search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mobile Phone"

    • இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (TRAI) புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தியது.
    • வங்கிப் பரிவர்த்தனை, டெலிவரி அப்டேட்கள், பணப் பரிவர்த்தனை அலெர்ட்கள் போன்ற அனைத்திற்கும் ஓடிபி பயன்படுகிறது.

    ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஓடிபி [OTP] எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. வங்கி சேவைகள், டெலிகாம் சேவைகள் என பல துறைகளில் ஓடிபி இன்றியமையாததாக உள்ளது. இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஓடிபி மெசேஜ் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று டெலிகாம் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (TRAI) புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தியது.

     

    ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட அந்த அந்த விதிப்படி எல்லா ஓடிபி மெசேஜ்களையும் டிராய் கண்காணிக்கும். அப்படி டிராக் செய்யப்பட்ட ஓடிபிகள் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலம் பயனர்களுக்கு சென்றால் அது தடுத்து நிறுத்தப்படும்.

    இதனால் தங்களுக்கு அனுப்பும் ஓடிபிகளை பயனர்களால் பார்க்க முடியாது. வங்கிப் பரிவர்த்தனை, டெலிவரி அப்டேட்கள், பணப் பரிவர்த்தனை அலெர்ட்கள் போன்ற அனைத்திற்கும் ஓடிபி பயன்படுத்தப்படும் நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஓடிபிகளை நேரடியாக அல்லாமல் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மூலம் ஓடிபி எண்களை அனுப்புகிறது.

    எனவே அவ்வாறு செயல்படும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் வங்கியால் அங்கீகரிக்கப்படாத, அடையாளம் காணக்கூடியதாக இல்லாவிட்டால், அந்த மெசேஜ்கள் தடைபடும். தற்போதுள்ள பல டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு இந்த சிக்கல் உள்ளது.

    குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் - ஐடியா ஆகிய நிறுவனங்கள் சார்ந்திருக்கும் டெலி மார்கெட்டிங்கில் இந்த சிக்கல் உள்ளதால் அந்த அவற்றின் ஓடிபி சேவைகள் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று இந்நிறுவனங்கள் டிராய் இடம் கோரிக்கை வைத்துள்ளது.

    • டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே பகை இருந்துள்ளது
    • லில்லுவும் அவரது குடும்பத்தினரும் சாந்தியையும் அவரது மகன்களையும் அடித்து விரட்டியுள்ளனர்.

    டெல்லியில் மொபைல் போனால் துப்பாக்கிச்சூட்டில் இருந்து ஒருவர் உயிர்பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் உள்ள பஞ்சாபி பாக் பகுதியில் இரண்டு குடும்பங்களுக்கு இடையே உள்ள பகையால் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

    அன்றைய தினம் சாந்தி என்ற பெண் தனது மகன்கள் அர்ஜுன், கமல் மற்றும் உறவினர்களுடன் தங்களுக்கு பகையாய் உள்ள லில்லு என்ற சாத்நாம் வீட்டுக்கு சமாதானம் பேச சென்றுள்ளார். ஆனால் லில்லுவும் அவரது குடும்பத்தினரும் சாந்தியையும் அவரது மகன்களையும் அடித்து விரட்டியுள்ளனர்.

    இந்த சம்பவத்தின்போது சாந்தியின் மகன் அர்ஜூன் தான் எடுத்துவந்த துப்பாக்கியால் சுட்டதில் லில்லுவின் பக்கம் இருந்த ரித்விக் என்பவரை நோக்கி குண்டு பாய்ந்தது. ஆனால் ரித்விக் அவரது டவுசரில் வைத்திருந்த மொபைல் போன் மீது துப்பாக்கிக்குண்டு பட்டுத் தெறித்தது.

    இதனால் போன் சுக்குநூறான நிலையில் குண்டு ரிதிவிக் உடலை துளைக்காததால் அவர் உயிர்தப்பினார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது.

