search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    2000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் புதிய ஃபீச்சர் போன் அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ
    X

    2000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் புதிய ஃபீச்சர் போன் அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ

    • அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஜியோபாரத் B1 சீரிசின் கீழ் பட்டியலிடப்பட்டு உள்ளது.
    • புதிய ஃபீச்சர் போன் மாடலில் பெரிய டிஸ்ப்ளே, ஜியோபே செயலிக்கான சப்போர்ட் உள்ளது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் ஜியோபாரத் B1 சீரிஸ் ஃபீச்சர் போன் மாடலினை அறிமுகம் செய்தது. புதிய ஃபீச்சர் போன் ஜியோபாரத் V2 மற்றும் K1 கார்பன் மாடல்கள் வரிசையில் இணைந்துள்ளது. இந்த ஃபீச்சர் போன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஜியோபாரத் B1 சீரிசின் கீழ் பட்டியலிடப்பட்டு உள்ளது.

    அதன்படி இதே சீரிசில் மேலும் சில மாடல்கள் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த ஃபீச்சர் போன் மாடலில் பெரிய டிஸ்ப்ளே, ஜியோபே செயலிக்கான சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை ஜியோபாரத் B1 மாடலில் 2.4 இன்ச் டிஸ்ப்ளே, மியூசிக் / வீடியோக்களை இயக்கும் வசதி, ஜியோசினிமா, ஜியோ சாவன் உள்ளிட்ட செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளது. ஜியோ சாவன் செயலியின் மூலம் அதிகபட்சம் 8 கோடிக்கும் அதிகமான பாடல்களை கேட்க முடியும். இத்துடன் பில்ட்-இன் எஃப்.எம். ரேடியோ, 23 மொழிகளுக்கான வசதி வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த ஃபீச்சர் போன் மாடலில் ஜியோபே செயலி கொண்டு யு.பி.ஐ. பேமண்ட்களை மேற்கொள்ள முடியும். இத்துடன் கேமரா மூலம் கியூ.ஆர். பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஜியோபாரத் B1 மாடலில் பின்புறம் கேமரா சென்சார் மற்றும் டார்ச் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனில் 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    ஜியோபாரத் B1 மாடல் பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,299 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளம் மற்றும் ஜியோ ஸ்டோர்களில் நடைபெறுகிறது. ஜியோபாரத் B1 மாடலில் புதிய மற்றும் பழைய ஜியோ சிம்களை பயன்படுத்த முடியும். ஜியோபாரத் மொபைலின் அனைத்து பலன்களையும் பெற பயனர்கள் ரூ. 123 அல்லது அதற்கும் அதிக தொகை செலுத்தி ரிசார்ஜ் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

    Next Story
    ×