என் மலர்

  நீங்கள் தேடியது "Smartphone"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 மாடல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • அவ்வப்போது ஐபோன் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

  சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி ரிலையன்ஸ் டிஜிட்டல் இ ஸ்டோரில் ஐபோன் 13 வாங்குவோருக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 13 பேஸ் வேரியண்ட் விலை தற்போது ரூ. 72 ஆயிரத்து 990 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு கூடுதலாக ரூ. 4 ஆயிரம் கேஷ்பேக் மற்றும் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

  ஐபோன் 12 பேஸ் வேரியண்ட் தற்போது ரூ. 53 ஆயிரத்து 300 விலையிலும், ஐபோன் 11 (128 ஜிபி) ரூ. 47 ஆயிரத்து 990 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 13 சீரிசில் - ஐபோன் 13 மினி, ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.


  ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா 2532x1170 பிக்சல் XDR OLED டிஸ்ப்ளே, ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 13 மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி என மூன்று வித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

  அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஐபோன் 14 மாடலில் 6.1 இன்ச் அளவிலும், ஐபோன் 14 மேக்ஸ் மாடல் 6.7 இன்ச், ஐபோன் 14 ப்ரோ 6.1 இன்ச் அளவிலும், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஐபோன் 13 ப்ரோ மாடல்களுடன் ஒப்பிடும் போது ஐபோன் 14 ப்ரோ மாடல்கள் விலையை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஐகூ நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
  • இது Z6 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.

  ஐகூ நிறுவனம் முற்றிலும் புதிய Z6 மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரிஜினல் Z6 ஸ்மார்ட்போனை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்த மாடல் அதிவேக பாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

  CNMO வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையின் படி சீன நிறுவனமான ஐகூ தனது Z6 மாடலின் புது வெர்ஷனை அறிமுகம் செய்ய இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறது. இது முற்றிலும் புது மாடலாக இருக்குமா அல்லது பேஸ் Z6 ஸ்மார்ட்போனின் ரிப்ரெஷ் செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ Z6 மாடலில் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 6.44 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருந்தது.


  அந்த வகையில், புது Z6 மாடல் 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்றும் LCD பேனல் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படலாம். இவை தவிர இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 சீரிஸ் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இண்டர்னல் மெமரி வழங்கப்படுகிறது.

  புதிய ஐகூ Z6 மாடலின் ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. புது Z6 வேரியண்ட் பற்றி ஐகூ சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடல் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகலாம். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது.
  • நோக்கியா நிறுவனத்துடனான காப்புரிமை விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

  ஸ்மார்ட்போன்களில் வழங்கி இருக்கும் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களுக்கு முறையான உரிமம் வைத்திருக்காத காரணத்தால் ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களுக்கு எதிராக ஜெர்மனி நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. வழக்கில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு மூலம் பிரச்சினையை முடித்துக் கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. எனினும், இதற்கு இருதரப்பும் உடன்படவில்லை.


  இதை அடுத்து ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களை ஜெர்மனியில் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஒப்போ நிறுவன வலைதளத்தில், சாதனம் பற்றிய விவரம் எங்களின் வலைதளத்தில் இல்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் தொடர்ந்து ஒப்போ சாதனங்களை பயன்படுத்தலாமா, அப்டேட் மற்றும் சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுமா என்ற கேள்வி ஒப்போவிடம் எழுப்பப்பட்டது.


  இதற்கு பதில் அளித்த ஒப்போ நிறுவனம், ஒப்போ சாதனங்களை எந்த விதமான தடையும் இன்றி தொடர்ந்து பயன்படுத்தலாம். நிச்சயம் உங்களுக்கான எதிர்கால அப்டேட்கள் வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறது. ஸ்மார்ட்போன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இயர்போன், சார்ஜர் போன்ற அக்சஸரீக்களை ஒப்போ நிறுவனம் தொடர்ந்து விற்பனை செய்ய முடியும். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி புதிய மோட்டோ G சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
  • புதிய மோட்டோ G சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

  மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மோட்டோ G32 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.5 இன்ச் FHD+LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் உள்ளது.

  இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வழங்கப்படும் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி பேட்ச்கள் வழங்கப்படும் என்றும் மோட்டோரோலா அறிவித்து இருக்கிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் மோட்டோ G32 ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு+டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா கொண்டுள்ளது.


