என் மலர்
நீங்கள் தேடியது "Chinmayi"
2016 ஆம் ஆண்டு வெளியான "பழைய வண்ணாரபேட்டை" படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படம் சர்ச்சைக்கு உரிய படமாக இருந்தாலும் வெற்றிப் படமாக அமைந்தது.
கடைசியாக செல்வராகவன் நடிப்பில் வெளியான "பகாசூரன்" திரைப்படத்தை மோகன் ஜி இயக்கினார். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
மோகன் ஜி அடுத்து இயக்கும் படம் திரௌபதி 2. இந்தப் படத்திலும் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 23ந் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் "எம்கோனே" பாடல் அண்மையில் வெளியானது. இதனை சின்மயி பாடி இருந்தார். இதற்கிடையில், பாடியதற்காக சிம்மயிக்கு எதிராக இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன.
இதனையடுத்து மோகன் ஜி படத்தில் பாடியதற்காக சின்மயி மன்னிப்புக்கேட்டிருந்தார். அவர் வெளியிட்ட பதிவில், "எம்கோனே பாடல் பாடியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஜிப்ரானை 18 வருடங்களாக எனக்கு தெரியும்.
அவரது அலுவலகத்தில் இருந்து இந்த பாடலை பாட அழைத்தபோது, வழக்கம் போல சென்று பாடினேன். அப்போது ஜிப்ரான் இல்லை. இப்போதுதான் எல்லாமே புரிய ஆரம்பிக்கிறது. முன்பே தெரிந்திருந்தால் ஒருபோதும் பாடியிருக்க மாட்டேன். எனக்கும் அந்த கொள்கைகளுக்கும் நிறைய முரண் உள்ளது. இதுதான் முழு உண்மை" என்று தெரிவித்தார்.
சின்மயி மன்னிப்பு கேட்ட நிலையில் மோகன் ஜி பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ``என்னுடன் திரௌபதி 2 படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அல்லது யாரையும் குறிவைத்து தாக்க வேண்டாம். என் படம் பேசுவது என் சொந்த சிந்தனை.
என்னுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து பணியாற்றும் எந்த நபரையும் குறிவைத்து தாக்குவது கோழைத்தனமாகும்'' என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், 'திரௌபதி 2' படத்தில் சின்மயி பாடிய பாடலிலிருந்து அவரது குரலை நீக்கி, வேறு ஒரு பாடகியைப் பாட வைக்க முடிவு செய்துள்ளதாக இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
- விக்ரம் பிரபுவின் முக்கிய படங்களில் ஒன்று டாணாக்காரன்.
- சின்மயி குரலில் நல்ல மெலடி பாடலாக அமைந்துள்ளது
விக்ரம் பிரபுவின் முக்கிய படங்களில் ஒன்று டாணாக்காரன். இப்படம் விக்ரம் பிரபுவிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இதனைத்தொடர்ந்து தற்போது மற்றொரு போலீஸ் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் 'சிறை'. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி படத்தை இயக்கியுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. த் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படம்.
படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரெய்லர் அண்மையில் வெளியானது. இப்படத்தின் 2வது பாடல் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகி உள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சின்மயி குரலில் நல்ல மெலடி பாடலாக அமைந்துள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
- சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
- பாடகி சின்மயி 500 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் உடன் போராட்டக்களத்திற்கு வந்தார்.
சென்னை மாநகராட்சி தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 6 ஆவது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நகரின் பல இடங்களில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
இந்நிலையில், இன்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
ரிப்பன் மாளிகையின் முன்னால் போராடிக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு அவசரமாக தண்ணீர் தேவைப்பட்ட நிலையில், பாடகி சின்மயி 500 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் உடன் போராட்டக்களத்திற்கு வந்தார்.
தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், தங்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும் என்ற தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு சின்மயி ஆதரவு தெரிவித்தார்
- இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
- 'தக் லைஃப்' ஆல்பத்தில் 10வது பாடலாக சின்மயி வெர்ஷன் முத்தமழை இணைக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
தக் லைஃப் திரைப்படம் கடந்த 6ம் தேதி வெளியானது.
இதனிடையே தக் லைஃப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
படத்தில் அந்த பாடலை தீ பாடிய நிலையில், அவர் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வர இயலாததால் சினமயி அந்த பாடலை மேடையில் பாடினார்.
சின்மயி பாடிய முத்தமழை பாடலுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து 'தக் லைஃப்' ஆல்பத்தில் 10வது பாடலாக சின்மயி வெர்ஷன் முத்தமழை இணைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்பாடலுக்கு சினிமா பிரபலங்களும் புகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் முத்த மழை பாடலை கேட்டு தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் செல்வராகவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
ஒரு பாடல் கேட்டு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போய் - உயிரில் மின்சாரம் பாய்ந்து கேட்டது முதல் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். இதெல்லாம் உலகில் ஒரே மனிதனால் - நம் A.R. ரஹ்மான் அவர்களால் மட்டுமே முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தக் லைஃப் திரைப்படம் இன்று வெளியாகிறது.
- இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தக் லைஃப் திரைப்படம் இன்று வெளியாகிறது.
இதனிடையே தக் லைஃப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
படத்தில் அந்த பாடலை தீ பாடிய நிலையில், அவர் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வர இயலாததால் சினமயி அந்த பாடலை மேடையில் பாடினார்.
சின்மயி பாடிய முத்தமழை பாடலுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து 'தக் லைஃப்' ஆல்பத்தில் 10வது பாடலாக சின்மயி வெர்ஷன் முத்தமழை இணைக்கப்பட்டுள்ளது.
- மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'.
- இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தக் லைஃப்'. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. அதில் முத்த மழை என்ற பாடலை மேடையில் பாடகர் சின்மயி பாடினார். இப்பாடலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் படத்தில் இந்த பாடலை பாடகி தீ பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மற்றும் இந்தி வெர்ஷனில் இப்பாடலை சின்மயி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் பலரும் தீ பாடிய முத்த மழை வெர்ஷனை விட சின்மயி பாடிய வெர்ஷனே அழகாக இருக்கிறது மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது போன்ற கருத்துகளை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சின்மயி பேசியது " நான் இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. தீ-ஆல் அன்று வர இயலவில்லை அதனால் நான் மேடையில் பாடினேன். என்னுடைய வேலையை அன்று செய்தேன். பாடகி தீ-க்கு ஒரு தனிப்பட்ட குரல் வளம் இருக்கிறது. அவருடைய முக பாவனை யாராலும் கொடுக்க இயலாது. தற்பொழுது உள்ள சூழல் நான் பாடிய வெர்ஷனும் அவர் பாடிய வெர்ஷனும் போட்டிப்போட்டு ஒரு மல்யுத்த போட்டி நடப்பது போன்ற உணர்வு இருக்கிறது. ஒரு கலைஞனாக நான் அவருடைய பாடலை மதிக்கிறேன். இது போட்டி அல்ல. நான் கண்டிப்பாக தீ- யிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் வளர்ந்து வரும் இளம் பாடகி. இன்னும் 15 வருடங்களில் அவர் 100 சின்மயி, ஷ்ரேயா கோஷலை விழுங்கும் திறனுடையவராக இருப்பார். அவருக்கு என ஒரு தனி இடம் இருக்கும். எங்கள் இருவரையும் ஒப்பிடுவது அவசியமற்றது என நினைக்கிறேன்" என கூறியுள்ளார்.
- 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சதீஷ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
- இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

