பட்ஜெட் விலையில் புது சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் இருவித நிறங்களில் கிடைக்கிறது.
Samsung Galaxy F70 5G
Published on: 

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கேலக்ஸி F70 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ரூ. 20,000-க்கும் குறைவான பட்ஜெட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வசதியுடன் கூடிய 50MP கேமரா மற்றும் 5,000mAh பேட்டரி மற்றும் 25W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

இது சாம்சங்கின் எக்சினோஸ் 1330 சிப்செட்டில் இயங்குகிறது. மேலும், சர்க்கிள் டு சர்ச் மற்றும் கூகுள் ஜெமினி உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் போல்ட் பிளாக் மற்றும் விவிட் வயலட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

கேலக்ஸி F70 5ஜி சிறப்பு அம்சங்கள்:

6.7 இன்ச் 1080×2340 பிக்சல் FHD+ Infinity-U Super AMOLED டிஸ்ப்ளே

90Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்

ஆக்டா கோர் எக்சினோஸ் 1330 பிராசஸர்

மாலி-G68 MP2 GPU

4GB / 6GB ரேம், 128GB மெமரி

ஹைப்ரிட் டூயல் சிம்

ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7

50MP பிரைமரி கேமரா, F1.8, AF

5MP F2.2 அல்ட்ரா வைடு கேமரா

2MP F2.2 மேக்ரோ கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

13MP F2.0 செல்ஃபி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

யுஎஸ்பி டைப் சி ஆடியோ

டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP54)

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, GPS + GLONASS

யுஎஸ்பி டைப் சி போர்ட்

5000mAh பேட்டரி, 25W ஃபாஸ்ட் சார்ஜிங்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F70 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ. 17,999 ஆகும். இந்த விலையானது, மோட்டோரோலா, iQOO, ரெட்மி மற்றும் ரியல்மி போன்ற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுடன் இந்த மாடலை போட்டியிட வைக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com