search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Infinix"

    • புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. நோட் 40X 5ஜி மாடலை தொடர்ந்து புதிய ஹாட் சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், அதிகபட்சம் 8ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    மெமரியை பொருத்தவரை 4ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த எக்ஸ் ஓஎஸ் 14.5 வழங்கப்பட்டு இருக்கிறது.

    பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ள இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3 மற்றும் யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    வைப்ரண்ட் புளூ, ஸ்லீக் பிளாக், சேஜ் கிரீன் மற்றும் டிரீமி பர்பில் நிறங்களில் கிடைக்கும் புதிய ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை செப்டம்பர் 9 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு துவங்குகிறது. 

    • இந்த ஸ்மார்ட்போன் 108MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7020 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    இன்பினிக்ஸ் நிறுவனத்தின்அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் FHD+ 120Hz டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 7020 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, OIS, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஆல்-ரவுண்ட் பாஸ்ட்சார்ஜ் 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் வயர்லெஸ் மேக்னெடிக் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

    கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7020 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி ஸ்மார்ட்போன் அப்சிடியன் பிளாக் மற்றும் டைட்டன் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூன் 26 ஆம் தேதி துவங்குகிறது. 

    • நோட் 40 ப்ரோபிளஸ் 100W wired பாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும்.
    • ஸ்டேன்டர்டு வெர்சன் செல்போன்களுக்கு பயன்படுத்தப்படும் ஹெட்செட்களை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இன்பினிக்ஸ் நிறுவனம் நோட் 40 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. நோட் 40, நோட் 40 5ஜி, நோட் 40 ப்ரோ, நோட் 40 ப்ரோ 5ஜி மற்றும் நோட் 40 பிரோ பிளஸ் 5ஜி ஆகிய புதிய டிசைன் கொண்ட செல்போன்களை வெளியிட்டுள்ளது.

    இந்த போன்கள் பிஎம்டபிள்யூ குரூப் உடன் இணைந்து தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில்வர் பினிஷஸ், வெர்டிகிள் ரிட்ஜெஸ், ரெட் மற்றும் ப்ளூ கலருடன் வெளியாகி உள்ளது. இந்த செல்போன்கள் ஸ்டேன்டர்டு வெர்சன் செல்போன்களுக்கு பயன்படுத்தப்படும் ஹெட்செட்களை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இன்பினிக்ஸ் நோட் 40 சுமார் 17,400 ரூபாய் அளவில் விற்பனையாகிறது. நோட் 40 5ஜி 21,600 ரூபாய்க்கும், நோட் 40 ப்ரோ (4ஜி) 23,300 ரூபாய்க்கும், நோட் 40 ப்ரோ (5ஜி) 25,800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    இதில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் உலகளவில் தற்போது மார்க்கெட்டில் கிடைக்கும் அனைத்து ஹெட்போன்களையும் இந்த புதிய டிசைன் செல்போன்களில் பயன்படுத்தலாம்.

    நோட் 40 சீரிஸ் போன்கள் இந்த வருடம் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட போன்களில் இருந்து எந்த மாற்றமும் பெறவில்லை. அவற்றின் டிசைன் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. இது, விங் ஆஃப் ஸ்பீடு டிசைன் உடன் சில்வர் கலரை கொண்டுள்ளது.

    இன்பினிக்ஸ் நோட் 40, நோட் 40 ப்ரோ MediaTek Helio G99 SoCs-ஐ கொண்டுள்ளது. நோட் 40 மற்றும் நோட் ப்ரோ போன்கள் 5,000mAh பேட்டரிகளை கொண்டுள்ளது. ப்ரோ பிளஸ் 4,600mAh பேட்டரியை கொண்டுள்ளது. நோட் 40 ப்ரோபிளஸ் 100W wired பாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும்.

    • பிரைமரி கேமராவுடன் மூன்று கேமரா சென்சார்கள் உள்ளன.
    • மீடியாடெக் டிமென்சிட்டி 7020 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

    இன்பினிக்ஸ் நிறுவனத்தின் நோட் 40 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் நோட் 40 ப்ரோ 5ஜி மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இரு மாடல்களிலும் மீடியாடெக் டிமென்சிட்டி 7020 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    இத்துடன் இன்பின்க்ஸ் நிறுவனத்தின் சொந்த சீட்டா X1 பவர் மேனேஜ்மெண்ட் சிப் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் கர்வ்டு AMOLED டிஸ்ப்ளே, 108MP பிரைமரி கேமராவுடன் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.

