என் மலர்
நீங்கள் தேடியது "Vaiko"
- ஒருவர் தன் வீட்டில் மதவழிபாடு செய்வது என்பது அவருடைய சொந்த விருப்பத்தை பொறுத்தது.
- கிறிஸ்தவ மத வழிபாட்டில் தலையிட்டு, தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், வசிக்கும் ஜான் பீட்டர் என்பவர் தன் வீட்டில், உறவினர், நண்பர்களோடு ஜெபம் நடத்துவது வழக்கம். இதை அறிந்த சிலர் கடந்த 17-ந்தேதி, யாரும் அங்கு ஜெபம் செய்யக்கூடாது என்று வந்தவர்களை மிரட்டி இருக்கின்றனர். அச்சம் காரணமாக அனைவரும் திரும்பிப் போய்விட்டனர்.
ஆனால் ஜான் பீட்டர் மட்டும் தன் குடும்பத்தினருடன் வீட்டிற்குள் ஜெபம் செய்துள்ளார். அப்போது 30 பேர் கும்பல் கைகளில் கம்பு தடியோடு வாசலிலேயே காத்திருந்தனர். ஜெபம் முடிந்து 6பேர் வெளியில் வந்தனர். அப்போது அவர்கள் மீது தாக்குதலை நடத்தி உள்ளனர்.
கிறிஸ்தவ மத வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ஜான் பீட்டர் குடும்ப உறவினர்களை தாக்கியவர்கள் இந்து முன்னணியினர் என்று காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
ஒருவர் தன் வீட்டில் மதவழிபாடு செய்வது என்பது அவருடைய சொந்த விருப்பத்தை பொறுத்தது. அதனைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இத்தகைய நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியது.
கிறிஸ்தவ மத வழிபாட்டில் தலையிட்டு, தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் திட்டமிட்டு மத கலவரத்தை ஏற்படுத்தி, அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என்ற மதவெறி அமைப்புகளின் அரசியல் நோக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மாநாட்டில் ம.தி.மு.க.வின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.
- மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.
மதுரை:
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ம.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் மாநில மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு 115-வது பிறந்தநாளையொட்டி மதுரை வலையங்குளத்தில் மாநாடு நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தொடங்கின. மதுரையில் முகாமிட்ட வைகோ மாநாட்டு பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் இந்த மாநாடு வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வலுசேர்க்கும் என்றும், மதுரை மாநாட்டில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாகவும் கூறினார்.
இந்த மாநாட்டில் ம.தி.மு.க.வின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.
அதன்படி மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. முன்னிலையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது. மாலை 4 மணி வரை நெல்லை அபுபக்கர், ஒரத்தநாடு கோபு குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 4 மணிக்கு மாநாட்டு திடலில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் மொழிப்போர் தியாகிகளின் படங்கள் திறந்து வைக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.
மாநாட்டில் வரவேற்பு குழு தலைவர் பூமிநாதன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். ம.தி.மு.க. அவைத்தலைவர் அர்ஜூனராஜ் தலைமை தாங்குகிறார். மாநாட்டில் இந்துத்துவ பாசிசம் வேரறுப்போம், இந்தியாவின் எதிர்காலம், சமூக நீதி காப்போம், திராவிட இயக்கத்தின் சாதனைகள், அண்ணாவின் மாநில சுயாட்சி, சுற்றுச்சூழல் சவால்கள், அண்ணா ஏற்படுத்திய அறிவுச்சுடர்,
திராவிட இயக்கத்தில் பெண்கள், மொழி உரிமைப் போராட்டம், நதிநீர் உரிமை போரில் வைகோ, பாராளுமன்றத்தில் வைகோ, முழு மதுவிலக்கே நமது இலக்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரையரங்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் மாவட்டச் செயலாளர்கள் வெற்றிவேல், செல்வராகவன், ராமகிருஷ்ணன், ஜெயராமன், மனோகரன், பி.கே. சுரேஷ், துணைப்பொது செயலாளர்கள் ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், டாக்டர் ரொஹையா, ராஜேந்திரன், ஆட்சிக்குழு கிருஷ்ணன் மற்றும் வந்தியதேவன், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், வழக்கறிஞர் அந்திரிதாஸ், கவிஞர் மணிவேந்தன், ஆசைத்தம்பி, காரை செல்வராஜ், புலவர் அரங்க நெடுமாறன், மல்லிகா தயாளன், வழக்கறிஞர் செந்தில் செல்வன், பாஸ்கர் சேதுபதி, பால சசிகுமார் என்.எஸ்.அழகிரி ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள் செந்திலதிபன், துரை வைகோ, மல்லை சத்யா, கணேச மூர்த்தி, சதன் திருமலை குமார், சின்னப்பா எம்.எல்.ஏ., ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். மாநாட்டின் முக்கிய நிகழ்வாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. மாநாடு நிறைவு உரையாற்றுகிறார்.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவர்களுக்கு தேவையான குடிநீர், அடிப்படை வசதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
- மத்திய தணிக்கை குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளபடி மருத்துவ காப்பீட்டில் ஊழல் நடந்துள்ளது.
