என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்ஷா குப்தா"

    • இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களின் மோகம் நாளுக்கு நாள் இளைஞர்களிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
    • சமீபத்தில் நடிகை மற்றும் இன்ஸ்டா பிரபலமான தர்ஷா குப்தாவின் புகைப்படம் வைரலானது.

    இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைத்தளங்களின் மோகம் நாளுக்கு நாள் இளைஞர்களிடம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமூக வலைத்தளத்தில் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படத்திற்கு எத்தனை லைக், ஷேர் , கமெண்ட்ஸ் வருகிறது என்பதே இளைஞர்களின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது.

    பலர் இந்த செயலியின் மூலம் பிரபலமாகி சினிமாத்துறையில் நடித்துள்ளனர். சில இன்ஸ்டாகிராம் மாடல் மற்றும் Influencers அவர்களது அந்தரங்க புகைப்படங்களை சப்ஸ்கிரைப் செய்வபர்களுக்கு மட்டும் எக்ஸ்க்லூசிவாக பதிவிடுகின்றனர் அதற்கு இன்ஸ்டாகிராமில் சப்ஸ்கிரைப் என்ற ஆப்ஷனும் இருக்கிறது. இதை வைத்து பல மாடல்கள் பணம் சம்பாதித்து வருகின்றனர்.

    அப்படி சமீபத்தில் நடிகை மற்றும் இன்ஸ்டா பிரபலமான தர்ஷா குப்தாவின் புகைப்படம் வைரலானது. அவரது பிகினி புகைப்படம் கடந்த 2 நாட்களாக இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது Subscription-க்கு மாதம் 440 ரூபாய் வசூலிக்கிறார். அவர் பக்கத்திற்கு 800 நபருக்கு மேல் Subscribers இருக்கின்றனர். அதற்கு நாம் கணக்கு போட்டு பார்த்தால் மாதம் 3.5 லட்ச ரூபாய் வருமானம் வருகிறது. இதன் மீது நெட்டிசன்கள் பலரும் அவர்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். 

    இந்த ஆப்ஷனை வைத்து பல மாடல்கள் அவர்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களின் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.

    • 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சதீஷ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • இந்த சர்ச்சை குறித்து மாறி மாறி ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

     

    தர்ஷா குப்தா

    தர்ஷா குப்தா

     

    இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் சதீஷ், "மும்பையைச் சேர்ந்த சன்னி லியோனே நமது பாரம்பரிய உடையான சேலையில் வந்திருக்கிறார். கோயம்புத்தூர் பொண்ணு தர்ஷா குப்தா எப்படி உடையணிந்து வந்திருக்கிறார் பாருங்க" என்று பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு பல கண்டன குரல்கள் எழுந்துள்ளது. மேலும் திரைப்பிரபலங்கள் இயக்குனர் நவீன் உள்ளிட்ட சிலர் தங்களின் கண்டனங்களை முன்வைத்தனர்.

    சதீஷ் - சன்னி லியோன் - தர்ஷா குப்தா

    சதீஷ் - சன்னி லியோன் - தர்ஷா குப்தா

     

    இதனை தொடர்ந்து நடிகர் சதீஷ் இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தார். அதில், என்னிடம் தர்ஷா குப்தா என்னைப் பாருங்க சன்னிலியோன் போன்று மாடர்னாக டிரஸ் போட்டு வந்துருக்கேன். சன்னி லியோன் எப்படி வருவார் எனப் பாப்போம் என்றார். ஆனால் சன்னி லியோன் பட்டுப் புடவையில் வந்திருந்தாங்க. இதனால் தான் அப்சட் ஆகிட்டதாகவும் இதனை மேடையிலும் என்னை அவங்க சொல்ல சொன்னாங்க என்று தெரிவித்திருந்தார்.

