என் மலர்
நீங்கள் தேடியது "State Honors"
- மகளின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவெடுத்தனர்.
- சிறுநீரகங்கள், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது.
சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை தனது உறுப்புகள் மூலம் 5 பேரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் விபத்து ஒன்றில் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
ஆழ்ந்த துயரத்தில் இருந்தபோதிலும், குழந்தையின் பெற்றோர்களான தங்கள் மகளின் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர்.
மருத்துவர்கள் குழந்தையிடமிருந்து கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்கள் ஆகியவற்றைச் சேகரித்தனர். கல்லீரல், திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் உள்ள 6 மாதக் குழந்தைக்குப் பொருத்தப்பட உள்ளது.
சிறுநீரகங்கள், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது. இதய வால்வு மற்றும் கண்கள், ஸ்ரீ சித்ரா இன்ஸ்டிடியூட் மற்றும் அமிர்தா மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டன.
இதன் மூலம் கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த பெருமை மறைந்த 10 மாதக் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம்க்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், உடல் உறுப்புகளை தானம் செய்த 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
- தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவின் மூளைச்சாவு அடைந்தார்.
- சங்ககிரி தாசில்தார் வாசுகி தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு கவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் மேற்கு கிராமம் வேங்கிபாளையம் சென்னாயக்கன்காடு பகுதி சேர்ந்த நெசவு தொழிலாளி பழனிசாமி அவரது மனைவி அனிதா தம்பதியின் மகன் கவின் (வயது 21).
இவர் டெக்ஸ்டைல் டிப்ளமோ படித்துவிட்டு நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கவினுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவின் மூளைச்சாவு அடைந்தார்.
அதனையடுத்து பெற்றோர் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட கவின் உடலானது சென்னாயக்கன்காடு பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சங்ககிரி தாசில்தார் வாசுகி தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு கவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது மோரூர் மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாமோகன்ராஜ், வருவாய் ஆய்வாளர் மலர்விழி, கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.






