என் மலர்

  நீங்கள் தேடியது "feature phone"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா பிராண்டிங்கில் புது மொபைல் போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
  • புதிய நோக்கியா 2780 ப்ளிப் மாடல் பழைய நோக்கியா மொபைல் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

  ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா 2780 ப்ளிப் போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. ப்ளிப் போன் என்ற வகையில் இது கிளாம்ஷெல் ரக போல்டபில் போன் கிடையாது. மாறாக நோக்கியாவின் பழைய பானியில் மடிக்கும் வகையில் பட்டன்கள் அடங்கிய மொபைல் போன் ஆகும்.

  புதிய நோக்கியா 2780 ப்ளிப் போனில் 2.7 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே, வெளிப்புறம் 1.77 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 5MP கேமரா, பிக்சட் போக்கஸ் மற்றும் எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மொபைல் போனில் குவாட் கோர் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் 215 சிப்செட், X5 எல்டிஇ மோடெம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மொபைல் போன் 150Mbps டவுன்லோட் வேகத்திற்கான சப்போர்ட் வழங்குகிறது.

  நோக்கியா 2780 ப்ளிப் போன் 4ஜி அழைப்புகளுக்கான சப்போர்ட், ரியல் டைம் டெக்ஸ்டிங், வோல்ட்இ போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 4 ஜிபி ரேம், 512MB ரேம், கைஒஎஸ் 3.1, எப்எம் ரேடியோ, MP3 சப்போர்ட் எப்எம் ரேடியோ, MP3 சப்போர்ட், வைபை, 1450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பேட்டரியை கழற்றி மாற்றும் வசதி உள்ளது.

  புதிய நோக்கியா 2780 ப்ளிப் போன் எப்எம் ரேடியோ சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த மொபைல் போன் ரெட் மற்றும் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 90 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 7 ஆயிரத்து 457 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ பீச்சர் போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
  • முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 8210 4ஜி, 2660 ப்ளிப் போன் மாடல்களுடன் ஜூலை மாத வாக்கில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

  ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் எக்ஸ்பிரஸ் மியூசிக் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ பெயரில் புதிய 4ஜி பீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த பீச்சர் போனில் பில்ட்-இன் வயர்லெஸ் இயர்பட்ஸ் உள்ளது. இதில் புதுமை மிக்க டிசைன் லவுட்ஸ்பீக்கர், ஆடியோ கண்ட்ரோல் பட்டன் மற்றும் பெரிய பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

  நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ போன் நோக்கியா 8210 4ஜி மற்றும் நோக்கியா 2660 ப்ளிப் போன் மாடல்களுடன் ஜூலை மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது. நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ போன் நோக்கியா 5310 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதில் பெரிய பேட்டரி, பிரத்யேக ஆடியோ கண்ட்ரோல் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த போன் அதிநவீன பயனர்களின் இசை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


  இயர்பட்ஸ்-ஐ பயன்படுத்தாத சமயத்தில் அவற்றை போனின் பின்புறம் இருக்கும் ஸ்லைடரின் கீழ் வைத்துக் கொள்ளலாம். இதில் உள்ள இரு ஸ்பீக்கர்கள் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இதனுடன் வழங்கப்படும் இயர்போன்களை மற்ற ஸ்மார்ட்போன்களுடனும் இணைத்து பயன்படுத்தலாம்.

  நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ மாடலில் 1450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வரும் இயர்பட்ஸ்-இல் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த பீச்சர் போன் நீண்ட கால பயன்பாட்டுக்கு உகந்ததை உறுதிப்படுத்தும் வகையில் சோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

  நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ அம்சங்கள்:

  2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே

  0.3MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்

  யுனிசாக் டி107 பிராசஸர்

  4MB ரேம், 48MB / 128MB மெமரி

  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

  S30+ ஒஎஸ்

  பில்ட்-இன் வயர்லெஸ் இயர்பட்ஸ்

  வயர்லெஸ் எப்எம் ரேடியோ, MP3 பிளேயர்

  இரு ஸ்பீக்கர்கள்

  பவர், வால்யூம், மியூசிக் பட்டன்கள்

  ப்ளூடூத் 5.0, யுஎஸ்பி கனெக்‌ஷன்

  மைக்ரோ யுஎஸ்பி 2.0

  1450 எம்ஏஹெச் பேட்டரி

  விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

  நோக்கியா 5710 எக்ஸ்பிரெஸ் ஆடியோ போனின் விலை ரூ. 4 ஆயிரத்து 999 ஆகும். இதன் விற்பனை செப்டம்பர் 19 ஆம் தேதி முன்னணி சில்லறை விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் துவங்குகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு 4ஜி பீச்சர் போன் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
  • இந்த இரு போன்களிலும் லெட்ஸ்சாட் எனும் அம்சம் மூலம் வரம்பற்ற வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பும் வசதி உள்ளது.