  மோட்டோ G32 அம்சங்கள்:

  - 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ மேக்ஸ்விஷன் 20:9 LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

  - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 680 6nm பிராசஸர்

  - அட்ரினோ 610 GPU

  - 4 ஜிபி LPDDR4X ரேம்

  - 64 ஜிபி மெமரி

  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

  - ஆண்ட்ராய்டு 12 மற்றும் மை யுஎக்ஸ்

  - ஹைப்ரிட் டூயல் சிம்

  - 50MP பிரைமரி கேமரா, f/1.8

  - 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2, டெப்த் அம்சம்

  - 2MP மேக்ரோ கேமரா, f/2.4, LED பிளாஷ்

  - 16MP செல்பி கேமரா, f/2.2

  - 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், எப்எம் ரேடியோ

  - பக்கவாட்டில் கைரேகை சென்சார்

  - ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)

  - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

  - யுஎஸ்பி டைப் சி

  - 5000 எம்ஏஹெச் பேட்டரி

  - 30 வாட் டர்போ சார்ஜிங்

  விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

  புதிய மோட்டோ G32 ஸ்மார்ட்போன் சேடின் சில்வர் மற்றும் மினரல் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி துவங்குகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி மாத தவணை முறையில் வாங்கும் போது ரூ. 1,250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் ஓ.எஸ். கொண்டிருக்கிறது.
  • புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் 2 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டுள்ளது.

  இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்மார்ட் 6 HD ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது இன்பினிக்ஸ் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 6.6 இன்ச் HD பிளஸ் ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜிபி ரேம், 2 ஜிபி விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

  புகைப்படங்களை எடுக்க 8MP பிரைமரி கேமரா, 5MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 ஜிபி மெமரி உள்ளது. இதில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை. மாறாக ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.


  இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 HD அம்சங்கள்:

  - 6.6 இன்ச் 1600x720 பிக்சல் HD+ ஸ்கிரீன், 500 நிட்ஸ் பிரைட்னஸ்

  - பாண்டா MN228 கிளாஸ் பாதுகாப்பு

  - 2GHz குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்

  - IMG PowerVR GE-class GPU

  - 2 ஜிபி LPDDR4X ரேம் (+ 2 ஜிபி விர்ச்சுவல் ரேம்)

  - 32 ஜிபி மெமரி

  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

  - ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் மற்றும் XOS 7.6

  - டூயல் சிம் ஸ்லாட்

  - 8MP பிரைமரி கேமரா, f/2.0, டூயல் எல்இடி பிளாஷ்

  - 5MP செல்பி கேமரா, எல்இடி பிளாஷ்

  - பேஸ் அன்லாக்

  - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

  - மைக்ரோ யுஎஸ்பி

  - 5000 எம்ஏஹெச் பேட்டரி

  - 10 வாட் சார்ஜிங்

  இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 HD ஸ்மார்ட்போன் அக்வா ஸ்கை, போர்ஸ் பிளாக் மற்றும் ஒரிஜின் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 6 ஆயிரத்து 799 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஆகஸ்ட் 12 ஆம் தேதி ப்ளிப்கார்ட் தளத்தில் துவங்க இருக்கிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A23 ஸ்மார்ட்போனினை ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது.
  • இதே ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

  சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A23 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருப்பதாக பல முறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில் வெளியான தகவல்களிலும் கேலக்ஸி A23 5ஜி மாடல் விவரங்கள் லீக் ஆகின. இதைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A23 5ஜி மாடலை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிட்டு இருக்கிறது.

  இதன் மூலம் புதிய சாம்சங் கேலக்ஸி A23 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டன. எனினும், இதன் விலை மற்றும் விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. புதிய கேலக்ஸி A23 5ஜி மாடலின் அம்சங்கள் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆன விவரங்களை உண்மையாக்கும் வகையிலேயே உள்ளது.