    தர்ஷா குப்தா

    தர்ஷா குப்தா

     

    இந்நிலையில் சதீஷ் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ஷா குப்தா பதிவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், சதீஷ் இதனை என் பக்கம் திருப்பி விடுவது சரியா? நானா உன்னை மேடையில் இப்படிச் சொல்லச் சொன்னேன்? இது மிகவும் விசித்திரமானது. யாரவது என்ன பத்தி, மேடையில் நீங்க அசிங்கமா பேசுங்கனு சொல்லுவங்களா?? எனக்கும் அன்னைக்கு அவ்ளோ வலியாதான் இருந்துச்சு, ஆனா நான் அதை பெருசா காட்டிக்கவில்லை. ஆனால் இப்போ இப்படி சொல்றது, நல்லா இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

    தர்ஷா குப்தாவும் சதீஷும் மாறி மாறி ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக்கொள்வது பலரையும் முணுமுணுக்க செய்துள்ளது.

    • 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சதீஷ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.


    ஓ மை கோஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா

    இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் சதீஷ், "மும்பையைச் சேர்ந்த சன்னி லியோனே நமது பாரம்பரிய உடையான சேலையில் வந்திருக்கிறார். கோயம்புத்தூர் பொண்ணு தர்ஷா குப்தா எப்படி உடையணிந்து வந்திருக்கிறார் பாருங்க" என்று பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு பல கண்டன குரல்கள் எழுந்துள்ளது. மேலும் திரைப்பிரபலங்கள் இயக்குனர் நவீன் உள்ளிட்ட சிலர் தங்களின் கண்டனங்களை முன்வைத்தனர்.


    சதீஷ் - சன்னி லியோன் - தர்ஷா குப்தா

    இதனை தொடர்ந்து நடிகர் சதீஷ் இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தார். அதில், சன்னி லியோன் பட்டுப் புடவையில் வந்திருந்ததால் தான் அப்சட் ஆகிட்டதாகவும் இதனை மேடையில் என்னை தார்ஷா குப்தா சொல்ல சொன்னாங்க என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து சதீஷ் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ஷா குப்தா, "சதீஷ் இதனை என் பக்கம் திருப்பி விடுவது சரியா? நானா உன்னை மேடையில் இப்படிச் சொல்லச் சொன்னேன்? இது மிகவும் விசித்திரமானது. யாரவது என்ன பத்தி, மேடையில் நீங்க அசிங்கமா பேசுங்கனு சொல்லுவங்களா?? எனக்கும் அன்னைக்கு அவ்ளோ வலியாதான் இருந்துச்சு, ஆனா நான் அதை பெருசா காட்டிக்கவில்லை. ஆனால் இப்போ இப்படி சொல்றது, நல்லா இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.


    தர்ஷா குப்தா

    தர்ஷா குப்தாவின் இந்த பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சதீஷின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பாடகி சின்மயி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பொது இடங்களில் இதுபோன்ற கோமாளித்தனமான கருத்துகள் சொல்வதால் பெண்கள் அசிங்கப்படுகிறார்கள் என்பதை ஆண்கள் உணருவதில்லை" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.



    • சின்னத்திரையில் வெளியான முள்ளும் மலரும், செந்தூரப் பூவே தொடர்களில் நடித்ததன் மூலம் பிரலமானவர் தர்ஷா குப்தா.
    • தற்போது தர்ஷா குப்தா பதிவிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சின்னத்திரையில் வெளியான முள்ளும் மலரும், செந்தூரப் பூவே தொடர்களில் நடித்ததன் மூலம் பிரலமானவர் தர்ஷா குப்தா. அதன்பின்னர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நகைச்சுவை நடிகர் சதிஷ் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.


    தர்ஷா குப்தா

    தர்ஷா குப்தா

    சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்க்ளை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தர்ஷா குப்தா பதிவிட்டிருக்கும் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர். 

    • நடிகை தர்ஷா குப்தா சமீபத்தில் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
    • இவர் தன் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

    சின்னத்திரையில் வெளியான முள்ளும் மலரும், செந்தூரப் பூவே தொடர்களில் நடித்ததன் மூலம் பிரலமானவர் தர்ஷா குப்தா. அதன்பின்னர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நகைச்சுவை நடிகர் சதிஷ் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.


    சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தர்ஷா குப்தா தற்போது கவர்ச்சி புகைப்படங்களை மட்டுமல்லாமல் கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், 'நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்! உங்கள் எதிரிகளுக்கு மிகப்பெரிய தண்டனை' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    ×