என் மலர்
நீங்கள் தேடியது "திருடன்"
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தினர்.
- வீட்டில் பெரிய அளவில் பணம் இல்லாத விரக்தியில் திருடன் கடிதம் எழுதி வைத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:
நெல்லையை அடுத்த பழையபேட்டை காந்தி நகரில் கிறிஸ்தவ ஊழியம் செய்து வரும் ஜேம்ஸ் பால் (வயது 57) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி பீட்டா. இவர்களது மகள் மதுரையில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து வரும் நிலையில் அங்கு தங்கியுள்ளார். இதனால் ஜேம்ஸ் பால் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் மதுரை புறப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது செல்போன் மூலம் வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை பார்த்தபோது அது இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், நேற்று காலை பார்த்தபோது கேமரா இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஜேம்ஸ் பால், தனது பக்கத்து வீட்டாருக்கு தகவல் அளித்துள்ளார். அவர்கள் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக மதுரையில் இருந்து நெல்லைக்கு விரைந்து வந்த ஜேம்ஸ் பால், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த உண்டியல் மற்றும் மணி பர்ஸ் ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த ரூ. 25 ஆயிரம் திருட்டு போயிருந்தது.
இதுகுறித்து அவர் பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவரது வீட்டின் அறையில் திருடன் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில், "உன் வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. இதற்கு இத்தனை கேமராவா? அடுத்த முறை என்னை மாதிரி யாராவது திருடன் வந்தால் ஏமாறாமல் இருக்க காசாவது வை. மன்னித்துக்கொள்ளவும். இப்படிக்கு திருடன்" என்று எழுதப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர், அந்தப் பகுதியில் உள்ள மற்ற சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து, இந்த நூதன திருட்டில் ஈடுபட்ட நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் பெரிய அளவில் பணம் இல்லாத விரக்தியில் திருடன் கடிதம் எழுதி வைத்துச்சென்ற இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் வாட்சப் குழுக்களில் செயின் பற்றிய அடையாளங்களை போலீசார் பகிர்ந்திருந்தனர்.
- நான் அதை கையில் இந்திய போதெல்லாம், எனக்கு ஒரு மோசமான உணர்வும், லேசான நடுக்கமும் ஏற்பட்டது.
கேரளாவில் மேலபரம்பா பகுதியில் கடந்த 9 நாட்களுக்கு முன்பு கணவருடன் பஸ்ஸில் சென்ற கீதா என்ற பெண்ணின் தங்க செயின் திருடு போனது. இதுபற்றி அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதை தொடர்ந்து உள்ளூர் வாட்சப் குழுக்களில் செயின் பற்றிய அடையாளங்களை போலீசார் பகிர்ந்திருந்தனர்.
இந்நிலையில் வாட்ஸப்பில் கீதாவின் செயின் அவரது திருமண நகை என்ற தகவலை அறிந்து மனம் வருந்திய திருடன் அதை திரும்ப ஒப்படைத்துள்ளான். கீதாவின் வீட்டின் முன் திருடன் அந்த நகையை வைத்து விட்டு ஒரு மன்னிப்பு கடிதத்தையும் விட்டுச் சென்றான்.
திருடன் தனது கடிதத்தில், "இந்தச் செயின் என் வசம் வந்து ஒன்பது நாட்கள் ஆகின்றன. முதலில், நான் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் நான் அதை கையில் இந்திய போதெல்லாம், எனக்கு ஒரு மோசமான உணர்வும், லேசான நடுக்கமும் ஏற்பட்டது.
அதை என்ன செய்வது என்று நீண்ட நேரம் யோசித்தேன். பின்னர் அது திருமண நகை என்று ஒரு வாட்ஸ்அப் செய்தியைக் கவனித்தேன். வேறு யாரும் வருந்துவதை நான் விரும்பவில்லை.
என் அடையாளத்தையும் நான் வெளிப்படுத்த விரும்பவில்லை. இவ்வளவு நாட்கள் அதை வைத்திருந்ததற்கும் உங்களுக்கு வலியை ஏற்படுத்தியதற்கும் மன்னிக்கவும்" என்று எழுதியுள்ளான்.
