறையான கருத்துகளும் வருகின்றன. பலர் இந்த பாடல் ஆபாசமாக உள்ளது என்று பதிவிட்டு வருகின்றனர். இதனுடன் பதான் புறக்கணிப்பும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இந்த படத்திற்காக தீபிகா 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக தீபிகா படுகோன் வழக்கமான சம்பளத்தை விட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கவர்ச்சி உடையில் நடனமாடுவதற்காக தீபிகா படுகோனே சம்பளத்தை உயர்த்தியுள்ளது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பதான் படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- பேஷ்ரம் ரங் பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.
போபால்:
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் முதல் பாடல் 'பேஷ்ரம் ரங்' வெளியாகியுள்ளது. முதல் பாடலைப் பார்த்ததும், சமூக வலைத்தளங்களில் வந்துள்ள விமர்சனங்களை பார்க்கும்போது பதான் 2023-ம் ஆண்டின் பெரிய படம் என்று கூறப்படுகிறது. ஒரே நாளில் இந்த பாடல் 1.9 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இந்த படத்திற்காக தீபிகா படுகோன் 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமான சம்பளத்தை விட 50 சதவீதம் கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நீச்சல் உடையில், தீபிகா படுகவர்ச்சியாக நடித்து உள்ளார். தற்போது இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் இதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.
மத்தியப் பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ராவும் நடிகை தீபிகா படுகோனின் பதான் படத்தின் பாடல் காட்சியின் காஸ்ட்யூமுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 'பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருக்கும் பிகினி உடையானது மிகவும் ஆட்சேபனைக்குரியது. இந்த பாடலானது அசுத்தமான மனநிலையில் படமாக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. பேஷ்ரம் ரங் பாடலின் வரிகள் மற்றும் பாடல் காட்சிக்கான உடைகள் திருத்தப்பட வேண்டும். இல்லையெனில் மாநிலத்தில் படத்தை திரையில் வெளியிட அனுமதிக்க வேண்டுமா? இல்லையா? என்பதை பரிசீலனை செய்யும்' என எச்சரிக்கை விடுத்துள்ளார். #BoycottPathan என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
- சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பதான்'.
- இப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ளனர்.
சித்தார்த் ஆனந்த் இயக்கிய 'பதான்' இந்தி படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ரூ.15 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு பதான் படத்தில் இடம்பெற்றுள்ள தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி உடையில் கவர்ச்சி நடனம் ஆடி இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

பதான்
வீர சிவாஜி அமைப்பை சேர்ந்தவர்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பதான் படத்தை தடை செய்யும்படி கோஷமிட்டு தீபிகா படுகோனே, ஷாருக்கான் ஆகியோரின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடும்பாவியை செருப்பால் அடிப்பது போன்ற வீடியோவையும் வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா கூறும்போது, ''தீபிகா படுகோனே காவி உடை அணிந்துள்ளார். அசுத்தமான மனநிலையில் படமாக்கி உள்ளனர். பாடல் காட்சியில் இடம்பெற்றுள்ள உடை மற்றும் பாடல் வரிகளையும் நீக்க வேண்டும். இல்லையேல் படத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து யோசிக்க வேண்டிவரும்" என்றார். இதனால் படத்துக்கு தடை விதிக்கப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பதான் படத்தை புறக்கணிக்கும்படி ஹேஷ்டேக்கும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
- ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள படம் பதான்.
- ‘பதான்’ தேச பக்தி படம் என பதான் படம் குறித்து ஷாருக்கான் கருத்து தெரிவித்து உள்ளார்.
ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ள 'பதான்' இந்தி படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ வெளியாகி இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

பதான்
ஷாருக்கானின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடந்தது. பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ள காவி உடை மற்றும் வரிகளை நீக்க வேண்டும் என்று மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா வற்புறுத்தி உள்ளார். படத்தில் வரம்பு மீறிய ஆபாச காட்சிகள் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. பதான் படம் திரையிடப்படும் தியேட்டர்களை கொளுத்துவோம் என்று அயோத்தி அனுமன் காரி அமைப்பு எச்சரித்து உள்ளது.

