என் மலர்

  நீங்கள் தேடியது "Vishnu Vishal"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நடிகர் விஷ்ணு விஷால் மோகன் தாஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
  • தற்போது ரன்வீர் சிங் பாணியில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

  வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான விஷ்ணு விஷால் 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சைக்காலஜி த்ரில்லரான ராட்சசன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

  இதைத்தொடர்ந்து பல தடைகளை தாண்டி வெளியான இவரது எஃப் ஐ ஆர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்கி இருந்தார். தற்போது விஷ்ணு விஷால் 'மோகன் தாஸ்' படத்தில் நடித்து வருகிறார்.


  ரன்வீர் சிங் - விஷ்ணு விஷால்

  சமீபத்தில் ஒரு பிரபல வார இதழுக்காக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படத்திற்கு திரையுலகினர் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரன்வீர் சிங் பாணியில் நடிகர் விஷ்ணு விஷால் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  அந்த புகைப்படத்தில் விஷ்ணு விஷால் மெத்தையில் அரை நிர்வாணமாக இடுப்புப் பகுதிக்கு கீழே வெள்ளை போர்வையை போர்த்தியபடி இருக்கிறார். மேலும்,  "நானும் டிரெண்டில் இணைகிறேன். புகைப்பட கலைஞர் எனது மனைவியாக இருக்கும்போது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நகைச்சுவை நடிகர் சூரியிடம் நிலமோசடி.
  • நடிகர் விஷ்ணு விஷாலிடம் விசாரணை, ஓய்வுபெற்ற டி.ஜி.பி.யும் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்.

  நிலம் வாங்கி தருவதாக நகைச்சுவை நடிகர் சூரியிடம் பண மோசடி செய்யப்பட்ட வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே இது தொடர்பாக ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. ரமேஷ்கொடவாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

  நடிகர் சூரி இந்த வழக்கு தொடர்பாக 3 முறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் கொடவாலா ஆகியோருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.


  சூரி - விஷ்ணு விஷால்

  சூரி - விஷ்ணு விஷால்

  அதை ஏற்று நடிகர் விஷ்ணுவிஷால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்கள். அவரது தந்தை ரமேஷ்கொடவாலாவிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் சந்தீப் கிஷன் நடிக்க இருக்கிறார்.
  தமிழ் சினிமாவில் வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்குவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலான படங்கள் முதல் பாகத்தை போல இரண்டாம் பாகம் பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. என்றாலும் இந்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

  அந்த வகையில் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்‌‌ஷன் பாணியில் உருவாகி வெற்றி பெற்ற ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல் பாகத்தில் விஷ்ணு விஷால் நடித்து இருந்தார். இரண்டாம் பாகத்தில் மாநகரம், நரகாசூரன் ஆகிய படங்களில் நடித்துள்ள சந்தீப் கி‌ஷன் கதா நாயகனாக நடிக்க உள்ளார்.   ரவிக்குமாரின் உதவி இயக்குநர் இந்தப் படத்தை இயக்க உள்ளார். நாயகியாக முதல் பாகத்தில் நடித்த மியா ஜார்ஜ் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘ஜெயில்’ படத்தை தொடர்ந்து வசந்த பாலன் அடுத்ததாக விஷ்ணு விஷாலை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். #VishnuVishal #VasanthaBalan
  ‘வெயில்,’ ‘அங்காடித்தெரு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஜெயில்’. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

  இந்த நிலையில், வசந்தபாலன் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார். அதில், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.  படப்பிடிப்பை அடுத்த மாதம் (மே) தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. #VishnuVishal #VasanthaBalan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் - ரெஜினா கசாண்ட்ரா - ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தின் விமர்சனம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal
  தனது பாட்டியுடன் வாழ்ந்து வரும் விஷ்ணு விஷாலுக்கு சிபாரிசில் கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. சிலுக்குவார்பட்டி காவல் நிலையத்தில் சேர்கிறார். எந்த பிரச்சனைக்கும் போகாமல், எந்த வழக்கையும் பார்க்காமல் பயம்கொள்ளியாக இருக்கும் விஷ்ணு விஷால், சின்ன எடுபிடி வேலைகளை மட்டுமே செய்துவிட்டு சந்தோஷமாக காலத்தை ஓட்ட எண்ணுகிறார்.

