search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரம் அருகே திருட்டு வழக்கில் தேடப்பட்ட பிரபல திருடன் கைது
    X

    கைது செய்யப்பட்ட மணிஷ்.

    குலசேகரம் அருகே திருட்டு வழக்கில் தேடப்பட்ட பிரபல திருடன் கைது

    • போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.
    • ஒரே நாளில் 2 இடங்களில் திருடியது ஒரே கும்பல் என்று தெரியவந்தது.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே கல்லடி மாமூடு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டில் முன்நின்ற மரியசெல்வி என்ற பெண்மணியிடம் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் மின்னல் வேகத்தில் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்றார்கள். உடனே குலசேகரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.

    அன்று மாலையில் நித்திரைவிளை பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து செயினை பைக்கில் வந்த வாலிபர்கள் திருடி சென்றார்கள். ஒரே நாளில் 2 இடங்களில் திருடியது ஒரே கும்பல் என்று தெரியவந்தது.

    இவர்களை பிடிக்க உதவி ஆய்வாளர் அருளப்பன் தலைமையில் 5 போலீசார்களை மாவட்ட எஸ்.பி. தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்த நிலையில் நேற்று மாலை குலசேகரம் பகுதியில் சந்தேகம் படும்படி ஒரு வாலிபர் சுற்றுவது குலசேகரம் போலீசுக்கு தெரியவந்தது.

    உடனே குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தனிப்படை உதவி ஆய்வாளர் அருளப்பன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சுற்றிவளைத்துபிடித்து விசாரணை செய்ததில் கேரளா மாநிலம் கருமன் விளை பாறசாலை பகுதியை சேர்ந்த மணிஷ் (வயது 24) என்பது தெரியவந்தது.

    மேலும் அவரிடம் விசாரணை செய்ததில் இவரும் இவரது நண்பர் யாசிர் 2 பேரும் சேர்ந்து பல்வேறு பகுதிகளில் திருடியது தெரியவந்தது.

    இவர்கள் மீது குலசேகரம், நித்திரவிளை, கோட்டார் போன்ற பல்வேறு காவல்நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன. இவரிடம் இருந்து ரூ.2000 பறிமுதல் செய்யப்பட்டது. திருடப்பட்ட நகைகள் அனைத்தும் யாசிரிடம் உள்ளது என்று கூறினர். யாசிரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் பிடிபட்டால்தான் திருட்டு நகைகள் அனைத்தும் மீட்க முடியும்.

    Next Story
    ×