பதான் படத்திற்கு எதிர்ப்புகள்
இந்நிலையில் பதான் படம் குறித்து ஷாருக்கான் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, ''பதான் என்ன மாதிரியான படம் என்று கேட்கிறார்கள். பதான் ஒரு தேச பக்தி படம். சமூக வலைத்தளங்களில் மோசமான கருத்துக்கள் வருகின்றன. நான் நேர்மறையாகவே இருக்கிறேன்" என்றார்.
- இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பதான்’.
- இப்படம் வருகிற ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பதான்
சமீபத்தில் "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம், டீசர் மற்றும் டிரைலரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படத்தில் இடம்பெற்ற 'அழையா மழை' பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.

ஷாருக்கான் கட் அவுட்
இப்படம் வருகிற ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் உட்லேண்ட்ஸ் தியேட்டருக்கு வெளியே ஷாரூக்கான் ரசிகர்கள் மாபெரும் கட்அவுட் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
- இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் நேற்று வெளியான படம் 'பதான்'.
- இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பதான்
இப்படத்தில் இடம்பெற்ற 'அழையா மழை' பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புகளும் அதிகரித்தன. பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் நேற்று இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது.

பதான்
இந்நிலையில் பதான் படம் வெளியான முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
- நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில் ‘பதான்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
- இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.
பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்தியில் பல படங்கள் நடித்துள்ளார். இவர் தமிழில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 'கோச்சடையான்' திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இவர் பாலிவுட்டில் மிகவும் பிசியாக உள்ளார்.

தீபிகா படுகோனே
சமீபத்தில் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருந்த "பதான்" திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். இப்படம் உலக அளவில் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் 2023 -ஆம் ஆண்டிற்கான 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருகிற 12- ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.

ஆஸ்கர் தொகுப்பாளர் பட்டியல்
இதில் தொகுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 பேர்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் நடிகை தீபிகா படுகோனே பெயரும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- அமெரிக்காவில் நடந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தீபிகா கலந்து கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.
- உலகப்புகழ் பெற்ற ஊடகங்கள் தீபிகா படுகோனே உடையையும் அவரது ஸ்டைலையும் புகைப்படங்களாக எடுத்தனர்.
அமெரிக்காவில் நடந்த 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தீபிகா கலந்து கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது. அவர் இந்த விழாவில் பலரது கண்களைக் கவரும் வகையில் வித்தியாசமான உடை அலங்காரத்தில் வந்து கலந்து கொண்டார். அவர்தான் எந்த திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கப்போகிறது என்பதை அறிவிப்பும் செய்தார்.

தீபிகா படுகோனே
இந்த நிலையில் பல்வேறு உலகப்புகழ் பெற்ற ஊடகங்கள் தீபிகா படுகோனே உடையையும் அவரது ஸ்டைலையும் புகைப்படங்களாக எடுத்தனர். இதை மறுநாள் வெளியிட்ட புகழ் பெற்ற ஊடகங்கள் தீபிகா படுகோனேவை மறந்து அவரை பிரேசிலிய அழகி கமிலா ஆசல்வ்ஸ் என்று குறிப்பிட்டனர். இதைப்பார்த்துப் பிரபலமான வோக் பத்திரிகையும் தீபிகாவின் பெயரை மாற்றி வெளியிட்டது. இது மறுநாள் ஆஸ்கர் கொண்டாட்டங்களில் எதிரொலித்தது என்கிறார்கள்.
- பாலிவுட்டில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் தீபிகா படுகோனே -ரன்வீர் சிங்.
- இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகர்களாக வலம் வருபவர்கள் தீபிகா படுகோனே -ரன்வீர் சிங். இவர்கள் இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து வந்ததையடுத்து கடந்த 2018 -ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் தீபிகா படுகோனே -ரன்வீர் சிங் தம்பதியிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று நெருக்கமானவர்கள் மறுத்தனர்.

ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே
இதையடுத்து இருவரும் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரன்வீர் சிங்கும் தீபிகாவும் கலந்துகொண்டனர். அதில், இருவரும் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது தீபிகாவின் கையை பிடிக்க முயன்றார் ரன்வீர் சிங். ஆனால் தீபிகா, ரன்வீரின் கையை பிடிக்க மறுத்து விட்டார். அதுமட்டுமல்லாமல் அவரின் முகத்தையும் பார்க்காமல் நடந்து சென்றுவிட்டார்.

ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே
இதனால் கோபமான ரன்வீர் சிங் முன்னால் வேகமாக நடந்து சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் இருவருக்கும் இடையே எதாவது பிரச்சினையா..? இருவரும் விவாகரத்து செய்யவுள்ளார்களா..? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.