  இதற்கிடையே விஷ்ணு விஷாலும், அவரது மாமா பெண்ணான ரெஜினாவும் காதலிக்கிறார்கள். ஆனால் மாமா மாரிமுத்து, விஷ்ணுவின் கோழைத்தனத்தை சுட்டிக்காட்டி பெண் தர மறுக்கிறார்.  மறுபக்கம் சென்னையையே கலக்கிக் கொண்டிருந்த தாதாவான சாய் ரவியை என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு போலீசார் அவரைத் தேடுகிறார்கள். தன்னை என்கவுண்டர் செய்ய வந்த போலீசை கொன்றுவிட்டு தலைமறைவாகும் சாய் ரவி, விஷ்ணு விஷாலிடம் சிக்கிக் கொள்கிறார்.

  எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு, சாய் ரவி பெரிய ரவுடி என்பது தெரியாமல் ஓட்டலில் நடக்கும் ஒரு பிரச்சனையால், சாய் ரவியை அடித்து சிறையில் அடைத்துவிடுகிறார். இதையடுத்து சாய் ரவியின் ஆட்களான அவரை சிறையை உடைத்து வெளியே அழைத்துச் செல்கின்றனர். தன்னை கைது செய்து சிறையில் அடைத்த விஷ்ணுவை கொல்லாமல், இந்த ஊரை விட்டு போகமாட்டேன் என்று சாய் ரவி சபதமிடுகிறார். சாய்யிடம் இருந்து தப்பிக்க, வித்தியாசமான கெட்அப்புகளை போட்டுக் கொண்டு ஊரை சுற்றிவருகிறார் விஷ்ணு விஷால்.  கடைசியில், சாய் ரவியிடம் இருந்து விஷ்ணு எப்படி தப்பித்தார்? ரெஜினாவாவை கரம்பிடித்தாரா? எந்த பிரச்சனைக்கும் போகாத விஷ்ணு விஷால் சாய் ரவியை அடித்தது ஏன்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே நகைச்சுவையான மீதிக்கதை.

  ராட்சசன் படத்தில் ஒருவித பயம், தயக்கம் என பரபரப்பாக இயங்கிய விஷ்ணு விஷால் இந்த படத்தில் முற்றிலுமாக மாறி காட்சிக்கு காட்சி சிரிக்க வைக்கிறார். சாய்ரவிக்கு பயந்து அவர் போடும் கெட்டப்கள் வயிற்றை பதம் பார்க்கின்றன. படத்தின் கலர்புல்லுக்கு ரெஜினா உத்தரவாதம் தருகிறார். காதலன் என்ன சொன்னாலும், அப்படியே நம்பிவிடும் ரெஜினா போன்ற பெண் கிடைத்தால் இந்த காலத்து இளைஞர்களுக்கு பிரச்சினையே இருக்காது. அழகாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.  சாய்ரவி வில்லனாக இருந்தாலும் தன்னை வைத்து சுற்றி இருப்பவர்கள் செய்யும் காமெடிகளை விட்டுக்கொடுத்து படத்துக்கு துணை நின்று இருக்கிறார். ஓவியா சில காட்சிகளே வந்தாலும் சிறப்பு. கருணாகரனுக்கு படம் முழுக்க வந்து சிரிக்க வைக்கும் வேடம். நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

  டோனியாக வரும் யோகி பாபுயும் நம்மை சிரிக்க வைக்கிறார். லொள்ளு சபா மனோகரின் ஐபோன் விளையாட்டு, ஆனந்த்ராஜின் ஷேர் ஆட்டோ காமெடி, மன்சூர் அலிகானின் மூட்டை, சினேகா பிரதர்சின் பாத்ரூம் காமெடி, சிங்கமுத்துவின் லாக்கெப் காமெடி என்று படம் முழுக்க சிரிக்கும்படியாக இருக்கிறது. 

  லிவிங்ஸ்டன், வடிவுக்கரசி வழக்கமான நடிப்பின் மூலம் கவர்கின்றனர். கிளைமாக்சுக்கு பின்னும் கூட ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகானின் பழைய படங்களை பயன்படுத்தியது சிறப்பு.  இயக்குனர் செல்லா அய்யாவுக்கு படத்தை சீரியசாக்க பல வாய்ப்புகள் இருந்தும் பாதை மாறாமல் சிரிக்க வைக்கும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மட்டும் தேவையில்லாத காட்சிகள் இடம்பெறுகின்றன. அதுவும் அடுத்த காட்சிக்கான இடைவேளையாக இருப்பதால் ஏற்றுக் கொள்ளமுடிகிறது.