- வருகிற செப்டம்பர் 15-ந்தேதி மதுரையில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாநில மாநாடு நடத்த உள்ளோம்.
மதுரை:
பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி, மதுரை வலையங்குளம் பகுதியில் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி ம.தி.மு.க. சார்பில் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய தணிக்கை குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளபடி மருத்துவ காப்பீட்டில் ஊழல் நடந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதாரங்கள், அடிப்படை காரணங்கள் இல்லாமல் எதையும் கூறியிருக்க மாட்டார். இந்த குற்றச்சாட்டில் உண்மை இருப்பதால்தான் கூறியிருப்பார்.
வருகிற செப்டம்பர் 15-ந்தேதி மதுரையில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாநில மாநாடு நடத்த உள்ளோம். அந்த இடத்தினை ஆய்வு செய்வதற்காக தான் தற்போது மதுரை வந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரையில் மண்டல ம.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் வைகோ பேசினார்.
- தமிழ்நாட்டில் பா.ஜனதாவை நுழையவிடாமல் தடுக்க திராவிட இயக்கங்களை பாதுகாக்க வேண்டும்.
மதுரை
அண்ணாவின் 115-வது பிறந்தநாள் மாநாடு அடுத்த மாதம் 15-ந்தேதி மதுரையில் நடக்கிறது. இதனையொட்டி, மதுரை மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று, தெப்பக்கு ளம் நோட்புக் அரங்கில் நடைபெற்றது.
பூமிநாதன் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க. பொதுச்செயலா ளர் வைகோ எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு ஆலோச னைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-
கலிங்கப்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த போது நான் ஒரு அரசியல் கட்சி தொடங்குவேன் என்றோ, இத்தனை ஆண்டு கள் இயக்குவேன் என்றோ கனவு கூட கண்டதில்லை. அண்ணா மீது கொண்ட பற்றின் காரணமாக உயிரை யும் கொடுக்க துணிந்துதான் தி.மு.க.வில் பணியாற்றி னேன். பிரிட்டிஷ் காலத்தை போல ஒரு கவர்னரை தமிழகத்திற்கு நியமித்து, திராவிட இயக்கங்களை அழித்துவிட முயற்சிக்கி றார்கள்.
ம.தி.மு.க. தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது? என்று கேட்கிறார்கள். ஸ்டெல் லைட், நியூட்ரினோ வராமல் தடுத்தோம், முல்லை பெரி யாறு அணையை பாதுகாத் தோம், தஞ்சைக்கு மீத்தேன் வராமல் தடுத்தோம். இப் படி எவ்வளவோ செய்துள் ளோம். 10 ஆண்டுக ளுக்கு முன்னால் பா.ஜ.க. என்றால் யாருக்காவது தெரியுமா?
ஆனால், தற்போது மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என மோடி, அமித்ஷா கூறுகி றார்கள். அந்த தைரியம் எப்படி வந்தது? தமிழ் நாட்டை காக்க வேண்டும் என்றால், இந்துத்துவா, சனாதன சக்திகள் ஊடுருவ விடாமல் தடுக்க வேண்டும். அதற்கு தி.மு.க.வுடன் கைகோர்த்து கொள்வோம்.
விமர்சனங்கள் எவ்வ ளவோ வரலாம். அதைப் பற்றி கவலைப்பட வேண்டி யதில்லை. பா.ஜ.க.வை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு திராவிட இயக்கங் களை பாதுகாக்க வேண்டும்.
