search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    பட்ஜெட் விலையில் இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த இன்ஃபினிக்ஸ்
    X

    பட்ஜெட் விலையில் இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த இன்ஃபினிக்ஸ்

    • இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஜீரோ 5ஜி 2023 மாடல்களில் அதிகபட்சம் 5 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி டர்போ 2023 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன்களை ஜீரோ சீரிசில் அறிமுகம் செய்தது. புதிய இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 மற்றும் ஜீரோ 5ஜி டர்போ 2023 மாடல்களில் 6.78 இன்ச் FHD+ 120Hz LCD ஸ்கிரீன், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 5 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    எனினும், இதன் ஸ்டாண்டர்டு வெர்ஷனில் மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர், 128 ஜிபி மெமரியும் டர்போ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களிலும் 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் மற்றும் மேக்ரோ கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.



    இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 மற்றும் ஜீரோ 5ஜி 2023 டர்போ அம்சங்கள்:

    6.78 இன்ச் 2460x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஜீரோ 5ஜி 2023 - ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 920 பிராசஸர்

    மாலி G-68 MC4 GPU

    ஜீரோ 5ஜி 2023 டர்போ - ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்

    மாலி G68 MC4 GPU

    8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி (ஜீரோ 5ஜி 2023)

    8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி (ஜீரோ 5ஜி 2023 டர்போ)

    ஆண்ட்ராய்டு 12 மற்றும் எக்ஸ்ஒஎஸ் 12

    டூயல் சிம்

    50MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் மற்றும் மேக்ரோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.1

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி 2023 மற்றும் ஜீரோ 5ஜி 2023 டர்போ மாடல்கள் பியலி வைட், கோரல் ஆரஞ்சு மற்றும் சப்மரைனர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 17 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×