என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொபைல்போன்"

    • ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டில் இயங்கும் என்று கூறப்படுகிறது.
    • வெளியீட்டு தேதி குறித்து விவோ இன்னும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    விவோ V60 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. விவோ V சீரிஸ் ஸ்மார்ட்போன் மலேசியாவின் SIRIM சான்றிதழ் வலைத்தளத்திலும் TUV SUD தளத்திலும் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இது புதிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்பதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்துகின்றன.

    இவை கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ V50 மாடலின் தொடர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட விவோ S30 போன்ற வன்பொருள் அம்சங்களுடன் இது அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டில் இயங்கும் என்று கூறப்படுகிறது.

    இதுவரை அறிவிக்கப்படாத விவோ V60, SIRIM மற்றும் TUV வலைத்தளங்களில் V2511 என்ற மாடல் நம்பரை கொண்டுள்ளதாக Xpertpick தெரிவித்துள்ளது . SIRIM சான்றிதழ் தொலைபேசியின் பெயரை உறுதிப்படுத்துகிறது, அதே நேரத்தில் TUV பட்டியல் 90W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று தெரிவிக்கிறது.

    இந்த சான்றிதழ் வலைத்தளங்களில் ஸ்மார்ட்போனின் தோற்றம், விவோ V60 விரைவில் ஆசிய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்பதைக் குறிக்கிறது. இருப்பினும், அதன் வெளியீட்டு தேதி குறித்து விவோ இன்னும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    கடந்த டிசம்பர் 2024 இல் சீனாவில் அறிமுகமான விவோ S20-இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக விவோ V50 பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறையை பின்பற்றி, வரவிருக்கும் விவோ V60 ஸ்மார்ட்போன் மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட விவோ S30-ஐ அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். இது ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    விவோ S30 ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் 1.5K (1,260×2,800 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளேவை 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 பிராசஸரில் 12 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. இதில் 50MP பிரைமரி சென்சாருடன் மூன்று கேமரா யூனிட் கொண்டுள்ளது. இதில் 50MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது 90W பாஸ்ட் சார்ஜிங் வசதி, 6,500mAh பேட்டரி கொண்டுள்ளது.

    • டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொன்றும் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன.
    • டைனமிக் கிரே, கீக் பிளாக் மற்றும் நியான் சியான் வண்ணங்களில் கிடைக்கிறது.

    டெக்னோ போவா 7 5ஜி சீரிஸ் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிசையில் டெக்னோ போவா 7 5ஜி மற்றும் டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி மாடல்கள் அடங்கும். இவை மீடியாடெக் நிறுவனத்தின் டிமென்சிட்டி 7300 அல்டிமேட் சிப்செட் கொண்டிருக்கின்றன. இத்துடன் 8 ஜிபி ரேம், 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி கொண்டுள்ளன.

    இரு ஸ்மார்ட்போன்களின் குறிப்பிடத்தக்க அம்சமாக இவற்ரின் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு புதிய மல்டி-பங்ஷனல் டெல்டா லைட் இன்டர்பேஸ் ஆகும். இவை பல இந்திய மொழிகளை ஆதரிக்கும் டெக்னோவின் "Ella AI" உடன் வருகிறது. புதிய போவா 7 5ஜி சீரிஸ் 4x4 MIMO மற்றும் VOWiFi டூயல் பாஸ் போன்ற கனெக்டிவிட்டி மேம்பாடுகளை ஆதரிக்கிறது.

