என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தனுஷின்  D56 என்னுடைய மைல்கல் திரைப்படமாக இருக்கும்- மாரி செல்வராஜ்
    X

    தனுஷின் D56 என்னுடைய மைல்கல் திரைப்படமாக இருக்கும்- மாரி செல்வராஜ்

    • , மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தனது 56வது படத்தில் நடிக்கவுள்ளார்
    • . படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொள்கிறார்.

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் என்கிற திரைப்படத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ளார். இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    இந்த படம் கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. திரைப்படம் வரும் அக்டோபர் 17 ஆம் தெதி வெளியாகிறது.

    இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தனது 56வது படத்தில் நடிக்கவுள்ளார் இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்னேஷனல் தயாரிக்கிறது. படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொள்கிறார்.

    சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் படத்தை குறித்து சில சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார் அதில் அவர் " கர்ணன் திரைப்படத்தின் போது இப்படத்திற்கு ஒப்பந்தமானோ. இப்பொழுது தான் அதற்கான நேரம் வந்துள்ளது. பைசன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் படத்தை இயக்கவுள்ளேன், மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகும் திரைப்படம் இது, என்னுடைய திரைப்பயணத்தில் இப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும்" என கூறியுள்ளார்.

    Next Story
    ×