என் மலர்
நீங்கள் தேடியது "பெண் குழந்தை"
- மகளின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவெடுத்தனர்.
- சிறுநீரகங்கள், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது.
சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை தனது உறுப்புகள் மூலம் 5 பேரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் விபத்து ஒன்றில் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
ஆழ்ந்த துயரத்தில் இருந்தபோதிலும், குழந்தையின் பெற்றோர்களான தங்கள் மகளின் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர்.
மருத்துவர்கள் குழந்தையிடமிருந்து கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்கள் ஆகியவற்றைச் சேகரித்தனர். கல்லீரல், திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் உள்ள 6 மாதக் குழந்தைக்குப் பொருத்தப்பட உள்ளது.
சிறுநீரகங்கள், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது. இதய வால்வு மற்றும் கண்கள், ஸ்ரீ சித்ரா இன்ஸ்டிடியூட் மற்றும் அமிர்தா மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டன.
இதன் மூலம் கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த பெருமை மறைந்த 10 மாதக் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம்க்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில், உடல் உறுப்புகளை தானம் செய்த 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
- மகளின் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர்.
- கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்கள் ஆகியவற்றைச் சேகரித்தனர்.
கேரளாவில் சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை தனது உறுப்புகள் மூலம் 5 பேரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம்.
கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி குழந்தை அலின் உடன் தாய், தாத்தா, பாட்டி ஆகியோர் கோட்டயத்திலிருந்து திருவல்லாவுக்கு காரில் செல்லும் வழியில் எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
காரில் இருந்த ஷெரினின் தாய், தாத்தா மற்றும் பாட்டி காயமடைந்தனர். படுகாயமடைந்த குழந்தை ஷெரின் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிப்ரவரி 13 ஆம் தேதி குழந்தை மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
ஆழ்ந்த துயரத்தில் இருந்தபோதிலும், குழந்தையின் பெற்றோர்களான தங்கள் மகளின் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர்.
மருத்துவர்கள் குழந்தையிடமிருந்து கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்கள் ஆகியவற்றைச் சேகரித்தனர்.
கல்லீரல், திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் உள்ள 6 மாதக் குழந்தைக்குப் பொருத்தப்பட உள்ளது.
சிறுநீரகங்கள், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது. இதய வால்வு மற்றும் கண்கள், ஸ்ரீ சித்ரா இன்ஸ்டிடியூட் மற்றும் அமிர்தா மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டன.
இதன் மூலம் கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த பெருமை மறைந்த 10 மாதக் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம்க்கு கிடைத்துள்ளது.
- செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் மகள் பிறந்ததில் இருந்தே முதலீடு செய்யலாம்.
- இந்த திட்டம் மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும்
பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் நலனுக்காக சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு 2015ம் ஆண்டு தொடங்கியது.
கடந்த பத்தாண்டுகளாக இந்த திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் இன்னும் பலருக்கும் இந்த திட்டம் குறித்த பொது விவரங்கள் தெரியவில்லை. அதன் காரணமாகவே இந்த திட்டத்தில் இன்னும் எண்ணற்றோர் இணையாமல் உள்ளனர்.
பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பெற்றோர்கள் பணத்தை சேமிப்பது அவசியமாகும்.
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் மகள் பிறந்ததில் இருந்தே முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் கீழ் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் மகள்களின் பெயரில் கணக்கு தொடங்கலாம்.
செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ்,18 ஆண்டுகளுக்குப் பிறகு, பாதித் தொகையைத் திரும்பப் பெறலாம். 21 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். மகளின் படிப்பு முதல் திருமணம் வரையிலான செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கில் ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரூ.250 முதலீடு செய்ய வேண்டும். இதில் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதனுடன் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் இந்தக் கணக்கில் ரூ.1.5 லட்சத்துக்கான வரிச் சலுகையும் கிடைக்கும்.
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், ஒருவர் தனது குழந்தை பிறந்த உடனேயே SSY திட்டத்தில் ஒரு கணக்கைத் திறந்து, மாதா மாதம் ரூ.10,000 முதலீடு செய்து வந்தால் தோராயமான 8% வட்டி வருமானத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 60 லட்சம் கிடைக்கும்
எதிர்காலத்தில் வட்டி விகிதங்கள் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ கடைசியில் கிடைக்கும் தொகை மாறக்கூடும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்
- பிரேம்ஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- இந்த தகவலை 'வல்லமை' பட இயக்குநர் கருப்பையா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் நடிகர் பிரேம்ஜி. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை 'வல்லமை' பட இயக்குநர் கருப்பையா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
47 வயதில் பிரேம்ஜி தந்தையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- எங்கள் நான்காம் ஆண்டு திருமண விழாவில் கடவுள் எங்களுக்கு அளித்த ஒரு பெரிய ஆசீர்வாதம்.
- ராஜ்குமார் ராவ் கடைசியாக 'மாலிக்' மற்றும் 'பூல் சுக் மாஃப்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ்வின் மனைவி, நடிகை பத்ரா லேகாவுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
தம்பதியினர் தங்கள் 4 ஆம் திருமண நாளில் பெற்றோர் ஆகியுள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை தம்பதியினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.