    டெக்னோ போவா 7 5ஜி, போவா 7 ப்ரோ 5ஜி அம்சங்கள்:-

    டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1.5K (1,224×2,720) AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 4,500 nits பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. புதிய டெக்னோ போவா 7 5ஜி மாடலில் 6.78-இன்ச் Full-HD+ (1,080×2,460 பிக்சல்கள்) LTPS IPS பேனல் கொண்டுள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை டெக்னோ போவா 7 5ஜி மற்றும் போவா 7 ப்ரோ 5ஜி மாடல்களில் 4nm முறையில் உருவாக்கப்பட்ட மீடியாடெக் டிமென்சிட்டி 7300 அல்டிமேட் பிராசஸரால் இயக்கப்படுகின்றன. இத்துடன் 256 ஜிபி UFS 2.2 ரக ஸ்டோரேஜ் கொண்டுள்ளன. இதன் ப்ரோ வேரியண்ட் 8 ஜிபி LPDDR5 கொண்டுள்ளது. அதே வேளையில், பேஸ் மாடலில் 8 ஜிபி LPDDR4 RAM உடன் வருகிறது.

    இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைஓஎஸ் 15 உடன் வருகின்றன. மேலும் இந்தி, மராத்தி, தமிழ் மற்றும் பல இந்திய மொழிகளை ஆதரிக்கும் Ella AI சாட்போட்டை வழங்குகின்றன.

    புகைப்படங்கள் எடுக்க டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா மற்றும் ஒரு லைட் சென்சார் கொண்டுள்ளது. இதன் ப்ரோ மாடலில் 64MP சோனி IMX682 பிரைமரி கேமரா மற்றும் பின்புறத்தில் 8MP இரண்டாம் நிலை சென்சார் உள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 13MP செல்பி கேமரா கொண்டுள்ளது.

    டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொன்றும் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. அவை 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகின்றன. இதன் ப்ரோ மாடல் 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் வழங்குகிறது.

    இந்தியாவில் டெக்னோ போவா 7 5ஜி, போவா 7 ப்ரோ 5ஜி விலை, கிடைக்கும் தன்மை

    இந்தியாவில் டெக்னோ போவா 7 5ஜி விலை 8 ஜிபி + 128 ஜிபி ஆப்ஷன் விலை ரூ. 12,999 இல் தொடங்குகிறது. அதே நேரத்தில் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் கீக் பிளாக், மேஜிக் சில்வர் மற்றும் ஓயாசிஸ் கிரீன் வண்ணங்களில் வருகிறது.

    இதற்கிடையில், டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ரேம் மற்றும் சேமிப்பு உள்ளமைவுகளுக்கு முறையே ரூ. 16,999 மற்றும் ரூ. 17,999 விலையில் கிடைக்கிறது. இது டைனமிக் கிரே, கீக் பிளாக் மற்றும் நியான் சியான் வண்ணங்களில் கிடைக்கிறது.

    டெக்னோ போவா 7 5ஜி மற்றும் போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஜூலை 10 முதல் இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என்று நிறுவனம் கூறியது.

    • ஏற்கனவே உள்ள இரு நிறங்களுடன் ஐகூ 13 ஸ்மார்ட்போன் புதிதாக ஏஸ் கிரீன் ஆப்ஷனில் கிடைக்கும்.
    • ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதை தடுக்க 7,000 மிமீ வேப்பர் சேம்பர் கொண்டுள்ளது.

    ஐகூ 13 ஸ்மார்ட்போன் முதன்முதலில் இந்தியாவில் டிசம்பர் 2024 இல் லெஜண்ட் மற்றும் நார்டோ கிரே வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது, மூன்றாவதாக மற்றொரு புதிய நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. புதிய நிறத்தைத் தவிர, இந்த ஸ்மார்ட்போன் அம்சங்களில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இதில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸருடன் பிரத்யேக கேமிங் சிப்செட் மற்றும் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    இதுதவிர ஐக 13 ஸ்மார்ட்போன் 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 2K LTPO AMOLED டிஸ்ப்ளே மற்றும் 50-மெகாபிக்சல் பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள் அடங்கிய ரியர் கேமரா யூனிட் உள்ளது. புதிய வண்ண மாறுபாடு இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என்று ஐகூ தெரிவித்து இருக்கிறது.

