6000mAh பேட்டரி, 50MP கேமரா... பட்ஜெட் விலையில் புது ஸ்மார்ட்போன அறிமுகம்

புதிய மிவி ஸ்மார்ட்போன் மூன்றுவித மெமரி ஆப்ஷன்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Mivi One 5G
Published on: 

மிவி நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மாடல்: மிவி ஒன் 5ஜி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரியுடன் வருகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மொத்தத்தில் ஐந்து வித நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மூன்றுவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

மிவி ஒன் 5ஜி சிறப்பு அம்சங்கள்:

புதிய மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓ.எஸ். உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்ற்கு ஆண்ட்ராய்டு 18 வரையிலான அப்டேட்களை வழங்குவதாக மிவி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 2.5D கவர் கிளாஸ் உடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 4 நானோமீட்டரில் உருவாக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் மூலம் இயங்குகிறது. இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரியுடன் வருகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, PDAF, இரண்டாவது லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.

மேலும், இந்த மாடல் மிவி நியூரல் வாய்ஸ் என்ஜினுடன் வருகிறது. இது போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் உள்ள சுற்றுப்புற சத்தத்தை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் அழைப்புகளின் போது குரல் தெளிவாக கேட்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் சார்ஜிங் உள்ளது.

விலை விவரங்கள்:

மிவி ஒன் 5ஜி ஸ்மார்ட்போன் மூன்றுவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 15,999 என்றும் டாப் எண்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் புளூ, பர்கண்டி, பின்க், கிரீன் மற்றும் நேவி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் தொடங்குகிறது.

ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் விலை முறையே ரூ. 11,999, ரூ. 12,999 மற்றும் ரூ. 13,999 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com