என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMDK"

    • வருகிற மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பாரதிய ஜனதா ஏற்பாடு செய்து வருகிறது.
    • தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ வெளியாக உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தனித்து களமிறங்குகிறார்கள்.

    இதனால் சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தி.மு.க. பம்பரமாக சுழன்று வருகிறது. அதே நேரத்தில் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க.வும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., அன்புமணி தலைமையிலான பா.ம.க., டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க., ஜி.கே.வாசனின் த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    மேலும் பல சிறிய கட்சிகளும் இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்கிற அறிவிப்பை வெளியிட்டு விட்டு யாருடன் கூட்டணி அமைப்பது என்று ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

    இது தொடர்பாக தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் தே.மு.தி.க. திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

    இந்த முறை தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று தே.மு.தி.க. தேர்தலை சந்திக்க தயாராகி விட்டதாகவும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய திருப்பமாக தே.மு.தி.க.வை தங்களது கூட்டணியில் எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் தே.மு.தி.க. தலைவர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சு நடத்தி இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    தமிழகத்தில் ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்துள்ள பிரதமர் மோடி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் வருகிற மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பாரதிய ஜனதா ஏற்பாடு செய்து வருகிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவையும் ஒன்றாக மேடை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாகவே பா.ஜனதா-தே.மு.தி.க. இடையே பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தையை இன்னும் சில தினங்களில் முடித்து அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதை உறுதி செய்துவிட வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷா தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் அறிவுறுத்தி உள்ளார்.

    கடந்த முறை மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரதமரின் பொதுக்கூட்டத்திலேயே தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் இறுதி செய்யப்படாததால் பிரேமலதா அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    இதுபோன்ற சூழலில் தான் இன்னும் 2 வாரத்தில் மீண்டும் பிரதமர் தமிழகம் வர இருக்கிறார். அதற்குள் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தையை உறுதி செய்து தங்களது கூட்டணியில் அந்தக் கட்சி இருப்பதை எப்படியாவது உறுதி செய்து விட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களும் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபற்றி பா.ஜனதா நிர்வாகி ஒருவர் கூறும் போது, வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தே.மு.தி.க. ஜனநாயக கூட்டணியிலேயே இடம்பெறும் என்று நம்புவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

    • அமித்ஷா வர்ணம் தீட்டிய பகுதியில் பொதுமக்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.
    • தே.மு.தி.க.வையும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது.

    காரைக்கால்:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று காரைக்கால் வந்தார். காரைக்காலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக அவர் கோட்டுச்சேரியில் உள்ள ஒரு வீட்டின் சுவரில் தாமரை சின்னத்துக்கு வர்ணம் தீட்டினார். நல்லாட்சி தொடரட்டும், புதுவை மலரட்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என அவர் எழுதினார்.

    அமித்ஷா வருகையை முன்னிட்டு காரைக்கால் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோட்டுச்சேரி பகுதி போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    அமித்ஷா வர்ணம் தீட்டிய பகுதியில் பொதுமக்கள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை.

    இந்த நிலையில் தே.மு.தி.க.வையும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது.

    அதற்கான பேச்சுவார்த்தையில் பா.ஜ.க. முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    அடுத்த முறை பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும் போது அவர் பங்கேற்கும் கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவையும் மேடை ஏற செய்யும் முயற்சியில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    2 நாள் பயணமாக தமிழக மற்றும் புதுவை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தேர்தல் வியூகம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    • தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் அனைவரின் விருப்பத்திற்கு இணங்க விருப்பமனு அளிக்க அவகாசம் நீட்டிப்பு.
    • பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை வருகிற 15-ந்தேதிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதியிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்களை பெற்றுவருகின்றனர். தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் அனைவரின் விருப்பத்திற்கு இணங்க 3 நாட்கள் நீட்டிப்பு செய்து விருப்பமனுக்களை நாளை (13-ந்தேதி) முதல் 15-ந்தேதி மாலை 5 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை வருகிற 15-ந்தேதிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்

    • தேர்தலில் தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.
    • எங்கள் மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை. ஆட்சியில் பங்கு கொடுத்தால் நல்லது.

