search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Vikram Prabhu"

  • கடந்தாண்டு இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தார்
  • மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் ரூ.90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள இப்படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார்

  தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் அனுஷ்கா. பல படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

  இதனையடுத்து கடந்தாண்டு இயக்குநர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படத்தில் அனுஷ்கா நடித்தார். அப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

  இதனையடுத்து மலையாளத்தில் ஜெயசூர்யா நடிப்பில் ரூ.90 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார். இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் நடித்து வந்த அனுஷ்கா, இப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி இருக்கிறார்.

  இந்நிலையில் தற்போது இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் காதி என்கிற படத்தில் அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

  இப்படத்தை ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் ஒடிடி உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ளது.

  உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

  • திருமண உறவுகளின் நுண்ணிய பிரச்சினைகளை பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் பேசிய திரைப்படம் ‘இறுகப்பற்று’.
  • இப்படம் பற்றிய ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களின் பாராட்டை பெற்றன.

  இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஓடிடி வெளியீட்டிலும் உச்சம் தொட்டுள்ளது.


  திருமண உறவுகளின் நுண்ணிய பிரச்சினைகளை பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் பேசிய இத்திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. கதை, திரைக்கதை, வசனங்கள், நடிகர்களின் நடிப்பு என படம் பற்றிய ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களின் பாராட்டை பெற்றன. மேலும், இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டாப் 10 ட்ரெண்டிங் பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.


  தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியதாவது, "இறுகப்பற்று திரைப்படத்தின் அற்புதமான வரவேற்பு எங்களுக்கு அலாதியான மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. மக்களின் பாராட்டுகளை பணிவன்புடன் ஏற்றுக்கொள்கிறோம். உணர்வுப்பூர்வமான, உண்மைத்தன்மையை கொண்ட ஒரு கதைக்களம் பார்வையாளர்களிடம் எவ்வாறு எதிரொலிக்கிறது என்பதை பார்ப்பது ஊக்கமளிக்கிறது. ஆழமான, தனித்துவமான கதைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கிற எங்கள் அர்ப்பணிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறோம்" என்று கூறினார். 

  • விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் ‘ரெய்டு’.
  • இப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் 'ரெய்டு'. இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். மேலும், அனந்திகா, ரிஷி ரித்விக், சவுந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


  எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுத கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ரெய்டு' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.


  இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது, நெகட்டிவிட்டியை வைத்துதான் இந்தப் படம் உருவாக்கியுள்ளோம். நல்ல கதைகளைதான் தேர்ந்தெடுப்பேன். இது கொஞ்சம் கமர்ஷியல் படம். எனக்கு ஆக்ஷன் பிடிக்கும். அதை கமர்ஷியலாக சில விஷயங்கள் எனக்காக சேர்த்து முயற்சி செய்து கொண்டு வந்துள்ளோம். ஸ்ரீதிவ்யாவை பல வருடங்கள் கழித்து சந்தித்துள்ளேன். இயக்குனர் கார்த்தி, வேலு பிரபாகரன் சார் என அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நான் லீனியர் முறையில்தான் ரெய்டு கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் விஷூவலுக்காக இசையை சாம் சூப்பராக கொடுத்துள்ளார் என்றார்.


  நடிகை ஸ்ரீ திவ்யா பேசியதாவது, 'ரெய்டு' படம் நான் முத்தையா சாருக்காகதான் நடித்தேன். 'மருது' படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் முத்தையா கொடுத்தார். விக்ரம் பிரபுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

  • விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் 'ரெய்டு'.
  • இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

  'டாணாக்காரன்' மற்றும் சமீபத்தில் வெளியான 'இறுகப்பற்று' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெய்டு'.ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படத்தை கார்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.


  மேலும், அனந்திகா, ரிஷி ரித்விக், சவுந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுத கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


  'ரெய்டு' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 'ரவுடீசத்துக்கு ஒரு பிராண்ட் கிரியேட் பண்ணப்போறேன்' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.  • விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் 'ரெய்டு'.
  • இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.

  'டாணாக்காரன்' மற்றும் சமீபத்தில் வெளியான 'இறுகப்பற்று' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெய்டு'.ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படத்தை கார்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.  மேலும், அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுத கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


  இந்நிலையில், 'ரெய்டு' படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடலான 'அழகு செல்லம்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. காதல் பாணியில் உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'ரெய்டு' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'இறுகப்பற்று'.
  • இப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

  இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.


  இறுகப்பற்று போஸ்டர்

  இந்நிலையில், 'இறுகப்பற்று' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிந்து அறிவித்துள்ளது. 


  • இதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்புடுத்தும் விதமாக பரப்புரை செயல்திட்டத்தினை பிரசாந்த் மருத்துமனை நடத்தியது.
  • போட்டியில் பங்கேற்றவர்களையும், விருதுகளை வென்றவர்களையும் விக்ரம் பிரபு பாராட்டினார்.