    • பூ விற்கும் தாய் ஒருவர் தனது மகனுக்கு ஐபோன் வாங்கி கொடுத்துள்ளார்.
    • இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    கோவிலுக்கு வெளியே பூ விற்கும் தாய் ஒருவர் தனது மகன் அடம்பிடித்ததால் அவருக்கு ஐபோன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

    மொபைல்கடையில் ஐபோன் வாங்கிய மகன் மற்றும் அவரது தாயிடம் பேட்டி எடுத்துள்ளனர். அந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில் பேசிய அவரது அம்மா, "நான் ஒரு கோவிலுக்கு வெளியே பூ விற்கிறேன். என் மகன் தனக்கு ஐபோன் வேண்டும் என அடம்பிடித்து 3 நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. மகன் சாப்பிடாமல் இருந்ததால் அவனுக்கு நான் ஐபோன் வாங்குவதற்கு பணம் கொடுத்தேன். அந்த பணத்தை சம்பாதித்து தனக்கு திருப்பி தருமாறு என் மகனிடம் நான் கூறியுள்ளேன்" என்று தெரிவித்தார்.

    இணையத்தில் இந்த வீடியோ வைரலான நிலையில், அந்த மகனின் செயலை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    • கூடுதல் செயலாளர்கள் ரூ.30,000 வரை மொபைல் போன்கள் வாங்கலாம்.
    • மாதத்திற்கு ரூ.3,000 வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

    ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மொத்தம் 30 புதிய முன்மொழிவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    அதில், ஜார்கண்ட் அரசின் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் ரூ.60,000 வரையிலான மொபைல் போன்களை வாங்கலாம் என்றும் மாதத்திற்கு ரூ.3,000 வரை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்ற முன்மொழிவிற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    சிறப்பு செயலாளர் நிலை அதிகாரிகள் ரூ.45,000 வரை மொபைல் போன்களை வாங்கலாம் மற்றும் மாதம் ரூ 2,000 வரை ரீசார்ஜ் செய்யலாம் என்றும் கூடுதல் செயலாளர்கள், கூடுதல் இயக்குநர்கள் ரூ.30,000 வரை மொபைல் போன்கள் மற்றும் 750 ரூபாய் வரை ரீசார்ஜ் செய்யலாம் என்று அமைச்சரவை செயலாளர் வந்தனா தாடெல் கூறினார்.

    • இது தொடர்பான வீடியோவை இலங்கை அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
    • அந்த வீடியோவில் சிறுமியின் தாயார் ஸ்மிருதி மந்தனாக்கு நன்றி கூறுகிறார்.

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    போட்டி முடிந்த பிறகு, மாற்றுத்திறனாளி சிறுமியை இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தனா சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு ஒரு மொபைல்போனை அவர் பரிசாக வழங்கினார்.

    இது தொடர்பான வீடியோவை இலங்கை அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சிறுமியின் தாயார் ஸ்மிருதி மந்தனாக்கு நன்றி கூறுகிறார்.

    • பயனர்கள் இனி ஐ- போனில் உள்ள பேட்டரியை எளிதில கழற்றி மாட்டும் வசதியை ஏற்படுத்த ஐ- போன் திட்டமிட்டுள்ளது.
    • இந்த புதிய மாற்றம் வரும் செப்டம்பர் மாதம் புதிதாக வெளியாகவுள்ள ஐ - போன் 16 மாடலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம்.

    மொபைல் போன்களின் உலகில் தனக்கென தனி சந்தையை உருவாக்கி வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம் தங்களது தனித்துவமான தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. பயனர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளை ஏற்படுத்தி வரும் ஆப்பிள் தற்போது புதிய முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

    அதாவது, பயனர்கள் இனி ஐ-போனில் உள்ள பேட்டரியை எளிதில கழற்றி மாட்டும் வசதியை ஏற்படுத்த ஐ- போன் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே போன்களில் உள்ள கழற்றி மாட்டும் ஸ்டிரிப் மாடலை நீக்கிவிட்டு மின்சார அதிர்ச்சி மூலம் கழலும் ஸ்டிரிப்களை பொறுத்த உள்ளது ஆப்பிள்.

     

    இந்த புதிய மாற்றம் வரும் செப்டம்பர் மாதம் புதிதாக வெளியாகவுள்ள ஐ-போன் 16 மாடலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம். மேலும் இந்த புதிய ஐ-போனின் டிசைன், சிப்செட் என அனைத்தும் புதிய வடிவமைப்புடன் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

     

    • இந்தியாவில் ஹெச்.எம்.டி. நிறுவனத்தின் முதல் பீச்சர் போன் மாடல்கள்.
    • வயர்லெஸ் எஃப்.எம்., டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

    ஹெச்.எம்.டி. (HMD) குளோபல் நிறுவனத்தின் இரண்டு புதிய பீச்சர் போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக நோக்கியா 3210 மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஹெச்.எம்.டி. 105 மற்றும் ஹெச்.எம்.டி. 110 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை இந்திய சந்தையில் ஹெச்.எம்.டி. நிறுவனத்தின் முதல் பீச்சர் போன் மாடல்கள் ஆகும்.

