என் மலர்
நீங்கள் தேடியது "Yenna solla pogirai"
- இணையத்தில் பலரும் அஸ்வினை கடுமையாக ட்ரோல் செய்தார்கள்.
- அஸ்வினுக்கு ஸ்லீப்பிங் ஸ்டார் என்ற பட்டத்தையும் சோஷியல் மீடியாவில் கொடுத்தார்கள்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் அஸ்வின். இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு 'என்ன சொல்ல போகிறாய்' என்ற படம் வெளியானது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, "எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. கதை கேட்கும்போது அது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். கிட்டத்தட்ட 40 கதைகள் கேட்டு தூங்கிவிட்டேன். இந்தக் கதையைத்தான் தூங்காமல் கேட்டேன்" எனக்கூறியது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.
இதனையடுத்து இணையத்தில் பலரும் அஸ்வினை கடுமையாக ட்ரோல் செய்தார்கள். அவருக்கு ஸ்லீப்பிங் ஸ்டார் என்ற பட்டத்தையும் சோஷியல் மீடியாவில் கொடுத்தார்கள்.
இதனால் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்த அஸ்வின் கடைசியாக செம்பி என்ற இடத்தில் நடித்தார். அந்த படமும் பொது வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில், தற்போது அவர் 'ஹாட் ஸ்பாட் 2 மச்' படத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'ஹாட் ஸ்பாட்' என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தின் 2 ஆம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, நீங்கள் இப்போதும் கதை கேட்கும்போது தூங்குகிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் கடுப்பான அஸ்வின், "40 கதைகள் கேட்டு தூங்கிவிட்டேன் என்று பொதுவாக கூறினேன். கதை பிடிக்கவில்லை என்றால் யாரும் தூங்குவதே இல்லையா?. படம் பிடிக்கவில்லை என்றால் தியேட்டர்களில் ரசிகர்கள் தூங்கத்தானே செய்கிறார்கள்.ஏன் இதை திரும்ப திருமபி கேட்டு குத்தி காட்டுறீங்க" ஆவேசமாக தெரிவித்தார்.







