search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    AMOLED டிஸ்ப்ளே, 33வாட் சார்ஜிங்குடன் ரூ. 8 ஆயிரம் பட்ஜட்டில் புது ஸ்மார்ட்போன் - விற்பனை துவக்கம்
    X

    AMOLED டிஸ்ப்ளே, 33வாட் சார்ஜிங்குடன் ரூ. 8 ஆயிரம் பட்ஜட்டில் புது ஸ்மார்ட்போன் - விற்பனை துவக்கம்

    • இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புது நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் AMOLED டிஸ்ப்ளே, 33 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
    • 50MP பிரைமரி கேமரா, கேமிங் சார்ந்த பிராசஸர் கொண்டிருக்கும் புது ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கியது.

    இன்ஃபினிக்ஸ் நிறுவனம் கடந்த வாரம் நோட் 12i ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. AMOLED பேனல் கொண்ட விலை குறைந்த ஸ்மார்ட்போன் மாடல்களில் இதுவும் ஒன்று ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் சார்ந்த சிப்செட், பெரிய பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 50MP பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    புது இன்ஃபினிக்ஸ் நோட் 12i ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 12, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய இன்ஃபினிக்ஸ் நோட் 12i ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது. 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் புது இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் ஃபோர்ஸ் பிளாக் மற்றும் மெட்டாவெர்ஸ் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    இத்துடன் ஜியோ பிரத்யேக சலுகையின் கீழ் புது இன்ஃபினிக்ஸ் நோட் 12i ஸ்மார்ட்போனிற்கு ரூ. 1000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனை ரூ. 8 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். நோட் 12i ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை 30 நாட்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    கேஷ்பேக் சலுகையை பெற்றதும், பயனர்கள் வேறு ஒரு சிம் கொண்டு அதே சாதனத்தில் டேட்டா கனெக்டிவிட்டியை பெற முடியாது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கிறது. அந்த வகையில், பயனர்கள் ஜியோ சிம் மற்றும் இதர நெட்வொர்க் சிம் கார்டுகளை பயன்படுத்தலாம். இதுபற்றிய முழு தகவல்களை ஜியோ அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பார்க்க முடியும்.

    இன்ஃபினிக்ஸ் நோட் 12i அம்சங்கள்:

    6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 60Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்

    ARM மாலி-G52 2EEMC2 GPU

    4 ஜிபி LPDDR4x ரேம்

    64 ஜிபி eMMC 5.1 மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த எக்ஸ் ஒஎஸ் 12

    50MP பிரைமரி கேமரா, குவாட் எல்இடி ஃபிளாஷ்

    2MP டெப்த் சென்சார் ஏஐ லென்ஸ்

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

    யுஎஸ்பி டைப் சி

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    Next Story
    ×