search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Sunny Leone"

  • தேர்வை உத்தர பிரதேச காவலர் ஆட்சேர்ப்பு மற்றும் பணியுயர்வு வாரியம் நடத்துகிறது
  • சம்பந்தப்பட்ட அனுமதி சீட்டுடன் தேர்வு எழுத எவரும் வரவில்லை என தேர்வு மையம் அறிவித்தது

  நேற்று, உத்தர பிரதேச மாநில காவல்துறையில் உள்ள காவலர் பணிக்கான காலியிடங்களுக்கு ஆள் சேர்க்கும் எழுத்து தேர்வு நடைபெற்றது.

  இந்த தேர்வு, அம்மாநிலத்தில் 75 மாவட்டங்களில் 2,385 மையங்களில் நடைபெற்றது.

  இந்நிலையில், உத்தர பிரதேச காவலர் ஆட்சேர்ப்பு மற்றும் பணியுயர்வு வாரிய (UP Police Recruitment and Promotion Board) வலைதளத்தில் பதிவாகிய "12258574" எனும் எண் கொண்ட ஒரு அனுமதி சீட்டில், பிரபல இந்தி திரைப்பட நடிகை சன்னி லியோன் புகைப்படம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதை கண்ட தேர்வு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையின் சைபர் பிரிவு இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.

  முதற்கட்ட விசாரணையில், கன்னோஜ் (Kannauj) பகுதி தேர்வு மையத்தை குறிப்பிட்ட இந்த அனுமதி சீட்டு போலியானது என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

  அந்த விண்ணப்பத்தில் உள்ள அனைத்து தகவல்களும் போலியானவை என தெரிய வந்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள செல்போன் எண், மகோபா (Mahoba) பகுதியில் உள்ள தேர்வுக்கு சம்பந்தம் இல்லாத ஒருவரது எண் என விசாரணையில் தெரிகிறது.

  இந்த பதிவு எண் கொண்ட அனுமதி சீட்டுடன் தேர்வு எழுத எவரும் வரவில்லை என தேர்வு மையம் அறிவித்துள்ளது.

  இச்சம்பவம் குறித்து சைபர் குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரித்து வருகிறது.

  சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த அனுமதி சீட்டின் புகைப்படத்தை கண்டு பயனர்கள் சுவாரஸ்யமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

  • 2014-ம் ஆண்டு வெளியான ‘வடகறி' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் சன்னி லியோன் அறிமுகமானார்.
  • உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சன்னி லியோனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

  ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன், ஒரு கட்டத்தில் அதிலிருந்து முழுமையாக வெளியே வந்தார். பின்னர் பாலிவுட் சினிமாவில் நுழைந்த அவர் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்தார். 2014-ம் ஆண்டு வெளியான 'வடகறி' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் சன்னி லியோன் அறிமுகமானார்.

  அதனைத் தொடர்ந்து 'மதுர ராஜா', 'ஓ மை கோஸ்ட்', 'தீ இவன்' ஆகிய படங்களில் சன்னி லியோன் நடித்தார். மேலும் சில படங்களில் அவர் நடித்து வருகிறார். ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு வரும் சன்னி லியோன் தற்போது தொழில் அதிபராகவும் மாறி இருக்கிறார். உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அவர் புதிய ஓட்டல் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

  அட்டகாசமான பார் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட அந்த நட்சத்திர ஓட்டலுக்கு 'சிக்கா லோகா' என்று பெயர் வைத்துள்ளனர். விரைவில் இந்தியா முழுவதும் இதன் கிளைகளை தொடங்கவும் சன்னி லியோன் திட்டமிட்டுள்ளார்.

  நடிகைகள் பலரும் நடிப்பை தாண்டி பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் ஓட்டல் தொழிலில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் சன்னி லியோனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

  • நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
  • இவர் இளைஞர் நலத்துறை அமைச்சரும் நகரி எம்.எல்.ஏவுமாக இருக்கிறார்.