  சாம்சங் கேலக்ஸி A23 5ஜி அம்சங்கள்:

  - 6.6 இன்ச் FHD+ இன்பினிட்டி வி டிஸ்ப்ளே

  - குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

  - 4/6/8 ஜிபி ரேம்

  - 64/128 ஜிபி மெமரி

  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

  - 50MP பிரைமரி கேமரா

  - 5MP அல்ட்ரா வைடு கேமரா

  - 2MP டெப்த் கேமரா

  - 2MP மேக்ரோ லென்ஸ்

  - 8MP செல்பி கேமரா

  - ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஒன் யு.ஐ. 4.1

  - 5000 எம்ஏஹெச் பேட்டரி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புது சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
  • தற்போது 50 லட்சம் பேர் ரியல்மி 5ஜி சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

  ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி 9i 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தி இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி ரியல்மி 9i 5ஜி மாடல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ரியல்மி 9i 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருந்தது.


  ரியல்மி 7 சீரிஸ் மாடலில் மிரர் டிசைன், ரியல்மி 8 சீரிசில் டைனமிக் லைட் டிசைன், ரியல்மி 9 சீரிசில் ரிப்பில் ஹாலோகிராபிக் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வரிசையில், ரியல்மி 9i 5ஜி மாடலில் லேசர் லைட் டிசைன் வழங்கப்பட இருக்கிறது. இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர் வழங்கப்படுகிறது. ஏற்கனவே இதே பிராசஸர் கொண்டு ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  புதிய 5ஜி போன் வெளியீட்டை உணர்த்தும் டீசரை ரியல்மி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ரியல்மி 9i 5ஜி போன் மூன்று கேமரா சென்சார்கள், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என உறுதியாகி விட்டது. இத்துடன் FHD+ LCD ஸ்கிரீன், 5000 mAh பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சியோமி நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலை குறைப்பு வழங்கப்படுகிறது.
  • இவை ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது.

  சியோமி 12 ப்ரோ, சியோமி 11T ப்ரோ மற்றும் ரெட்மி K50i 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. சுதந்திர தினம் மற்றும் ராக்கி பண்டிகையை முன்னிட்டு இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடி சியோமி 11 லைட் NE, ரெட்மி 10 பிரைம், ரெட்மி 10 பவர், ரெட்மி நோட் 11 மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் போன்ற மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது.

  இந்த சலுகைகளை இன்று (ஆகஸ்ட் 06) துவங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பெற முடியும். சியோமி நடத்தும் சிறப்பு விற்பனை அமேசான் கிரேட் பிரீடம் பெஸ்டிவல் சேல் உடன் நடைபெறுகிறது. இந்த விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பலன்கள் வழங்கப்படுகிறது.


  இந்திய சந்தையில் ரூ. 62 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 49 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது. இந்தியாவில் சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ. 50 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் போது ரூ. 13 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி உடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

  சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி K50i 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 24 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 25 ஆயிரத்து 999 மற்றும் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 28 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


  ரூ. 39 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி 11T ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 29 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் ரூ. 10 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 1,250 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

  இதே போன்று ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ. 19 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை தற்போது ரூ. 20 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நத்திங் நிறுவனம் போன் (1) லைட் பெயரில் புது ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • மேலும் புது ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றியும் தகவல் வெளியானது.

  நத்திங் போன் (1) மாடலின் வெளியீட்டை தொடர்ந்து நத்திங் போன் (1) லைட் பெயரில் புது ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வந்தது. நத்திங் போன் (1) மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் க்ளிம்ப் இண்டர்பேஸ் எல்இடி லைட்கள், வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் புதிய லைட் வெர்ஷனில் இடம்பெறாது என்றும் கூறப்பட்டது.

  இந்த நிலையில், நத்திங் நிறுவன தலைமை செயல் அதிகாரி கால் பெய் புது ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி வெளியான தகவல்களில் உண்மை இல்லை என தெரிவித்து இருக்கிறார். நத்திங் போன் (1) லைட் பற்றி ட்விட்டரில் வெளியாகி இருந்த தகவலை குறிப்பிட்டு, அது போலி தகவல் என கார்ல் பெய் தெரிவித்தார்.


  எனினும், கார்ல் பெய் ட்விட்டர் தகவலில் நத்திங் போன் (1) லைட் உருவாக்கப்படுவதே பொய்யான தகவலா அல்லது அதில் க்ளிம்ப் இண்டர்பேஸ் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்கள் நீக்கப்பட்டு இருக்கும் என்ற தகவலில் உண்மை இல்லையா என்பது தெளிவற்ற நிலையிலேயே உள்ளது.

