என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "police complaint"
- சென்னை வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் பிரான்சிஸ் என்ற இளைஞரை தாக்கியதாக புகார்.
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் முரளி என்பவரை தாக்கியதாக, சுந்திரா டிராவல்ஸ் படத்தின் கதாநாயகி நடிகை ராதா மீது மீண்டும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த முரளி என்பவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், நடிகை ராதா மீதான புகார் தொடர்பாக சென்னை வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் பிரான்சிஸ் என்ற இளைஞரை தாக்கியதாக நடிகை ராதா மீதும் அவர் மகன் தருண் மீதும் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- கணவரின் சகோதரர் பாலியல் வன்கொடுமை செய்தது பற்றி மனைவி புகார் கூறினார்.
- அப்போது, இனி நீ என் மனைவி இல்லை எனக்கூறி கணவர் அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் வசித்து வரும் பெண்ணை கடந்த 2-ம் தேதி கணவர் வெளியே சென்றபோது வீட்டில் வேறு யாரும் இல்லாத தருணத்தில் அவரது சகோதரர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளார்.
கணவர் வீட்டுக்கு திரும்பியதும் அந்தப் பெண் கணவரிடம் நடந்ததைக் கூறி அழுதார். இதைக்கேட்ட அவரது கணவர் அளித்த பதில் அந்தப் பெண்ணிற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. அந்தக் கணவர், பெண்ணை நோக்கி, இனி நீ எனது மனைவியே இல்லை. நீ என்னுடைய மைத்துனி என கூறியிருக்கிறார். இதனால் என்ன செய்வதென தெரியாமல் அந்த பெண் திகைத்துப்போனார்.
அடுத்த நாள் கணவரும், கணவரின் தம்பியும் ஒன்றாக அந்தப் பெண்ணின் அறைக்கு வந்தனர். கணவர் மனைவியின் நெஞ்சில் ஏறி அமர்ந்து, துப்பட்டாவை எடுத்து அப்பெண்ணைக் கொல்ல பார்த்திருக்கிறார். இதனை கணவரின் தம்பி செல்போனில் வீடியோவாக படம் எடுத்துள்ளார். அவர்களிடம் இருந்து அந்தப் பெண் தப்பி வெளியே ஓடியிருக்கிறார்.
இது குறித்து சமூக ஊடகம் வழியே அந்தப் பெண் புகாராக தெரிவித்ததுடன், வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து பாலியல் பலாத்காரம் (376), கொலை முயற்சி (307) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாகபோலீஸ் சூப்பிரெண்டு சத்யநாராயண் பிரஜாபதி கூறுகையில், அவர்கள் இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டப்படி இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
- 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.
- விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது.
வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும், திரைப் பிரபலங்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து சென்றனர்.
அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று நண்பகலில் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார்.
அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. இதனால், விஜய் பலத்த பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்களித்தார்.
இந்நிலையில், விஜய் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், 200க்கும் மேற்பட்ட நபர்களுடன், தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடிக்குள் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
- சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது குறித்து விமர்சனம் செய்து பேசிய மந்திரி ரோஜா எதற்கெடுத்தாலும் சந்திரபாபு நாயுடு பூம்பூம் மாடு போல் தலையை ஆட்டுவதாக பேசியுள்ளார்.
- மந்திரி ரோஜாவின் பேச்சுக்கு பூம்பூம் மாடு வளர்ப்போர் கண்டம் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது குறித்து விமர்சனம் செய்து பேசிய மந்திரி ரோஜா எதற்கெடுத்தாலும் சந்திரபாபு நாயுடு பூம்பூம் மாடு போல் தலையை ஆட்டுவதாக பேசியுள்ளார்.
மந்திரி ரோஜாவின் இந்த பேச்சுக்கு பூம்பூம்மாடு வளர்ப்போர் கண்டம் தெரிவித்துள்ளனர்.
அதன் சங்க மாநில தலைவர் தாசரி சத்தியம் மற்றும் தாசரி ஸ்ரீனு, முங்கி வெங்கடேஸ்வரராவ், தாசரி சின்னா, ராம்பாபு ஆகியோர் நந்தி கம போலீசில் மந்திரி ரோஜா மீது புகார் அளித்தனர்.
அதில் எங்கள் குலத்தொழிலையும், எங்கள் சாதியை பற்றி இழிவாக பேசிய மந்திரி ரோஜா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி இருந்தனர்.
இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கார் இருப்பதால் உரிமைத்தொகை கிடையாது என வந்த தகவலை பார்த்து கணவன்-மனைவி அதிர்ச்சி அடைந்தனர்.
- குறுந்தகவலை ஆதாரமாக கொண்டு வடிவேலு சினிமா பட பாணியில் தனது காரை காணவில்லை என தென்கரை போலீசில் புகார் அளித்தார்.
திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கடந்த செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பயனாளிகள் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. பல ஊர்களில் தங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்தது.
இதனைதொடர்ந்து மீண்டும் முகாம்கள் அமைத்து பயனாளிகள் விண்ணப்பங்களை அனுப்பலாம் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் இதுவரை 7 லட்சம் வரையிலான மனுக்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் மனு நிராகரிக்கப்பட்டது. கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஷீலா மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பம் வழங்கி இருந்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டு அவருக்கு குறுந்தகவல் வந்தது.
ஆனால் அதில் வந்த தகவலை பார்த்துதான் ஷீலா மற்றும் அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தனர். உங்களிடம் கார் இருப்பதால் உரிமைத்தொகை கிடைக்காது என தகவல் வந்தது. தன்னிடம் சைக்கிள் கூட இல்லை என்றும், தனக்கு எப்படி கார் வந்தது என ராமமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகுதான் தனக்கு வந்த குறுந்தகவலை ஆதாரமாக கொண்டு வடிவேலு சினிமா பட பாணியில் தனது காரை காணவில்லை என தென்கரை போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரில் வருவாய்த்துறையினர் தன்னிடம் கார் இருப்பதாக சான்றளித்து உள்ளனர். ஆனால் தற்போது அந்த காைர காணவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என தெரியாமல் தென்கரை போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இதுகுறித்து தாசில்தார் அர்ஜூனனிடம் கேட்டபோது மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பத்தில் ஒருசிலருக்கு இதுபோன்ற பிழையுடன் குறுந்தகவல் வருவதாகவும், மீண்டும் அவர்கள் விண்ணப்பித்தால் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
- சுந்தரமூர்த்தி திருமணம் செய்ய மறுத்து பேசுவதையும் நிறுத்திவிட்டார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 26 வயது இளம் பெண், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரை திருமணதகவல் மைய இணையதளம் மூலம் ஆவடி, கலைஞர் நகரை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் தொடர்பு கொண்டார். பின்னர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணிடம் நெருங்கி பழகினார். அப்போது இளம் பெண்ணிடம் உடல்நலக் குறைவுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறி ரூ.1½ லட்சம் பெற்றதாக தெரிகிறது. பின்னர் சுந்தரமூர்த்தி திருமணம் செய்ய மறுத்து பேசுவதையும் நிறுத்திவிட்டார்.
இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளம்பெண் இதுகுறித்து அம்பத்தூரில் உள்ள ஆவடிமாநகர போலீஸ் இணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதில் சுந்தர மூர்த்தி திருமணம் செய்வ தாக ஏமாற்றி பல பெண்களிடம் பணம் பறித்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஐகோர்ட்டு வக்கீல் ராமச்சந்திரன்உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளார்.
- கவர்னருக்கு எதிராக மக்களை தூண்டி விடும் வகையில் பேசி உள்ளார்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ராமச்சந்திரன், எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவர்னருக்கு எதிராக மக்களை தூண்டி விடும் வகையில் பேசி உள்ளார்.
எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கட்டையால் தாக்கி கொலை மிரட்டல்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த கேத்தாண்டப்பட்டி கூத் தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி பேபி (வயது 65), இவர்களுடைய 2-வது மகன் செல்வராஜ் (39). இவர் தனது தாயிடம் சொத்தை பிரித்துக் கொடுக்கும்படி கேட்டுள்ளார்.
சொத்தை பிரித்து கொடுக்காததால் தனது தாய் பேபியை தகாத வார்த்தைகளால் திட்டி, கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து பேபி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார் பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தன் கைப்பையில் வைத்திருந்த 3 ஏ.டி.எம். கார்டுகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- தாமதமாக கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா, இது குறித்து, திருநள்ளாறு போலீசில் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கமலாம்பாள் வீதியைச்சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சங்கீதா (வயது 37). இவர், கடந்த 10-ந் தேதி கும்பகோணத்திற்கு பஸ்சில் சென்று விட்டு, அன்று மாலை திருநள்ளாறு திரும்பி கொண்டிருந்தார். வீடு சென்று பார்த்தபோது, தன் கைப்பையில் வைத்திருந்த 3 ஏ.டி.எம். கார்டுகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து, குறிப்பிட்ட வங்கிக்கு சங்கீதா சென்று கார்டை பிளாக் செய்ய சொல்லியதாக கூறப்படுகிறது. ஆனால், அன்றைய தினமே, ரூ.40 ஆயிரம், 11-ந் தேதி ரூ.40 ஆயிரம், 12-ந் தேதி ரூ.40 ஆயிரம், 13-ந் தேதி ரூ.40 ஆயிரம் என 4 நாட்கள் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணம் எடுத்ததாக சங்கீதாவின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை தாமதமாக கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா, இது குறித்து, திருநள்ளாறு போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலியாக முகநூல் பக்கத்தை தொடங்கி ஒரு கும்பல் மோசடியை அரங்கேற்றி இருக்கிறது.
- சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை:
முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.யும், தாம்பரம் போலீஸ் கமிஷனருமான ரவியின் பெயரில் போலியாக முகநூல் பக்கத்தை தொடங்கி ஒரு கும்பல் மோசடியை அரங்கேற்றி இருக்கிறது. இது தொடர்பாக அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் மோசடி கும்பலை தேடி வருகிறார்கள்.
இதற்கு முன்னரும் இதே போன்று போலீஸ் அதிகாரிகள் பெயரில் போலி முகநூல் பக்கங்கள் தொடங்கப்பட்டு பலர் மோசடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவாஜி மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார்.
- ரூ.15 லட்சம் கமிஷனுக்காக ரூ.35 லட்சத்தை விவசாயி இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொடக்குறிச்சி:
தேனி மாவட்டம் உத்தம பாளையம் தாலுக்கா சின்ன ஓலாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி (67). விவசாயி. இவரிடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள காலப்பன்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த பாண்டி (50) என்பவர் அறிமுகமானார்.
இவர் சிவாஜியிடம் ஈரோட்டில் எனக்கு தெரிந்த ஒருவரிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் உள்ளன. 35 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் அவர் 50 லட்சம் ரூபாய் 2 ஆயிரம் நோட்டுகள் வழங்குவார் என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார்.
இதனை நம்பிய சிவாஜி 35 லட்சம் ரூபாய் கொடுத்தால் தனக்கு கமிஷனாக ரூ.15 லட்சம் கிடைக்கும் என்ற ஆசையில் தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.35 லட்சத்தை எடுத்து வந்தார்.
பணத்தை கொண்டு வந்த சிவாஜியிடம் பாண்டி ஒரு செல்போன் எண்ணைக் கொடுத்து ஈரோட்டில் உள்ள ராஜ்குமார் என்பவரை தொடர்பு கொள்ளுமாறு கூறி உள்ளார். அதன்படி சிவாஜியும் ராஜ்குமாரிடம் செல்போனில் பேசி உள்ளார். அப்போது ராஜ்குமார் பணத்தை ஈரோட்டுக்கு கொண்டு வரும்படி கூறி உள்ளார். இதையடுத்து சிவாஜி ஒரு பேக்கில் ரூ.35 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதிக்கு வந்தார்.