ஓ மை கோஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் சதீஷ், "மும்பையைச் சேர்ந்த சன்னி லியோனே நமது பாரம்பரிய உடையான சேலையில் வந்திருக்கிறார். கோயம்புத்தூர் பொண்ணு தர்ஷா குப்தா எப்படி உடையணிந்து வந்திருக்கிறார் பாருங்க" என்று பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு பல கண்டன குரல்கள் எழுந்துள்ளது. மேலும் திரைப்பிரபலங்கள் இயக்குனர் நவீன் உள்ளிட்ட சிலர் தங்களின் கண்டனங்களை முன்வைத்தனர்.

சதீஷ் - சன்னி லியோன் - தர்ஷா குப்தா
இதனை தொடர்ந்து நடிகர் சதீஷ் இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தார். அதில், சன்னி லியோன் பட்டுப் புடவையில் வந்திருந்ததால் தான் அப்சட் ஆகிட்டதாகவும் இதனை மேடையில் என்னை தார்ஷா குப்தா சொல்ல சொன்னாங்க என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து சதீஷ் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ஷா குப்தா, "சதீஷ் இதனை என் பக்கம் திருப்பி விடுவது சரியா? நானா உன்னை மேடையில் இப்படிச் சொல்லச் சொன்னேன்? இது மிகவும் விசித்திரமானது. யாரவது என்ன பத்தி, மேடையில் நீங்க அசிங்கமா பேசுங்கனு சொல்லுவங்களா?? எனக்கும் அன்னைக்கு அவ்ளோ வலியாதான் இருந்துச்சு, ஆனா நான் அதை பெருசா காட்டிக்கவில்லை. ஆனால் இப்போ இப்படி சொல்றது, நல்லா இல்லை" என்று பதிவிட்டுள்ளார்.

தர்ஷா குப்தா
தர்ஷா குப்தாவின் இந்த பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சதீஷின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து பாடகி சின்மயி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பொது இடங்களில் இதுபோன்ற கோமாளித்தனமான கருத்துகள் சொல்வதால் பெண்கள் அசிங்கப்படுகிறார்கள் என்பதை ஆண்கள் உணருவதில்லை" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
This is horrendous.
— Chinmayi Sripaada (@Chinmayi) November 10, 2022
If anyone needs to forgive him, it is her.
I dont think men who throw such jokes in public domains realize this is how women get shamed time and again and this is a license to heckle.
Horrible. https://t.co/7JLIRhutKW
- சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது ‘மீ டு’பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
- தற்போது வைரமுத்துவை சந்தித்த பிரபல நடிகையை எச்சரித்து பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல பாடகியான சின்மயி, சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது 'மீ டு'பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்மீது குற்றம் சாட்டினார். மேலும் கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

அர்ச்சனா
பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சின்மயி, கவிஞர் வைரமுத்துவை சந்தித்த தொலைக்காட்சி நடிகையை எச்சரித்து பதிவிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சி நடிகையும், தொகுப்பாளினியுமான அர்ச்சனா சில தினங்களுக்கு முன்பு வைரமுத்துவை சந்தித்த பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அப்பொழுது வைரமுத்து ஆசிர்வாதம் அளிப்பது போன்ற புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.

வைரமுத்துவை சந்தித்த அர்ச்சனா
இந்நிலையில் நடிகை அர்ச்சனாவின் பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள சின்மயி, துணைக்கு யாரும் இல்லாமல் வைரமுத்துவை சந்திக்க வேண்டாம் என எச்சரித்து பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
- சின்மயி-ராகுல் ரவீந்திரன் தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தை பிறந்தாக அறிவிக்கப்பட்டது.
- தற்போது சின்மயி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

சின்மயி, ராகுல் ரவீந்திரன் தம்பதியினருக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆனதையடுத்து சமீபத்தில் சின்மயிக்கு இரட்டை குழந்தை பிறந்தது. ஆண் மற்றும் பெண் குழந்தைகளான இவர்களுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர்.