- திருடனுக்கு செருப்பு மாலை அணிவித்து போலீஸ் வாகனத்தின் மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
- இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
ஜம்மு காஷ்மீரின் பக்ஷி நகர் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து ரூ.40 ஆயிரத்தை வாலிபர் ஒருவர் திருடியதாக கூறப்படுகிறது. அப்போது பணம் திருடிய வாலிபரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர்.
அப்போது பொதுமக்களை அந்த வாலிபர் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று கைது செய்தனர்.
பின்னர் அந்த வாலிபரின் சட்டையை கழற்றி அவரது கைகளை கட்டி, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து போலீஸ் வாகனத்தின் மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
போலீசாரின் இந்த செயல் மனிதாபிமானமற்ற நடவடிக்கை என்று பலரும் விமர்சன கருத்துக்களை பதிவிட்டனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.
- ஒரே நாளில் 2 இடங்களில் திருடியது ஒரே கும்பல் என்று தெரியவந்தது.
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே கல்லடி மாமூடு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டில் முன்நின்ற மரியசெல்வி என்ற பெண்மணியிடம் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் மின்னல் வேகத்தில் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்றார்கள். உடனே குலசேகரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.
அன்று மாலையில் நித்திரைவிளை பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து செயினை பைக்கில் வந்த வாலிபர்கள் திருடி சென்றார்கள். ஒரே நாளில் 2 இடங்களில் திருடியது ஒரே கும்பல் என்று தெரியவந்தது.
இவர்களை பிடிக்க உதவி ஆய்வாளர் அருளப்பன் தலைமையில் 5 போலீசார்களை மாவட்ட எஸ்.பி. தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்த நிலையில் நேற்று மாலை குலசேகரம் பகுதியில் சந்தேகம் படும்படி ஒரு வாலிபர் சுற்றுவது குலசேகரம் போலீசுக்கு தெரியவந்தது.
உடனே குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தனிப்படை உதவி ஆய்வாளர் அருளப்பன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்துபிடித்து விசாரணை செய்ததில் கேரளா மாநிலம் கருமன் விளை பாறசாலை பகுதியை சேர்ந்த மணிஷ் (வயது 24) என்பது தெரியவந்தது.
மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் இவரும் இவரது நண்பர் யாசிர் 2 பேரும் சேர்ந்து பல்வேறு பகுதிகளில் திருடியது தெரியவந்தது.
இவர்கள் மீது குலசேகரம், நித்திரவிளை, கோட்டார் போன்ற பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இவரிடம் இருந்து ரூ.2000 பறிமுதல் செய்யப்பட்டது. திருடப்பட்ட நகைகள் அனைத்தும் யாசிரிடம் உள்ளது என்று கூறினர். யாசிரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் பிடிபட்டால்தான் திருட்டு நகைகள் அனைத்தும் மீட்க முடியும்.
- 4 வாகனங்கள் மீட்பு
- குற்றவாளியை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பாராட்டு
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் ரெகு ராஜேஷ் . இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் முன்பு நிறுத்தி சென்றார். அதனை யாரோ திருடிச் சென்று விட்டனர்.
மேலும் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எல்கைகுட்பட்ட பகுதி களிலும் இதேபோல் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தரவிட்டார்.இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பகுதியை சேர்ந்த இசக்கி பாண்டி (வயது 24) என்பவரை பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் கைது செய்து விசாரணை நடத்தினார்.
இதில் பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அவன் வாகன திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவனிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டது.
குற்றவாளியை கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் வெகுவாக பாராட்டினார்.
- கண்டாபுரத்தை சேர்ந்த அருண்பிரகாஷ் (37) என்பதும், மோட்டார்சைக்கி ளை திருடியது இவர் தான் என்பதும் தெரியவந்தது.
- இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை மீட்டு, அருண்பிரகாஷ்-ஐ ைகது செய்தனர்.
