என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Director Mari Selvaraj"

    தீபாவளியை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 17ம் தேதி வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான 'பைசன்' வசூல் குவித்து வருகிறது.

    இந்நிலையில், பைசன் படத்தை பார்த்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாரி செல்வராஜை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.

    அப்போது அவர்,"நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பார்த்த ஒரு சினிமா இதை எடுத்த இயக்குனர் யார் என்று தேடவைத்தது மாரி செல்வராஜ். நீங்கள் தூரத்தில் இருக்கிறீர்கள் நான் இங்கிருந்தே பெரும் மன நிறைவோடு பைசனுக்காக உங்களை கட்டி தழுவுகிறேன் மாரி செல்வராஜ். அற்புதமான படைப்பு மாரி அருமை வாழ்த்துக்கள்" என்றார்.

    வைகோவின் பாராட்டுக்கு மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்," பைசன் பார்த்துவிட்டு தொலைபேசியில் அழைத்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக பைசனை பாராட்டி உச்சிமுகர்ந்த பெரும் மரியாதைக்குரிய ஐயா வைகோ அவர்களுக்கு எங்கள் நன்றியையும் அன்பையும் தெரிவித்து கொள்கிறோம்" என்றார்.

    திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும்.

    இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    படம் வெளியாவதற்கு இன்றும் 5 நாட்களே உள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறது.

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன்.
    • இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார்.

    இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

    பைசன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது.

    இந்த நிலையில் படத்தின் சிறப்பு காட்சியை இயக்குநருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரிகள் இணைந்து படத்தை பார்த்தனர். பார்த்த பிறகு தயாரிப்பு குழு " மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் காளமாடன் திரைப்படத்தை பார்த்தோம். எங்களை வியப்பில் ஆழ்த்தியThis is Mari on ஒரு அனல் பறக்கும் சக்திவாய்ந்த கலைப்படைப்பு - பைசன் படத்தை பாராட்டிய தயாரிப்பாளர் This is Mari on.

    இப்படி ஒரு துணிச்சலும் திறமிக்க படத்தை தயாரித்ததில் Applause பெருமிதம் கொள்கிறது. இந்த தீபாவளிக்கு வருகிறான் பைசன்" என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

    • அண்மையில் நடந்த திருநெல்வேலி ஆணவப்படுகொலை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    • தனது வீட்டு வாசலில் வைத்து கவினை வெட்டி படுகொலை செய்துள்ளான்.

    அண்மையில் நடந்த திருநெல்வேலி ஆணவப்படுகொலை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    வெவ்வேறு சமூகங்களைச் சார்ந்த கவினும் சுபாசினி என்ற பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் இதனையறிந்த சுபாசினியின் பெற்றோர் கவின்குமாரையும் அவரது பெற்றோரையும் எச்சரித்துள்ளனர். அதனால் கவின்குமாரின் பெற்றோர் கவின்குமாரை கண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கவின் விபத்தில் சிக்கி திருச்செந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாத்தாவை பார்ப்பதற்காக ஊருக்கு சென்றுள்ளார். அப்போது திருநெல்வேலியில் சித்த மருத்துவராக தான் பணியாற்றும் தனியார் சிகிச்சை மையத்தில் கவினின் தாத்தாவிற்கு சிகிச்சை அளிக்கலாம் என சுபாஷினி தெரிவித்ததன் அடிப்படையில் சுபாஷினியிடம் ஆலோசனை பெறுவதற்கு கவின் அவரது அம்மா மற்றும் மாமா ஆகிய மூவரும் சிகிச்சை மையத்திற்கு சென்றுள்ளனர்.

    சிகிச்சை மையத்தின் உள்ளே சுபாஷினியிடம் கவினின் அம்மாவும் மாமாவும் பேசிக் கொண்டிருந்தபோது வெளியே நின்று கொண்டிருந்த கவினை சுபாஷினியின் தம்பி சுர்ஜித் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று தனது வீட்டு வாசலில் வைத்து கவினை வெட்டி படுகொலை செய்துள்ளான்.

    பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்ததாக தெரியவருகிறது.

    இதனை கண்டித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார் அதில் "நீளும்

    சாதிய அருவருப்பின்

    அட்டூழியம் …

    சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான

    நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்." என கூறியுள்ளார்.

    • , மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தனது 56வது படத்தில் நடிக்கவுள்ளார்
    • . படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொள்கிறார்.

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ளார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. திரைப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தெதி வெளியாகிறது.

    இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தனது 56வது படத்தில் நடிக்கவுள்ளார் இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் தயாரிக்கிறது. படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொள்கிறார்.

    சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் படத்தை குறித்து சில சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார் அதில் அவர் " கர்ணன் திரைப்படத்தின் போது இப்படத்திற்கு ஒப்பந்தமானோ. இப்பொழுது தான் அதற்கான நேரம் வந்துள்ளது. பைசன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் படத்தை இயக்கவுள்ளேன், மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகும் திரைப்படம் இது, என்னுடைய திரைப்பயணத்தில் இப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும்" என கூறியுள்ளார்.

    • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ளார்.
    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தனது 56வது படத்தில் நடிக்கவுள்ளார்

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ளார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

    'பைசன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. அத்திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகிறது.

    இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தனது 56வது படத்தில் நடிக்கவுள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ தகவல் அண்மையில் வெளியானது.

    இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே மாரி செல்வராஜ்- தனுஷ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

    மேலும் தனுஷ் நடித்த அம்பிகாபதி, மரியான், ராயன் ஆகிய திரைப்படங்களில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதனால் தனுஷ் - ஏ.ஆர் ரஹ்மான் - மாரி செல்வராஜ் கூட்டணியின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • உளவியல் ரீதியாக அனைவரது மனதிலும் ஜாதி உள்ளது.
    • அனைவரும் ஒன்றிணைந்து படம் பார்ப்பது திரையரங்கில் தான்.

    நெல்லை:

    தூத்துக்குடியில் சினிமா படப்பிடிப்பிற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார். அப்போது அங்கு செய்தியாளர்களை சந்தித்த மாரி செல்வராஜ் கூறியதாவது:-

    தென் மாவட்டத்தில் உளவியல் ரீதியாக அனைவரது மனதிலும் ஜாதி உள்ளது. இது அவர்களது மனதில் ஆழமாக பதிந்துள்ளது. இதனை ஒரே நாளில் மாற்ற முடியாது. ஆனால் எல்லாம் மாறும். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நுணுக்க மாக கலைத்துறை, அரசியல் உள்ளிட்டவைகளின் மூலம் அழுத்தமான வேலையை முன்னெடுக்க வேண்டி உள்ளது. அப்படி செய்தால் தான் அடுத்த தலைமுறையில் மாற்றம் வரும். புரிதலுக்கு உள்ளாகும்.

    தற்போது படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது. அனைவர் வீட்டிலும் பூஜை அறை உள்ளது. இருந்தபோதிலும் கோவிலுக்கு சென்று தான் சாமி கும்பிடுகிறார்கள். அதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து படம் பார்ப்பது திரையரங்கில் தான். அது என்றும் மாறாது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது அவரது விருப்பம். அரசியலுக்கு அனைவரும் வரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழ் திரையுலகில் வலிமையான குரலாக விளங்குகிறார்.
    • உங்களை நினைத்து பெருமையா இருக்கிறது.

    சென்னை:

    `பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கி தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துக் கொண்டவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில்'கர்ணன்' மற்றும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த 'மாமன்னன்' திரைப்படத்தை இயக்கினர்.

    மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் தற்போது 'வாழை' என்ற படத்தை தயாரித்து, இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலை சென்னையில் நடைபெற்ற வாழை படத்தின் Pre Release நிகழ்ச்சியில் வீடியோ மூலம் இயக்குநர் மணிரத்தனம் பேசியுள்ளார்.

    அதில் இயக்குநர் மணிரத்னம் கூறியதாவது:-

    மாரி செல்வராஜ் ஒரு சிறந்த இயக்குநர். தமிழ் திரையுலகில் வலிமையான குரலாக விளங்குகிறார். மத்த படம் மாதிரி எல்லா துறையிலையும் இந்த படத்திலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். உங்களை நினைத்து எனக்கு பெருமையா இருக்கு. இதில் எப்படி கிராம கதையில் இவ்வளோ பேரு இவ்வளோ நல்லா நடிக்க வச்சாருக்காரு தெரியல எனக்கு பொறாமையா இருக்கு. இதில் எல்லா கதாபாத்திரமும் அருமையா பண்ணிருக்காங்க, இது ஒரு தனி திறமை. இந்த படத்திற்கு என்னோட வாழ்த்துக்கள்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    • வாழை படம் பார்த்து பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாருக்கு என் நன்றியையும் ப்ரியத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது வாழை திரைப்படம். இப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

    மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தை பார்த்து பல திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்தி இருந்தார்.

    இந்நிலையில், வாழை படம் பார்த்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மாரி செல்வராஜை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

    இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பதிவில், " படம் பார்த்த அனைவரையும் பசித்த சிவனணைந்தானாக்கியது வாழை!

    'திரைப்படத்தின் வெற்றி' என்ற இலக்கைத் தாண்டி சமூகத்தில் 'வாழை' ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளை சுட்டிக்காட்டி அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் சாரை இன்று நேரில் வாழ்த்தினோம்.

    விளிம்பு நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் - அவர்களின் வலிகளையும் அனுபவங்களின் வாயிலாகத் திரைமொழியில் பேசுகின்ற மாரி சாரின் கலை மென்மேலும் சிறக்கட்டும்!" என குறிப்பிட்டிருந்தார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " வாழை திரைப்படத்தை ஓராண்டுக்கு முன்பே முதல் ஆளாய் பார்த்து பாராட்டியதோடு இன்று வாழை பெற்றிருக்கும் மாபெரும் வெற்றிக்காக என்னை நேரில் அழைத்து பாராட்டி கொண்டாடிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார் அவர்களுக்கு என் நன்றியையும் ப்ரியத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். (இன்று நீங்கள் கொடுத்த அந்த குட்டி பரிசு அவ்வளவு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. )" என்றார்.

    • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ளார்.
    • இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ளார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இதற்காக துருவ் விக்ரம் தீவிர கபடி பயிற்சி எடுத்து உள்ளார். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

    'பைசன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், 'பைசன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்பொழுது வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் அவரது வெளியிட்ட பதிவில் "நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும் ஏன் வருகிறேன் என்றும் உனக்கு தெரியும்

    வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும்

    ஆதலால் ….

    நீ கதவுகளை அடைக்கிறாய்

    நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன்.

    பைசன் (காளமாடன்)

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×