என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ashwin"
- டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
- ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா 444 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
துபாய்:
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் அஸ்வின் 870 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் 847 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்திய வீரர் பும்ரா 847 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 788 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார்.
ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜா 444 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அஸ்வின் 322 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், அக்சர் படேல் 6-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
ஏற்கனவே பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி ஆகியோர் 6, 7, 8-வது இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மல்யுத்த இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
- வினேஷ் போகத்திற்கு சச்சின், கங்குலி, உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு
பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவரது பதக்கம் பறிபோனது.
இதைத் தொடர்ந்து தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கோரி சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனு வழக்கில் இன்று இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா? என்று நாடே ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
சச்சின், கங்குலி, உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்துக்கு தகுதியானவர் என்று கூறி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஷ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
Fingers crossed ? for Vinesh ? .
— Ashwin ?? (@ashwinravi99) August 13, 2024
- மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 13 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
- அதிரடியாக விளையாடிய பூபதி அரைசதம் கடந்தார்.
கோவை:
8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20கிரிக்கெட் போட்டி சேலத்தில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் திருப்பூர் - திண்டுக்கல் அணிகள் மோதின. போட்டி துவங்குவதற்கு முன்பு மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 13 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 36 ரன்கள் அடித்தார். திண்டுக்கல் அணி தரப்பில் சுபோத் பதி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
109 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் களமிறங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய சிவம் சிங் 4 ரன்களிலும் விமல் குமார் 17 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் - பூபதி வைஷ்ணவ குமார் திருப்பூர் அணியின் பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தனர். அதிரடியாக விளையாடிய பூபதி அரைசதம் கடந்தார்.
இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 11.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது.
Iconic Shots from an Unforgettable Match ??#DindigulDragons #IdhuNeruppuDa #TNPL2024 pic.twitter.com/tcEzCiiK53
— Dindigul Dragons (@DindigulDragons) July 17, 2024
- எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆஃப்-ஸ்பின்னராக தனது வாழ்க்கையை தொடங்கிய அஸ்வின்.
- சென்னை அணிக்காக அவர் என்னை தொடர்ந்து பயன்படுத்தினார்.
விளையாட்டு உலகில் சிறந்த ஐகான், ரோல்மாடல், ஆசான் என பல்வேறு பெருமைகள் கொண்டவராக இருப்பவர் எம்.எஸ்.டோனி. பொதுவாக விளையாட்டு என்றாலே வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரண்டில் ஒன்றில் முடிந்து போகும் விஷயம்தான்.
ஆனால் அதில் கற்ற படிப்பினைகளையும், பாடங்களையும், போராட்டங்களையும், நுணுக்கங்களையும் என பல்வேறு விஷயங்களையும் இளம் தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்த வல்லவராக இருப்பதால் தான் டோனியை ஒரு தலைவனாகவே பலரும் பார்க்கிறார்கள்.
சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக உள்ளார். "கேரம் பால்" அஸ்வின் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியாவின் நட்சத்திர மற்றும் முண்ணனி பந்து வீச்சாளார் ஆவார். மூத்த வீரர்களான சச்சின் & டிராவிட் அவர்களுக்கு அடுத்து ஐசிசி கிரிக்கெட் வீரர் விருதை பெற்ற ஒரே இந்திய வீரர் அஸ்வின். உலகில் கேரம்பால் வீசுவதில் உலகில் 2 பேர் அவற்றில் இவரும் ஒருவர்.
எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆஃப்-ஸ்பின்னராக தனது வாழ்க்கையை தொடங்கிய அஸ்வின், ரேங்க்களில் விரைவாக உயர்ந்து இந்திய அணிக்கு வலிமையான சக்தியாக மாறினார். இன்றும் இந்திய டெஸ்ட் அணியில் தூணாக தொடர்கிறார்.
தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் எம்.எஸ்.டோனியின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றும் அதிர்ஷ்டமும் பெற்றார். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக டோனி தன்னிடம் ஒரே அறிவுரையை தான் கூறியதாக அஸ்வின் சமீபத்தில் தெரிவித்தார்.
மேலும், அவர் 15 ஆண்டுகளாக சொன்ன அறிவுரை தற்போது தான் தனக்கு புரிந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து பேசும்போது, சென்னை அணிக்காக அவர் என்னை தொடர்ந்து பயன்படுத்தினார்.