குமாராபாளையம்:
குமார பாளையம் காளியண்ணன் நகர் பகுதியில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 32). இவர் சிமெண்ட் கடை வைத்து தொழில் செய்து வருபவர். கடந்த 3-ந்தேதி மாலை 6 மணியளவில் ராஜம் தியேட்டர் அருகே ஓட்டல் கடையில் டிபன் வாங்கி கொண்டு திரும்ப வந்து பார்க்கும் போது, ஓட்டல் முன்பு நிறுத்தி விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதே போல் குமார பாளையம் அருகே கத்தேரி, சாமியம்பாளையம் பகுதி யில் வசிப்பவர் கார்த்தி (26). எலெக்ட்ரிசியன்.
கடந்த மாதம் 10-ந்தேதி சேலம் சாலை ரெயின்போ கேபிள் அலுவலகத்தின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, உள்ளே சென்று வேலையை முடித்து விட்டு வெளியில் வந்து பார்க்கும் போது, வாகனத்தை காணவில்லை.
இது குறித்து குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் காவிரி நகர் புதிய பாலம் அருகே ரோந்து சென்ற போது, அவ்வழியே மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாத்தனர்.
விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த அருண்பிரகாஷ் (37) என்பதும், மோட்டார்சைக்கி ளை திருடியது இவர் தான் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளை மீட்டு, அருண்பிரகாஷ்-ஐ ைகது செய்தனர்.
- சேலம் ரோடு பகுதியில் திரையரங்கு அருகில் ஐஸ்கிரீம் கடை ஒன்று உள்ளது.
- பணத்தை திருடியதுடன் சாவகசமாக ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு சென்றுள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி,-
தருமபுரி மாவட்டம், பொம்மிடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டவுன் பகுதி சேலம் ரோடு பகுதியில் திரையரங்கு அருகில் ஐஸ்கிரீம் கடை ஒன்று உள்ளது.
அந்த கடையில் நள்ளிரவில் புகுந்த இரண்டு திருடர்கள் கடையில் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் இருந்த 1200 ரூபாய் பணத்தை திருடியதுடன் சாவகசமாக ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டு சென்றுள்ளனர்.
பின்னர் பொம்மிடியில் உள்ள கடைவீதியில் கம்பியூட்டர் சென்டர், மளிகை கடை, துணிக்கடை, மரப்பட்டறை, பேக்கரி, ஆப்டிகல் கடை, சோபா கடை என பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் நள்ளிரவில் பூட்டுகளை உடைத்து சிறு, சிறு தொகைகளை திருடி சென்றுள்ளனர்.
இன்று காலை கடைகளின் உரிமையாளர்கள் வந்து பார்த்தபோது பூட்டுக்கள் உடைக்கப்பட்டு திருடர்கள் புகுந்திருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ஒருவர் பின் ஒருவராக 10-க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் பொம்மிடி போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் விரைந்தஅங்கு வந்த போலீசார் அனைத்து கடைகளிலும் கை ரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஐஸ்கிரீம் கடையில் உள்ளே புகுந்த திருடன் கடையின் கல்லாப்பெட்டியில் அமர்ந்து பணத்தை எண்ணி எடுபதும், அடுத்ததாக ஐஸ்கிரீம் எடுத்து வந்து சேரில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு வெளியேறுவதும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
ஆனால் கடையின் வெளியில் இருந்த கேமராவை உடைத்து எரிந்துள்ளார்கள். திருடனின் முகம் தெளிவாக கேமராவில் பதிவாகியுள்ளதால் காவல்துறையினர் விரைவில் பிடிப்பார்கள் என்று தெரிகிறது.
பொம்மிடியில் இருந்து 24 மணி நேரமும் வெளியூர் செல்ல போக்குவரத்துக்கான வசதி உள்ளதால் வெளியூரில் இருந்தும் சர்வசாதாரணமாக திருடர்கள் திருடி செல்லும் சம்பவங்கள் நடப்பதாகவும், வட இந்தியர்கள் பொம்மிடியில் பெருமளவு உள்ளதால் இது போன்ற சம்பவம் நடப்பதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இச் சம்பவம் இப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
- கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.
