என் மலர்tooltip icon

    இந்தியா

    திருமண நகை என தெரிந்ததும் திருடிய தங்கச் செயினை திருப்பி கொடுத்த திருடன்.. மன்னிப்பு கடிதத்தில் நெகிழ்ச்சி
    X

    திருமண நகை என தெரிந்ததும் திருடிய தங்கச் செயினை திருப்பி கொடுத்த திருடன்.. மன்னிப்பு கடிதத்தில் நெகிழ்ச்சி

    • உள்ளூர் வாட்சப் குழுக்களில் செயின் பற்றிய அடையாளங்களை போலீசார் பகிர்ந்திருந்தனர்.
    • நான் அதை கையில் இந்திய போதெல்லாம், எனக்கு ஒரு மோசமான உணர்வும், லேசான நடுக்கமும் ஏற்பட்டது.

    கேரளாவில் மேலபரம்பா பகுதியில் கடந்த 9 நாட்களுக்கு முன்பு கணவருடன் பஸ்ஸில் சென்ற கீதா என்ற பெண்ணின் தங்க செயின் திருடு போனது. இதுபற்றி அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இதை தொடர்ந்து உள்ளூர் வாட்சப் குழுக்களில் செயின் பற்றிய அடையாளங்களை போலீசார் பகிர்ந்திருந்தனர்.

    இந்நிலையில் வாட்ஸப்பில் கீதாவின் செயின் அவரது திருமண நகை என்ற தகவலை அறிந்து மனம் வருந்திய திருடன் அதை திரும்ப ஒப்படைத்துள்ளான். கீதாவின் வீட்டின் முன் திருடன் அந்த நகையை வைத்து விட்டு ஒரு மன்னிப்பு கடிதத்தையும் விட்டுச் சென்றான்.

    திருடன் தனது கடிதத்தில், "இந்தச் செயின் என் வசம் வந்து ஒன்பது நாட்கள் ஆகின்றன. முதலில், நான் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் நான் அதை கையில் இந்திய போதெல்லாம், எனக்கு ஒரு மோசமான உணர்வும், லேசான நடுக்கமும் ஏற்பட்டது.

    அதை என்ன செய்வது என்று நீண்ட நேரம் யோசித்தேன். பின்னர் அது திருமண நகை என்று ஒரு வாட்ஸ்அப் செய்தியைக் கவனித்தேன். வேறு யாரும் வருந்துவதை நான் விரும்பவில்லை.

    என் அடையாளத்தையும் நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. இவ்வளவு நாட்கள் அதை வைத்திருந்ததற்கும் உங்களுக்கு வலியை ஏற்படுத்தியதற்கும் மன்னிக்கவும்" என்று எழுதியுள்ளான்.

    Next Story
    ×