இந்நிலையில் சின்மயி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், சென்னையில் கொசு தொல்லை மீண்டும் முழு வீச்சில் வந்துள்ளது. கட்டிடங்களில் அதைத் தடுக்க நாம் என்ன செய்யலாம்?. இதை எப்படி சமாளிப்பது. கைக்குழந்தைகளை மோசமாக கடித்து விடுகிறது என்று பதிவிட்டு, குழந்தையை கொசு கடித்த புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
- கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சில வருடங்களுக்கு முன்பு பாலியல் புகார் அளித்திருந்தார்.
- இந்த விவகாரம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் திரையுலகின் பிரபல பாடகியான சின்மயி, சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது 'மீ டு'பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்மீது குற்றம் சாட்டினார். மேலும் கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். சின்மயி மட்டுமல்லாமல் பலர் வைரமுத்து மீது குற்றம்சாட்டினர். அதன் பிறகு சினிமா துறையில் நடக்கும் பாலியல் அத்துமீறல் தொடர்பான பல விஷயங்கள் வெளியே வந்தது.
இந்த நிலையில் தற்போது பிரபல பாடகி புவனா சேஷனும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "17 பெண்கள் வைரமுத்திற்கு எதிராக பாலியல் குற்றசாட்டை முன் வைத்திருக்கின்றனர். ஆனால் 4 பேர் மட்டும்தான் தைரியமாக தங்களது பெயரையும் முகத்தையும் வெளி உலகத்திற்கு காட்டியுள்ளனர். பாலியல் வன்கொடுமை சூழ்நிலையில் இருந்து வெளியே வருவது என்பது மிகவும் கடினமான ஒன்று.
என்னுடைய கதையை நான் பகிர்வதற்கான நோக்கம் இளம் பாடகர்களின் கனவுகள் நசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. எனக்கு நேர்ந்ததை போல பிற பெண்களுக்கு நடக்க நான் விரும்பவில்லை. பிரபல பாடகியான சின்மயி தொடர்ந்து வைரமுத்து மீதான குற்றசாட்டுகளை முன்வைக்கும் போது அவர் பலரால் விமர்சனம் செய்யப்பட்டார். சின்மயின் தைரியம் என்னை வியக்க வைக்கிறது. இந்த சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இது குறித்தான விசாரணை என்பது நடக்கபோவதில்லை, நடத்தவும் விடமாட்டார்கள்" என்று பேசினார்.
- நடிகர் வைரமுத்து இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- வைரமுத்துவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தினார்.
கவிஞர் வைரமுத்து இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெசன்ட் நகரில் உள்ள வைரமுத்துவின் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதை பார்த்து கொந்தளித்த பாடகி சின்மயி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "பல பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஒரு மனிதனின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். பல விருதுகளை பெற்ற பாடகியான நான் MeToo இயக்கத்தின் மூலம் இந்த கவிஞர் மீது பாலியல் புகார் தெரிவித்ததற்காக, 2018-ம் ஆண்டு முதல் தமிழ் திரைத்துறையில் பணியாற்ற முடியாத தடையை எதிர்கொண்டிருக்கிறேன்.

பல தசாப்தங்களுக்கு முன்னர் பிறந்த தவறான நடத்தை கொண்ட அந்த கவிஞர், எந்தப் பெண்ணின் மீதும் கை வைக்கலாம் என்று முடிவு செய்தார், பல அரசியல்வாதிகளுடன் குறிப்பாக திமுகவுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தால் சம்பந்தப்பட்ட பெண்களை அச்சுறுத்தினார். தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பெண்களின் பாதுகாப்புக்காக பேசுவதாக கூறுவது அவமானம். வைரமுத்துவைப் பற்றி பேச்சு எழும்போதெல்லாம் அவர்கள் அனைவரும் அமைதியாகிவிடுவார்கள்.

சின்மயி பதிவு
ஒவ்வொரு ஆண்டும் இவரின் பிறந்தநாளில், சிறந்த தமிழ்ப் பெண்ணியப் பண்பாட்டில் உள்ள ஆண்களும், பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணைக் குறியிட்டு வயிறு எரியுதா? என்று சொல்கிறார்கள். இது, நமது அற்புதமான பலாத்கார மன்னிப்புக் கலாச்சாரம். இங்கே அவர்கள் பாலியல் குற்றவாளிகளைக் கொண்டாடுகிறார்கள், அவர்களுக்கு எதிராக பேசும் பெண்களைத் துன்புறுத்துகிறார்கள்.
பிரிஜ் பூஷன் முதல் வைரமுத்து வரை அனைவரும் எப்போதும் தப்பித்து விடுவார்கள், ஏனென்றால் அரசியல்வாதிகள் இவர்களைப் பாதுகாப்பார்கள்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
- பிரபலமான பாடகிகளுள் ஒருவர் சின்மயி
- இவர் சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார். சின்மயி சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், பாடகி சின்மயி குடும்பத்தாரிடம் இருந்து நூதன முறையில் பணமோசடி நடைபெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள சின்மயி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், எங்கள் குடும்பத்தாரிடம் போலியான TNEB-பில்-பே ஸ்கேம் நடைபெற்றுள்ளதாகவும் OTP எண் பகிரப்படாமலேயே இந்த மோசடி நடைபெற்றுள்ளதாகவும் செல்போனுக்கு வந்த லிங்கை க்ளிக் செய்ததும் வங்கிக் கணக்கில் இருந்த பணம் காணாமல்போனதாகவும் அவர் கூறியுள்ளார்.
சமீபகாலமாக பிரபலங்கள் பலரிடம் இதுபோன்ற நூதன மோசடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.






