search icon
என் மலர்tooltip icon

    கணினி

    • புதுப்பிக்கப்பட்ட லேப்டாப்கள் இந்தியாவில் தான் விற்பனைக்கு வருகிறது.
    • அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களை பயன்படுத்த ஹெச்.பி. முடிவு.

    ஹெச்.பி. நிறுவனம் மாணவர்கள், சிறு, குறு வியாபாரங்களை செய்வோர், ஸ்டார்ட்-அப் மற்றும் பகுதிநேர பணி செய்வோரை குறிவைத்து புதுப்பிக்கப்பட்ட லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது. முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட லேப்டாப்கள் இந்தியாவில் தான் விற்பனைக்கு வருவதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    புதுப்பிக்கப்பட்ட கணினிகளை வினியோகம் செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களை பயன்படுத்த ஹெச்.பி. நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. முதலில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் இந்த மாடல்கள் அடுத்த ஆண்டு மேலும் சில பகுதிகளில் விற்பனைக்கு வரும் என்று ஹெச்.பி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

    முழுமையாக விற்பனை செய்வது மட்டுமின்றி கணினிகளை சந்தா முறையில் வழங்கவும் ஹெச்.பி. நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி தனியார் நிறுவனங்கள் புதுப்பிக்கப்பட்ட கணினிகளை 6, 12 அல்லது 24 மாதங்கள் வரை சந்தா முறையில் பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட நோட்புக் மாடல்களும், அதன் பிறகு மேலும் பல்வேறு மாடல்களை வழங்க ஹெச்.பி. முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட சாதனங்களுக்கு ஹெச்.பி. சார்பில் அதிகபட்சம் ஆறு மாதங்களுக்கு வாரண்டியும் வழங்கப்படுகிறது. முன்னதாக இதற்கான திட்டம் சோதனை அடிப்படையில் ஹெச்.பி. நிறுவன ஊழியர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட சாதனங்கள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த திட்டத்தை தனது ஊழியர்களிடமும் விரிவுப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    • ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலுக்கு 30 சதவீதம் தள்ளுபடி.
    • மேக்புக் ஏர் மாடலை வாங்குவோருக்கு வங்கி சார்ந்த சலுகையும் அறிவிப்பு.

    அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மற்றும் ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் துவங்கும் முன்பே, ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலின் விலை அமேசான் வலைதளத்தில் குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் மேக்புக் ஏர் M1 விலை அதன் முந்தைய விலையை விட 30 சதவீதம் குறைந்த விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    ஆப்பிள் இந்தியா வலைதளத்தில் மேக்புக் ஏர் M1 மாடலின் விலை ரூ. 99 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், அமேசான் வலைதளத்தில் இந்த மாடல் ரூ. 69 ஆயிரத்து 990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது அதன் உண்மையான விலையில் இருந்து 30 சதவீதம் குறைவு ஆகும். இத்துடன் எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது கூடுதலாக ரூ. 1500 உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

     

    ஆப்பிள் மேக்புக் ஏர் M1 மாடலில் 13.3 இன்ச் எல்.இ.டி. பேக்லிட் IPS டிஸ்ப்ளே, 2560x1600 பிக்சல் ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பிரைட்னஸ், M1 சிப்செட், அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், 2 டி.பி. வரை எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இந்த லேப்டாப் மேக் ஒ.எஸ். வென்ச்சுரா மூலம் இயங்குகிறது.

    இத்துடன் 720 பிக்சல் ஃபேஸ்டைம் ஹெச்.டி. கேமரா, டச் ஐ.டி. சென்சார், டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 49.9 வாட் ஹவர் பேட்டரி மற்றும் 30 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத் 5.0, 2x யு.எஸ்.பி. டைப் சி போர்ட்கள் வழங்கப்படுகின்றன.

    • புதிய சியோமி டிவி மெட்டல் பெசல் லெஸ் டிசைன் கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட் டிவி-யில் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட் டிவி ஃபயர் டிவி ஒ.எஸ். கொண்டிருக்கிறது. அமேசான் ஃபயர் ஒ.எஸ். கொண்டிருப்பதால், இந்த ஸ்மார்ட் டிவி-யில் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு டிவியை குரல் மூலம் எளிதில் இயக்க முடியும்.

