என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தனிநபர் பெருமை கோமாளிதனம்மீது அரசு பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் - மாரி செல்வராஜ்
    X

    தனிநபர் பெருமை கோமாளிதனம்மீது அரசு பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் - மாரி செல்வராஜ்

    • கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும், மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இளைய தலைமுறை உள்ளது
    • சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்

    திருத்தணி ரயில் நிலையம் அருகே சிறுவர்கள் சிலர் வடமாநில வாலிபர் ஒருவரை சுற்றிவளைத்து அரிவளாால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இதற்கு கண்டனமும், வருத்தமும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ்,

    "சென்னை மின்சார ரயிலில் புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய அரக்கத்தனமான, அருவருப்பான செயலும், தாக்குதலும் பேரதிர்ச்சியையும், மன உளைச்சலையும் கொடுக்கிறது. கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும், மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இம்மாதிரி தடம்புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும், சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.


    Next Story
    ×