என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "baby girl"

    • எங்கள் நான்காம் ஆண்டு திருமண விழாவில் கடவுள் எங்களுக்கு அளித்த ஒரு பெரிய ஆசீர்வாதம்.
    • ராஜ்குமார் ராவ் கடைசியாக 'மாலிக்' மற்றும் 'பூல் சுக் மாஃப்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

    பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ்வின் மனைவி, நடிகை பத்ரா லேகாவுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

    தம்பதியினர் தங்கள் 4 ஆம் திருமண நாளில் பெற்றோர் ஆகியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை தம்பதியினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.

    அவர்களின் பதிவில்," இது எங்கள் நான்காம் ஆண்டு திருமண விழாவில் கடவுள் எங்களுக்கு அளித்த ஒரு பெரிய ஆசீர்வாதம். எங்கள் இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளன" என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2021 இல் ராஜ்குமார் ராவ் மற்றும் பத்ரா லேகா திருமணம் செய்து கொண்டனர்.

    ராஜ்குமார் ராவ் கடைசியாக 'மாலிக்' மற்றும் 'பூல் சுக் மாஃப்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.    

    • தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
    • கடந்தாண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று தீபிகா படுகோனேவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

    பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

    திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே கடந்தாண்டு கர்ப்பமானார். செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதி தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு துவா படுகோனே சிங் (Dua Padukone Singh) என பெயர் சூட்டினர்.

    இந்நிலையில், ஓராண்டுக்கு பிறகு தங்களது பெண் குழந்தையின் முகத்தை வெளி உலகத்துக்கு தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

    நிவின் பாலி Baby Girl படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    நிவின் பாலி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களை லைனப்பில் வைத்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார். மேலும் நயன் தாராவுடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

    அதை தொடர்ந்து நிவின் பாலி Baby Girl படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை அருண் வர்மா இயக்கியுள்ளார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இப்படம் ஒரு கிரைம் திரில்லர் கதைக்களமாக உருவாகியுள்ளது. நிவின் பாலியுடன் லிஜோ மோல் , சங்கீத் பிரதாப் மற்றும் அபிமன்யு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    தொழில்நுட்ப குழு விவரங்கள்:

    ஒளிப்பதிவு - ஃபைஸ் சித்திக்

    இசை-கிறிஸ்டி ஜோபி

    சண்டை - விக்கி

    கலை இயக்குநர் - அனீஸ்

    படத்தொகுப்பு - ஷைஜித் குமரன்


    • நிவின் பாலி, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களை லைனப்பில் வைத்துள்ளார்.
    • நயன் தாராவுடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

    நிவின் பாலி,  தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களை லைனப்பில் வைத்துள்ளார். பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார். மேலும் நயன் தாராவுடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

    நிவின் பாலி Baby Girl படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை அருண் வர்மா இயக்கியுள்ளார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை நாளை காலை 10.10 மணிக்கு படக்குழு வெளியிட இருக்கிறது.

    • மூத்த மகன் வயது 22. கடைசி குழந்தை வயது 3.
    • பிரசவத்தின்போது அவரது 22 வயது மகனும் உடன் இருந்தார்.

    உத்தரப் பிரதேசத்தில் 50 வயது பெண் ஒருவர் தனது 14 வது குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டம் பில்குவாவில் உள்ள பஜ்ரங்புரியில் வசிப்பவர் இமாமுதீன். இவரது 50 வயது மனைவி குடியா. இவர்களுக்கு 13 குழந்தைகள். மூத்த மகன் வயது 22. கடைசி குழந்தை வயது 3.

    இந்நிலையில் 50 வயதில் மீண்டும் கருத்தரித்த குடியா, கடந்த வெள்ளிக்கிழமை 14வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனை செல்லும்போது ஆம்புலன்ஸிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது அவரது 22 வயது மகனும் உடன் இருந்தார்.

     

    அதன்பின் குடியாவும், குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாயும் சேயும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

    இமாமுதீனின் மனைவிக்கு 14வது குழந்தை பிறந்த செய்தியைக் கேள்விப்பட்ட பிறகு, அருகிலுள்ள பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், தொலைதூர இடங்களிலிருந்தும் மக்கள் இமாமுதீனையும் அவரது 14 குழந்தைகளை கொண்ட குடும்பத்தையும்  வருகிறார்கள்.  

    • கேஎல் ராகுல்- அதியா தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது.
    • இந்த தம்பதிக்கு டெல்லி அணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் 2023 ஜனவரி 23 அன்று நடிகை அதியா ஷெட்டியை (நடிகர் சுனில் ஷெட்டியின் மகள்) திருமணம் செய்து கொண்டார்.

