என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Neelothi"

    • விக்ரம் பிரபுவின் முக்கிய படங்களில் ஒன்று டாணாக்காரன்.
    • சின்மயி குரலில் நல்ல மெலடி பாடலாக அமைந்துள்ளது

    விக்ரம் பிரபுவின் முக்கிய படங்களில் ஒன்று டாணாக்காரன். இப்படம் விக்ரம் பிரபுவிற்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இதனைத்தொடர்ந்து தற்போது மற்றொரு போலீஸ் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் 'சிறை'. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி படத்தை இயக்கியுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. த் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படம்.

    படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரெய்லர் அண்மையில் வெளியானது. இப்படத்தின் 2வது பாடல் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகி உள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சின்மயி குரலில் நல்ல மெலடி பாடலாக அமைந்துள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 


    ×