என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hot Spot 2 Much"

    • இணையத்தில் பலரும் அஸ்வினை கடுமையாக ட்ரோல் செய்தார்கள்.
    • அஸ்வினுக்கு ஸ்லீப்பிங் ஸ்டார் என்ற பட்டத்தையும் சோஷியல் மீடியாவில் கொடுத்தார்கள்.

    குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் அஸ்வின். இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு 'என்ன சொல்ல போகிறாய்' என்ற படம் வெளியானது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, "எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. கதை கேட்கும்போது அது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். கிட்டத்தட்ட 40 கதைகள் கேட்டு தூங்கிவிட்டேன். இந்தக் கதையைத்தான் தூங்காமல் கேட்டேன்" எனக்கூறியது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.

    இதனையடுத்து இணையத்தில் பலரும் அஸ்வினை கடுமையாக ட்ரோல் செய்தார்கள். அவருக்கு ஸ்லீப்பிங் ஸ்டார் என்ற பட்டத்தையும் சோஷியல் மீடியாவில் கொடுத்தார்கள்.

    இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்த அஸ்வின் கடைசியாக செம்பி என்ற இடத்தில் நடித்தார். அந்த படமும் பொது வரவேற்பை பெறவில்லை.

    இந்நிலையில், தற்போது அவர் 'ஹாட் ஸ்பாட் 2 மச்' படத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'ஹாட் ஸ்பாட்' என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தின் 2 ஆம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது.

    இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, நீங்கள் இப்போதும் கதை கேட்கும்போது தூங்குகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் கடுப்பான அஸ்வின், "40 கதைகள் கேட்டு தூங்கிவிட்டேன் என்று பொதுவாக கூறினேன். கதை பிடிக்கவில்லை என்றால் யாரும் தூங்குவதே இல்லையா?. படம் பிடிக்கவில்லை என்றால் தியேட்டர்களில் ரசிகர்கள் தூங்கத்தானே செய்கிறார்கள்.ஏன் இதை திரும்ப திருமபி கேட்டு குத்தி காட்டுறீங்க" ஆவேசமாக தெரிவித்தார்.

    • கடந்த ஆண்டு வெளியான ‘ஹாட் ஸ்பாட்’ என்ற படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
    • இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    "திட்டம் இரண்டு, அடியே" ஆகிய படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு 'ஹாட் ஸ்பாட்' என்ற படம் வெளியானது. இத்திரைப்படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சோபியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரே படத்தில் நான்கு கதைகளம் அமைந்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தின் வெற்றி தொடர்ந்து தற்போது, அதன் இரண்டாம் பாகமான 'ஹாட் ஸ்பாட் 2 மச்' என்ற படத்தினை இயக்கி வருகிறார். இதில் பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கேஜேபி டாக்கீஸ் மற்றும் செவன் வாரியர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது.

    இந்த நிலையில், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 




    • இப்படம் சமூகப் பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
    • 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    'ஹாட் ஸ்பாட் 2 மச்' (Hot Spot 2 Much) என்பது 2024-ம் ஆண்டு வெளிவந்த 'ஹாட் ஸ்பாட்' திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள புதிய தமிழ் அந்தாலஜி திரைப்படம் இது.

    விஷ்ணு விஷால் தயாரித்து, தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர், எம்.எஸ். பாஸ்கர், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் சமூகப் பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    இப்படத்தின் அனைத்து பணிகளும் நிடைவடைந்து இறுதி கட்டத்தை எட்டியிருப்பதால் 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், 'ஹாட் ஸ்பாட் 2 மச்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.  

    ×