அவர்களின் பதிவில்," இது எங்கள் நான்காம் ஆண்டு திருமண விழாவில் கடவுள் எங்களுக்கு அளித்த ஒரு பெரிய ஆசீர்வாதம். எங்கள் இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளன" என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2021 இல் ராஜ்குமார் ராவ் மற்றும் பத்ரா லேகா திருமணம் செய்து கொண்டனர்.
ராஜ்குமார் ராவ் கடைசியாக 'மாலிக்' மற்றும் 'பூல் சுக் மாஃப்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
- 1.5 வயதுடைய பாத்திமா என்ற குழந்தையும், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை என 2 பெண் குழந்தைகள் இருந்தன.
- அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து அபியா பானுவும் தற்கொலை செய்துகொண்டார்.
கர்நாடகாவில் தாய் தனது 2 குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பேட்டபுரா பகுதியை சேர்ந்தவர் அபியா பானு (25 வயது). இவரது கணவர் சயது முசவீர் பெங்களூரில் உள்ள ஒரு மாலில் பணிபுரிகிறார்.
இவர்களுக்கு 1.5 வயதுடைய பாத்திமா என்ற குழந்தையும், பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை என 2 பெண் குழந்தைகள் இருந்தன.
மூத்த மகள் பாத்திமா பிறந்த நிலையில் 2வதும் பெண் குழந்தை பிறந்ததால் பானு மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் கணவன்-மனைவி இடையேயும் இதுதொடர்பாக சச்சரவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை 2 பச்சிளம் குழந்தைகளையும் கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்த தாய் பானு, அதே கத்தியால் தனது கழுத்தையும் அறுத்து அபியா பானுவும் தற்கொலை செய்துகொண்டார்.
மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
- தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
- கடந்தாண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று தீபிகா படுகோனேவுக்கு பெண் குழந்தை பிறந்தது.
பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே கடந்தாண்டு கர்ப்பமானார். செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதி தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தைக்கு துவா படுகோனே சிங் (Dua Padukone Singh) என பெயர் சூட்டினர்.
இந்நிலையில், ஓராண்டுக்கு பிறகு தங்களது பெண் குழந்தையின் முகத்தை வெளி உலகத்துக்கு தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி அறிமுகப்படுத்தியுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் ஜோடி இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
- இவர் தற்பொழுது ஆர்யன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் தற்பொழுது ஆர்யன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இவர் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு தற்பொழுது அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. விஷ்ணு விஷால் ஏற்கனவே ரஜினி நட்ராஜ் என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து சில கருத்து வேறுபாடு காரணத்தினால் அவரை 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற ஆன் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.
விஷ்ணு விஷால் - ஜ்வாலா குட்டா தம்பதி 4 ஆம் ஆண்டு திருமண நாளான இன்று அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் " நாங்கள் பெண் குழந்தையால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். ஆர்யன் இப்பொழுது அண்ணனாகி விட்டான். எங்கள் நான்காவது திருமண நாளில் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது மிகவும் மகிழ்ச்சி. உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
திரைத்துறை நண்பர்கள் விஷ்ணு விஷாலுக்கு வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
- பள்ளி படிப்பை முடித்த மாலா போட்டி தேர்வுக்கு தயாரானார்.
- மாலாவின் வழிகாட்டியாக சங்கர் பாபா பாபால்கர் என்பவர் இருந்து வருகிறார்.
மும்பை:
25 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவில் உள்ள ஜல்கான் ரெயில் நிலையத்தில் பார்வையிட்ட பெண் குழந்தை ஒன்று வீசப்பட்டு கிடந்தது.
அந்த குழந்தையை போலீசார் மீட்டு ஜல்கானில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்த்தனர். அந்த குழந்தைக்கு மாலா பாபால்கர் என்று பெயரிட்டனர். பின்னர் அந்த குழந்தை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டது. பிரெய்லில் உள்ள பள்ளியில் மாலா படித்து வந்தார். பள்ளி படிப்பை முடித்த மாலா போட்டி தேர்வுக்கு தயாரானார்.
தற்போது 26 வயதாகியுள்ள மாலா கடந்த ஆண்டு மே மாதம் மகாராஷ்டிரா மாநில பப்ளிக் சர்வீஸ் வைஸ்ன் கமிஷன் தேர்வை எழுதினார். அதில் தேர்ச்சி யடைந்த மாலாவுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு நாக்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் உதவியாளராக பணி கிடைத்துள்ளது. அந்த பணியில் மாலா விரைவில் சேரவுள்ளார்.
மாலா இதற்கு முன்பு தாசில்தார் பணிக்கான தேர்வில் 2 முறை தோல்வியடைந்தார். இருந்தாலும் மனம் தளராமல் போராடி போட்டி தேர்வில் வெற்றி பெற்று வருவாய் உதவியாளராக பணியமர்த்தப்பட உள்ளார்.