    இந்தியாவில் iQOO 13 விலை, வண்ண விருப்பங்கள்

    ஏற்கனவே உள்ள இரு நிறங்களுடன் ஐகூ 13 ஸ்மார்ட்போன் புதிதாக ஏஸ் கிரீன் ஆப்ஷனில் கிடைக்கும். புதிய ஏஸ் கிரீன் நிற ஐகூ 13 ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 54,999 மற்றும் ரூ. 59,999 ஆகும். இது ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வேரியண்ட்களுக்கானது ஆகும். இந்த ஸ்மார்ட்போன் தற்போது லெஜண்ட் மற்றும் நார்டோ கிரே வண்ண விருப்பங்கள் உட்பட மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. புதிய கிரீன் நிற வேரியண்ட் ஜூலை 12 ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கு அமேசான் மற்றும் ஐகூ இந்தியா இ-ஸ்டோர் மூலம் விற்பனைக்கு வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஐகூ 13 அம்சங்கள்

    ஐகூ 13 ஸ்மார்ட்போனில் 6.82-இன்ச் 2K (1,440x3,186 பிக்சல்கள்) LTPO AMOLED ஸ்கிரீன், 144Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 1,800nits வரை பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர் மற்றும் பிரத்யேக இன்-ஹவுஸ் கேமிங் Q2 சிப் மூலம் இயக்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதை தடுக்க 7,000 மிமீ வேப்பர் சேம்பர் கொண்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 16 ஜிபி வரை LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 512 ஜிபி வரை UFS 4.1 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 உடன் வருகிறது.

    புகைப்படங்கள் எடுக்க ஐகூ 13 ஸ்மார்ட்போன் 50-மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் பின்புறத்தில் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்புறத்தில் 32-மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஐகூ 13 ஸ்மார்ட்போனில் 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 6,000mAh பேட்டரி உள்ளது. இது டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்குவதற்காக IP68 மற்றும் IP69 சான்று பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை 7, ப்ளூடூத் 5.4, NFC, GPS மற்றும் யுஎஸ்பி 3.2 ஜென் 1 டைப் சி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இது 8.13 மிமீ தடிமன் மற்றும் 213 கிராம் எடை கொண்டது.

    • ஹானர் மேஜிக் V5 மடிக்கப்பட்ட நிலையில் 8.8mm தடிமன் கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • ஹானர் மேஜிக் V5 அறிமுகம் ஜூலை 2 ஆம் தேதி சீனாவில் நடைபெற உள்ளது.

    ஹானர் மேஜிக் V5 அடுத்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு, சீன நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதில் அதன் வடிவமைப்பு மற்றும் வண்ண விருப்பங்களை வெளிப்படுத்துகிறது.

    வரவிருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்களையும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஹானர் மேஜிக் V5 மெல்லிய டிசைன் கொண்டிருக்கும். மேலும் 16 ஜிபி வரை ரேம் மற்றும் அதிகபட்சம் 1TB ஸ்டோரேஜ், நான்கு வண்ண விருப்பங்களில் விற்ப்பனைக்கு வரும்.

    ஹானர் மேஜிக் V5 சிறப்பம்சங்கள்:

    ஹானர் நிறுவனம் அதன் வெய்போ மற்றும் சீனா வலைதளத்தில் ஹானர் மேஜிக் V5 வடிவமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த போன் டான் கோல்ட், சில்க் ரோடு டன்ஹுவாங், வெல்வெட் பிளாக் மற்றும் வார்ம் ஒயிட் (சீன மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது) வண்ண விருப்பங்களில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி + 256 ஜிபி, 16 ஜிபி + 512 ஜிபி மற்றும் 16 ஜிபி + 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹானர் மேஜிக் V5 மடிக்கப்பட்ட நிலையில் 8.8mm தடிமன் கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் இது உலகின் மிக மெல்லிய மற்றும் இலகுவான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்றும் கூறப்படுகிறது. மடிக்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போன் எடை குறித்த விவரங்களை ஹானர் வழங்கவில்லை. மடிக்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போன் வரவிருக்கும் விவோ X ஃபோல்ட் 5 ஐ விட மெல்லியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மடிக்கும்போது 9.2mm தடிமன் கொண்டிருக்கும்.