  லியோன் ஜேம்சின் இசையில் டியோ ரியோ பாடல் சிறப்பாக உள்ளது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். ஜே.லெக்‌ஷ்மணின் ஒளிப்பதிவு படத்தை கமர்ஷியலாக காட்டியிருக்கிறது.

  மொத்தத்தில் `சிலுக்குவார்பட்டி சிங்கம்' சிரிப்புக்கு உத்தரவாதம். #SilukkuvarpattiSingam #SilukkuvarpattiSingamReview #VishnuVishal #ReginaCassandra

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராட்சசன் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் சிலுக்குவார்பட்டி சிங்கம் வருகிற வாரத்தில் வெளியாக இருக்கிறது. #SilukkuvarpattiSingam #VishnuVishal
  விஷ்ணு விஷால் ராட்சசன் படம் வெற்றி பெற்ற உற்சாகத்தில் அடுத்து சிலுக்குவார்பட்டி சிங்கமாக களம் இறங்குகிறார். அவர் அளித்த பேட்டி:

  திரும்ப காமெடி பக்கமே வந்து விட்டீர்களா?

  ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படப்பிடிப்பின் போதே, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ கதையை இயக்குனர் செல்லா அய்யாவு சொன்னார். ஜாலியா இருக்கே. நம்ம பேனர்லயே தயாரிக்கலாம் என்று திட்டமிட்டு தொடங்கிய படம். ‘ராட்சசன்’ சீரியஸ் போலீஸ், இது காமெடி போலீஸ். ரெஜினா, ஓவியா, யோகிபாபுன்னு ஒரு பெரிய பட்டாளமே வர்றாங்க. இது என் சொந்த படம். சீரியஸ் போலீஸையும், காமெடி போலீசையும் அடுத்தடுத்து விடவேண்டாம் என்று தான் காத்திருந்தேன்.

  காமெடி படங்களையே தொடர்ந்து தயாரிப்பது ஏன்?

  ஜாலியான படங்களை தயாரிப்பது எளிது. சீரியசான படங்களை தயாரித்தால் நமக்கு பிர‌ஷர் அதிகமாகி விடும். இனி என் தயாரிப்பில் எல்லா விதமான படங்களும் வரும். ராட்சசன், நீர்ப்பறவை போன்ற சீரியஸ் படங்கள் எனக்கு எளிது. காமெடி படங்கள் தான் கஷ்டம். காமெடியை தாண்டி இந்த படத்தில் சின்ன கதையும் இருக்கும்.

  ஓவியா கவுரவ வேடத்தில் நடித்தது எப்படி?

  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே அவர் நடித்த படம் இது. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் அவர் பிக்பாசில் கலந்துகொள்ள போவதாக கூறினார். இதில் கனகா என்னும் வேடத்தில் வருகிறார். கதையை நகர்த்தும் முக்கிய வேடம்.  காடன் எந்த மாதிரியான படம்?

  பிரபு சாலமன் படம். தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழிகளில் வளரும் படம். முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டோம். இதில் யானைப் பாகனாக நடிக்கிறேன். மூணாறு உள்ளிட்ட காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்துறோம். உடனே ‘கும்கி 2’ என்ற முடிவுக்கு வரவேண்டாம். அதில் இருந்து முற்றிலும் வித்தியாசமா இருக்கும். இதில் ராணா 50 வயது நபரா நடிக்கிறார்.

  ஒரு தயாரிப்பாளராக கதாநாயகன் தோல்வியில் இருந்து மீண்டு விட்டீர்களா?

  அதுக்கு பின்னாடி பெரிய கதை இருக்கு. முதலில் ‘வீர தீர சூரன்’ என்று ஒரு படம் ஒப்பந்தமாகி நடிக்க ஆரம்பிச்சேன். சில பிரச்சினைகளால் நடுவிலயே அது நின்றுவிட்டது. அந்த படத்தின் கதையை மாற்றி எடுக்கப்பட்ட படம்தான் ‘கதாநாயகன்’. படம் சரியாக போகவில்லை. ஆனால் எனக்கு நடிப்பு, அனுபவம்னு சில வி‌ஷயங்களை அந்த படம் கற்றுத் தந்தது.

  ராட்சசன் வெற்றி பொறுப்பை அதிகமாக்கி விட்டதா?