    அம்சங்களை பொருத்தவரை ஹெச்.எம்.டி. 105 மற்றும் ஹெச்.எம்.டி. 110 மாடல்களில் ஒரே மாதிரியான டிசைன், டெக்ஸ்ச்சர் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் ஆட்டோ கால் ரெக்கார்டிங் வசதி, MP3 பிளேயர், வயர்டு மற்றும் வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ மற்றும் டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரு மாடல்களும் அதிகபட்சம் 9 மொழிகளில் இயக்கும் வசதி கொண்டுள்ளது. ஹெச்.எம்.டி. 110 மாடலில் ரியர் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 1000 எம்.ஏ.ஹெச். பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 18 நாட்களுக்கு ஸ்டான்ட் பை வழங்குகிறது. இவற்றில் இண்டர்நெட் இல்லாமல் யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் செய்யும் வசதி உள்ளது.

    ஹெச்.எம்.டி. 105 மாடல்- பிளாக், பர்பில் மற்றும் பர்பில் என மூன்று நிறங்களிலும், ஹெச்.எம்.டி. 110 மாடல் பிளாக் மற்றும் கிரீன் என இரண்டு நிறங்களிலும் கிடைக்கிறது. இந்திய சந்தையில் ஹெச்.எம்.டி. 105 விலை ரூ. 999 என்றும் ஹெச்.எம்.டி. 110 மாடல் விலை ரூ. 1199 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடகா அரசு மருத்துவமனையில் திடீரென மின்தடை ஏற்பட்டது.
    • இதனால் செல்போன் டார்ச் உதவியுடன் நோயாளிகளுக்கு டாக்டர் சிகிச்சை அளித்தார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் அமைந்துள்ள சித்ரதுர்கா மாவட்டத்தின் மூலகல்முரு தாலுகாவில் அரசு மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. உள்நோயாளிகள் படுக்கை பிரிவுகளுடன் கூடிய இந்த மருத்துவமனைக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    மேலும் சிலர் உள்நோயாளிகளாக அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதற்கிடையே அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், அங்கு இரவுநேரப் பணியில் இருந்த டாக்டர் உள்நோயாளிகளை பரிசோதித்துக் கொண்டிருந்தார். மின்தடை ஏற்பட்ட நிலையில், அங்கே அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளை செல்போனில் உள்ள டார்ச் லைட் உதவியுடன் பரிசோதனை செய்தார்.

    மருத்துவமனை ஊழியர் ஒருவர் செல்போன் டார்ச் லைட்டைப் பிடித்துக் கொண்டு நிற்க, டாக்டர் நோயாளிகளைப் பரிசோதனை செய்யும் காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மின்தடை ஏற்பட்ட நிலையிலும் செல்போன் டார்ச் உதவியுடன் சிகிச்சை அளித்த டாக்டரை பாராட்டியும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

    • இந்த மொபைல் எஸ்30 பிளஸ் ஒ.எஸ். கொண்டிருக்கிறது.
    • இந்த மொபைல் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் முற்றிலும் புதிய நோக்கியா 3210 மொபைல் போன் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் அந்நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்த மொபைலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 2.4 இன்ச் TFT LCD ஸ்கிரீன், QVGA ரெசல்யூஷன், 2MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த மொபைல் எஸ்30 பிளஸ் ஒ.எஸ். கொண்டிருக்கிறது. இது கிளவுட் சார்ந்த செயலிகளை இயக்கும் வசதி கொண்டிருக்கிறது. இதன் மூலம் செய்திகள், வானிலை அப்டேட்கள் மற்றும் யூடியூப் ஷாட்ஸ் உள்ளிட்டவைகளை இயக்க முடியும். 2024 நோக்கியா 3210 மாடல் யுனிசாக் டி107 பிராசஸர், 64எம்.பி. ரேம், 128 எம்.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கிறது.

    கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5, 3.5mm ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ, MP3 பிளேயர் மற்றும் நோக்கியா போன்களில் பிரபலமான ஸ்னேக் கேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் 1450 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டுள்ளது.