    ஹானர் மேஜிக் V5 அறிமுகம் ஜூலை 2 ஆம் தேதி சீனாவில் நடைபெற உள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மற்றும் 16 ஜிபி ரேம் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் IPX8-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பு மற்றும் 66W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,100mAh பேட்டரி இருக்கும். இந்த கைபேசியில் 6.45-இன்ச் LTPO OLED கவர் திரை மற்றும் 8-இன்ச் 2K இன்னர் டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.

    • அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ. 1,069 வரை தள்ளுபடியைப் பெறலாம்.
    • 8 ஜிபி ரேம், மற்றும் 512 ஜிபி வரை மெமரியுடன் எக்சைனோஸ் 2400e பிராசஸர் கொண்டிருக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி S24 FE 5G ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் ரூ. 59,999 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த Fan Edition ஸ்மார்ட்போன் இப்போது அமேசான் வலைதளத்தில் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. கேலக்ஸி S24 FE இன் 128 ஜிபி மாடல் தற்போது ரூ. 40,000 க்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறது.

    விலை குறைப்பு மட்டுமின்றி எக்சேஞ்ச் ஆஃபர்கள், வட்டியில்லா மாத தவணை முறை வசதிகள் வழங்கப்படுகிறது. கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 2400e சிப்செட் மற்றும் 4,700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி S24 FE சலுகை விவரங்கள்

    அமேசான் நிறுவனம் கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.35,655-க்கு பட்டியலிட்டுள்ளது. இதே போன்று 256 ஜிபி மெமரி மாடல் ரூ.65,999க்கு பதிலாக ரூ.43,300க்கு கிடைக்கிறது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போதும், மாத தவணை முறை பரிவர்த்தனை மூலம் வாங்குவோருக்கு ரூ. 1,250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் விலையை ரூ. 34,405 ஆகக் குறைக்கும்.

    இத்துடன் மாதத்திற்கு ரூ. 1,729 இல் தொடங்கி ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும், அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ. 1,069 வரை தள்ளுபடியைப் பெறலாம்.

    இதற்கிடையில், சாம்சங் இந்தியாவின் வலைத்தளம் தற்போது கேலக்ஸி S24 FE இன் பேஸ் வேரியண்ட்டை ரூ. 59,999க்கு விற்பனை செய்கிறது. பிளிப்கார்ட் தளத்தில், இந்த ஸ்மார்ட்போன் ரூ. 39,999 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி S24 FE அம்சங்கள்

    சாம்சங் கேலக்ஸி S24 FE மாடலில் 6.7-இன்ச் Full-HD+ (1,080 x 2,340 பிக்சல்கள்) டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவை 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இதில் 8 ஜிபி ரேம், மற்றும் 512 ஜிபி வரை மெமரியுடன் எக்சைனோஸ் 2400e பிராசஸர் கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி S24 FE மாடலில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50MP பிரைமரி கேமரா, OIS மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 8MP டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா கொண்டுள்ளது. இத்துடன் 10MP செல்பி கேமரா கொண்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP68-சான்று பெற்றிருக்கிறது. இது 25W வயர்டு சார்ஜிங் வசதியுடன் 4,700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    • விவோ X200 FE-யின் வலது புறத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் இருப்பது போல் தெரிகிறது.
    • நான்கு வண்ணங்களில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

    விவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய விவோ X200 FE விரைவில் சர்வதேச சந்தைகளில் அறிமுகமாக உள்ளது. நிறுவனம் சமீபத்தில் அதன் மலேசிய வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவை தொடங்கியது. மேலும் அதன் வெளியீட்டு தேதியை இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. விவோ X200 FE இன்று முதல் ஒரு வாரத்திற்குள் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இந்த ஸ்மர்ட்போன் இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் உட்பட நான்கு நிறங்களில் விற்பனை செய்யப்படும். விவோ X200 FE கேமரா சென்சார்கள் மாத்திரை வடிவில் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள அலகில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புறம் செல்ஃபி கேமராவிற்கு ஒரு பஞ்ச்-ஹோல் கட்-அவுட் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    விவோ X200 FE வெளியீட்டு தேதி, வண்ண விருப்பங்கள்

    விவோ நிறுவனத்தின் தைவான் பிரிவு, விவோ X200 FE அறிமுகத்திற்காக ஒரு மைக்ரோசைட்டை உருவாக்கி இருக்கிறது. இந்த போன் வருகிற 23-ந்தேதி அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்துவதோடு, "விரைவில் வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



    டீசர் படங்களில், விவோ X200 FE பின்புறத்தில் Zeiss-பிராண்டட் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களுடன் காணப்படுகிறது, இரண்டு கேமரா சென்சார்கள் ஒற்றை மாத்திரை வடிவ யூனிட்டில் வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் வளைய வடிவ LED ஃபிளாஷுக்கு மேலே ஒரு தனித்துவமான மூன்றாவது லென்ஸும் உள்ளது.

    விவோ X200 FE-யின் வலது புறத்தில் பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் இருப்பது போல் தெரிகிறது. அதன் முன்பக்கத்தில் மெல்லிய பெசல்கள் மற்றும் முன்பக்க கேமராவிற்கான மையப்படுத்தப்பட்ட பஞ்ச்-ஹோல் கட்-அவுட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிசைன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ S30 ப்ரோ மினியுடன் பலவிதங்களில் ஒற்றுப்போகிறது. அதன்படி புதிய விவோ X200 FE அந்த ஸ்மார்ட்போனின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாக இருக்க வாய்ப்புள்ளது.

    விவோ நிறுவனம் வரவிருக்கும் இந்த போனை கருப்பு, நீலம், இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் என மொத்தம் நான்கு வண்ணங்களில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

    விவோ X200 FE அம்சங்கள்

    இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இன்னும் ரகசியமாகவே இருந்தாலும், மலேசிய இணையதளத்தில் சமீபத்தில் வெளியான விவோ X200 FE, 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 9300+ சிப்செட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    • இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய மேம்படுத்தல் பேட்டரி திறனாக இருக்கும்.
    • ஒன்பிளஸ் Nord CE 5 ஆனது 80W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 7,100mAh பேட்டரியைக் கொண்டிருக்கலாம்.

    ஒன்பிளஸ் Nord 5 பற்றி சமீபகாலமாக பல தகவல்கள் பரவி வருகின்றன. இதனிடையே ஒன்பிளஸ் Nord 5 மற்றும் Nord CE 5 ஆகியவை அடுத்த மாதம் 8-ந்தேதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் ஒன்பிளஸ் Nord 5-ன் முந்தைய மாடலான Nord 4 கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமானதால் இதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்பிளஸ் Nord என்பது செயல்திறன் சார்ந்த போன்களை வழங்குவதற்காக அறியப்பட்ட ஒன்பிளஸ் நிறுவனத்தின் இடைப்பட்ட சீரிஸ் ஆகும்.

    ஒன்பிளஸ் Nord 5 சீரிஸ் வெளியீட்டு விவரம்:

    * ஒன்பிளஸ் Nord 5 மற்றும் Nord CE 5 ஜூலை 8 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும்.

    * இது பெரும்பாலும் ஒன்பிளஸ் Nord 5 சீரிசுக்கான உலகளாவிய வெளியீட்டுத் தேதியாக இருக்கலாம். ஆனால் இந்தியாவில் அறிமுகமானது Nord 4-ஐ போலவே அதே நாளில் வெளியாகலாம்.

    * ஒன்பிளஸ் Nord 5 சீரிஸ் குறித்து நிறுவனத்தினடமிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. வரவிருக்கும் போன்கள் பற்றிய எந்த டீஸர்களும் வெளியாகவில்லை.