    சென்னை:

    தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தே.மு.தி.க.வின் 26-வது ஆண்டு கொடிநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நல்ல நாளில் விஜயகாந்த் பெயரில் முதல் விருப்ப மனு இன்று கொடுத்திருக்கிறோம். இதே நாளில் தான் ஏற்கனவே 2011-ம் ஆண்டு விஜயகாந்த் அவரது விருப்ப மனுவை கொடுத்தார். இப்போது மீண்டும் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் பெயரில் முதல் விருப்ப மனுவை இன்று நான் கொடுத்திருக்கிறேன்.

    2-வது விருப்பமனுவை நான் கொடுத்திருக்கிறேன். 3-வது விருப்பமனுவை விஜய பிரபாகர் கொடுத்து உள்ளார். இன்று நிர்வாகிகள், தொண்டர்கள், பெருவாரியானோர் விருப்ப மனு கொடுத்து உள்ளனர்.

    இந்த தேர்தலில் தே.மு.தி.க. அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றிக் கூட்டணியாக இருக்கும். நாங்கள் உழைப்பால் வெற்றி பெற்று வெற்றிக்கனியை விஜயகாந்த் காலடியில் சமர்ப்பிப்போம் என்று உறுதிமொழி எடுத்து இருக்கிறோம்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் நாங்கள் தே.மு.தி.க.வுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று சொல்லும் போது, நாங்கள் 2 பக்கமும் பேசுவதாக தவறான செய்தியை யார் சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை.

    எங்கள் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் எந்த கூட்டணியை விரும்புகிறார்களோ அந்த கூட்டணியைதான் இந்த முறை நாங்கள் அமைப்போம்.

    தே.மு.தி.க.வை பொருத்த வரைக்கும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

    கேள்வி: தி.மு.க. அமைச்சர் ராஜகண்ணப்பன் தே.மு.தி.க. பற்றி விமர்சனம் செய்துள்ளாரே?

    பதில்: தே.மு.தி.க. எப்படிப்பட்ட கட்சி என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களுக்கும் தெரியும். அந்த கருத்தை சொன்னவர் எப்படிப்பட்டவர் என்பதும் மக்களுக்கு தெரியும். அதனால் அவருக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தே.மு.தி.க. விஜயகாந்த்தால் உருவாக்கப்பட்ட கண்ணியமான கட்சி. யாருடைய கருத்தும் எங்களை எந்த வகையிலும் பாதிக்காது. எங்கள் மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை.

    கேள்வி: ஆட்சியில் பங்கு என்பதில் தே.மு.தி.க. நிலைப்பாடு என்ன?

    பதில்: ஆட்சியில் பங்கு கொடுத்தால் நல்லது. அந்த உரிமையை பகிர்ந்தளிக்கும்போது தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது எனது கருத்து. ஆனால் மக்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுதான் இதற்கான பதிலாக இருக்கும். இதுவரையில் எந்த தொகுதியில் போட்டியிட போகிறோம் என்பது யாருக்குமே தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் 25-ம் ஆண்டு கொடி நாளை ஒட்டி கட்சிக்கொடியை ஏற்றினார் பிரேமலதா விஜயகாந்த்.
    • கூட்டணி குறித்த அறிவிப்பை தே.மு.தி.க. உரிய நேரத்தில் அறிவிக்கும் என்றும் பேச்சு.

    சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் 25-ம் ஆண்டு கொடி நாளை ஒட்டி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

    * கூட்டணி குறித்த அறிவிப்பை தே.மு.தி.க. உரிய நேரத்தில் அறிவிக்கும்.

    * நிர்வாகிகள், தொண்டர்கள் விரும்பும் கட்சியுடன் கூட்டணி.

    * தே.மு.தி.க. எங்கள் கட்சி. என்ன முடிவு எடுக்க வேண்டும். எப்போது அறிவிக்க வேண்டும் என்பதை உரிய நேரத்தில் எங்கள் கழத்தை சேர்ந்தவர்களிடம் கலந்து பேசி உறுதியாக அறிவிப்பேன்.

    இரு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

    • 55 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் உள்ளவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    • தமிழகத்தில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர், ஆனையூரில் தி.மு.க. சார்பில் 'தமிழ்நாடு தலை குனியாது' என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே தான் போட்டி. தேர்தல் கூட்டணி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து கொள்வார். அதைப்பற்றி யோசிக்க வேண்டாம். காங்கிரஸ் கட்சி வந்தால் வரட்டும். ஆனால் அந்த கட்சி வேண்டாமென்று சொல்லவில்லை.

    விஜயகாந்த் இருந்தபோது தே.மு.தி.க. எதிர்க்கட்சியாக இருந்தது. மக்களிடமும் செல்வாக்கு இருந்தது. ஆனால் இன்று தே.மு.தி.க. இரு கட்சியினருடமும் கூட்டணி குறித்து பேசுகிறார்கள். இங்கேயும் அங்கேயும் பேசுவது சரியாக இருக்காது. விஸ்வாசமாக இருந்து தே.மு.தி.மு.க. ஒரு பக்கம் வரவேண்டும்.

    த.வெ.க. பெரிய கட்சியாக இருக்கும் என்று நினைத்தேன். அதில் இருப்பவர்கள் எல்லாம் 15 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து அரசியல் செய்தார். 55 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் உள்ளவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தி.மு.க. இயக்கம் தொடர்ந்து இயங்க வேண்டும். 2-வது முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். எடப்பாடி வியாபாரம் செய்து வந்தவர். தற்போது பா.ஜ.க.விடம் சிக்கிக் கொண்டுள்ளார். தமிழகத்தில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது.

    தென் மாவட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தன்னை பெரிய ஆளாக நினைத்து கொள்கிறார். அவர் பெரிய ஆளாகவே இருக்கட்டும். ஆனால் ஒருவரை அழித்து வரக்கூடாது. தான் வாழ பிறரை கெடுக்க கூடாது. மேலூர் தொகுதியில் தி.மு.க. அரசு சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளோம். இம்முறை மேலூரில் தி.மு.க. தான் போட்டியிடும். தலைமை முடிவு செய்யும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் தே.மு.தி.க., தி.மு.க. கூட்டணிக்கு வருமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ராஜகண்ணப்பன் தே.மு.தி.க. எல்லாம் ஒரு கட்சியா, பெரிய கட்சிகளை பற்றி கேளுங்கள் சொல்கிறேன் என்றார்.

    அண்மையில் மதுரை மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. தி.மு.க. இல்லையென்றால் இண்டியா கூட்டணியே இல்லை. காங்கிரஸ் கட்சியில் பூத் கமிட்டி போட கூட ஆள் இல்லை என்று பேசினார். இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து தே.மு.தி.க. கூட்டணி வைக்க முயற்சிக்கும் நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தே.மு.தி.க. குறித்து சர்ச்சக கருத்து கூறியிருப்பது கூட்டணிக்கு முட்டுக் கட்டையை ஏற்படுத்தி உள்ளது.

    • தேமுதிகவுடன் பாஜக தலைமையும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பேசி வருகின்றனர்.
    • இதுவரையிலும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

    தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், தேமுதிக சேரும் கூட்டணியே வெற்றிப்பெறும் என தொடர்ந்து கூறிவருகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். 

    இச்சூழலில் நேற்று தேமுதிகவின் கூட்டணி விவகாரம் தொடர்பாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,

    "தேமுதிகவுடன் பாஜக தலைமையும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பேசி வருகின்றனர். நேற்று நடந்த பாஜக கட்சி கூட்டத்திலும் இதுபற்றி பேசப்பட்டது. தேமுதிக எதிர்பார்ப்பு என்ன, அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து கேட்டறிந்து வருகின்றனர். மாநில அளவில் தேமுதிகவுடன் கூட்டணியை முடிக்க முடியாததால் டெல்லியில் இருந்து பேசுகிறார்கள். நல்லபடியாக முடியும். அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

