கழிவு நீர் தொட்டியில் பெண் சிசு பிணம்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கழிவு நீர் தொட்டியில் பெண் சிசு பிணம் மிதந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கழிவு நீர் தொட்டியில் பெண் சிசு பிணம்
Published on

மதுரை

மதுரை அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டு அருகில் உள்ள ஒரு கழிவு நீர் தொட்டியில் ஒரு குழந்தை பிணமாக மிதந்த நிலையில் கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இது தொடர்பாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்று கழிவுநீர் தொட்டியில் கிடந்த அந்த குழந்தை உடலை மீட்டனர். அது பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஆகும்.

அந்த குழந்தையை கழிவுநீர் தொட்டியில் வீசி சென்றது யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்காக வந்திருந்த யாரோ பெண் தான், பெண் சிசு சடலத்தை கழிவு நீர் தொட்டியில் வீசிச்சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.

கள்ளக்காதலில் பிறந்ததால் வேண்டாம் என்று குழந்தையை பெற்றெடுத்த பெண் வீசி சென்றாரா? அல்லது பெண் குழந்தை என்பதால் வீசினார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com