    புதிய நோக்கியா 3210 (2024) மாடலின் விலை 89 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 7 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மொபைல் போன் க்ரஞ்ச் பிளாக், Y2K கோல்டு மற்றும் சப்பா புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

    • Nokia 3210 மொபைல் போன் 25 ஆண்டுகளுக்கு பிறகு நவீன வசதிகளுடன் விற்பனைக்கு வர உள்ளது
    • உலகெங்கிலும் உள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த நோக்கியா தயாராகி உள்ளது.

    கடந்த 1999 ம் ஆண்டு Nokia 3210 மொபைல் போன் வெளியானது. இது இந்திய சந்தையில் ரூ.2,999க்கு விற்பனையானது.

    உலகம் முழுவதும் இந்த செல்போன் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து ஸ்மார்ட் போன்கள் வருகையால் இதன் தயாரிப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது.




    தொழில் நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்தாலும் நம் நினைவுகளில் நோக்கியா 3210 ஆழமாக பதிந்துள்ளது. இதன் ஆயுள், எளிமை மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் சின்னமாக, 3210 பலரின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்தது.

    இப்போது, உலகெங்கிலும் உள்ள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த நோக்கியா தயாராகி உள்ளது.

    இந்நிலையில் Nokia 3210 மொபைல் போன் 25 ஆண்டுகளுக்கு பிறகு நவீன வசதிகளுடன் மீண்டும் தற்போது விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.இந்த நோக்கியா போன் - 2024 க்கான புதிய பட்ஜெட் போன் ஆகும் இதில் 4G, Bluetooth, Snake game 2 வசதிகள் உள்ளன.

    • முழு சார்ஜ் செய்தால் ஆறு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும்.
    • இந்த மொபைல் போன் டூயல் 4ஜி, 2ஜி, 3ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.

    ஐடெல் நிறுவனத்தின் சூப்பர் குரு 4ஜி பீச்சர் போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடலை முழு சார்ஜ் செய்தால் ஆறு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்த மொபைல் போன் 2 இன்ச் டிஸ்ப்ளே, டிஜிட்டல் கேமரா, கிளவுட் மூலம் யூடியூப் சேவையை பயன்படுத்தும் வசதி, 123பே (123Pay) அம்சம் கொண்டிருக்கிறது. 123பே அம்சம் மூலம் பயனர்கள் டிஜிட்டல் பேமெண்ட் செய்ய முடியும். இத்துடன் 1000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடலில் டூயல் 4ஜி, 2ஜி மற்றும் 3ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. கீபேட் மொபைல் போன்களில் டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் வசதியை வழங்கும் கிங் வாய்ஸ் அம்சம் இந்த மொபைலில் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் டெட்ரிஸ், 2048 மற்றும் சுடோக்கு போன்ற கேம்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    விலையை பொருத்தவரை ஐடெல் சூப்பர் குரு 4ஜி மாடல் ரூ. 1799-க்கு கிடைக்கிறது. இந்த மொபைல் போன்- பிளாக், புளூ மற்றும் கிரீன் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் மற்றும் ஐடெல் இந்தியா வலைதளங்களில் நடைபெற இருக்கிறது. 

    • புகைப்படங்களை எடுக்க 0.3MP கேமரா, எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • கனெக்டிவிட்டிக்கு 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி, ப்ளூடூத் 4.2 மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் உள்ளது.

    நோக்கியாவின் தாய் நிறுவனம் ஹெச்.எம்.டி. குளோபல், ஹெயின்கென் மற்றும் பொடெகாவுடன் இணைந்து முற்றிலும் புதிய லிமிடெட் எடிஷன் போரிங் போன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மொபைல் போன் நோக்கியா 2660 ப்ளிப் போன் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இதில் 4ஜி காலிங் வசதி, இரண்டு ஸ்கிரீன்கள், டிரான்ஸ்லுசென்ட் டிசைன் உள்ளது. போரிங் போன் மாடலில் 2.8 இன்ச் QVGA ஸ்கிரீன், வெளிப்புறத்தில் 1.77 இன்ச் ஸ்கிரீன் உள்ளது. புகைப்படங்களை எடுக்க 0.3MP கேமரா, எல்.இ.டி. பிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 128MB ரோம், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி, ப்ளூடூத் 4.2 மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது. லிமிடெட் எடிஷன் மாடல் என்பதால் போரிங் போன் மொத்தத்தில் 5 ஆயிரம் யூனிட்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    ×