6,000mAh பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் புது லாவா ஸ்மார்ட்போன் அறிமுகம்

புதிய லாவா ஸ்மார்ட்போன் மூன்றுவித நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
LAVA Virat Curve 5G
Published on

லாவா நிறுவனத்தின் சமீபத்திய 5ஜி ஸ்மார்ட்போன்: லாவா விராட் கர்வ் 5ஜி, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த லாவா ஸ்மார்ட்போன் மூன்றுவித நிறங்களில் வருகிறது மற்றும் 6,000mAh பேட்டரி கொண்டுள்ளது.

லாவா விராட் கர்வ் 5ஜி ஒரு சிறிய பின்புற டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது பயனர்கள் போனை அன்லாக் செய்யாமலேயே தனிப்பயன் எழுத்துக்கள் மற்றும் ஈமோஜிகளை அமைக்கவும், முக்கியமான நோட்டிஃபிகேஷன்களை சரிபார்க்க அனுமதிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7100 சிப்செட் மூலம் இயங்குகிறது.

லாவா விராட் கர்வ் 5ஜி சிறப்பு அம்சங்கள்:

லாவா விராட் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓ.எஸ்-இல் இயங்குகிறது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஓ.எஸ். அப்டேட்களையும், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவதாக அந்நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.67-இன்ச் ஃபுல்-HD+ 1080x2400 பிக்சல் 3D வளைந்த AMOLED ஸ்கிரீன் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6 நானோமீட்டரில் உருவான மீடியாடெக் டிமென்சிட்டி 7100 பிராசஸரில் இயங்குகிறது. இத்துடன் 6ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 128ஜிபி UFS 2.2 மெமரியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் கூடுதலாக 6ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

கேமராக்களை பொறுத்தவரை, லாவா விராட் கர்வ் 5ஜி மாடலில் EIS வசதியுடன் கூடிய 50MP பிரைமரி கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால் மேற்கள்ள ஸ்கிரீன் ஃபிளாஷ் வசதியுடன் கூடிய 13MP முன்பக்க கேமரா இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் MIL-STD-810H ராணுவத் தரச் சான்றிதழையும், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP64 சான்றுடன் வருகிறது. இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது மற்றும் ஃபேஸ் அன்லாக் அம்சத்தை ஆதரிக்கிறது. லாவா விராட் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 6,000mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் 33W சார்ஜர் வழங்கப்படுகிறது.

லாவா விராட் கர்வ் 5ஜி விலை:

லாவா விராட் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 23,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கி தள்ளுபடிகளை சேர்க்கும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனினை ரூ. 19,999 என்ற தள்ளுபடி விலையில் வாங்க முடியும்.

இந்த ஸ்மார்ட்போன் எல்லோரா ஸ்லேட், ஹெரிடேஜ் இண்டிகோ மற்றும் மக்ரானா ஐவரி ஆகிய வண்ணங்களில் வெளியிடப்படுகிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com