     


    இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 45 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் மாடலில் 4600 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.

    முன்னதாக இரு மாடல்களும் மார்ச் மாத வாக்கில் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அப்சிடியன் பிளாக் மற்றும் வின்டேஜ் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி மாடலின் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வின்டேஜ் கிரீன் மற்றும் டைட்டன் கோல்டன் நிறங்களில் கிடைக்கிறது. இரு மாடல்களும் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

    • புதிய ஸ்மார்ட்போன்களில் சீட்டா X1 பிராசஸர் வழங்கப்படுகிறது.
    • நோட் 40 ப்ரோ பிளஸ் மாடலில் 100 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    இன்பினிக்ஸ் நிறுவனம் தனது நோட் 40 ப்ரோ 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. முன்னதாக இவை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதிய ஸ்மார்ட்போனில் ஆல்-ரவுண்ட் ஃபாஸ்ட்சார்ஜ் 2.0 தொழில்நுட்பம் வழங்கப்பட இருப்பதாக இன்பினிக்ஸ் அறிவித்து இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் 20 வாட் வயர்லெஸ் மேக் சார்ஜிங், வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற வசதிகளை வழங்குகிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பின்புறம் கேஸ் வகையில் சார்ஜ் ஏற்றும் மேக்பவர் சாதனம் வழங்கப்படும் என தெரிகிறது.

     


    நோட் 40 ப்ரோ மற்றும் நோட் 40 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களில் இன்பினிக்ஸ் சொந்தமாக உருவாக்கிய முதல் பிராசஸர்- சீட்டா X1 கொண்டிருக்கிறது. இவற்றில் ப்ரோ பிளஸ் மாடலில் 100 வாட் மல்டி-ஸ்பீடு ஃபாஸ்ட் சார்ஜ் வசதி உள்ளது. இது ஸ்மார்ட்போனில் உள்ள 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரியை ஹைப்பர் மோடில் எட்டு நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடும்.

    இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி மாடலில் உள்ள 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஸ்மார்ட்போனை 26 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிடும். இரு மாடல்களிலும் 6.78 இன்ச் FHD+ 3D கர்வ்டு 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 108MP பிரைமரி கேமரா, OIS, லாஸ்லெஸ் சூப்பர்ஜூம் கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த எக்ஸ் ஒ.எஸ். 14 வழங்கப்படுகிறது.

    புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்துடன் ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

    • இந்த ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமராவுடன் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டு உள்ளது.
    • இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் பிரிவு மாடல் ஆகும். இதில் 6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் டிசைன், 8MP செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த பிரிவில் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் வசதிகள் வழங்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி36 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 4 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம், 64 ஜி.பி. மெமரி, 50MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.


    இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 அம்சங்கள்:

    6.6 இன்ச் 1612x720 பிக்சல், HD+ ரெசல்யூஷன், 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 பிராசஸர்

    IMG PowerVR GE 8320 GPU

    4 ஜி.பி. ரேம்

    64 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் சார்ந்த எக்ஸ்.ஒஎஸ். 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ், குவாட் ரிங் எல்.இ.டி. ஃபிளாஷ்

    8MP செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 மாடல் டிம்பர் பிளாக், ஷைனி கோல்டு, கேலக்ஸி வைட் மற்றும் ரெயின்போ புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஜனவரி 15-ம் தேதி துவங்குகிறது. இத்துடன் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் பரோடா வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

    • இந்த ஸ்மார்ட்போனில் 50MP கேமரா வழங்கப்படுகிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஸ்மார்ட் 8 மாடலில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதில் 13MP கேமரா மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.

