என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷ்ணுவிஷால்"

    நடிகர் ரஜினி கிஷன் மற்றும் திவிகா நடிக்க ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார்.

    நடிகர் ரஜினி கிஷன் மற்றும் திவிகா நடிக்கும் படம் ரஜினி கேங். இப்படத்தை ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். மேலும் மொட்டை ராஜேந்திரன், ராம் தாஸ், கூல் சுரேஷ், கல்கி ராஜா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். இப்படத்தை மிஷ்ரி என்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நாளை காலை 11.55 மணிக்கு வெளியாகிறது. இப்படத்தின் டிரைலரை நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் வெளியிடுகிறார்.

    ஆர்யன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விஷ்ணு விஷால். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

    இந்த நிலையில், கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் தான் ஆர்யன்.

    ராட்சசன் வரிசையில், ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்டு உருவாகி இருக்கும் ஆர்யன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஆர்யன் படம் குறித்து விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா காலக்கட்டத்தில் தான் ஆர்யன் படத்தின் கதையை கேட்டேன். கதையை கேட்டதும், இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ராட்சசன் படத்திற்கு பிறகு திரில்லர் படத்தில் நடிக்க வேண்டும், ஆனால் அந்தப் படம் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

    அதற்கு ஏற்றார்போல் இந்தப்படம் அமைந்துள்ளது. நிச்சயமாக ராட்சசன் போன்று இருக்காது. ஆனால், ரசிகர்கள் எதிர்பார்க்காத விஷயம் இந்தப் படத்தில் இருக்கிறது. கட்டா குஸ்தி திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே இந்தப் படத்திற்காக 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டோம். எனினும், பல்வேறு காரணங்களால் இதன் படப்பிடிப்பு தாமதமானது.

    வெப் சீரிஸ் தொடர்பான பணிகளுக்காக நானும் ஆர்யன் படத்தின் இயக்குநர் பிரவீன் மும்பை சென்றிருந்தோம். அப்போது நடிகர் அமீர் கானை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் அவர் பொதுவாக பேசும் போது, இந்தப் படத்தின் கதையை கேட்பதாக சொன்னார்.

    அதன்படி ஒருநாள் இரவு 10 மணிக்கு கதை சொல்ல ஆரம்பித்து, மறுநாள் காலை 6 மணி வரை ஆர்யன் படம் மட்டுமின்றி பொதுவில் சினிமா தொடர்பான விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். கதையை கேட்ட அமீர்கான் இந்தப் படத்தின் இந்தி பதிப்பில் தான், வில்லனாக நடிப்பதாக கூறினார். எனினும், இந்தப் படத்தின் இந்தி பதிப்பு தற்போது உருவாகும் சூழல் ஏற்படாமல் போய்விட்டது.

    அமீர்கான் நடிப்பதாக தெரிவித்த கதாபாத்திரத்தில் தற்போது செல்வராகவன் நடித்திருக்கிறார். நாங்கள் இந்தப் படத்தை தொடங்கும் போதே, வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம்.

    எனக்கு பான் இந்தியா கான்செப்ட்டில் நம்பிக்கை இல்லை. தற்போது பான் இந்தியா படங்கள் கடவுள் சார்ந்ததாகவும், அதீத கமர்ஷியலாகவும் இருக்கின்றன. இந்தப் படம் முற்றிலும் வேறானது. இந்தப் படம் அதிக மொழிகளில் வெளியாகி, சில மொழிகளில் மட்டும் நல்ல பெயர் எடுத்தால் போதும் என்று நான் நினைக்கவில்லை. குறைந்த அளவில் இரு மொழிகளில் வெளியானால் கூட எனக்கு அதன் வரவேற்பு மகிழ்ச்சியை கொடுத்தாலே போதும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இதைத்தொடர்ந்து தற்போது இவர் புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளார்.

    இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் 'கட்டா குஸ்தி'.இப்படம் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


    இதைத்தொடர்ந்து தற்போது விஷ்ணு விஷால், சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 'ராட்சசன்', 'முண்டாசுப்பட்டி'போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதனை விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார்.


    இயக்குனர் ராம் குமார் மற்றும் விஷ்ணு விஷால் கூட்டணியில் 2018-ஆம் ஆண்டு வெளியான 'ராட்சசன்'திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


    • விஷ்ணு விஷால் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
    • கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் ஆர்யன் என்ற படத்தில் கமிட் ஆனார்.

    விஷ்ணு விஷால் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

    இது தவிர்த்து கடந்த 2022 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் ஆர்யன் என்ற படத்தில் கமிட் ஆனார். ஒரு சில காரணத்தினால் படப்பிடிப்பு பாதியில் நிற்கப்பட்டது. தற்பொழுது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இன்று படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஷ்ணு அதை பதிவிட்டு அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இப்படத்தை அறிமுக இயகுனரான பிரவீன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷ்ரதா ஸ்ரீனாத், வாணி போஜன் மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இது ஒரு போலிஸ் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் அமைக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படத்திற்கு சாம். சி எஸ் இசையமைக்கவுள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழியில் வெளியாகவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×