நான் இதுவரை 7 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் நடைபயணம் மேற்கொண்டி ருக்கிறேன். கன்னியாகுமரி முதல் சென்னை வரை, தாமிரபரணி முதல் சென்னை வரை என பல முறை நடைபயணம் செய்தி ருக்கிறேன். அன்று நடைபய ணம் செய்த போது ஊடக ஆதரவு கூட கிடையாது. எல்லா இடத்திற்கும் நடந்து தான் செல்வேன். மக்களு டன் மக்களாக இருப்பேன். சாலையோரங்களில் ஓய்வெ டுப்பேன். எங்கும் அறை போட்டு தங்கவில்லை. இதனை யாரையும் ஒப்பிடுவ தற்காக கூறவில்லை.
ஆனால், இன்று நடை பயணம் மேற்கொள்ளும் சிலருக்கு பக்கம் பக்கமாக விளம்பரம் வருகிறது. தொடர்ந்து தமிழக மக்களின் நலனுக்காக போராடி கொண்டிருக்கிறேன். ம.தி.மு.க. தியாகத்தால் உருவான கட்சி. தொண்டர்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன். மதுரை யில் நடக்கும் அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில தொண்டரணி துணை செயலாளர் பச்சைமுத்து, தணிக்கை குழு உறுப்பினர் பாண்டியன், மதுரை மாநகர் தொண்டரணி துணை செயலாளர் சண்முகவேல், சிம்மக்கல் பகுதி செயலாளர் பாஸ்கர், 44-வது வார்டு திட்டகுழு உறுப்பினர் தமிழ்செல்வி, 100-வது வார்டு உறுப்பினர் முத்து லட்சுமி, சுருதிரமேஷ், அன்னமுகமது, பாஸ்கர சேதுபதி, சுப்பையா, பச்சமுத்து.சண்முகவேல் புகழ்முருகன், வக்கீல்நாக ராஜன், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.
- கூட்டத்தில் 14-ந்தேதி வைகோ பேசுகிறார்.
மதுரை
மதுரையில் வருகிற 14-ந்தேதி நடைபெறும் ம.தி.மு.க. மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் வைகோ எம்.பி. சிறப்புரையாற்றுகிறார்.
இது தொடர்பாக மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115-வது பிறந்தநாள் மாநாடு அடுத்த மாதம் 15 -ந் தேதி மதுரையில் சிறப்பாக கொண்டாடப்படு கிறது. இதையொட்டி மதுரை மண்டல ம.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வருகிற 14-ந்தேதி
(திங்கள்கிழமை) மாலை 5 மணி அளவில் தெப்பக்குளம் நோட்புக் அரங்கில் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு, தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் செல்வராகவன், தேனி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், ராமநாத புரம் மாவட்ட செயலாளர் சுரேஷ், சிவகங்கை மாவட்ட செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள்.
கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. சிறப்புரையாற்று கிறார். மேலும் தலைமை கழக நிர்வாகிகள் அவை தலைவர் அர்ச்சுனராஜ், பொருளாளர் செந்தில திபன், முதன்மை செயலா ளர் துரை வைகோ, துணை பொதுசெயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி மணி, ஆடுதுறை முருகன், ராஜேந்திரன், ரொஹையா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
முடிவில் மாவட்ட அவைத் தலைவர் சுப்பையா நன்றி கூறுகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை மாநகர், தெற்கு, வடக்கு மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- புத்தக அரங்கு 101, 102-ல் ஈரோடு போலீசார் அத்துமீறி நுழைந்து புத்தகங்களை விற்ககூடாது என்று மிரட்டி உள்ளனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ம.தி.மு.க. பொருளாளர் செந்திலதிபன் எழுதிய "இந்துத்துவப் பாசிசம் வேர்களும்-விழுதுகளும்" என்ற நூலை பொள்ளாச்சி எதிர் வெளியீடு பதிப்பகம் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைத்திருக்கிறது. புத்தக அரங்கு 101, 102-ல் ஈரோடு போலீசார் அத்துமீறி நுழைந்து புத்தகங்களை விற்ககூடாது என்று மிரட்டி உள்ளனர்.
