அரக்கோணம் அருகே ஓடும் ரெயிலில் 20 பவுன் நகை திருட்டு

வீட்டிற்கு சென்ற பிறகு தான் அவர்களுக்கு நகை கொள்ளை போனது தெரியவந்தது. ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அரக்கோணம் அருகே ஓடும் ரெயிலில் 20 பவுன் நகை திருட்டு
Published on

அரக்கோணம்:

திருவள்ளூரை சேர்ந்தவர் மணிவண்ணன் இவருடைய மனைவி பிரித்தி (வயது 26). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் ஐதராபாத் சென்றனர். அங்கிருந்து தனது தாத்தா பாட்டி ஆகியோருடன் புறப்பட்டு வந்தனர்.

அவர்கள் கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தனர். ரெயிலில் வந்த போது மர்மநபர்கள் அவர்கள் பெட்டியில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடினர்.

இதனை அறியாத மணிவண்ணன் குடும்பத்தினர் அரக்கோணம் வந்ததும் ரெயிலில் இருந்து கீழே இறங்கினர். பின்னர் அவர்கள் கார் மூலம் திருவள்ளூர் சென்றனர். வீட்டிற்கு சென்ற பிறகு தான் அவர்களுக்கு நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அப்போது தங்கள் பயணம் செய்த பெட்டியில் வட மாநில வாலிபர்கள் 4 பேர் இருந்தனர். அவர்கள் எங்களோடு பேசிக்கொண்டு வந்தனர். எங்கள் கவனத்தை திசை திருப்பி அவர்கள் நகையை கொள்ளையடித்திருக்கலாம் என போலீசாரிடம் தெரிவித்தனர்.

கொள்ளை நடந்த ரெயில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த பயணிகள் விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com