  சென்னை மாநகரில் முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக சேவையாற்றி வரும் பிரசாந்த் மருத்துவமனை "இளம் இதயங்களை காப்போம்" ('Save Young Hearts') 2023 டிஜிட்டல் பரப்புரை செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. மாரடைப்புகள், இதய பிரச்சனைகள், வராமல் தடுக்க இளம் தலைமுறையினர் மத்தியில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்கும் வகையில், இதய ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்புடுத்தும் விதமாக 2022-ம் ஆண்டில் 'Save Young Hearts' பெயரில் நடத்தப்பட்ட வெற்றிகரமான பரப்புரை செயல்திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் இதனை பிரசாந்த் மருத்துவமனை நடத்தியது.

  இப்போட்டிக்கு 100-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. மிகச் சிறப்பான முதல் இரண்டு படைப்புகளுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் மற்றும் ஐம்பது ஆயிரம் வழங்கினர். நடிகர் விக்ரம் பிரபு இந்நிகழ்வின் விருந்தினராக கலந்து கொண்டு 'இளம் இதயங்களை காப்போம்' என்ற செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக நடத்தப்பட்ட சிறிய வீடியோ (Insta Reels) போட்டியில் பங்கேற்றவர்களையும் மற்றும் விருதுகளை வென்றவர்களையும் மனமார பாராட்டினார்.  இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது, வயதானவர்களுக்கு மட்டும் தான் மாரடைப்பு வரும் என்பது இல்லை தப்பான பழக்கங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கும் ஒழுங்கான உணவு பழக்கம் இல்லாதவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படும். 'Save Young Hearts' என்ற விஷயம் எல்லாரையும் சென்றடைய செய்த பிரசாந்த் மருத்துவமனை மற்று குழுவிற்கு என் வாழ்த்துகள் என்று பேசினார்.

  புகைப்பிடிப்பது போன்ற விஷயங்களை உங்கள் படங்களில் தவிப்பீர்களா என்ற கேள்விக்கு, படத்தில் எங்கே எல்லாம் சொல்ல முடியுமோ அங்கே எல்லாம் சொல்லுவோம். சொல்வதை ஏற்றுக் கொள்ளும் சினிமாவை குறைந்த நபர்கள் தான் பார்க்கிறார்கள். ஒரு நல்ல விஷயத்தை 60 நிமிடங்களில் சொன்னால் பார்க்கிறார்கள். அதே இரண்டு மணிநேரம் படத்தில் சொன்னால் பார்க்கமாட்டார்கள் என்று கூறினார்.

  மேலும், பத்திரிகையாளர் டாணாக்காரன் படத்தில் நடப்பது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு விக்ரம் பிரபு, "டாணாக்காரன் நான் செத்து பிழைத்த படம்" என்று பேசினார்.

  • விக்ரம் பிரபுவின் படங்கள் பாராட்டுகளைப் பெற்றன.
  • ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக ‘ரெய்டு’ உருவாகியுள்ளது.

  'டாணாக்காரன்' மற்றும் சமீபத்தில் வெளியான 'இறுகப்பற்று' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர் விக்ரம் பிரபு. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெய்டு'.

  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் உலகம் முழுவதும் ரெய்டு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. சமீப காலமாக வெளியாகியுள்ள விக்ரம் பிரபுவின் படங்கள் பாராட்டுகளைப் பெற்று வருவதால் அவரது நட்சத்திர அந்தஸ்து மேலும் உயர்ந்துள்ளது.

  ஆக்ஷன் த்ரில்லர் படமாக 'ரெய்டு' உருவாகியுள்ளது. இந்தப் படத்தை கார்த்தி இயக்கி இருக்க, எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார்.

  இந்த படத்தில் அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதிரவன் ஒளிப்பதிவும், மணிமாறன் படத்தொகுப்பும், கே.கணேஷ் ஆக்ஷன் காட்சிகளையும் கவனித்திருக்க இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

  • விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'இறுகப்பற்று'.
  • இப்படம் நேற்று (அக்டோபர் 6) திரையரங்குகளில் வெளியானது.

  இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (அக்டோபர் 6) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


  இந்நிலையில், 'இறுகப்பற்று' படக்குழுவை பாராட்டி நடிகர் சூர்யா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இறுகப்பற்று திரைப்படம் நிறைய அன்பைப் பெறுவதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. இயக்குனர் யுவராஜ் தயாளன் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


  • விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'.
  • இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.

  இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு மற்றும் விதார்த் இணைந்து நடிக்கும் திரைப்படம் 'இறுகப்பற்று'. இந்த படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.


  கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்ய, மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கணவன் - மனைவி உறவை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.