    இந்த தம்பதிக்கு நேற்று (மார்ச் 24, 2025) பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு திரைபிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் டெல்லி அணியில் இடம் பெற்றிருந்த கேஎல் ராகுலுக்கு டெல்லி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் இணைந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    2013-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியுடன் தொடங்கிய கேஎல் ராகுலின் ஐபிஎல் பயணம், பல அணிகளுக்காக (சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) விளையாடியுள்ளார். நடப்பு ஆண்டில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக (ரூ. 14 கோடி) விளையாட உள்ளார். 

    • கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
    • அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் விக்கெட் கீப்பர் பணியுடன், பேட்டிங்கில் பினிஷர் ரோலை சிறப்பாக செய்து முடித்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில், நியூசிலாந்துக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

    தற்போது கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு திரைபிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    குழந்தை பிறந்துள்ளதால் ஐபிஎல் தொடக்க போட்டிகளில் கே.எல். ராகுல் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    • மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாகவும், அவரது உடலை அருகில் உள்ள ஓடையில் புதைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
    • குழந்தையின் தந்தையான ராமச்சந்திரனிடம் கேட்டபோது அவர் தனக்கு குழந்தை இறந்த விபரம் தெரியாது என கூறினார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள பாலூத்து தேவராஜ் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 27). கம்பி கட்டும் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (21). இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ரம்யா மீண்டும் கருவுற்றார். இவருக்கு கடந்த மாதம் 29-ந் தேதி கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது.

    சில நாட்கள் கழித்து தாயும், சேயும் நலமாக இருந்ததைத் தொடர்ந்து ரம்யாவை வீட்டுக்கு செல்லுமாறு டாக்டர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரம்யாவின் தாய் களிச்சியம்மாள் அவர்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

    இந்நிலையில் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருமாறு அழைப்பதற்காக அவரது வீட்டுக்கு பணியாளர்கள் சென்றனர்.

    ஆனால் ரம்யாவின் தாயார் களிச்சியம்மாள் தனது பேத்தி இறந்துவிட்டதாக தெரிவித்தார். குழந்தை எப்படி இறந்தது? என கேட்டதற்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாகவும், அவரது உடலை அருகில் உள்ள ஓடையில் புதைத்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் அவரது பேச்சில் பணியாளர்கள் சந்தேகமடைந்தனர்.

    முதலில் தாய்ப்பால் கொடுத்தபோது, மூச்சுத் திணறி இறந்ததாகவும், பின்னர் குழந்தைக்கு இருமல் ஏற்பட்டதால் தேனும், துளசி நீரும் கொடுத்ததால் இறந்து விட்டதாகவும் மாறி மாறி பதிலளித்தார். இது மட்டுமின்றி குழந்தை இறந்த விபரத்தை அக்கம் பக்கத்தினர் யாருக்கும் சொல்லாமல் வீட்டில் குழந்தை இருப்பது போலவே காட்டிக் கொண்டுள்ளார்.

    மேலும் குழந்தையின் தந்தையான ராமச்சந்திரனிடம் கேட்டபோது அவர் தனக்கு குழந்தை இறந்த விபரம் தெரியாது என கூறினார். இதனால் களிச்சியம்மாளிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அதனை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகமடைந்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். சமூக நலத்துறை அலுவலர் ஷியாமளா தேவி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

    இந்நிலையில் குழந்தையின் தாய் ரம்யாவுக்கு மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவருக்கும் என்ன நடந்தது என தெரியாமல் தான் சொன்ன வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் கூறி வருவதால் அவரது தாய் களிச்சியம்மாள் மீது போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கடமலைக்குண்டு போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கழிவு நீர் தொட்டியில் பெண் சிசு பிணம் மிதந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டு அருகில் உள்ள ஒரு கழிவு நீர் தொட்டியில் ஒரு குழந்தை பிணமாக மிதந்த நிலையில் கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இது தொடர்பாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்று கழிவுநீர் தொட்டியில் கிடந்த அந்த குழந்தை உடலை மீட்டனர். அது பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஆகும்.

    அந்த குழந்தையை கழிவுநீர் தொட்டியில் வீசி சென்றது யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்காக வந்திருந்த யாரோ பெண் தான், பெண் சிசு சடலத்தை கழிவு நீர் தொட்டியில் வீசிச்சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.