  ஆந்திராவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இதையொட்டி ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் கடந்த 2 வாரமாக 'யாத்ரா' என்ற நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். நடை பயணத்தின் போது முதல்- மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை கடும் விமர்சனம் செய்தார்.  இதற்கு ரோஜா பதில் கூறுகையில், "பவன் கல்யாண் ஒரு நடிகர் என்பதால் அவரை பார்க்கத்தான் கூட்டம் வருகிறது. இதெல்லாம் ஓட்டாக மாறாது. பவன் கல்யாண் முதல்- மந்திரிக்கு பாடம் எடுப்பதை பார்க்கும் போது சன்னி லியோன் ஒழுக்கத்தை பற்றி வேதம் ஓதுவது போல் உள்ளது என்று பேசினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இணையத்திலும் இதற்கு எதிர்ப்பு வலுத்தது.

  இந்தநிலையில் சன்னி லியோன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் ரோஜா பேசிய வீடியோவை வெளியிட்டு நான் ஆபாச நடிகைதான். ஆனால் எனது கடந்த காலத்தை நினைத்து ஒரு போதும் வருத்தப்பட்டதில்லை. உங்களை போல் இல்லாமல் நான் என்ன செய்ய விரும்பினாலும் அதை வெளிப்படையாகவே செய்வேன். ஆனால் நீங்கள் அப்படி செய்யவில்லை. உங்களுக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் நான் ஆபாச பட உலகை விட்டு வெளியேறினேன். ஆனால் அதை நீங்கள் செய்யவில்லை என பதிலடி கொடுத்துள்ளார்.  • இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் சன்னி லியோன்.
  • இவர் தற்போது அனுராக் காஷ்யப் இயக்கியிருக்கும் கென்னடி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

  சன்னி லியோன் நடிந்த அனுராக் காஷ்யப் இயக்கியிருக்கும் கென்னடி திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதற்காக சன்னி லியோன் கேன்ஸ் நகருக்குச் சென்றிருந்தார். அப்போது அவர் நீலப் படங்களில் நடித்துக் கொண்டிருந்து விட்டு தொலைக்காட்சி மற்றும் திரையுலகிற்கு வந்தபோது எதிர்கொண்ட எதிர்ப்பை பற்றி பேசினார்.


  கென்னடி படக்குழு

  என்னுடைய அந்நாள் காதலர் தற்போதைய என்னுடைய கணவர் டேனியலிடம் நான் இந்தியா வரவில்லை என்னை எல்லோரும் வெறுப்பார்கள் என்று கூறியிருந்தேன். ஆனால் அவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் என்னை பங்கெடுக்க வைத்தார். இது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் பெண்கள் சமையலறை வரை என்னை கொண்டுபோய் சேர்த்தது. இதனால் என்னுடைய முந்தைய முகம் முழுவதுமாக மாறியது.

  அதில் இருக்கும்போதே நான் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். அதன் பிறகு நான் சினிமாவுக்குள் வருவதற்கு பெரிய தடை இருந்தது. என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள். தொடர்ந்து எனக்கு மிரட்டல்கள் வந்தன. பெண்கள் அதிகம் பேர் என்னிடம் பேசினார்கள் என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.  • பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
  • சன்னி லியோன் தொடர்பான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் விருப்பம்.

  ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'வடகறி' படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தொடர்ந்து நடிகர் சதீஷுடன் இணைந்து 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.

   

  சன்னி லியோன்

  சன்னி லியோன்

  சன்னி லியோனை சில வருடங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்பந்தம் செய்து இருந்ததாகவும் ஆனால் அதில் அவர் பங்கேற்காமல் மோசடி செய்து விட்டதாகவும் ஷியாஸ் குஞ்சு முகமது என்பவர் மாநில குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். தனக்கு எதிராக போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி சன்னி லியோன் கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


  சன்னி லியோன்

  சன்னி லியோன்

  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சன்னி லியோன், அவரது கணவர் டேனியல் வெபர் மற்றும் அவரது ஊழியர் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ள மோசடி வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் விரும்புகிறது என்றும், சன்னிலியோன் கிரிமினல் குற்றம் எதுவும் செய்யவில்லை என்றும் தேவையில்லாமல் அவர் துன்புறுத்தப்படுகிறார் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற 31-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

  • நடிகை சன்னி லியோன் பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
  • இவருக்கு படப்பிடிப்பு தளத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

  இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்த திரைப்படம் 'ஓ மை கோஸ்ட்'. இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, ரமேஷ் திலக், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.