ஒருகட்டத்தில் புதிதாக முயற்சிக்கும் உனது வழக்கத்தை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதே. தொடர்ந்து உற்சாகமாகவும், வேடிக்கையாகவும் இரு என்று கூறினார். அவர் அப்படி சொன்னது கிரிக்கெட் மட்டுமின்றி ஒருவரின் மனவலிமை மற்றும் பல்வேறு விஷயங்களை பற்றி என்பதை இப்போது தான் புரிந்து கொண்டேன் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
- இந்திய அணிக்காக தற்போது டெஸ்ட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.
- இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அஸ்வின் சாதனை படைத்திருக்கிறார்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் அஸ்வினும் ஒருவர். அவர் டெஸ்ட் அணியின் மட்டும் இடம் பிடித்து விளையாடி வருகிறார். அவர் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்திருக்கிறார். மேலும் டெஸ்ட்டில் 516 விக்கெட்டுகளை எடுத்து உலக அளவில் 9-வது இடத்திலும் இந்திய அளவில் கும்பேவுக்கு அடுத்த (2-வது) இடத்திலும் உள்ளார்.
இந்திய அணிக்காக நீண்ட காலமாக ஆடிவரும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவரது வாழ்க்கைப் பயணத்தை 'I Have the Streets - A Kutti Cricket Story!' என்ற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார். விளையாட்டு பத்திரிகையாளர் சித்தார்த் மோங்காவுடன் இணைந்து எழுதியுள்ள இந்தப் புத்தகத்திற்கான அறிமுகக்கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்வில் அஸ்வின் அந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இந்நிலையில் அவர் தற்போது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் பெரிய புத்தக கடையில் அஸ்வின் வாழ்க்கை பயணம் புத்தகம் இருந்தது. என்னை போன்ற ஒருவருக்கு இது ஒரு கனவு எனவும் நானும் எனது தந்தையும் பல புத்தக கடைகளுக்கு சென்றிருக்கிறோம் மற்றும் நிறைய கதை ஆசிரியர்கள் குறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறோம் எனவும் வீடியோவுக்கு தலைப்பிட்டிருந்தார்.
- நைப் குறித்து தமிழக வீரர் அஸ்வின் கிண்டலடித்துள்ளார்.
- நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் இவரை கலாய்த்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையின் இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் முறையாக ஐசிசி தொடரின் அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் தகுதி பெற்று புதிய சாதனை படைத்தது.
முன்னதாக இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் மழை அவ்வப்போது வந்து ஆப்கானிஸ்தானுக்கு சோதனை கொடுத்தது. குறிப்பாக 12-வது ஓவர் வீசிக் கொண்டிருக்கும் போது மழை வருவது போல் தெரிந்தது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி வங்கதேசத்தை விட ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது.
அதன் காரணமாக பெவிலியனில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் எதையாவது செய்து போட்டியை கொஞ்சம் மெதுவாக்குங்கள் என்று சைகை காட்டினார்.
அதை முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு பார்த்த ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதின் நைப் உடனடியாக தம்முடைய தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு காயமடைந்தது போல் அப்படியே களத்தில் விழுந்தார். அதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி மருத்துவ குழுவினர் அவரை சோதித்ததால் சில நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது.
குல்பதின் நைப் உண்மையாக காயடைந்துள்ளேன் என்பதை நடுவர்களுக்கு காட்டுவதற்காக பெவிலியன் சென்று அமர்ந்து கொண்டார். ஆனால் ஒரு முடிந்ததும் பின்னர் களத்திற்கு திரும்பினார். அதன் பிறகு 2 ஓவர்கள் பந்து கூட வீசினார்.
அதை பார்க்கும் ரசிகர்கள் இவருக்கு ஆஸ்கார் விருதை கொடுக்கலாம் போல என்று கிண்டலடிப்பதுடன் நாட்டுக்காக இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தியதற்கு பாராட்டையும் தெரிவிக்கின்றனர். ரசிகர்கள் தவிர கிரிக்கெட் வீரர்களும் அவரை கலாய்த்து பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது, கால்பந்து போல இவரை சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றுங்கள் என்று எக்ஸ் தளத்தில் கலாய்த்தார்.