    இதில் 6.6 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், இன்டராக்டிவ் மேஜிக் ரிங், யுனிசாக் டி606 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 4 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம், 50MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ் வழங்கப்படுகிறது. இதன் கேமராவுடன் போர்டிரெயிட் மோட் மற்றும் ஏ.ஆர். ஷாட் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

     


    இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 மாடலின் பின்புறம் ரிங் எல்.இ.டி. ஃபிளாஷ் உள்ளது. இத்துடன் 8MP செல்ஃபி கேமரா மற்றும் முன்புறம் ஃபிளாஷ் லைட் வழங்கப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த எக்ஸ் ஒ.எஸ். 13, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ரெயின்போ புளூ, ஷைனி பிளாக், டிம்பர் பிளாக் மற்றும் கேலக்ஸி வைட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. மேலும் விலை ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது. 

    • இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் கிடைக்கிறது.
    • ஸ்மார்ட் சீரிசில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட்-இல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் 8 ஹெச்.டி. ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்மார்ட் சீரிசில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, பன்ச் ஹோல் ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது.

    இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. இதன் பின்புறம் டிம்பர் டெக்ஸ்ச்சர் ஃபினிஷ், மேஜிக் ரிங் வழங்கப்படுகிறது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஸ்மார்ட் 8 ஹெச்.டி. யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

     


    இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஹெச்.டி. அம்சங்கள்:

    6.6 இன்ச் 1612x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன்

    ஆக்டாகோர் யுனிசாக் டி606 பிராசஸர்

    மாலி G57 MP1 GPU

    3 ஜி.பி. ரேம் (3 ஜி.பி. விர்ச்சுவல் ரேம்)

    64 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் சார்ந்த எக்ஸ்.ஒஎஸ். 13

    டூயல் சிம் ஸ்லாட்

    13MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ்

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஹெச்.டி. ஸ்மார்ட்போன் டிம்பர் பிளாக், ஷைனி கோல்டு, கேலக்ஸி வைட் மற்றும் க்ரிஸ்டல் கிரீன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 6 ஆயிரத்து 299 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் டிசம்பர் 13-ம் தேதி துவங்குகிறது.

    இத்துடன் ஆக்சிஸ் வங்கி கார்டு பயன்படுத்தும் போது பத்து சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 5 ஆயிரத்து 669 என்று மாறிவிடும். 

    • இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 13 கொண்டிருக்கிறது.
    • இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 108MP பிரைமரி கேமரா சென்சார் கொண்டிருக்கிறது.

    இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய GT 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.67 இன்ச் FHD+ 120Hz 10-பிட் AMOLED ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 8050 பிராசஸர், 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சைபர் மெக்கா டிசைன் மற்றும் எல்இடி லைட் எபெக்ட்களை கொண்டிருக்கும் புதிய இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ, ஸ்மார்ட்போனில் இசைக்கப்படும் பாடல் மற்றும் நோட்டிபிகேஷன்களுக்கு ஏற்ப எல்இடி-க்கள் ஒளிரும். இத்துடன் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 13 வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஒரு ஒஎஸ் அப்டேட், இரண்டு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.

    இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ அம்சங்கள்:

    6.67 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 10-பிட் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 8050 பிராசஸர்

    ARM G77 MC9 GPU

    8 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    108MP பிரைமரி கேமரா

    2MP மேக்ரோ லென்ஸ்

    2MP டெப்த் சென்சார்

    32MP செல்பி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    ஹை-ரெஸ் ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை

    ப்ளூடூத் 5.2

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    45 வாட் பிடி 3.0 பாஸ்ட் சார்ஜிங்

    இந்திய சந்தையில் புதிய இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ ஸ்மார்ட்போன் சைபர் பிளாக் மற்றும் மிரேஜ் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலுக்கான டீசர் வெளியாகி இருக்கிறது.
    • புதிய இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ மாடல் வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கிறது.

    இன்பினிக்ஸ் நிறுவனம் தனது GT 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்பதிவு இந்தியாவில் ஆகஸ்ட் 3-ம் தேதி துவங்கும் என்று அறிவித்து இருக்கிறது. மேலும் முன்பதிவு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முந்தைய தகவல்களின் படி, இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் சைபர் மெக்கா டிசைன் வழங்கப்படும் என்றும் இது எதிர்கால தோற்றம், வித்தியாசமாக காட்சியளிக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் டிரான்ஸ்பேரன்ட் போட்டோ க்ரோமேடிக் ரியர் பேனல் டிசைன் வழங்கப்படுகிறது.