  ஆமாம். ‘ராட்சசன்’ படத்துக்கு பிறகு நிறைய கதை கேட்டிருக்கிறேன். இன்னும் எதையும் ஓ.கே. பண்ணல. என்னுடைய பலம் என்ன என்று இப்போதுதான் புரிந்து இருக்கிறது. வித்தியாசமான படங்கள் தான் என் கேரியரில் என்னை தூக்கி விட்டிருக்கின்றன. எனவே இனி 4 படங்கள் சீரியஸ் படங்கள் என்றால் ஒரு படமாவது காமெடி படம் என்று திட்டமிட்டு இருக்கிறேன். இப்போ கிடைத்திருக்கிற இந்த இடத்துக்கு வர 6 வரு‌ஷங்களுக்கு மேல போராடியிருக்கேன். அதே வேகத்தில் அப்படியே ஏறுமுகமா இருக்கணும். #SilukkuvarpattiSingam #VishnuVishal

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படத்திற்கு மிகப்பெரிய கௌரவம் கிடைத்துள்ளது. #Ratsasan
  வணிக ரீதியிலான பொழுதுபோக்கு படங்களின் மத்தியில், ஒரு சில திரில்லர் சினிமாக்கள் மக்களிடையே மிகப்பெரிய அதிர்வுகளை உண்டாக்கும். அந்த வகையிலான ஒரு திரைப்படம் தான் ‘ராட்சசன்’. இப்படத்தின் வித்தியாசமான கதையமைப்பால் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. 

  இந்த படம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, வணிக ரீதியாக அதிக வசூல் செய்த படம் என்று நிரூபணம் ஆகியுள்ளது. இது தமிழ் சினிமாவிற்கு பெரும் அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது. 

  ராட்சசன் படத்தின் பெருமைகளுக்கு மகுடம் சூட்டுவது போல, தற்போது இந்த படம் IMDB தரவரிசையில் இந்தியாவின் சிறந்த படங்களின் வரிசையில் இரண்டாவது மிகச்சிறந்த படமாக மதிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்திய திரைப்படங்களின் வரிசையில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இது ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவுக்கே புத்துணர்ச்சி அளித்திருக்கிறது.

  மேலும் IMDB தர வரிசையில் தென்னியந்திய சினிமாக்களில் ராம்சரணின் ரங்கஸ்தலம், விஜய்சேதுபதியின் 96 மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநதி ஆகிய படங்களும் சிறந்த படங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.  ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், கிறிஸ்டோபர் சரவணன் ஆகியோர் நடித்திருந்தனர். ராம்குமார் இயக்க, ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லிபாபு தயாரித்திருந்தார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் ரிலீஸ் பிரச்சனையில் நான் நியாயத்துக்காக போராடுகிறேன் என்று அவர் கூறியிருக்கிறார். #VishnuVishal #SilukkuvarpattiSingam
  விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் வரும் 21 -ம் தேதி வெளியாக இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தின் பட வெளியீட்டு கமிட்டியை மதிக்காமல் இன்னும் சில பெரிய படங்கள் வருவதால் விஷ்ணு விஷால் பாதிக்கப்பட்டார்.

  இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு சர்ச்சையானது. என்ன பிரச்சினை என்று கேட்டோம். ‘திடீர் என்று கடைசி நேரத்தில் சங்கம் பின்வாங்கி விட்டது. இது எனக்கு 2வது முறை. ராட்சசன் பட வெளியீட்டின் போதே இதுபோல் நடந்தது. ஒழுங்கு கமிட்டியை சிலர் மதிப்பதில்லை. இதனால் மதித்து நடப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.  பழைய முறையே பரவாயில்லை என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். இந்த முறை எங்களுக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. பலவீனமானவன் வெளியே போய்விடுவான் என்று நினைக்கிறார்கள். அது தவறு. சங்கம் என்பதே சின்ன, நடுத்தர பட்ஜெட் படங்களை காப்பாற்றத் தான் உருவாக்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. நான் எனக்காக மட்டும் பேசவில்லை. பாதிக்கப்படும் சின்ன படங்களுக்காகவும் தான் பேசுகிறேன். நான் நியாயத்துக்காக தான் போராடுகிறேன்’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடித்திருக்கும் விஷ்ணு விஷாலுக்கு, நடிகர் உதயநிதி ஸ்டாலின் கைகொடுத்திருக்கிறார். #SilukkuvarpattiSingam
  ராட்சசன் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’. இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ரெஜினா, ஓவியா நடித்துள்ளார்கள். மேலும் யோகி பாபு, ஆனந்த் ராஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

  லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 21ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் பெற்றிருக்கிறார்.   அன்றைய தினத்தில் ‘அடங்க மறு’, ‘சீதக்காதி’, ‘மாரி 2’, ‘கனா’ உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #SilukkuvarpattiSingam
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  படங்களை ரிலீஸ் செய்வதில் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் நடப்பதாக விஷ்ணு விஷால் குற்றம்சாட்டியுள்ளார். #VishnuVishal #SilukkuvarpattiSingam #TFPC #Vishal
  படங்களின் வெளியீட்டை ஒழுங்குபடுத்த தயாரிப்பாளர் சங்கம் ஒரு கமிட்டி அமைத்து தேதிகளை ஒதுக்கி கொடுத்து வருகிறது. சில தயாரிப்பாளர்கள் இந்த கமிட்டியை மதிக்காதது தமிழ் சினிமாவில் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. 

  டிசம்பர் 21-ம் தேதி வெளியீடாக வரும் ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்க மறு’, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’, விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய படங்களை உறுதிப்படுத்தியது தயாரிப்பாளர் சங்கம். அதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்து தயாரித்துள்ள ‘மாரி 2’ மற்றும் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘கனா’ ஆகியவை இப்போட்டியில் இணைந்தன. 

  இதனால் மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள். தொடர்ச்சியாகக் குழப்பம் நீடித்ததால் டிசம்பர் 21-ம் தேதி யார் வேண்டுமானாலும் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து விலகிக் கொண்டது. டிசம்பர் 21-ம் தேதி வெளியீட்டு சர்ச்சையில் தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் உள்குத்து அரசியலே காரணம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார் விஷ்ணு விஷால். 

  இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: விதிமுறைகள்... விதிகள் இன்மை... விதிமுறைகளை சரியாக கடைப்பிடிப்பவர்களுக்கு இப்படித்தான் நீதி வழங்கப்படுமா? இது முதன்முறையல்ல. இரண்டாவது முறையாக இது எனக்கு நடக்கிறது. அப்புறம் எதற்கு விதிகள்? சிஸ்டம் தோற்றுவிட்டது. உள்குத்து அரசியல். இருக்கட்டும்... வெளிப்படையான அறிக்கை என்றால் என்னவென்று பிறருக்குத் தெரிவிக்கவே இதை சொல்கிறேன்.   டிசம்பர் 21-ல் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்‘ வெளியாகிறது. கடந்த ஒரு மாதத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் அனைத்துக் கூட்டங்களிலும் கலந்து கொண்ட வகையில் சொல்கிறேன். இத்தகைய நிலைமைக்கெல்லாம் நிச்சயமாக விஷால் காரணமல்ல. நான் ஏற்கனவே சொன்னதுபோல் எல்லாம் உள்குத்து அரசியல். விதிமுறைகள் எல்லாம் அதைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமே’. இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். #VishnuVishal #SilukkuvarpattiSingam #TFPC #Vishal #ProducerCouncil

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஷ்ணு விஷால் - அமலாபால் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக வெளியான தகவலுக்கு விஷ்ணு விஷால் மறுப்பு தெரிவித்து விளக்கமளித்துள்ளார். #VishnuVishal #AmalaPaul
  நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார். இது தொடர்பாக தனது விளக்கத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

  இந்நிலையில் நேற்று திடீர் என்று சமூக வலைதளங்களில் விஷ்ணு விஷால் விரைவில் அமலாபாலை திருமணம் செய்யஉள்ளார் என்று செய்திகள் பரவின. இருவரும் இணைந்து ‘ராட்சசன்’ படத்தில் நடித்திருப்பதால், இது உண்மையாக இருக்கும் என்று பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


  விஷ்ணு விஷால்- அமலாபால் திருமணம் என்று பரவிய செய்தி குறித்து விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் “என்ன ஒரு அபத்தமான செய்தி. தயவு செய்து பொறுப்புடன் செயல்படுங்கள். நாங்களும் மனிதர்களே. எங்களுக்கும் வாழ்க்கை, குடும்பம் உள்ளது. எழுத வேண்டும் என்பதற்காக எழுதாதீர்கள்” என்று கோபமாக பதிவிட்டுள்ளார். #VishnuVishal #AmalaPaul

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin