என் மலர்

  நீங்கள் தேடியது "jewelry theft"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இதுவரை 58 பேர் பாதிப்பு
  • கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

  வேலூர்:

  வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பரவலாக மழை பெய்தது. இதனால் நல்ல நீரில் வளரக்கூடிய ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளன.

  இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

  வேலூர் மாநகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. ஒரு வார்டுக்கு 5 பேர் வீதம் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  இந்த நிலையில் மாநகராட்சி பகுதியில் நேற்று 2 பேருக்கு டெங்கு அறிகுறிகள் கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவர்களின் வீடுகள் மற்றும் சுற்றுப்பகுதியில் டெங்கு கொசு உற்பத்தி உள்ளதா என சுகாதார அலுவலர் தலைமையில் ஆய்வு செய்தனர்.

  டெங்கு கொசு ஒழிப்பு பணியில் அதற்கான பணியாளர்கள் ஈடுபட்டனர்.

  கடந்த ஒரு மாதத்தில் வேலூரில் 6 பேருக்கு டெங்கு அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.இந்த நிலையில் நேற்று மேலும் 2 பேருக்கு டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.

  அதேபோல் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் வரை வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 58 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டன.

  இதில் 58 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதாக தெரிவித்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கேமரா உதவியால் 24 மணி நேரத்தில் சிக்கினார்
  • நகைகள் பறிமுதல்

  வேலூர்:

  வேலூர் சித்தேரியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (வயது 49) தனியா நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கணியம்பாடியில் உள்ள ஒரு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று விட்டனர்.

  இதனை பயன்படுத்திக் கொண்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.அங்கு இருந்த 10.75 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர்.

  பணி முடிந்து வீடு திரும்பிய ரமேஷ் பாபு வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  கொள்ளை நடந்த வீட்டின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் ரமேஷ் பாபுவின் வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

  அந்த வாலிபர் படத்தை வைத்து விசாரித்த போது அவர் பெங்களூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் வினோத்(வயது 36)என்பது தெரியவந்தது.

  இவர் திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.கடந்த மாதம் வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார்.

  பெங்களூருக்கு சென்றிருந்த வினோத் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் நேற்று முன்தினம் வேலூர் வந்தார்.சித்தேரி பகுதியில் வீடுகளை நோட்டமிட்டு சென்றுள்ளார். அப்போது ரமேஷ் பாபு வீடு பூட்டி கிடந்தது.

  இதனால் வினோத் வீட்டின் பூட்டு உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 10.75 பவுன் தங்க நகை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து வினோத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

  கொள்ளை நடந்த 24 மணி நேரத்தில் கொள்ளையனை கைது செய்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீட்டில் தனலட்சுமி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர் மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.
  • பீரோவில் தங்கச் செயின் மற்றும் டாலர், நெக்லஸ்,மோதிரம் உள்ளிட்ட சுமார் 32 பவுன் தஙக நகையையும், ரூ.ஒரு லட்சத்து 15 ஆயிரம் பணமும் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்

  திருச்சி :

  திருச்சி கலெக்டர் அலுவலகம் சாலை கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தனலட்சுமி (60). சந்திரசேகர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். வீட்டில் தனலட்சுமி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர் மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று தனலட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு பொன் நகரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விடுகிறார்.

  இந்த நிலையில் மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பூட்டை திறந்து உள்ளே சென்ற வசந்தி அறைக்கு சென்று அங்குள்ள பீரோவை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார் அந்த பீரோவில் தங்கச் செயின் மற்றும் டாலர், நெக்லஸ்,மோதிரம் உள்ளிட்ட சுமார் 32 பவுன் தஙக நகையையும், ரூ.ஒரு லட்சத்து 15 ஆயிரம் பணமும் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் திருட்டு நடந்து இருப்பது தனலட்சுமிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தனலட்சுமி கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.

  புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முதல் கட்ட விசாரணை நடத்திய போது வீட்டின் அறையில் 4, 5 பீரோவில் இருக்கும் பொழுது குறிப்பாக நகை, பணம் உள்ள பீரோவை மட்டும் சாவி போட்டு யாரோ திருடி இருப்பது தெரிய வந்தது. மேலும் பீரோவின் சாவியை தனலட்சுமி ஒரு இடத்தில் வைப்பது வழக்கம். அந்த இடத்தில் இருந்து சாவியை எடுத்து பீரோவை வருமா சாமி திறந்து நகை பணத்தை எடுத்துள்ளனர்.

  எனவே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் மர்ம ஆசாமி யாரோ தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். திருட்டு போலி நகை பணத்தின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

  சென்னை கேளம்பாக்கம் ராஜேஷ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (51). மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள புத்தூர் கருப்பசாமி கோவிலுக்கு சாமி கும்மிடுவதற்காக ஒரு காரில் நேற்று புறப்பட்டு சென்றனர்.

  நள்ளிரவை கடந்து திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வலசுப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். அப்போது 42 சவரன் நகை மற்றும் 7 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை ஒரு பையில் போட்டு காரின் முன் பகுதியில் வைத்திருந்தனர். பின்னர் ஓய்வு முடித்து எழுந்து மீண்டும் புறப்பட தயாராகி விட்டு பார்த்த போது நகை மாற்றும் பணம் வைக்கப்பட்திருந்த பை திருடு போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது தொடர்பாக வளநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வாகன ஓட்டிகளை கடும் அச்சதிற்கு ஆளாக்கி உள்ளதுடன், பாதிக்கட்டவர்களை கடும் மன வேதனைக்கு ஆளாக்கி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருமணத்துக்கு வாங்கி வைத்திருந்த 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது
  • சி.சி.டி.வி.கேமரா மூலம் சிக்கிய 3 கொள்ளையர்கள்

  திருச்சி:

  திருச்சியில் திருமணத்துக்கு வாங்கி வைத்திருந்த 70 பவுன் நகைகள், மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

  திருச்சி கருமண்டபம், ஆர்.எம்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் தனபால் மனைவி நாகலட்சுமி (வயது55). தனபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். நாகலட்சுமி ரயில்வே துறையில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரு மகள்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நாகலட்சுமியின் சகோதரன் மகளுக்கு நாளைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அதற்கான நகைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொருட்களை நாகலட்சுமி பொறுப்பேற்று வாங்கி அவரது வீட்டில் வைத்திருந்தார்.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மேலும் நகைகள் வாங்குவதற்காக, வீட்டை பூட்டிவிட்டு உறவினர்களுடன் என் எஸ்.பி.சாலையில் உள்ள பிரபல நகைக்கடைக்குச் சென்றுள்ளார். பிற்பகலில் திரும்பி வந்து பர்த்தபோது, வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, திருமணத்துக்காக வாங்கி பீரோவில் வைத்திருந்த 70 பவுன் நகைகளையும், ரூ. 1 லட்சம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

  இது குறித்த புகாரின்பேரில், கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் தடவியல் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு புலன்விசாரணை நடத்தினர். விசாரணையில் சந்தேகத்துக்குரிய 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் திருட்டில் தொடர்புடையது தெரிய வந்தது. தொடர்ந்து விடிய, விடிய அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரத்தினசாமி வீட்டை பூட்டிவிட்டு மேல கடம்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
  • வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.70 ஆயிரம், 2 பவுன் நகைகள் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.

  பெரம்பலூர்:

  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கடம்பூரை சேர்ந்தவர் ரத்தினசாமி(வயது 67). இவர் கடந்த 21-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு மேல கடம்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, நகை மற்றும் பணம் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

  இதையடுத்து வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.70 ஆயிரம், 2 பவுன் நகைகள் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்துள்ளது.