மேலும் அவர் தன்னுடன் செந்தில், மாதேஸ்குமார் ஆகியோரை அழைத்து வந்தார். காரை குபேந்திரன் என்பவர் ஓட்டி வந்தார். சின்னமனூரில் காலை 6 மணிக்கு பணத்துடன் புறப்பட்ட இவர்கள் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம் பரிசல்துறை நால்ரோட்டிற்கு மதியம் 1.30 மணி அளவில் வந்தனர்.
பின்னர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்டனர். பின்னர் மதியம் 2 மணி அளவில் ராஜ்குமார் என்பவர் 2 நபர்களுடன் காரில் டீக்கடைக்கு வந்தார். அவர் சிவாஜியை சந்தித்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.50 லட்சம் தனது காரில் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் சிவாஜி, செந்தில் ஆகியோரை ரூ.35 லட்சம் பணத்துடன் தனது காருக்கு அழைத்து சென்றார். பின்னர் பணத்தை எண்ணி சரிபார்க்கலாம் என்று கூறி பரிசல்துறை நால் ரோட்டில் இருந்து திண்டல் ரிங் ரோட்டில் அழைத்து சென்றனர். அப்போது இவர்கள் சென்ற காரை எதிரே வந்த ஒரு கார் வழி மறித்து நிறுத்தியது. அந்த காரில் இருந்து இறங்கிய 4 பேர் நாங்கள் அரசு அதிகாரிகள் என்று கூறி வாகனத்தை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளனர்.
பின்னர் அவர்கள் காரில் இருந்து சிவாஜி, செந்தில் ஆகியோரை கீழே இறங்க சொன்னார்கள். அவர்களும் காரில் இருந்து இறங்கி னார்கள். பின்னர் காரில் இருந்த ரூ.35 லட்சத்துடன் 2 கார்களும் பெருந்துறை நோக்கி சென்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவாஜி ராஜ்குமாரை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதேபோல் ராஜ்குமாரை அறிமுகம் செய்து வைத்த பாண்டியை தேடி சிவாஜி உசிலம்பட்டி சென்றார். அப்போது பாண்டியும் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவாஜி மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.15 லட்சம் கமிஷனுக்காக ரூ.35 லட்சத்தை விவசாயி இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தனம் அரியலூரைச் சேர்ந்த மணிகண்டனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- மணிகண்டன், மது அருந்திவிட்டு, தனம் மற்றும் அவரது தாயாருடன் சண்டை போட்டு, ஆபாசமாக திட்டி, தனத்தை மரக்கட்டையால் தாக்கினார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் போலகம் பகுதி யைச்சேர்ந்தவர் தனம் (வயது32). இவர் அரியலூரைச்சேர்ந்த மணிகண்டன் (36) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நிவாஸ் (8), ஸ்ரீநிதி (3) என்ற 2 குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரும், தனம் தாய் வீட்டில் வசித்து வந்தனர். மணிகண்டன் கடந்த சில மாதமாக மனைவி தனம் மீது சந்தேகப்பட்டு, அடிக்கடி தனம் மற்றும் அவரது தாயாருடன் சண்டை போட்டுவந்ததாக கூறப்படுகிறது.
சமபவத்தன்று வழக்கம் போல் மணிகண்டன், மது அருந்திவிட்டு, தனம் மற்றும் அவரது தாயாருடன் சண்டை போட்டு, ஆபாசமாக திட்டி, தனத்தை மரக்கட்டையால் தாக்கினார். இதில் காயம் அடைந்த தனம் சப்தம் போடவே, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் விலக்கிவிட்டனர். தொடர்ந்து, மணிகண்டன், உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலைமிரட்டல் விடுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
காயம் அடைந்த தனம், திரு.பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்ச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் கொடுத்த புகாரின் பேரில், திரு.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மணி கண்டனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்