

ரெட்மி பிரான்டின் முற்றிலும் புதிய ரெட்மி 17C ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் சுமார் 7.99 மிமீ தடிமன் மற்றும் 211 கிராம் எடை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் IP64 சான்று பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.9 இன்ச் HD+ 12600x720 பிக்சல் LCD டிஸ்ப்ளே உள்ளது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 128 ஜிபி UFS 2.2 மெமரியுடன் வருகிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க ரெட்மி 17C ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமரா பெறுகிறது. இவை இரண்டும் 30fps வேகத்தில் 1080p வீடியோ பதிவை ஆதரிப்பதோடு, HDR, போர்டிரெய்ட் மற்றும் நைட் மோட்கள் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இந்த மாடல் ஹைப்பர் ஓஎஸ் 3-இல் இயங்குகிறது. மேலும் இதில் யுஎஸ்பி டைப் சி போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக், 5ஜி, ப்ளூடூத் 5.4 மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி கொண்டிருக்கிறது.
ரெட்மி 17C ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி மாடலின் ஆரம்ப விலை ரூ. 20,999 ஆகவும், 6 ஜிபி மாடலின் விலை ரூ. 22,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்த சாதனம் காஃபி ப்ரூ (வீகன் லெதர்), பர்பிள் டான் மற்றும் டார்க் நைட் ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 7-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.