  இது குறித்து ரத்தினசாமி அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் ஓட்டை பிரித்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உளுந்தூர்பேட்டையில் இருந்து நெய்வேலி செல்வதற்காக விருத்தாசலம் செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார்.
  • அவர் அருகில் இருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார்.

  கடலூர்:

  கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பு.மலையனூரை சேர்ந்தவர் பாக்யராஜ். இவரது மனைவி கோகிலா. சம்பவத்தன்று இவர் உளுந்தூர்பேட்டையில் இருந்து நெய்வேலி செல்வதற்காக விருத்தாசலம் செல்லும் பஸ்சில் ஏறி உள்ளார். விருத்தாசலம் வந்து பஸ்சில் இருந்து இறங்கியபின்னர் தனது கைப்பையை கோகிலா சோதனை செய்தார். அதில் இருந்த நெக்லஸ், செயின, மோதிரங்கள் உள்ளிட்ட 5 பவுன் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் ேபாலீசில் புகார் செய்தார். அப்போது அவர் அருகில் இருந்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட விருத்தாசலம் போலீசார் காணாமல் போன நகை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அதே பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (21) என்பவரை வீட்டு வேலைக்கு உதவியாளராக நியமித்து இருந்தார்.
  • பீேராவில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்தபோது அதில் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 500 மதிப்புள்ள 8 பவுன் கொண்ட 2 செயின்கள் மாயமாகி இருந்தது.

  சேலம்:

  சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி வசந்தா (வயது 39). இவரின் கணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அேத பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (21) என்பவரை வீட்டு வேலைக்கு உதவியாளராக நியமித்து இருந்தார்.

  இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி வீட்டில் பீேராவில் வைத்திருந்த நகைகளை சரிபார்த்தபோது அதில் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 500 மதிப்புள்ள 8 பவுன் ெகாண்ட 2 செயின்கள் மாயமாகி இருந்தது. இது குறித்து வசந்தா சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், வீட்டின் உதவியாளர் மகேஷ்குமாரிடம் நகை திருட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்சி அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் இருந்து 7 பவுன் நகையை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்
  • இதுபற்றி அன்ன புஷ்பம் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்

  திருச்சி:

  திருச்சி மாவட்டம் லால்குடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி அன்ன புஷ்பம் (வயது 65). இவர் பொன்மலைப்பட்டியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு செல்வதற்காக லால்குடியில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் தனது கைப்பையில் 7 பவுன் தங்கச் செயின் ஒன்றை எடுத்து வந்தார்.

  சத்திரம் பஸ் நிலையத்தில் பஸ்சில் இருந்து இறங்கும்போது கூட்ட நெரிசலில் அவரது கைப்பையை நகையுடன் திருடி சென்று விட்டனர். இதுபற்றி அன்ன புஷ்பம் கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நகையை லாவகமாக கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகிறார்.

  திருச்சி பஞ்சப்பூர் ஐயங்கார் பேக்கரி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கான பைப் மற்றும் இரும்பு ராடுகள் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 250 கிலோ எடை கொண்ட இரும்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

  இதுபற்றி பாதாள சாக்கடை திட்ட பணியினை ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனத்தின் செயல் அலுவலர் தினேஷ் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி 22 மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருச்சி பீமா நகர் விவேகானந்தா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி (57). இவர் திருச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் அவர் பஸ்சுக்காக காத்து நின்ற போது மர்ம ஆசாமி ஒருவன் அவர் கையில் இருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றார்.