    இதுவரை உருவாக்கியதிலேயே சக்திவாய்ந்த மெஷின்களில் ஒன்றாக GT சீரிஸ் இருக்கும் என்று இன்பினிக்ஸ் தெரிவித்து உள்ளது. இத்துடன் விளம்பரம் இல்லாத ஒஎஸ் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் இதர விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட்டு விடும். இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

     

    முன்பதிவு சலுகைகள்:

    - முதல் 5 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு யுனிவர்சல் ஷோல்டர் ட்ரிகர், கேமிங் ஃபிங்கர் ஸ்லீவ், கார்பன் பாக்ஸ் உள்ளிட்டவை அடங்கிய ப்ரோ கேமிங் கிட் வழங்கப்படுகிறது.

    - ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி அல்லது எக்சேன்ஜ் முறையில் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி

    - ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகை

    இன்பினிக்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று (ஜூலை 18) துவங்கும் முதல் விற்பனையை ஒட்டி சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    விலை மற்றும் சலுகை விவரங்கள்:

    இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன் நைட் பிளாக் மற்றும் அரோரா புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனினை வாங்குவோர் ஆக்சிஸ் வங்கி கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் மாத தவணை முறை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி இரு வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 11 ஆயிரத்து 499 மற்றும் ரூ. 12 ஆயிரத்து 499 என்று மாறி விடும்.

     

    இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி அம்சங்கள்:

    6.78 இன்ச் 2460x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீனஅ

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர்

    மாலி G57 MC2 GPU

    4 ஜிபி, 8 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆன்ட்ராய்டு 13 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, குவாட் எல்இடி ஃபிலாஷ், ஏஐ லென்ஸ்

    8MP செல்ஃபி கேமரா, டூயல் எல்இடி ஃபிலாஷ்

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • இந்திய சந்தையில் 26 ஜிபி ரேம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
    • புதிய ஸ்மார்ட்போன் இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம்.

    ஸ்மார்ட்போன்களில் 8 ஜிபி ரேம் வழங்கும் போக்கு, காலாவதியாகி விட்டது. விரைவில் 16 ஜிபி ரேம் கொண்ட மாடல்களும் இந்த வரிசையில் இணைந்துவிடும் என்று தெரிகிறது. சமீபத்தில் ஒபிளஸ் குழுமம் (ஒப்போ, ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி) 24 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது.

    எனினும், இந்த நிறுவனங்களுக்கு முன்பாகவே ரெட் மேஜிக் 8S ப்ரோ ஸ்மார்ட்போன் 24 ஜிபி ரேம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை பெற்று அசத்தியது. அதிகபட்ச ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் எனும் பெருமையை ரெட் மேஜிக் மாடல் விரைவில் இழக்கும் என்று தெரிகிறது. இன்பினிக்ஸ் நிறுவனம் அதிகபட்சமாக 26 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

     

    புதிய ஸ்மார்ட்போன் இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதுபற்றிய தகவலை பரல் குக்லானி தெரிவித்துள்ளார். மேலும் இந்திய சந்தையில் 26 ஜிபி ரேம் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை இந்த மாடல் பெறும் என்றும்தெரிவித்துள்ளார். இந்த ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக இந்தியாவிலும், அதன்பிறகு சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் புதிய GT கேமிங் சீரிசில் இடம்பெற்று இருக்கும். இதே சீரிசில் GT 10 ப்ரோ பிளஸ் மாடலும் இடம்பெற்று இருக்கிறது. எனினும், இந்த மாடல் இநதிய சந்தையில் விற்பனைக்கு வராது என்று கூறப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை இன்பினிக்ஸ் GT 10 ப்ரோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 8050 பிராசஸர் வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் 7000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் என்றும், இதில் 260 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதே ஸ்மார்ட்போனின் 160வாட் சார்ஜிங் கொண்ட வேரியன்ட் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. புகைப்படங்களை எடுக்க 100MP பிரைமரி கேமரா, இரண்டு 8MP லென்ஸ் வழங்கப்படலாம்.

    ×