என் மலர்
நீங்கள் தேடியது "Deepika Padukone - Ranveer Singh"
- ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும்.
இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'
இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மேஹா ஹிட் ஆனது.
மூன்றரை மணி நேரம் நீளம் கொண்ட இந்த படம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றத்தை மையமாகக் கொண்டு, இந்திய உளவுத்துறை மேற்கொள்ளும் ரகசிய மிஷன் குறித்த விறுவிறுப்பான கதையாகும்.
கடந்த ஜனவரி 30 முதல் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இத்திரைப்படம் நெட்பிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.
இதற்கிடையே இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான "துரந்தர்: தி ரிவெஞ்ச்" (Dhurandhar: The Revenge) திரைப்படம் வருகிற மார்ச் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் நீளம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. முதல் பாகம் 3.30 மணி நேரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், இரண்டாம் பாகம் 4 மணி நேரம் ஓடக்கூடிய படமாக உள்ளது.
சென்சாருக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட இப்படத்தின் நீளம் 3.55 மணி நேரம் ஓடக்கூடியதாக உள்ளதாக கூறப்படுகிறது.
இது உறுதி செய்யப்பட்டால் துரந்தர்: தி ரிவெஞ்ச் இதுவரை வெளியான மிக நீளமான இந்தி படங்களில் ஒன்றாக மாறும். இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் மார்ச் 19 வெளியாக உள்ள டாக்சிக் திரைப்படத்தின் நீளம் 3 மணிநேரம் 15 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது.
கேஜிஎப் 2 படத்திற்கு பிறகு யாஷ் நடிக்கும் படம் இது என்பதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. துரந்தர் - டாக்சிக் ஆகிய இந்த இரண்டு படங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
- தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
- கடந்தாண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று தீபிகா படுகோனேவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே கடந்தாண்டு கர்ப்பமானார். செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதி தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு துவா படுகோனே சிங் (Dua Padukone Singh) என பெயர் சூட்டினர்.
இந்நிலையில், ஓராண்டுக்கு பிறகு தங்களது பெண் குழந்தையின் முகத்தை வெளி உலகத்துக்கு தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
- தீபிகா படுகோனே- ரன்வீர்சிங் 2018-ல் திருமணம் செய்து கொண்டனர்.
- இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர்.
பாலிவுட் நட்சத்திர காதல் ஜோடியான தீபிகா படுகோனே- ரன்வீர்சிங் 2018-ல் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் இன்று தீபிகா படுகோனே - ரன்வீர்சிங் இன்ஸ்டாகிராமில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். தீபிகா 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தீபிகா படுகோனே கர்ப்பமாக இருக்கலாம் என கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி பரவியது. 77-வது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருது விழாவில் சிகப்பு கம்பளத்தின் மீது பளபளக்கும் சேலையை அணிந்திருந்த போது அவர் தனது வயிற்றுப்பகுதியை மறைத்ததாக கூறப்படுகிறது. தீபிகா படுகோனே தற்போது 3 மாத கர்ப்பமாக உள்ள செய்தி பரவியதும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூரில் தீபிகா தாய்மை பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். "நிச்சயமாக ரன்வீரும் நானும் குழந்தைகளை நேசிக்கிறோம். நாங்கள் எங்கள் சொந்த குடும்பத்தைத் தொடங்கும் நாளுக்காக காத்திருக்கிறோம்" என்று அப்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நிறைமாத கர்ப்பத்தில் இருந்த தீபிகா படுகோனே எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
- செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பத்தில் இருந்த தீபிகா படுகோனே எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் தம்பதி தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு துவா படுகோனே சிங் (Dua Padukone Singh) என பெயர் சூட்டியுள்ளனர்
தீபாவளியில் முன்னிட்டு தங்களது பெண் குழந்தையின் புகைப்படத்தை தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதி முதன்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
அந்த பதிவில், "துவா என்றால் பிரார்த்தனை என்று அர்த்தம். ஏனென்றால் எங்கள் பிரார்த்தனைகளுக்கான பதில் அவள். எங்கள் இதயம் முழுவதும் அன்பும் நன்றியுணர்வும் நிரம்பியுள்ளது" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