  இது குறித்து ஜானகி கோட்டை போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  திருச்சி பாலக்கரை பீமா நகர் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகள் மஞ்சுளா (27). இவர் மார்சிங் பேட்டை பகுதியிலுள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது பாலக்கரை மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ரகுராம் (19), வரகனேரி நாயக்கர் தெரு பகுதியைச் சேர்ந்த ரகுநாத் (21), மண்ணச்சநல்லூர் மேல ஸ்ரீதேவிமங்கலம் பகுதியைச் சேர்ந்த தர்மசீலன் (23) ஆகிய மூன்று வாலிபர்களும் கத்தி முனையில் அவரது கையில் இருந்த செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

  இது தொடர்பாக பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று வாலிபர்களையும் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராஜேஷ் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தொண்டாமுத்தூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றார்.
  • வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

  கோவை

  பொள்ளாச்சி நேரு வீதியை சேர்ந்தவர் மணிகன்ட ராஜேஷ் (வயது 38). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது அலுவலகம் வீட்டின் அருகேயே உள்ளது.


  அங்கு உமா என்பவர் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மணிகன்ட ராஜேஷ் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தொண்டாமுத்தூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றார். அலுவலகத்தில் இருந்த உமா வேலைகளை முடித்து அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார்.

  மறுநாள் காலை வழக்கம்போல உமா வேலைக்கு வந்தார். அப்போது மணிகன்ட ராஜேசின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் மணிகன்ட ராஜேசுக்கு தகவல் தெரிவித்தார்.

  உடனே அவர் வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த தங்க செயின், ேமாதிரம், தங்க கடிகாரம் உள்பட 18 பவுனை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

  இதுகுறித்து மணிகன்ட ராஜேஷ் மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

  மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் உருவதை வைத்து ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற திருடர்களை தேடி வருகின்றனர்.

  பெரம்பலூரை சேர்ந்தவர் பிரகாஷ் (38). என்ஜினீயர். இவர் கோவை துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் துடியலூரில் உள்ள வனிக வளாகத்துக்கு சென்றனர்.

  அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வீடு திரும்பிய பிரகாஷ் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 12 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பிரகாஷ் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

  இதேபோன்று துடியலூரை அடுத்த பாரதி நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (36). தொழிலாளி. சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி விட்டு செல்வபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

  அப்போது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் வீட்டில் இருந்த ஒரு பவுன் தங்க நகை மற்றும் லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

  வீடு திரும்பிய அவர் கொள்ளை போயி–ருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஷாஜகான் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அன்பழகன் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவி கோட்ட பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
  • உள்ளே சென்று பார்த்த பொழுது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நெக்லஸ், ஆரம், பிரேஸ்லெட் உள்ளிட்ட 22 பவுன் எடையுள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

  திருச்சி :

  திருச்சி மாவட்டம் துறையூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 67). இவர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் உதவி கோட்ட பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

  இவரது மூத்த மகளான புவனேஸ்வரி திருமணமாகி சென்னையிலும், இளைய மகளான ஆஷா வேலை நிமித்தமாக கோவையிலும், தங்கியுள்ளனர். அன்பழகனும், அவரது மனைவியான ராஜேஸ்வரியும் (61) திருச்சியில் குடும்பத்துடன் தங்கி உள்ள தனது மகனான முகமது யாசிக்கை (34) பார்ப்பதற்காக கடந்த புதன்கிழமை அன்று வீட்டை பூட்டி விட்டு திருச்சி சென்றுள்ளனர்.

  இதற்கிடையே நேற்று மாலை சுமார் ஏழு மணி அளவில் வீட்டிற்கு திரும்பி வந்த அன்பழகன், வீட்டின் பூட்டு உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த பொழுது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நெக்லஸ், ஆரம், பிரேஸ்லெட் உள்ளிட்ட 22 பவுன் எடையுள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

  இச்சம்பவம் தொடர்பாக அன்பழகன் அளித்த தகவலின் பேரில் துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், முசிறி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் துறையினர் சென்று தடயங்களை சேகரித்தனர்.

  மேலும் இச்சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 22 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
  • செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

  கோவை

  கோவை பீளமேடு அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மனைவி கமலம் (வயது 77). சம்பவத்தன்று இவர் டெக்ஸ் பார்க் வழியாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கமலம் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.


  இதில் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் 5 பவுன் தங்க செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print