மாலாவின் வழிகாட்டியாக சங்கர் பாபா பாபால்கர் என்பவர் இருந்து வருகிறார். அவர்தான் தனது குடும்ப பெயரை மாலாவுக்கு சூடியுள்ளார். குப்பை தொட்டியில் வீசப்பட்ட குழந்தை பசியும், பட்டினியுமாக கிடந்து படித்து வாழ்க்கையில் முன்னேறியுள்ளார்.
குப்பை தொட்டியில் வீசப்பட்டாலும் கோபுரம் போல் உயர்ந்த நிலைக்கு வந்துள்ள மாலா மகாராஷ்டிரா மாநிலத்தில் மற்ற குழந்தைகளுக்கு முன்மாதிரியாக உள்ளார்.
- மூத்த மகன் வயது 22. கடைசி குழந்தை வயது 3.
- பிரசவத்தின்போது அவரது 22 வயது மகனும் உடன் இருந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் 50 வயது பெண் ஒருவர் தனது 14 வது குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டம் பில்குவாவில் உள்ள பஜ்ரங்புரியில் வசிப்பவர் இமாமுதீன். இவரது 50 வயது மனைவி குடியா. இவர்களுக்கு 13 குழந்தைகள். மூத்த மகன் வயது 22. கடைசி குழந்தை வயது 3.
இந்நிலையில் 50 வயதில் மீண்டும் கருத்தரித்த குடியா, கடந்த வெள்ளிக்கிழமை 14வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனை செல்லும்போது ஆம்புலன்ஸிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது அவரது 22 வயது மகனும் உடன் இருந்தார்.

அதன்பின் குடியாவும், குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாயும் சேயும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.
இமாமுதீனின் மனைவிக்கு 14வது குழந்தை பிறந்த செய்தியைக் கேள்விப்பட்ட பிறகு, அருகிலுள்ள பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், தொலைதூர இடங்களிலிருந்தும் மக்கள் இமாமுதீனையும் அவரது 14 குழந்தைகளை கொண்ட குடும்பத்தையும் வருகிறார்கள்.
- கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
- அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் விக்கெட் கீப்பர் பணியுடன், பேட்டிங்கில் பினிஷர் ரோலை சிறப்பாக செய்து முடித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில், நியூசிலாந்துக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.
தற்போது கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு திரைபிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குழந்தை பிறந்துள்ளதால் ஐபிஎல் தொடக்க போட்டிகளில் கே.எல். ராகுல் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- 2021-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 8,501 வழக்குகள் பதிவாகியுள்ளது.
- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 6,064 வழக்குகள் பதிவாகிவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பதிவாகும் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிடும். அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான அறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில், தமிழகத்தில் 2021-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 8,501 வழக்குகளும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 6,064 வழக்குகளும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர ஆதிதிராவிடர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 1,377 வழக்குகளும், பழங்குடியினர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 39 வழக்குகளும் பதிவாகி உள்ளன. மேலும் 1,788 வழக்குகளில் சிறார்கள் தொடர்பு உள்ளது. 1,076 சைபர்கிரைம் வழக்குகளும் பதிவாகி உள்ளன.
இந்தநிலையில் தற்போது, இந்தியாவில் உள்ள மாவட்ட வாரியான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி காவல் சரகம் மற்றும் திருச்சி மாநகரம், திருச்சி ரெயில்வே போலீஸ் ஆகியவற்றில் கடந்த 2021-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு அரியலூர் மாவட்டத்தில் 144 வழக்குகளும், கரூர் மாவட்டத்தில் 96 வழக்குகளும், பெரம்பலூர் மாவட்டத்தில் 86 வழக்குகளும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 187 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 258 வழக்குகளும், திருச்சி மாநகரில் 104 வழக்குகளும், திருச்சி ரெயில்வே போலீசில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு அரியலூரில் 67 வழக்குகளும், கரூரில் 85 வழக்குகளும், பெரம்பலூரில் 60 வழக்குகளும், புதுக்கோட்டையில் 212 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 214 வழக்குகளும், திருச்சி மாநகரில் 87 வழக்குகளும், திருச்சி ரெயில்வே போலீசில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது புதுக்கோட்டை மாவட்டம் தவிர மற்ற 4 மாவட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.
இதேபோல் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு அரியலூரில் 121 வழக்குகளும், கரூரில் 149 வழக்குகளும், பெரம்பலூரில் 81 வழக்குகளும், புதுக்கோட்டையில் 74 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 126 வழக்குகளும், திருச்சி மாநகரில் 78 வழக்குகளும், திருச்சி ரெயில்வே போலீசில் 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு அரியலூரில் 49 வழக்குகளும், கரூரில் 33 வழக்குகளும், பெரம்பலூரில் 69 வழக்குகளும், புதுக்கோட்டையில் 56 வழக்குகளும், திருச்சி மாவட்டத்தில் 158 வழக்குகளும், திருச்சி மாநகரில் 46 வழக்குகளும், திருச்சி ரெயில்வே போலீசில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.