மேலும் இந்த போட்டிக்கு வர்ணனை செய்தவர்களில் ஒருவரான நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் ஸ்மித் கூறியதாவது,
எனக்கு 8 மாதங்களாக மூட்டு வலி இருக்கிறது. நான் உடனடியாக ஆப்கன் வீரர் குல்புதினின் மருத்துவரை சென்று பார்க்கப் போகிறேன். அந்த மருத்துவர்தான் உலகின் 8-வது அதிசயம் என நக்கலாக கூறினார்.
- ஒருகாலத்தில் டோனியின் விக்கெட்டை வீழ்த்துவதை லட்சியமாக வைத்திருந்தேன்.
- இந்திய அணி ஒன்றும் வானத்தைப்போல படம் மாதிரி அல்ல.
தனது கிரிக்கெட் அனுபவங்கள் தொடர்பான 'I Have the Streets - குட்டி ஸ்டோரி' என்ற புத்தகத்தை இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டார்.
இந்த புத்தகத்திற்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் இந்திய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் முன்னுரை எழுதியுள்ளார்.
அந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அஷ்வின் சுவாரசியமான பல்வேறு விஷயங்களை பகிர்ர்த்து கொண்டார்.
எம்.எஸ்.டோனி குறித்து பேசிய அஷ்வின், "ஒருகாலத்தில் டோனியின் விக்கெட்டை வீழ்த்துவதை லட்சியமாக வைத்திருந்தேன். சேலஞ்சர் டிராபி போட்டியில் போது நூலிழையில் டோனியின் விக்கெட்டை என்னால் வீழ்த்த முடியாமல் போனது. இன்றும் அந்த பால் எனக்கு நினைவில் உள்ளது. அனால் அப்போட்டியில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் நான் டைவ் அடித்து டோனியின் கேட்சை பிடித்து கொண்டாடினேன்.
டோனி ஒருமுறை உங்கள்மீது நம்பிக்கை வைத்துவிட்டால் நீங்களே சோர்வடையும் வரை உங்களுக்கு வாய்ப்பு வழங்குவார்" என்று தெரிவித்தார்.
கவுதம் கம்பீர் குறித்து பேசிய அஷ்வின், "அவர் போராட்ட குணம் கொண்டவர். சில பேர் சிரிக்க மாட்டாங்க அவ்வளவுதான்.. அதுக்காக என்ன பண்ண முடியும்" என்று கிண்டலாக தெரிவித்தார்.
"இந்திய அணி ஒன்றும் வானத்தைப்போல படம் மாதிரி அல்ல, ஒவ்வொரு முறையும் மெட்ராஸ் தனிமைப்படுத்தப்படுவதை நான் உணர்ந்துள்ளேன். இந்திய அணியில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல" என்று அஷ்வின் தெரிவித்தார்.
- அடுத்த மாதம் 5-ந் தேதி சேலத்தில் தொடங்குகிறது.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
சேலம்:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி சேலத்தில் தொடங்குகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா, டி.என்.பி.எல். தலைமை செயல் அதிகாரி பிரசன்ன கண்ணன் ஆகியோர் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
2024-ம் ஆண்டு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் ஜூலை 5-ந் தேதி தொடங்குகிறது.
முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின், நடராஜன் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்கிறார்கள்.
டி.என்.பி.எல். தொட்ரில் உள்ள 13 வீரர்கள் ஐ.பி.எல். போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின்போது, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராமசாமி, டி.என்.பி.எல். கவர்னிங் கவுன்சில் உறுப்பினர் தினேஷ்குமார், சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் இயக்குனர் செல்வமணி, சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பிரகாஷ், செயலாளர் பாபு குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- ஐபிஎல் தொடங்கிய காலத்தில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார்.
- தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். ஐபிஎல் போட்டியில் தனது திறமையான பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதில் கைதேர்ந்தவர்.
இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகத்தான் விளையாடினார். பின்னர் பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடினார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார்.
இந்த நிலையில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்புவார் என செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸின் உயர் செயல்திறன் மையத்தின் (Chennai Super Kings High Performance Centre) பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள அகாடமிகளை கவனிக்கும் வகையில் உருவாக்கப்பட இருக்கிறது.