  ஐடெல் மேஜிக் X மற்றும் மேஜிக் X பிளே பீச்சர் போன் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இந்த போன்களில் 4ஜி வோல்ட்இ வசதி மற்றும் லெட்ஸ்சாட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதோடு, க்ரூப்களில் இணைந்து கொள்ள முடியும்.

  இரு பீச்சர் போன்களிலும் பூம்பிளே மியூசிக் ஆப் உள்ளது. இதில் ஒரு கோடிக்கும் அதிக பாடல்கள் உள்ளன. இவற்றை இலவசமாக பயன்படுத்தலாம். ஐடெல் மேஜிக் X மற்றும் மேஜிக் X பிளே போன்களில் சுமார் 2 ஆயிரம் காண்டாக்ட்களை சேமித்துக் கொள்ள முடியும். இந்த பீச்சர் போன்களை 12 பிராந்திய மொழிகளில் பயன்படுத்தலாம்.


  ஐடெல் மேஜிக் X மற்றும் மேஜிக் X பிளே அம்சங்கள்:

  ஐடெல் மேஜிக் X பிளே மாடலில் 1.77 இன்ச் 128x160 பிக்சல் TN டிஸ்ப்ளே, மேஜிக் X மாடலில் 2.4 இன்ச் 240x320 TN டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இரு போன்களிலும் டூயல் சிம் வசதி, யுனிசாக் T107 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் விஜிஏ கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது.

  மெமரியை பொருத்தவரை 48MB ரேம், 128 ஜிபி இண்டர்னல் மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது. இரு பீச்சர் போன் மாடல்களிலும் 4ஜி வோல்ட்இ, வயர்லெஸ் எப்எம், ப்ளூடூத் 4.2 கனெக்டிவிட்டி, 3.5 எம்எம் ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது.

  ஐடெல் மேஜிக் X பிளே மற்றும் மேஜிக் X போன்களில் முறையே 1900 எம்ஏஹெச் பேட்டரி, 1200 எம்ஏஹெச் பேட்டரி வழஙஅகப்பட்டு இருக்கிறது.

  விலை விவரங்கள்:

  இந்தியாவில் ஐடெல் மேஜிக் X மிட்நைட் பிளாக் மற்றும் பியல் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐடெல் மேஜிக் X பிளே மிட்நைட் பிளாக் மற்றும் மிண்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 099 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு போன்களும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புது நோக்கியா மொபைல் மாடலை அறிமுகம் செய்தது.
  • முன்னதாக இதே மொபைல் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 8120 4ஜி மொபைல் போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக நோக்கியா 2660 ப்ளிப் மற்றும் 5710 எக்ஸ்பிரஸ் ரேடியோ போன்ற மாடல்களுடன் நோக்கியா 8120 மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.

  புது நோக்கியா 8120 அதன் பழைய ஃபீச்சர் போனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அசத்தல் டிசைன், தலைசிறந்த உறுதித்தன்மை கொண்டிருக்கும் நோக்கியா 8120 மாடல் 4ஜி, வோல்ட்இ கனெக்டிவிட்டி, 2.8 இன்ச் டிஸ்ப்ளே, எளிய யூசர் இண்டர்பேஸ் கொண்டுள்ளது.

  இத்துடன் டார்ச், வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, MP3 பிளேயர், கேம்லாஃப்ட் கேம்கள், ஒரிஜின் டேட்டா கேம்கள் பிரீலோட் செய்யப்பட்டு உள்ளன.


  நோக்கியா 8120 4ஜி அம்சங்கள்:

  - 2.8 இன்ச் 320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே

  - அதிகபட்சம் 1GHz யுனிசாக் T107 சிங்கில் கோர் பிராசஸர்

  - 48MB ரேம்

  - 128MB மெமரி

  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

  - டூயல் சிம் ஸ்லாட்

  - S30+ ஓ.எஸ்.

  - விஜிஏ கேமரா

  - 3.5mm ஹெட்போன் ஜாக்

  - வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, MP3 பிளேயர், டார்ச் லைட்

  - 4ஜி வோல்ட்இஷ ப்ளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி

  - 1450 எம்ஏஹெச் பேட்டரி

  விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

  நோக்கியா 8120 4ஜி மாடல் டார்க் புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 999 ஆகும். விற்பனை அமேசான் மற்றும் நோக்கியா இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  2019 ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.  2019 முதல் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 7.1 சதவிகிதம் வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாக சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.) தெரிவித்திருக்கிறது. இதே காலக்கட்டத்தில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை ஆறு சதவிகிதம் சரிவை சந்தித்து இருக்கும் நிலையில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சி பெற்றிருக்கிறது.