    "இதுவரையிலும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. அப்படி நடந்தால் நானே உங்களுக்கு சொல்கிறேன். சுதீஷ் என்னுடைய நண்பர். அதன் அடிப்படையில் பேசினேனே தவிர, கூட்டணி தொடர்பாக பேசவில்லை. அப்படி கூட்டணி இருந்தாலும் தற்போதுவரை அதுதொடர்பாக எந்த கருத்துகளும் வரவில்லை. பிரதமர் மார்.1ஆம் தேதி வருவார். அப்போது பார்க்கலாம்." என தெரிவித்தார்.  தொடர்ந்து மேடையில் பார்க்கலாமா என்ற கேள்விக்கு, பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

    • மாநில அளவில் தேமுதிகவுடன் கூட்டணியை முடிக்க முடியாததால் டெல்லியில் இருந்து பேசுகிறார்கள்.
    • கணக்கெடுப்புகள் அனைத்தும் சொல்வது 60 சதவீதம் மக்கள் தே.ஜ.கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்றுதான்.

    "தேமுதிக சேரும் கூட்டணியே வெற்றி பெறும்" என்றும், சரியான நேரத்தில் நல்ல முடிவை அறிவிப்பேன் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை மட்டும் இன்னும் அறிவிக்கவில்லை.

    இந்நிலையில், சில முரண்பட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் இருப்பார்கள். அவர்கள் மத்திய அரசாங்க பதவி கேட்பார்கள். அதனால் அவர்களை பாஜகவிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்வோம் என தேமுதிக குறித்து கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இதன்மூலம் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக இரு கட்சிகளிடையே இழுபறி நீடிப்பது உறுதியாகியுள்ளது. 

    இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயர் நீக்கப்பட்டதற்கு தொடர்பான கேள்விக்கு,

    "விபி-ஜி ராம்-ஜி என்பது கிராம்பபுற வேலைவாய்ப்பு திட்டம் என்பதன் தமிழ் அர்த்தம்தான். அப்படி இல்லையெனில் இந்தி தெரிந்தவர்களிடம் அதன் அர்த்தம் என்னவென்று கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்." என பதிலளித்தார். 

    தொடர்ந்து தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு,

    "தேமுதிகவுடன் பாஜக தலைமையும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் பேசி வருகின்றனர். நேற்று நடந்த பாஜக கட்சி கூட்டத்திலும் இதுபற்றி பேசப்பட்டது. தேமுதிக எதிர்பார்ப்பு என்ன, அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து கேட்டறிந்து வருகின்றனர். மாநில அளவில் தேமுதிகவுடன் கூட்டணியை முடிக்க முடியாததால் டெல்லியில் இருந்து பேசுகிறார்கள். நல்லபடியாக முடியும். அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்

    பாஜக தானே எங்கள் கூட்டணி. சாப்பாட்டில் காய்கறி, கூட்டு வைப்பது போலத்தான் இது. யார் பேசினாலும் எங்களுடன்தானே கூட்டணி. எங்களிடம் அன்பாக இருப்பவர்களை நாங்கள் அழைத்திருப்போம். பாஜகவிடம் அன்பாக உள்ளவர்களிடம் அவர்கள் பேசுகிறார்கள். எங்களை நம்பி சிலர் வருவார்கள், அவர்களை நம்பி சிலர் வருவார்கள். பாஜக அழைத்தாலும் அதிமுக தலைமையில் இருக்கிற தே.ஜ. கூட்டணிக்குதானே வருவார்கள்" என பதிலளித்தார்.

    சில முரண்பட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் இருப்பார்கள். அதாவது சிலர் மத்திய அரசாங்க பதவி கேட்பார்கள். அதனால் அங்கே பேசிக்கொள்ளுங்கள் என்று சொல்வோம். ஆனால் முடிவு இந்த கூட்டணிக்கு சாதகமாகத்தான் வரும். டெல்லி சென்று கூட்டணியை பேசி முடித்தது எடப்பாடி பழனிசாமி தான். அமித்ஷா வந்து இங்கு அறிவித்தார். எங்கள் கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். தலைமை அதிமுகதான்." என தெரிவித்தார். 

