நம்பர் ஒன்னும் இல்ல இரண்டும் இல்ல.. மீண்டும் இணையும் ராட்சசன் கூட்டணி..

விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து தற்போது இவர் புதிய படம் ஒன்றில் இணைந்துள்ளார்.
ராம்குமார் - விஷ்ணு விஷால்
ராம்குமார் - விஷ்ணு விஷால்
Published on

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் 'கட்டா குஸ்தி'.இப்படம் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது விஷ்ணு விஷால், சத்திய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 'ராட்சசன்', 'முண்டாசுப்பட்டி'போன்ற படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதனை விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

இயக்குனர் ராம் குமார் மற்றும் விஷ்ணு விஷால் கூட்டணியில் 2018-ஆம் ஆண்டு வெளியான 'ராட்சசன்'திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com