    கள்ளக்காதலில் பிறந்ததால் வேண்டாம் என்று குழந்தையை பெற்றெடுத்த பெண் வீசி சென்றாரா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை திடீரென இறந்தது.
    • சம்பவத்தன்று வீட்டில் அக்குழந்தை மூச்சு இல்லாமல் இருந்து வந்தது

    கடலூர்:

    கடலூர் அருகே பச்சிளம் பெண் குழந்தை திடீரென இறந்தது. கடலூர் அடுத்த ரெட்டி ச்சாவடி செல்லஞ்சேரியை சேர்ந்தவர் சுமன் (வயது 30). இவரது மனைவி மலர். இவர்களுக்கு கடந்த 14 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது.   சம்பவத்தன்று வீட்டில் அக்குழந்தை மூச்சு இல்லாமல் இருந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக பெண் குழந்தையை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.   ஆனால் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த 14 நாளான பெண் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை விற்பனையை செய்யப்பட்டதா என விசாரணை நடந்து வருகிறது.
    • 5 பெண்களிடம் நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது உசிலம்பட்டி அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்த சின்னப்பாண்டி மனைவி பாண்டியம்மாள் (வயது60) என்பவர் பச்சிளம் பெண் குழந்தையுடன் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார்.

    போலீசார் அவரிடம், குழந்தை குறித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதனால் பாண்டி யம்மாள் மீது சந்தேகம் வலுத்தது. இதையடுத்து போலீசார் குழந்தையை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து பாண்டியம்மாளை போலீஸ் நிலை யத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது. இதற்கு அந்த குழந்தையின் தாய் மற்றும் மாலதி, கருப்பசாமி மனைவி அழகுபாண்டி, கரும்பாலை நாகராஜன் மனைவி பாண்டியம்மாள் ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வறுமை அல்லது பெண் என்பதால் குழந்தையை விற்க முற்பட்டார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரியை சூலூர் போலீஸ் நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தி விட்டு, லாரியிலேயே படுத்து தூங்கி விட்டார்.
    • மது போதையில் லாரியை இயக்கியதற்காக அவருக்கு சூலூர் போலீசார் அபராதம் விதித்தனர்.

    சூலூர்:

    விழுப்புரத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி(வயது41). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி 15 வயதில் மகள் உள்ளார்.இந்த நிலையில் அவரது முதல் மனைவி இறந்து விடவே ராஜீவ்காந்தி 2-வதாக திருமணம்செய்து கொண்டார். அவருக்கு சில தினங்களுக்கு முன்பு 2-வதும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

    இந்த நிலையில் ராஜீவ்காந்தி இரும்பு பொருட்களை ஏற்றுவதற்காக மும்பைக்கு சென்றார். பின்னர் அங்கு பொருட்களை ஏற்றி கொண்டு சேலத்திற்கு வந்தார்.

    அப்போது கோவை சூலூர் அருகே அருகே அவர் வந்த போது லாரியை திடீரென நிறுத்தி விட்டு மது அருந்தினார். பின்னர் லாரியை இயக்கி கொண்டு சென்ற அவரால் மேற்கொண்டு இயக்க முடியவில்லை என தெரிகிறது. இதனால் லாரியை சூலூர் போலீஸ் நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தி விட்டு, லாரியிலேயே படுத்து தூங்கி விட்டார்.

    நீண்ட நேரமாக லாரி அங்கேயே நின்றதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் லாரி அருகே சென்று பார்த்தனர். அப்போது டிரைவர் தூங்கி கொண்டிருந்தார். அருகே மதுபாட்டிலும் இருந்தது. அவரை எழுப்பி பார்த்தனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை.

    இதையடுத்து போலீசார் லாரியை போலீஸ் நிலையம் எடுத்து சென்றனர். பின்னர் தண்ணீரை ஊற்றி டிரைவரை எழுப்பினர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அவர் தனக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. தற்போது 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. நான் செய்யும் டிரைவர் தொழிலில் 2 பெண் குழந்தைகளை வைத்து வளர்ப்பது மிகவும் கஷ்டம் எனவும் அந்த மன வருத்தத்திலேயே மது அருந்தியதாகவும், பிறந்த குழந்தையை கூட இன்னும் பார்க்கவில்லை. அதனை பார்க்கவும் எனக்கு பிடிக்க வில்லை. அதனால் நான் ஊருக்கு செல்லவில்லை எனக் கூறி புலம்பினார்.

    இதையடுத்து ராஜீவ்காந்திக்கு பெண் பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியே உருவாகும். பெண்களுக்கு அரசின் பல நலதிட்டங்கள் நடைமுறையில் உள்ளது என அறிவுரை கூறினர்.

    தொடர்ந்து மது போதையில் லாரியை இயக்கியதற்காக அவருக்கு சூலூர் போலீசார் அபராதம் விதித்தனர்.

    ×