    இந்த மாடலில் 43-இன்ச் 4K டிஸ்ப்ளே, விவிட்-பிக்சர் என்ஜின் தொழில்நுட்பம், 24 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ, டி.டி.எஸ். ஹெச்.டி. மற்றும் டி.டி.எஸ். விர்ச்சுவல் எக்ஸ் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த டிவி மெட்டல் பெசல் லெஸ் டிசைன் கொண்டுள்ளது. அமேசான் ஃபயர் ஒ.எஸ். 7 வழங்கப்பட்டு இருப்பதால் பொழுதுபோக்கிற்கு 12 ஆயிரத்திற்கும் அதிக செயலிகளை பயன்படுத்த முடியும்.

     

    ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டி.வி. 4K 43 இன்ச் அம்சங்கள்:

    43 இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே

    குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர்

    மாலி G52 MC1 GPU

    2 ஜி.பி. ரேம்

    8 ஜி.பி. மெமரி

    ஃபயர் ஒ.எஸ். 7

    ரெட்மி வாய்ஸ் ரிமோட்

    வை-பை, ஏர்பிளே 2, மிராகேஸ்ட்

    ப்ளூடூத் 5.0, 3x HDMI, 2x யு.எஸ்.பி. 2.0

    3.5mm ஆடியோ ஜாக், ஈத்தர்நெட்

    24 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ

    டி.டி.எஸ். ஹெச்.டி., டி.டி.எஸ். விர்ச்சுவல் எக்ஸ்

    ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4K 43 இன்ச் மாடலின் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட் டிவி ரூ. 24 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் இந்த டிவியை வாங்குவோருக்கு ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்படுகிறது.

    • ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடலுக்கான டீசர் வெளியாகி இருக்கிறது.
    • புதிய ஒன்பிளஸ் டேப்லெட் பட்ஜெட் பிரிவில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ என்ற பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. புதிய ஒன்பிளஸ் பேட் கோ விலை பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஒன்பிளஸ் பேட் கோ வெளியீடு பற்றிய தகவல்கள் வெளியான நிலையில், தற்போது டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    புதிய டேப்லெட் பற்றி அந்நிறுவனம் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் டேப்லெட்-இன் படமும் "What's work without a little play" மற்றும் "Take a Guess" என்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் வெளியீட்டை உணர்த்துவதாகவே தெரிகிறது. வரும் நாட்களில் இந்த சாதனம் பற்றிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    டிப்ஸ்டரான இஷான் அகர்வால் ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையின் பட்ஜெட் ரக டேப்லெட் மாடல்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாகவும், இந்த பிரிவில் முதல் டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில், புதிய டேப்லெட் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் பேட் கோ மாடலை இந்தியா உள்பட சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்த மாடல் ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தற்போதைக்கு இந்த மாடல்களின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

    • ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் சீரிஸ் 9 மாடல் 18 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
    • ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலில் உடல்நலன் சார்ந்த அம்சங்களை சிரி வழங்குகிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலில் ஆப்பிள் எஸ்9 சிப்செட் மூலம் இயங்குகிறது. இதில் உள்ள டபுள் டாப் அம்சம் கொண்டு அழைப்புகளை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலின் பல்வேறு அம்சங்களை டபுள் டேப் மூலம் இயக்கிவிட முடியும்.

    இந்த அம்சம் மெஷின் லெர்னிங் அல்காரிதம் மற்றும் ஏராளமான சென்சார்களின் உதவியோடு இயங்குகிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 அறிவிப்பின் போது 2030 ஆண்டு வாக்கில் ஆப்பிள் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத நிறுவனம் என்ற நிலையை அடையும் என்று தெரிவித்தது. இதற்காக ஆப்பிள் பொருட்களில் பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களே பயன்படுத்தப்படுவதாக ஆப்பிள் தெரிவித்தது.