தாராபுரம் :
தாராபுரம், மூலனூர், கொளத்துபாபாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து திருடுவது, பெண்களை குறித்து நகை பறிப்பது போன்ற சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்க ப்பட்டது.
இந்த தனிப்படை போலீ சார் முதலில் கொள்ளை நடந்த வீட்டின் அருகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். அப்போது கண்காணிப்பு கேமராவில் முகமூடி அணிந்த 3 டவுசர் கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் தேனி மாவட்டம் ஜங்கிள் பட்டியை சேர்ந்த முருகேசன் என்கிற மூசா (வயது 52) என்வரை போலீசார் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாணையில் அவர் உள்பட 3 பேர் முகமூடி அணிந்து, டவுசர் போட்டு கொள்ளையில் ஈடுபட்டதாக கூறினார். இதையடுத்து முருகேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- வண்டியை அவர் திருடி கொண்டு வந்துவிட்டதாக தவறாக கருதி, அசோக்குமாரை சரமாரியாக தாக்கினர்.
- புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அசோக்குமாரை தீவிரமாக தேடிவருகின்றனர்.
கடத்தூர்:
தருமபுரி மாவட்டம் கடத்தூர் ராமியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி-மேகலா தம்பதியின் மகன் அசோக்குமார் (வயது25).
இவர் அடிக்கடி குடித்து விட்டு எந்தவேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அசோக்குமார் சம்பவத்தன்று பி.அய்யம்பட்டியில் உள்ள அவரது உறவினர் கலா வீட்டிற்கு சென்றார். அங்கு கலாவின் மாமனார் குழந்தைவேல் என்பவருடன் சேர்ந்து ஊருக்கு வெளியே சென்று ஒன்றாக மதுக்குடித்துள்ளனர்.
அப்போது குழந்தைவேலின் வண்டியில் பெட்ரோல் இல்லை என்பது தெரியவந்தது. எனவே, வண்டியை எடுத்து கொண்டு பங்கில் பெட்ரோல் போட்டு வருமாறு அவர் அசோக்குமாரிடம் கூறினார். உடனே தருமபுரி-கடத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் வண்டிக்கு பெட்ரோல் போட்டு கொண்டு அசோக்குமார் மீண்டும் குழந்தைவேல் இருக்கும் இடத்திற்கு திரும்பி சென்றார்.
அப்போது அவர் மதுபோதையில் இருந்ததால் வண்டியை சரிவர ஓட்ட முடியாமல் நிலைத்தடுமாறி மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.
இதனை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் சிலர் பார்த்தபோது அசோக்குமார் எடுத்து சென்ற வண்டி குழந்தைவேலுடையது என்றும், அந்த வண்டியை அவர் திருடி கொண்டு வந்துவிட்டதாக தவறாக கருதி, அசோக்குமாரை சரமாரியாக தாக்கினர்.
இதுகுறித்து குழந்தைவேலுக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். உடனே அவர் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது கிராம மக்கள் திருடன் என நினைத்து அடித்து உதைத்த வாலிபர் தன்னுடைய உறவினர் என்றும், தான்தன் வண்டியை பெட்ரோல் போட கொடுத்ததாகவும் அவர் கூறினார். இதையடுத்து அங்கிருந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இதற்கிடையே வெளியே சென்ற தனது மகன் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் கலாவிடம் விசாரித்தபோது அசோக்குமார் அப்போது வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார் என்று தெரிவித்தார். ஆனால், தனது மகன் மீண்டும் வீடுதிரும்பி வராததால் அவர் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து தாய் மேகலா கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அசோக்குமாரை தீவிரமாக தேடிவருகின்றனர்.
திருடன் என தவறாக நினைத்து கிராம மக்கள் வாலிபரை அடித்து உதைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மைவாடியில் மோகனசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விதை நெல் கிடங்கு உள்ளது.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உடுமலை :
மடத்துக்குளத்தையடுத்த மைவாடி பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியிடமிருந்து செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மைவாடியில் மோகனசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விதை நெல் கிடங்கு உள்ளது.இங்கு சின்னப்பன் புதூரைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் நெல் கிடங்கின் முன் முத்துச்சாமி கட்டிலை போட்டு தூங்கியுள்ளார்.
நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சாவகாசமாக அந்த பகுதியை நோட்டம் விட்டு விட்டு,அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிக்கிறார். பின்னர் முத்துசாமியின் அருகில் சென்று அவர் தலையணைக்கடியில் வைத்திருந்த செல்போனை நைசாக திருடுகிறார்.அப்போது விழித்துக் கொண்ட முத்துச்சாமி அந்த நபரை துரத்துகிறார்.ஆனால் அதற்குள் மின்னல் வேகத்தில் செல்போனுடன் அந்த நபர் தப்பிச்செல்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் குறித்து முத்துச்சாமி அளித்த புகாரின் பேரில் மடத்துக்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- திருட வந்து தப்பி சென்ற திருடனை பொதுமக்களே விசாரித்து அடையாளம் கண்டனர்
- திருடன் விட்டு சென்ற இருசக்கர வாகனத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டார்
முசிறி,
முசிறி அடுத்த மணலி ஐத்தாம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி அன்னலட்சுமி(வயது 42). இவர் வீட்டில் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்துள்ளார். இதனை அறிந்த அன்னலட்சுமி, கூச்சலிட்டு உள்ளார். இதனால் அந்த நபர் தப்பி ஓடி உள்ளார். அப்போது அன்னலட்சுமியின் மகன் அந்த நபரை துரத்தி சென்றுள்ளார். இதனை கண்ட அப்பகுதி குடியிருப்புவாசி அழகேசன் கட்டிலை குறுக்கே போட்டு திருடனை தடுத்து நிறுத்த முயற்சித்து உள்ளார். ஆனால் இதற்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட்டு அந்த திருடன், தனது டூவிலரை எடுத்துக்கொண்டு வேகமாக தப்பி சென்றுள்ளார். அவ்வாறு தப்பி பைக்கில் வேகமாக சென்றபோது அருகில் உள்ள சாலை வளைவில் நிலை தடுமாறி திருடன் கீழே விழுந்துள்ளான். பின்னால் ஆட்கள் துரத்தி வருவதால், பைக்கை அதே இடத்தில் போட்டுவிட்டு திருடன் தப்பி சென்றுள்ளான். பைக்கை கைப்பற்றிய அப்பகுதி அது யாருடையது என்று விசாரித்துள்ளனர். அப்போது அந்த பைக் பெரிய கொடுத்துறை சேர்ந்த தியாகராஜன் மகன் முத்து செல்வம் என்கிற செல்வம் (வயது 52) என்பவருடையது என்று தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அன்னலட்சுமி புகார் அளித்ததின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர கோகிலா வழக்கு பதிந்து முத்து செல்வத்தை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
- ராஜதுரை ( வயது 34 ) என்பவரை கைது செய்து விசாரித்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படு த்தப்பட்டது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த வரிசாங்குப்பம்ரங்கநாதன்எமகன்செல்வன். இவர் கடந்த 30-ந் தேதி பண்ருட்டி 4 முனை சந்திப்பு அருகே உள்ள காய்கறி கடையில் காய்கறி வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு காய்கறி வாங்கிவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது தனது மோட்டார் சைக்கிள் திருடு போனது தெரியவந்தது. இது சம்பந்தமாக பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் செல்வம் அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் தங்கவேல் மற்றும் போலீசார் ஆனந்த், ராஜி, அன்பரசன், கணேசமூர்த்தி, ஹரிஹரன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. யை ஆய்வு செய்து கொட்டிகோனா ன்குப்பத்தை சேர்ந்த பரமசிவன் மகன் ராஜதுரை ( வயது 34 ) என்பவரை கைது செய்து விசாரித்து அவரிடம் இருந்து திருட்டு போன மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் குறிஞ்சிப்பாடி மாரிய ம்மன் கோவில் அருகே 2 மோட்டார் சைக்கிள் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படு த்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