  நத்திங் போன் (1) மாடலில் டிசைன் கோளாறு, ஹார்டுவேர் பிரச்சினைகள், தரத்தில் குறைபாடு என ஏராளமான குற்றச்சாட்டை பயனர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் சமீபத்தில் வெளியான தகவலில் நத்திங் நிறுவனம் இரண்டு புதிய வயர்லெஸ் இயர்போன் மாடல்களை உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. இரு இயர்போன்களில் ஒன்று இயர் (1) மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர் கொண்டிருக்கிறது.
  • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

  சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனை பயனர்கள் ரூ. 2 ஆயிரம் குறைந்த விலையில் வாங்கிட முடியும். இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

  இந்த ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 48MP பிரைமரி கேமரா, 8MP செல்பி கேமரா, மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், இருவித ரேம் மற்றும் மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 15 வாட் சார்ஜிங் கொண்டுள்ளது.

  புதிய விலை விவரம்:

  சாம்சங் கேலக்ஸி A22 5ஜி 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 17 ஆயிரத்து 999

  சாம்சங் கேலக்ஸி A22 5ஜி 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 19 ஆயிரத்து 999


  மாற்றப்பட்ட புதிய விலை சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமான சமயத்தில் சாம்சங் கேலக்ஸி A22 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் கிரே, மிண்ட் மற்றும் வைலட் நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

  சாம்சங் கேலக்ஸி A22 5ஜி அம்சங்கள்:

  - 6.6 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

  - ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர்

  - 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

  - 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி

  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

  - 48MP பிரைமரி கேமரா

  - 5MP அல்ட்ரா வைடு கேமரா

  - 2MP டெப்த் சென்சார்

  - 8MP செல்பி கேமரா

  - 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்

  - யுஎஸ்பி டைப் சி போர்ட்

  - பக்கவாட்டில் கைரேகை சென்சார்

  - 5000 எம்ஏஹெச் பேட்டரி

  - 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் மாடலாக ஒன்பிளஸ் 10T இருந்து வந்தது.
  • புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

  ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனத்தின் புதிய டாப் எண்ட் மாடல் ஆகும். இதில் 6.7 இன்ச் FHD+ 10-பிட் AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

  இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 12.1 கொண்டு இருக்கிறது. இத்துடன் மூன்று முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக ஒன்பிளஸ் அறிவித்து உள்ளது. இதுவரை வெளியான ஒன்பிளஸ் மாடல்களில் இல்லாத அளவுக்கு புது மாடலில் அதிநவீன கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

  புது ஸ்மார்ட்போனில் அலெர்ட் ஸ்லைடர் நீக்கப்பட்டு, சிறப்பான ஆண்டெனா சிக்னல்கள் கிடைக்க ஏதுவாக 15 தனித்தனி ஆண்டெனாக்கள் சாதனத்தை சுற்றிலும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. எனினும், இந்த ஸ்மார்ட்போன் மிக மெல்லிய வடிவமைப்பு கொண்டுள்ளது.


  ஒன்பிளஸ் 10T அம்சங்கள்

  :- 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED 10-பிட் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

  - கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

  - அதிகபட்சம் 3.2GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்

  - அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU

  - 8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி (UFS 3.1) மெமரி

  - 12 ஜிபி / 16 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.1) மெமரி

  - ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஆக்சிஜன் ஓ.எஸ். 12.1

  - டூயல் சிம் ஸ்லாட்

  - 50MP பிரைமரி கேமரா, f/1.8, OIS

  - 8MP 119.9° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2

  - 2MP கேமரா, f/2.4, டூயல் எல்இடி பிளாஷ்

  - 16MP செல்பி கேமரா, f/2.4

  - இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

  - யுஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

  - 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax 2X2 MIMO, ப்ளூடூத் 5.1

  - யுஎஸ்பி டைப் சி

  - 4800 எம்ஏஹெச் பேட்டரி

  - 150 வாட் சூப்பர் வூக் பாஸ்ட் சார்ஜிங்

  விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

  புதிய ஒன்பிளஸ் 10T ஸ்மார்ட்போன் ஜேட் கிரீன் மற்றும் மூன்ஸ்டோன் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 54 ஆயிரத்து 999 என்றும் 16 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 55 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

  இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு அமேசான், ஒன்பிளஸ் இந்தியா வலைதளங்கள், ஸ்டோர் ஆப், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர், க்ரோமா மற்றும் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் நடைபெற்று வருகிறது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print