  சன்னிலியோன்

  வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் இந்தி, மலையாளம் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகை சன்னி லியோனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.


  காயம் ஏற்பட்ட சன்னிலியோன்

  அதாவது, படப்பிடிப்பு தளம் ஒன்றில் நடிகை சன்னி லியோனுக்கு வலது கால் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. பெரிய காயம் எதுவும் இல்லை என்பதால் ஊழியர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த வீடியோவை சன்னி லியோன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.


  • நடிகை சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஓ மை கோஸ்ட்'.
  • இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார்.

  இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'. இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, ரமேஷ் திலக், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.


  ஓ மை கோஸ்ட்

  இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே.சசி குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார்.


  ஓ மை கோஸ்ட்

  இந்நிலையில், 'ஓ மை கோஸ்ட்' திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவை முடித்துவிட்டு வெளியில் வந்த நடிகை தர்ஷா குப்தா, நான் அப்படி என்ன செய்தேன். அவர் என்னை ஏன் அப்படி ப்ரொஜெக்ட் செய்கிறார் என்று தேம்பி தேம்பி அழுதார்.


  தர்ஷா குப்தா

  இது குறித்து தர்ஷா குப்தா கூறியதாவது, "நான் நடந்து வந்த போது என்னுடைய ஆடையை யாரோ மிதித்து விட்டார் என்று நான் திரும்பி பார்த்ததை என்னுடைய அசிஸ்டண்டை நான் திட்டியதாகவும் நான் திமிர் பிடித்தவள் என்பது போலவும் போட்டிருந்தார்கள். ஆனால் அது என் தம்பி தான் அவனுக்கு தெரியும் நான் அவனிடம் எப்படி பழகுகிறேன் என்று இது தெரியாமல் பேசுவது வருத்தமாக உள்ளது" என்று கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  • 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சதீஷ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
  • இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.


  ஓ மை கோஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா

  இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் சதீஷ், "மும்பையைச் சேர்ந்த சன்னி லியோனே நமது பாரம்பரிய உடையான சேலையில் வந்திருக்கிறார். கோயம்புத்தூர் பொண்ணு தர்ஷா குப்தா எப்படி உடையணிந்து வந்திருக்கிறார் பாருங்க" என்று பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு பல கண்டன குரல்கள் எழுந்துள்ளது. மேலும் திரைப்பிரபலங்கள் இயக்குனர் நவீன் உள்ளிட்ட சிலர் தங்களின் கண்டனங்களை முன்வைத்தனர்.


  சதீஷ் - சன்னி லியோன் - தர்ஷா குப்தா

  இதனை தொடர்ந்து நடிகர் சதீஷ் இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தார். அதில், சன்னி லியோன் பட்டுப் புடவையில் வந்திருந்ததால் தான் அப்சட் ஆகிட்டதாகவும் இதனை மேடையில் என்னை தார்ஷா குப்தா சொல்ல சொன்னாங்க என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து சதீஷ் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ஷா குப்தா, "சதீஷ் இதனை என் பக்கம் திருப்பி விடுவது சரியா? நானா உன்னை மேடையில் இப்படிச் சொல்லச் சொன்னேன்? இது மிகவும் விசித்திரமானது. யாரவது என்ன பத்தி, மேடையில் நீங்க அசிங்கமா பேசுங்கனு சொல்லுவங்களா?? எனக்கும் அன்னைக்கு அவ்ளோ வலியாதான் இருந்துச்சு, ஆனா நான் அதை பெருசா காட்டிக்கவில்லை. ஆனால் இப்போ இப்படி சொல்றது, நல்லா இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.