இது தொடர்பாக சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில் "இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் அஸ்வின். அவரின் வருகை உயர் செயல்திறன் மையத்திற்கும், எங்களுடைய அகாடமிகளுக்கும் மிகப்பெரிய அளவில் பூஸ்ட்-ஆக அமையும்" என்றார்.
அடுத்த வருடம் மெகா ஆக்சன் நடைபெறுகிறது. அப்போது அஸ்வினை மீண்டும் ஏலம் எடுப்பீர்களா? என்ற கேள்விக்கு, "ஆக்சனில் என்ன நடக்கிறது என்பதை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும்" என்றார்.
டோனி அடுத்த வருடம் விளையாடுவாரா என்ற கேள்விக்கு, "இது தொடர்பாக டோனி மட்டுமே முடிவு செய்ய வேண்டும். நாங்கள், அவருடைய ரசிகர்கள் அவர் விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம். இறுதியான முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். அவருடைய முடிவுக்கு மதிப்பு அளிப்போம்" என்றார்.
- முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.
- இந்த போட்டியில் சாஹல் பந்துவீச்சில் கிளாசன் 3 சிக்ஸர்களை விளாசினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.
176 ரன்களை துரத்திய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்து பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்த போட்டியில் சாஹல் பந்துவீச்சில் கிளாசன் 3 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை ராஜஸ்தான் வீரர் சாஹல் படைத்துள்ளார். அவர் மொத்தமாக இதுவரை 224 சிக்ஸர்களை விட்டு கொடுத்துள்ளார்.
இவருக்கு அடுத்த இடத்தில் பியூஷ் சாவ்லா - 222, ஜடேஜா - 206, அஷ்வின் - 203, அமித் மிஷ்ரா - 183 ஆகியோர் உள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த முதல் 5 பந்துவீச்சாளர்களும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரன்களை விட்டுக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று முனைப்புடன் அஸ்வின் பந்து வீசுவதில்லை
- டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பந்து வீசினால் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு தான் அழுத்தம் ஏற்படும்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான ராயல்ஸ் அணியில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
அஷ்வின் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தும் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில் அஸ்வினின் பந்துவீச்சு இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கும் அஷ்வின் விக்கெட் வீழ்த்தும் பந்துகளை தவிர்த்து வருகிறார். ரன்களை விட்டுக் கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று முனைப்புடன் அவர் பந்து வீசுவதில்லை. எனவே என்னை பொறுத்தவரை இனிவரும் போட்டிகளில் நான் அவரை சேர்க்க மாட்டேன். சொல்லப் போனால் அடுத்த சீசனுக்கு அவர் ஏலத்தில் விற்கப்படாமல் கூட போகலாம் என்று தோன்றுகிறது" என்று அவர் தெரிவித்தார்.
- அஸ்வினை ஜடேஜா தமிழில் பேசி வாழ்த்தியிருந்தார்.
- அவரை ரவி இந்திரன் என்றும், அஸ்வினை ரவி சந்திரன் என்றும் புகழ்ந்திருந்தார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் நாணயத்தின இரு பக்கங்களாக விளங்கி வருகின்றனர். கடந்த பல வருடங்களாக இவர்களது பங்களிப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கெதிராக அஸ்வின் 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதை பாராட்டும் வகையில் அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 500 தங்க காசுகள் மற்றும் ஒரு கோடி ரூபாய் காசோலை வழங்கியது.
Gujarathis speaking tamil is my fav genre. #Modi #Jadeja https://t.co/Y4PArvGftO
— ??.????? ?????? ʰᵘˡᵏ (@thisis_GP_offl) March 16, 2024
இந்த விழாவில் அஸ்வினை பலரும் பாராட்டி பேசினார். ஜடேஜா தமிழில் பேசி நான் ரவி இந்திரன், நீங்கள் ரவி சந்திரன் என தமிழில் பேசினார். அவரது பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில்தான் அஸ்வினிடமே, எனது தமிழ் எப்படி இருக்கிறது என்று கேட்டார் ஜடேஜா. அதற்கு அஸ்வின், ஜட்டு! உங்களுடைய செய்திகள் மூலம் என்னுடைய ஆச்சரியம் மற்றும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்