     

    ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடல் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இதனை உணர்த்தும் சிறப்பு லோகோ ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 பாக்ஸ்-இல் இடம்பெற்று இருக்கிறது.

    ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 மாடலில், ஆப்பிள் இதுவரை உருவாக்கியதிலேயே அதிக பிரைட்னஸ் கொண்ட டிஸ்ப்ளே உள்ளது. இந்த மாடலிலும் எஸ்9 சீரிஸ் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 36 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. புதிய ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. விற்பனை செப்டம்பர் 22-ம் தேதி துவங்குகிறது.

    • பிக்சல் வாட்ச் 2 மாடலுக்கான டீசர் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.
    • பிக்சல் வாட்ச் 2 விற்பனை ஃப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.

    கூகுள் நிறுவனம் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான டீசர்களை சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில், ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கான டீசர் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசரில் பிக்சல் வாட்ச் 2 தோற்றம் மட்டுமின்றி அதன் இந்திய வெளியீடு பற்றிய தகவல்களும் தெரியவந்துள்ளது.

    பிக்சல் வாட்ச் 2 மாடலுக்கான டீசர் வீடியோ கூகுள் இந்தியா அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் பிக்சல் வாட்ச் 2 மாடல் அக்டோபர் 5-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதன் விற்பனை ஃப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறும் என்றும் தெரியவந்துள்ளது.

    இத்துடன் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் இந்திய முன்பதிவு அக்டோபர் 5-ம் தேதி துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு கூகுள் அறிமுகம் செய்த பிக்சல் வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும், இந்த ஆண்டு கடந்தமுறை போன்றில்லாமல், பிக்சல் வாட்ச் 2 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    தோற்றத்தில் பிக்சல் வாட்ச் 2 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிக மாற்றங்களை பெறவில்லை. இந்த மாடலுக்கான பேன்ட்-கள் பிக்சல் 8 ப்ரோ நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

    • புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம்.
    • ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தனது முதல் டேப்லெட் மாடலை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வெளியிட்டு இருக்கும் புதிய தகவல்களில் ஒன்பிளஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய டேப்லெட் மாடல் பற்றிய விவரங்கள் இடம்பெற்று உள்ளது.

    அதன்படி புதிய ஒன்பிளஸ் டேப்லெட் OPD2304 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதே மாடல் ஒன்பிளஸ் ஃபோரமிலும் இடம்பெற்று, பிறகு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவைதவிர இந்த டேப்லெட் பற்றிய விவரங்கள் பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டான்டர்ட்ஸ் (பி.ஐ.எஸ்.) தளத்திலும் இடம்பெற்று இருக்கிறது. இவை இந்த டேப்லெட் நிச்சயம் வெளியிடப்படும் என்பதை உணர்த்துகிறது.

     

    இத்துடன் புதிய டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. OP2304 மற்றும் OP2305 என இரண்டு மாடல் நம்பர்கள் இடம்பெற்று இருப்பதால், இந்த டேப்லெட் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவை வை-ஃபை மற்றும் செல்லுலார் வேரியண்ட்களை குறிக்கலாம்.

    பி.ஐ.எஸ். தளத்தில் இந்த டேப்லெட் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருப்பதால், இந்த சாதனம் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இத்துடன் 11.61 இன்ச் IPS LCD ஸ்கிரீன், 2K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 12 ஜி.பி. LPDDR5 ரேம், 256 ஜி.பி. UFS 3.1 மெமரி, 9510 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 13MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். 13.1 வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • பெரம்பலூரில் கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது
    • 7-ந் தேதி நடக்கிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தமிழக அரசின் ஆணைப்படி மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் கல்வி கடன் முகாம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. இந்த முகாமில் தொழில்முறை படிப்பு பயிலும் மற்றும் கல்வி கடன் பெற விரும்பும் அனைத்து மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்துகொள்ள வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பான் கார்டு, ஆதார் கார்டு ஆவணங்களையும், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மாணவர்களின் 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ம் வகுப்பு மாற்று சான்றிதழ், குடும்ப வருமான சான்று, கல்லூரி சேர்க்கைக்கான சான்று, கல்விசான்று, கல்லூரி கட்டண அறிக்கை ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகல் சான்றிதழை கொண்டு வர வேண்டும். கல்விக்கடன் முகாமிற்கு வருவதற்கு முன்பாக https://www.jansamarth.in இணையதளத்தில் விண்ணப்பித்து, விண்ணப்பித்த படிவத்தின் நகலை கொண்டு வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சோனி பிளே ஸ்டேஷன் 5 கன்சோலுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்படுகிறது.
    • முன்னதாக இந்தியாவில் பிளே ஸ்டேஷன் 5 மாடல்கள் விலை உயர்த்தப்பட்டது.

    சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 5 கன்சோலை வாங்குவதற்கு ஆரம்பத்தில் அதிக கடினமான சூழல் நிலவி வந்தது. எனினும், இந்த ஆண்டு மார்ச் மாதம் பி.எஸ். 5 அனைவராலும் வாங்கக்கூடிய அளவுக்கு அதிக யூனிட்கள் கிடைக்கின்றன. தற்போது பிளே ஸ்டேஷன் 5 கன்சோலை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் ஸ்டோர்களில் எளிதில் வாங்கக்கூடிய சூழல் தான் நிலவுகிறது.

    மேலும் பிளே ஸ்டேஷன் 5 வாங்குவதற்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் பிளே ஸ்டேஷன் 5 வாங்க நினைப்பவர்களுக்கு நற்செய்தியை கொடுக்கும் வகையிலான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில், பிளே ஸ்டேஷன் 5 டிஸ்க் எடிஷன் மாடலுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட இருக்கிறது.

     

    ஆகஸ்ட் 24-ம் தேதி துவங்கி செப்டம்பர் 2-ம் தேதி வரை பிளே ஸ்டேஷன் 5 கன்சோலுக்கு ரூ. 7 ஆயிரத்து 500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை அமேசான், ஃப்ளிப்கார்ட் வலைதளங்களிலும், ஷாப்அட்எஸ்.சி., ரிலையன்ஸ், க்ரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் விலை குறைப்பு பொருந்தும்.

    இந்த விலை குறைப்பு கன்சோலின் டிஸ்க் எடிஷனுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது பிளே ஸ்டேஷன் 5 மாடல் அமேசான் வலைதளத்தில் ரூ. 54 ஆயிரத்து 990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஃப்ளிப்கார்ட் வலைதளத்திலும் இந்த கன்சோலின் விலை ரூ. 54 ஆயிரத்து 990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    முன்னதாக பிளே ஸ்டேஷன் 5 டிஜிட்டல் எடிஷன் மாடல் ரூ. 39 ஆயிரத்து 990 என்றும், டிஸ்க் எடிஷன் விலை ரூ. 49 ஆயிரத்து 990-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக இவற்றின் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அவான்ட் பார் 520 சவுன்ட்பார் மாடல் தெளிவான மற்றும் சக்திவாய்ந்த சவுன்ட் வெளிப்படுத்துகிறது.
    • புதிய போட் அவான்ட் பார் 520 மாடலின் விலை ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    போட் நிறுவனம் அவான்ட் 520 பெயரில் புதிய சவுன்ட்பார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக போட் ஃபிளாஷ் பிளஸ் மற்றும் ஸ்டார்ம் பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரூ. 2 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் புதிய சவன்ட்பார் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

    புதிய அவான்ட் பார் 520 சவுன்ட்பார் மாடல் தெளிவான மற்றும் சக்திவாய்ந்த சவுன்ட் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 16 வாட் பவர், டூயல் பேசிவ் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள 2.0 சேனல் ஸ்டீரியோ சவுன்ட் செட்டப் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இந்த சவுன்ட்பார் ப்ளூடூத் 5.0 மூலம் வயர்லெஸ் கனெக்ட் வசதி கொண்டிருக்கிறது.