    தேர்தல் அறிக்கை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், 

    "நாடு முழுவதும் ஆயிரம் கட்சிகள் உள்ளன. எங்களுக்கு தெரிந்ததை நாங்கள் முன்கூட்டியே அறிவிக்கிறோம். கடந்த தேர்தலில் மகளிருக்கு ரூ.1500 தருகிறோம் எனக்கூறினோம், திமுக ரூ.1000 தருவதாக கூறியது. அது எடுபட்டுவிட்டது. அதனால்தான் இந்த முறை ரூ.2000 என முன்கூட்டியே அறிவித்துவிட்டோம். வேண்டுமானால் நீங்களும் (திமுக) அறிவித்துக்கொள்ளுங்கள்.

    மத்திய அரசு, மற்ற அமைப்புகள், எங்களது தனிப்பட்ட கணக்கெடுப்புகள் அனைத்தும் சொல்வது 60 சதவீதம் மக்கள் தே.ஜ.கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்றுதான். பாஜக அகில இந்திய கட்சி. அதிமுக தலைமையில் இயங்குகிறோம் என சொல்லிவிட்டார்கள்." என தெரிவித்தார்.

    • சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது.
    • கூட்டணியை இன்னும் இறுதி செய்யாத நிலையில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் பணியைத் தே.மு.தி.க. தொடங்கி உள்ளது.

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தி.மு.க தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. -பா.ஜ.க. அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன.

    சீமானின் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் த.வெ.க.வும் தனித்துப் போட்டியிட உள்ளது.

    234 தொகுதிகளிலும் விருப்ப மனு விநியோகத்தை த.வெ.க. தொடங்கி உள்ளது.

    சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியை இன்னும் இறுதி செய்யாத நிலையில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் பணியைத் தே.மு.தி.க. தொடங்கி உள்ளது.

    இந்நிலையில் கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க.வுடன் தி.மு.க. சார்பில் அமைச்சர் எ.வ.வேலு பேசி வருவதாக தகவல் வெளியான நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில்,

    * தே.மு.தி.க.வுடன் எந்த பேச்சுவார்த்தையும் நான் நடத்தவில்லை.

    * கூட்டணி குறித்து தி.மு.க. தலைமை தான் முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தே.மு.தி.க. தொண்டர்களின் மனதில் பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
    • யூடியூபர்கள் மீதும், யூடியூப் சேனல்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை :

    தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி சார்பில், தே.மு.தி.க. வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் சந்தோஷ்குமார் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மறைந்த தலைவர் விஜயகாந்த் ஆகியோர் பற்றியும் தே.மு.தி.க. பற்றியும் யூடியூப் தளங்களில் சிலர் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்கள்.

    இத்தகைய அவதூறு பேச்சுகள், தே.மு.தி.க. தொண்டர்களின் மனதில் பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்படுகின்ற திருச்சி சூர்யா, தமிழா தமிழா, பாண்டியன், சவுக்கு சங்கர் உள்ளிட்ட யூடியூபர்கள் மீதும், யூடியூப் சேனல்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று முதல் 12-ந் தேதி வரை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
    • விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள்.

    2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கான கூட்டணியை இன்னும் இறுதி செய்யாத நிலையில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் பணியை தே.மு.தி.க. இன்று தொடங்கியது.

    தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்களை பெறும் முன், விஜயகாந்த் நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வழிபாடு செய்தார்.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதியிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் சட்டமன்ற பொதுத்தேர்தல் விருப்ப மனுக்களை இன்று முதல் 12-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    2026 சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தே.மு.தி.க.வின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.

    மேலும், தமிழக சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.15 ஆயிரமும், தனித்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும், தனித்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 12-ந் தேதி மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.
    • விருப்ப மனுக்களை வரும் 12-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    * சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.

    * நாளை முதல் பிப்ரவரி 12-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு வழங்கலாம்.

    * விருப்ப மனுக்களை வரும் 12-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    * பொது தொகுதிக்கு விருப்ப மனு கட்டணம் ரூ.15 ஆயிரமாகவும், தனித்தொகுதிக்கு ரூ.10 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    ×