  தர்ஷா குப்தா

  தர்ஷா குப்தாவின் இந்த பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சதீஷின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பாடகி சின்மயி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பொது இடங்களில் இதுபோன்ற கோமாளித்தனமான கருத்துகள் சொல்வதால் பெண்கள் அசிங்கப்படுகிறார்கள் என்பதை ஆண்கள் உணருவதில்லை" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.  • 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சதீஷ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
  • இந்த சர்ச்சை குறித்து மாறி மாறி ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டியுள்ளனர்.

  இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

   

  தர்ஷா குப்தா

  தர்ஷா குப்தா

   

  இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் சதீஷ், "மும்பையைச் சேர்ந்த சன்னி லியோனே நமது பாரம்பரிய உடையான சேலையில் வந்திருக்கிறார். கோயம்புத்தூர் பொண்ணு தர்ஷா குப்தா எப்படி உடையணிந்து வந்திருக்கிறார் பாருங்க" என்று பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு பல கண்டன குரல்கள் எழுந்துள்ளது. மேலும் திரைப்பிரபலங்கள் இயக்குனர் நவீன் உள்ளிட்ட சிலர் தங்களின் கண்டனங்களை முன்வைத்தனர்.

  சதீஷ் - சன்னி லியோன் - தர்ஷா குப்தா

  சதீஷ் - சன்னி லியோன் - தர்ஷா குப்தா

   

  இதனை தொடர்ந்து நடிகர் சதீஷ் இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தார். அதில், என்னிடம் தர்ஷா குப்தா என்னைப் பாருங்க சன்னிலியோன் போன்று மாடர்னாக டிரஸ் போட்டு வந்துருக்கேன். சன்னி லியோன் எப்படி வருவார் எனப் பாப்போம் என்றார். ஆனால் சன்னி லியோன் பட்டுப் புடவையில் வந்திருந்தாங்க. இதனால் தான் அப்சட் ஆகிட்டதாகவும் இதனை மேடையிலும் என்னை அவங்க சொல்ல சொன்னாங்க என்று தெரிவித்திருந்தார்.

  தர்ஷா குப்தா

  தர்ஷா குப்தா

   

  இந்நிலையில் சதீஷ் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ஷா குப்தா பதிவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், சதீஷ் இதனை என் பக்கம் திருப்பி விடுவது சரியா? நானா உன்னை மேடையில் இப்படிச் சொல்லச் சொன்னேன்? இது மிகவும் விசித்திரமானது. யாரவது என்ன பத்தி, மேடையில் நீங்க அசிங்கமா பேசுங்கனு சொல்லுவங்களா?? எனக்கும் அன்னைக்கு அவ்ளோ வலியாதான் இருந்துச்சு, ஆனா நான் அதை பெருசா காட்டிக்கவில்லை. ஆனால் இப்போ இப்படி சொல்றது, நல்லா இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

  தர்ஷா குப்தாவும் சதீஷும் மாறி மாறி ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக்கொள்வது பலரையும் முணுமுணுக்க செய்துள்ளது.

  • இயக்குனர் யுவன் இயக்கத்தில் நடிகை சன்னி லியோன் தமிழில் நடிக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'.
  • இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

  இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்த்திருக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'. இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

   

  ஓ மை கோஸ்ட் டிரைலர் வெளியீட்டு விழா

  ஓ மை கோஸ்ட் டிரைலர் வெளியீட்டு விழா

  இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே.சசிகுமார் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

  இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் சதீஷ், "மும்பையைச் சேர்ந்த சன்னி லியோனே நமது பாரம்பரிய உடையான சேலையில் வந்திருக்கிறார். கோயம்புத்தூர் பொண்ணு தர்ஷா குப்தா எப்படி உடையணிந்து வந்திருக்கிறார் பாருங்க" என்று பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு பல கண்டன குரல்கள் எழுந்துள்ளது. மேலும் திரைப்பிரபலங்கள் இயக்குனர் நவீன் உள்ளிட்ட சிலர் தங்களின் கண்டனங்களை முன்வைத்தனர்.

   

  ஓ மை கோஸ்ட் டிரைலர் வெளியீட்டு விழா

  ஓ மை கோஸ்ட் டிரைலர் வெளி