இந்தத் தகவல் தமிழக முதலமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டவுடன் நடவடிக்கை எடுத்து தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். இந்துத்துவ சனாதன சக்திகள் மீது நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் இன்று நடந்தது.
- கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஜீவன், சுப்பிரமணி, குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சென்னை:
ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் இன்று நடந்தது. அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் வைகோ, மாநில நிர்வாகிகள் செந்தில் அதிபன், மல்லை சத்யா, ஏ.கே.மணி, முருகன், ராஜேந்திரன் டாக்டர் ரொகையா ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஜீவன், சுப்பிரமணி, குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
செப்டம்பர் 15-ந் தேதி அண்ணாவின் பிறந்த நாளையொட்டி மதுரையில் திறந்தவெளி மாநாடு நடத்துவது கவர்னருக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை விரைவுபடுத்துவது, தமிழ்நாடு அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கை விரைவுபடுத்தி கர்நாடகா மேகதாது அணைகட்டும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
மருத்துவ படிப்புகளுக்கான காலத்தை அதிகரிக்க செய்ய மருத்துவ மாணவர்களை மன உளைச்சலுக்கு தள்ளும் நெக்ஸ்ட் தேர்வு முடிவை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மேகதாது அணை கட்டப்படுமானால், காவிரிப் படுகைப் பகுதிகள் பாலைவனம் ஆகி விடும்.
- ஒன்றிய அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக்கூடாது.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநில முதல் மந்திரி சித்தராமையா நேற்று சட்டமன்றத்தில் வரவு-செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.
அப்போது அவர், மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசிடம் தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும். முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற ஒன்றிய அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அணைக்கு நிலம் கையகப்படுத்துவதே அரசின் முதன்மைப்பணி என்றும் கூறியுள்ளார்.
மேலும் மேகதாது அணைக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும்" என்றும் முதல் மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
மேகதாது அணை கட்டப்படுமானால், காவிரிப் படுகைப் பகுதிகள் பாலைவனம் ஆகி விடும். எனவே ஒன்றிய அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக்கூடாது. தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை விரைவுப்படுத்தி, கர்நாடகா மேகதாது அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- நூல் உற்பத்தி பாதிப்பதுடன், ஐந்தாயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் உருவாகி உள்ளது.
- தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், மங்கலம், காரணம்பேட்டை, உடுமலை,வெள்ளக்கோவில் உள்ளிட்டப் பகுதிகளில் மறு சுழற்சி நூற்பு ஆலைகள் மூடப்பட்டு இருப்பதால் 1500 டன் நூல் உற்பத்தி பாதிப்பதுடன், ஐந்தாயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் உருவாகி உள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் தேசிய மொழிகள் தான்.
- நமது தேசிய மொழியின் முதன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டெல்லியில் நடந்த இந்தி ஆலோசனைக்குழு கூட்டத்தில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பங்கேற்று பேசும் போது, "நமது தேசிய மொழியின் முதன்மையைப் புரிந்துகொள்வது முக்கியம். ஏனெனில் இது நமது உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகிறது. மேலும் நமது ஒற்றுமைக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஒரு பாலத்தை வழங்குகிறது. மாநில மொழிகளை நாம் பேசுவதற்கு பயன்படுத்தலாம். ஆனால் இந்தியை தேசிய மொழியாக மதிக்க வேண்டும். நமது தேசிய மற்றும் கலாச்சார ஒற்றுமையின் அடையாளமாக இந்தியை சுகாதார அமைச்சகம் அங்கீகரிக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் தேசிய மொழிகள் தான். அவற்றை மக்கள் பேசுவதற்கான மொழிகள் மட்டுமே என்று மத்திய மந்திரி சிறுமைப்படுத்துவது கண்டனத்துக்குரியது. மத்திய பா.ஜ.க. அரசு இந்தி மொழியை மட்டும் தேசிய மொழி என்று அங்கீகரிப்பதும், இந்தி மொழியைத் திணிப்பதும் நாட்டின் பன்முகத்தன்மைக்கு எதிரானதாகும். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்று இந்து ராஷ்ட்ர செயல் திட்டத்தை பா.ஜ.க. அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது ஒருமைப்பாட்டுக்கு உலை வைக்கும் வேலையாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.