  ஆய்வின் படி மத்திய அரசி்ன் புதிய ஆன்லைன் விதிமுறைகளிலும் ஆன்லைன் சேனல்கள் 19.6 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது தெரியவந்து இருக்கிறது. இதில் சியோமி நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் 8.1 சதவிகிதமும் சாம்சங் நிறுவனம் 4.8 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இறு நிறுவனங்களை தொடர்ந்து விவோ நிறுவனம் மூன்றாவது இடத்திலும், ஒப்போ நிறுவனம் நான்காவது இடத்தில் இருக்கின்றன.   கவர்ச்சிகர சலுகைகள் மற்றும் புதிய அறிமுகம் உள்ளிட்டவற்றின் மூலம் சியோமி, சாம்சங், ரியல்மி மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்களின் ஆன்லைன் விற்பனை 2019 முதல் காலாண்டில் 40.2 சதவிகிதம் வளர்ச்சி பெற்றிருக்கிறது என ஐ.டி.சி. இந்தியா ஆய்வு மேலாளர் உப்சனா ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

  இந்திய சந்தையின் மொத்த மொபைல் போன் விற்பனையில் ஃபீச்சர் போன் மாடல்கள் ஐம்பது சதவிகித பங்குகளை பெற்றிருக்கின்றன. 2019 முதல் காலாண்டில் மொத்தமாக 32.3 கோடி மொபைல் போன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது 42.4 சதவிகிதம் சரிவாகும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூகுள் நிறுவனம் ஃபீச்சர்போன் மாடல்களுக்கென புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை உருவாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Android  ஸ்மார்ட்போன் இயங்குதளங்களில் கூகுளின் ஆண்ட்ராய்டு தளம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆண்ட்ராய்டை தொடர்ந்து ஆப்பிள் ஐ.ஓ.எஸ். இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 

  இவை தவிர ஃபீச்சர்போன்களுக்கென தனி இயங்குதளமாக கை ஓ.எஸ். போன்றவையும் இருக்கின்றன. ஃபீச்சர்போன் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், பெரும் நிறுவனங்கள் இந்த தளத்தில் தங்களது சேவைகளை வழங்க முயற்சிக்கின்றன.

  அந்த வரிசையில், கூகுள் நிறுவனம் புதிதாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை உருவாக்கி வருவது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது. இந்த இயங்குதளம் தொடுதிரை வசதியற்ற மொபைல் போன்களில் சீராக இயங்கும் வகையில் உருவாக்கப்படுகிறது.   புதிய இயங்குதளம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், குரோமியம் வலைதளத்தின் மூலம் இது சார்ந்த விவரங்கள் கசிந்தது. கூகுள் புதிய இயங்குதளம் பற்றிய ஸ்கிரீன்ஷாட்களை வலைதளத்தில் பதிவிட்டு பின் உடனடியாக அதனை நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  எனினும், ஸ்கிரீன்ஷாட்கள் நீக்கப்படும் முன் அவற்றை தனியார் வலைதளம் ஒன்று படம்பிடித்துவிட்டது. அந்த கையில், புதிய இயங்குதளம் ஆண்ட்ராய்டு ஓரியோ பதிப்பில் உருவாக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடுதிரையில்லா சாதனங்களுக்கான இயங்குதளம் உருவாக்க கூகுள் இரண்டு ஆண்டுகள் பழைய இயங்குதளத்தை தேர்வு செய்திருக்கும் நோக்கம் பற்றி எவ்வித தகவலும் இல்லை.

  புதிய இயங்குதளம் இந்த ஆண்டு நடைபெறும் கூகுள் I/O 2019 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் கூகுளின் புதிய இயங்குதளம் கை ஓ.எஸ்.க்கு நேரடி போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் கூகுள் நிறுவனம் இயங்குதளத்திற்கு பெரிய பங்குகளை பெற முடியும்.

  புகைப்படம் நன்றி: 9to5google
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டீடெல் நிறுவனத்தின் மூன்று புதிய மொபைல் போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #mobilephones  டீடெல் நிறுவனம் மூன்று புதிய மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. டி1 வைப், டி1 பல்ஸ் மற்றும் டி1 ஷைன் என அழைக்கப்படும் புதிய ஃபீச்சர்போன்களில் வயர்லெஸ் எஃப்.எம். மற்றும் லைவ் எஃப்.எம். அலாரம் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

  டீடெல் வைப் வைட்/புளு, வைட்/கிரீன், பிளாக்/கிரீன், பிளாக்/பிரவுன் போன்ற நிறங்களிலும், டீடெல் பல்ஸ் மொபைல்போன் பிளாக்/புளு, பிளாக்/கிரீன், பிளாக்/கிரெ, பிளாக்/ரெட் மற்றும் பிளாக்/எல்லோ போன்ற நிறங்களிலும், டீடெல் ஷைன் காஃபி மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

  மூன்று ஃபீச்சர் போன்களும் ஒரு வருட வாரண்டியுடன் கிடைக்கிறது. இவற்றை பயனர்கள் டீடெல் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் வாங்கிட முடியும்.