     

    இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இது அதிநவீன டிசைன் அழகான தோற்றம் கொண்டிருக்கிறது. போட் அவான்ட் பார் 520 மாடலை ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர்களுடன் ப்ளூடூத், AUX, யு.எஸ்.பி. மூலம் கனெக்ட் செய்து கொள்ள முடியும்.

    புதிய போட் அவான்ட் பார் 520 சவுன்ட்பார் விலை இந்திய சந்தையில் ரூ. 1,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் போட் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    • ரெட்மி பிரான்டின் புதிய டேப்லெட் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
    • புதிய ரெட்மி பேட் SE மாடல் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒஎஸ் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    ரெட்மி பேட் SE விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், இந்த டேப்லெட்- விலை, அம்சங்கள் மற்றும் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. தற்போது லீக் ஆகி இருக்கும் ரென்டர்களின் படி புதிய ரெட்மி டேப்லெட் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் மெட்டாலிக் பில்டு கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய ரெட்மி பேட் SE மாடலில் ஸ்னாப்டடிராகன் 680 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 11 இன்ச் 1200x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 90Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் 8000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

     

    மேலும் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14, 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா, குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போர்ட், 3.5mm ஆடியோ ஜாக், ஆம்பியன்ட் லைட் சென்சார், அக்செல்லோமீட்டர், ஹால் சென்சார் வழங்கப்படுகிறது.

    ரென்டர்களின் படி ரெட்மி பேட் SE மாடல் கிரே, கிரீன் மற்றும் பர்பில் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஒட்டுமொத்த டிசைன் ரெட்மி பேட் போன்றே காட்சியளிக்கிறது. இதன் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய மானிட்டர் டூயல் இன்புட் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
    • புதிய மானிட்டர் அறிமுக சலுகையாக தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ZEB EA122 22 இன்ச் அளவு கொண்ட HD+ எல்.இ.டி. மானிட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மானிட்டர் ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் பியூர் பிக்சல் சீரிசில் இடம்பெற்று இருக்கிறது. கடந்த மாதம் ஜெப்ரானிக்ஸ் ஜெப் ராக்சர் 100 வாட் டி.ஜெ. ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய மானிட்டர் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய ஜெப்ரானிக்ஸ் ZEB EA122 எல்.இ.டி. மானிட்டரில் ஹெச்.டி. பிளஸ் ரெசல்யூஷன் (1680x1050), அதிகபட்சம் 250 நிட்ஸ் பிரைட்னஸ், 60Hz ரிப்ரெஷ் ரேட், 5ms ரெஸ்பான்ஸ் டைம், டிஸ்ப்ளேவில் VA பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 16:10 ஆஸ்பெக்ட் ரேஷியோ காரணமாக இந்த மானிட்டரை அலுவல் மற்றும் கேமிங் என இருவித பயன்பாடுகளுக்கும் பயன்படுத்த முடியும்.

    கனெக்டிவிட்டியை பொருத்தவரை டூயல் இன்புட் ஆப்ஷன்கள்: HDMI மற்றும் VGA வழங்கப்பட்டு உள்ளன. இவற்றை கொண்டு பல்வேறு சாதனங்களை கனெக்ட் செய்ய முடியும்.

     

    ஜெப்ரானிக்ஸ் ZEB EA122 மானிட்டர் அம்சங்கள்:

    பியூர் பிக்சல், எல்.இ.டி. பேக்லிட் VA பேனல்

    வால் மவுன்ட் டிசைன்

    22 இன்ச் HD+ 1680x1050 பிக்சல் ரெசல்யூஷன்

    5ms ரெஸ்பான்ஸ் டைம், 60Hz ரிப்ரெஷ் ரேட்

    HDMI மற்றும் VGA கனெக்டிவிட்டி

    புதிய ஜெப்ரானிக்ஸ் ZEB EA122 மானிட்டர் ஆகஸ்ட் 14-ம் தேதி ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. அறிமுக சலுகையாக இந்த மானிட்டர் ரூ. 4 ஆயிரத்து 699 எனும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது அதன் உண்மை விலையான ரூ. 12 ஆயிரத்து 799-ஐ விட குறைவு ஆகும்.

    ×