  புதிய ஃபீச்சர் போன்களில் 1.77 இன்ச் டிஸ்ப்ளே ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க டிஜிட்டல் கேமராக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், டீடெல் வைப் மாடலில் மட்டும் எல்.இ.டி. ஃபிளாஷ்லைட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று மொபைல்களிலும் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 1050 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.  இத்துடன் மேம்படுத்தப்பட்ட பேட்டரி செயல்திறன் வழங்க ஏகுவாக புதிய மொபைலில் பவர் சேவிங் மோட் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஆக்டிவேட் செய்ய 0 பட்டனை அழுத்திப்பிடிக்க வேண்டும். இந்த மொபைல்களில் பல்வேறு  மொழிகளில் இயக்க முடியும் என்பதால், பயனர்கள் தங்களது சொந்த மொழியில் டைப் செய்ய வேண்டும்.

  வயர்லெஸ் எஃப்.எம். அம்சம் வழங்கப்பட்டு இருப்பதால், பயனர்கள் தங்களுக்கு விருப்பமான ரேடியோ நிகழ்ச்சிகளை கேட்டு ரசிக்க முடியும். இத்துடன் லைவ் எஃப்.எம். வசதி வழங்கப்பட்டு இருப்பதால், பயனர்கள் ரேடியோ நிகழ்ச்சிகளை தவற விட வேண்டிய அவசியம் இருக்காது. இத்துடன் ஷெட்யூல்டு ரெக்கார்டிங் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

  புதிய டீடெல் போன்களில் அதிகபட்சம் 800 கான்டாக்ட்களை பதிவு செய்து கொள்ளவும், 100 குறுந்தகவல்களை பதிவு செய்ய முடியும். கூடுதல் அம்சங்களாக ஆட்டோ கால் ரெக்கார்டிங், வீடியோ ரெக்கார்டிங், சவுன்டு ரெக்கார்டிங், டார்ச், ஆடியோ, வீடியோ பிளேயர், பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட கேம்கள், எஸ்.எம்.எஸ். மற்றும் புளூடூத் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

  மூன்று மாடல்களிலும் மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட்கள் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு பிரச்சாரத்தின் அங்கமாக புதிய மொபைல் போன்களில் பேனிக் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை பயன்படுத்தினால் அவசர காலத்தில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு இருக்கும் மொபைல் எண்ணிற்கு தகவல் வழங்கப்படும்.

  இந்தியாவில் டீடெல் டி1 வைப், டி1 பல்ஸ் மற்றும் டி1 ஷைன் மாடல்களின் விலை முறையே ரூ.820, ரூ.830 மற்றும் ரூ.810 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்வதேச ஃபீச்சர்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ஜியோபோன் முதலிடம் பிடித்துள்ளது.
  புதுடெல்லி:

  சர்வதேச ஃபீச்சர்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோபோன் முதலிடம் பிடித்துள்ளது. 2018-ம் ஆண்டிற்கான முதல் காலாண்டில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோபோன் சுமார் 15% பங்குகளை பெற்றிருக்கிறது. 

  ரிலையன்ஸ் ஜியோபோனை தொடர்ந்து நோக்கியா, சாம்சங் மற்றும் டெக்னோ உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோபோன் அமோக விற்பனையை சந்தித்து வரும் நிலையில், நோக்கியாவின் ரீ-என்ட்ரி உள்ளிட்டவை சர்வதேச ஃபீச்சர்போன் சந்தையின் 38% வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

  சமீபத்திய தகவல்கள் கவுன்ட்டர்பாயின்ட் நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 2018 முதல் காலாண்டு நிலவரப்படி நோக்கியா ஹெச்எம்டி நிறுவனம் 14% பங்குகளையும், ஐடெல் நிறுவனம் 13% பங்குகளையும் சாம்சங், டெக்னோ நிறுவனங்கள் 6% பங்குகளையும் பெற்றிருக்கின்றன.  ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் சுமார் 50 கோடி ஃபீச்சர்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர் எண்ணிக்கையை பொருத்து சர்வதேச அளவில் ஃபீச்சர்போன்களுக்கான வரவேற்பு இன்றும் அதிகமாகவே இருக்கிறது. என கவுன்ட்டர்பாயின்ட் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் சர்வதேச ஃபீச்சர்போன் விற்பனையில் 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய ஃபீச்சர்போன் விற்பனை மட்டும் 43% பங்குகளை பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

  சில ஃபீச்சர்போன் பயனர்கள் டிஜிட்டல், பொருளாதாரம் மற்றும் போதுமான கல்வியறிவு இல்லாதது போன்ற காரணங்களால் விலை அதிகமாக விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாத சூழல் நிலவுவதாக ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  ×