    * ஒன்பிளஸ் Nord 5 சீரிஸ், சீனாவில் கிடைக்கும் Ace 5 சீரிசின் மறுபெயரிடப்பட்ட பதிப்புகளாக வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் Nord 5-ல் என்ன எதிர்பார்க்கலாம்?

    * இந்தியாவில் ஒன்பிளஸ் Nord 5 விலை சுமார் ரூ.30,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இது இந்தியாவில் ரூ.29,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட Nord 4-ஐ போன்றது.

    * புதிய Nord 5 ஆனது MediaTek Dimensity 9400e சிப்செட் மூலம் இயக்கப்படலாம், இது தற்போது Realme GT 7 இல் உள்ளது. இது முதன்மையான Dimensity 9400 சிப்செட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய இடைப்பட்ட சிப்செட் ஆகும். ஒப்பிடுகையில், Nord 4 மாடலில் வழங்கப்பட்ட Snapdragon 7+ Gen 3 SoC உடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

    * இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய மேம்படுத்தல் பேட்டரி திறனாக இருக்கும். ஏனெனில் Nord 5 ஆனது 7,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். குறிப்பாக 100W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 6,650mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.

    * இந்த ஸ்மார்ட்போனில் OIS உடன் 50MP முதன்மை கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 16MP செல்பி கேமராவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் Nord CE 5 அம்சங்கள் குறித்து வெளியான தகவல்

    * ஒன்பிளஸ் Nord CE 5 சமீபத்தில் BIS சான்றிதழில் காணப்பட்டது. இது அதன் இந்திய வருகையை உறுதிப்படுத்தியது.

    * இந்த ஸ்மார்ட்போன் Nord CE 4 போன்றே 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.7-இன்ச் FHD+ OLED பிளாட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    * புதிய Nord CE 4 இன் Snapdragon 7 Gen 3 சிப்செட்டுடன் ஒப்பிடும்போது ஒன்பிளஸ் Nord CE 5 ஆனது MediaTek Dimensity 8350 சிப்செட்டால் இயக்கப்படலாம்.

    * இந்த ஸ்மார்ட்போனில் 50MP சோனி LYT600/IMX882 பிரதான கேமரா, 4K 30/60fps வீடியோ பதிவு மற்றும் பின்புறத்தில் 8MP சோனி IMX355 அல்ட்ரா-வைட் கேமரா; 16MP செல்ஃபி கேமரா இருக்கும் என்று கூறப்படுகிறது.

    * ஒன்பிளஸ் Nord CE 5 ஆனது 80W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 7,100mAh பேட்டரியைக் கொண்டிருக்கலாம். இது Nord CE 4 இன் 5,500mAh பேட்டரியை விட ஒரு பெரிய மேம்படுத்தலாக இருக்கும். ஆனால் சார்ஜிங் 100W இலிருந்து 80W ஆகக் குறையும்.

    • புதிய ஸ்மார்ட்போனிற்கு 2 ஆண்டுகள் OS அப்டேட்கள் மற்றும் 3 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
    • ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 12-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் .

    இன்ஃபினிக்ஸ் நிறுவனம், தனது GT சீரிசின் புதிய ஸ்மார்ட்போன் இன்ஃபினிக்ஸ் GT 20 Pro-வை, இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1.5K 144Hz AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் 12GB வரை ரேம் மற்றும் 12GB வரை விர்ச்சுவல் ரேம், மீடியாடெக் டிமென்சிட்டி 8350 அல்டிமேட் 5G பிராசஸர் கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் 6-அடுக்கு VC கூலிங் வசதியைக் கொண்டுள்ளது. இது அதன் முந்தைய மாடலை விட 13% பெரிய VC பகுதியைக் கொண்டுள்ளது. இது கிராஃப்டனால் சான்றளிக்கப்பட்ட 120FPS BGMI கேமிங் வசதி கொண்டிருக்கிறது. இது கேமிங் கண்ட்ரோல், எளிதான கேமரா செயல்பாடு மற்றும் விரைவான மீடியா பிளேபேக் வசதியை வழங்குகிறது.

    புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த XOS 15 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது. இதில் ஃப்ளோட்டிங் வின்டோ, டைனமிக் பார், கேம் மோட், கிட்ஸ் மோட், பீக் ப்ரூஃப் மற்றும் பல அம்சங்கள் உள்ளன. இதில் உள்ள ஃபோலாக்ஸ் ஸ்மார்ட் அசிஸ்டண்ட் வானிலை அப்டேட், கேமரா கண்ட்ரோல் மற்றும் சாட் வசதிகளை வழங்குகிறது.

    இந்த நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனிற்கு 2 ஆண்டுகள் OS அப்டேட்கள் மற்றும் 3 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சைபர் மெக்கா 2.0 டிசைன், பத்து விதங்களில் எல்இடி லைட்டிங் வசதி கொண்ட டார்க் ஃப்ளேர் நிற ஆப்ஷன் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை எல்இடி-க்களைக் கொண்ட பிளேட் ஒயிட் நிறத்திலும் வருகிறது.

    புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைடு கேமரா, 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 45W வேகமான சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி உள்ளது.

    இன்ஃபினிக்ஸ் GT 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 GB + 256 GB மாடலின் விலை ரூ. 24,999 மற்றும் 12 GB + 256 GB மாடலின் விலை ரூ. 26,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 12-ம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் .

    ஸ்மார்ட்போனுடன் கிட் வாங்குபவர்களுக்கு, ப்ரோ மேக்னடிக் கூலிங் ஃபேன் மற்றும் GT கேஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரத்யேக GT கேமிங் கிட் ரூ.1,199 சலுகை விலையில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இத்துடன் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ. 2000 தள்ளுபடி அல்லது எக்ஸ்சேஞ்சில் கூடுதலாக ரூ. 2000 தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

    • ஸ்மார்ட்போன் ஐஸ்-சென்ஸ் பிளாக் மற்றும் ஐஸ்-செ்ஸ் புளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
    • ரியல்மி GT 7 சீரிஸ் மாடல்களை வாங்குபவர்கள் ஒன்பது மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை சலுகை பெறலாம்.

    ரியல்மி GT 7 மற்றும் ரியல்மி GT 7T ஆகியவை இப்போது இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றன. ரியல்மி GT சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த வாரம் ரியல்மி GT 7 Dream Edition உடன் அறிமுகம் செய்யப்பட்டன. இது ஜூன் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரும். ரியல்மி GT 7 மீடியாடெக் டிமென்சிட்டி 9400e சிப்செட் கொண்டிருக்கிறது. ரியல்மி GT 7T மீடியாடெக் டிமென்சிட்டி 8400-Max சிப்செட்டைக் கொண்டுள்ளது.

    இவை 120W சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரி கொண்டுள்ளன. ரியல்மி GT 7 மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் ரியல்மி GT 7T இரட்டை பின்புற கேமரா அலகு பெறுகிறது.

    இந்தியாவில் ரியல்மி GT 7, ரியல்மி GT 7T விலை, விற்பனை சலுகைகள்

    ரியல்மி GT 7 மற்றும் ரியல்மி GT 7T தற்போது ரியல்மி இந்தியா வலைத்தளம் மற்றும் அமேசானில் விற்பனைக்கு கிடைக்கின்றன. ரியல்மி GT 7 இன் விலை 8GB + 256GB மெமரி மாடல் ரூ. 39,999 இல் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 12GB + 256GB மாடல் ரூ. 42,999 மற்றும் 12GB + 512GB ரூ. 46,999 ஆகும்.

    இந்த ஸ்மார்ட்போன் ஐஸ்-சென்ஸ் பிளாக் மற்றும் ஐஸ்-செ்ஸ் புளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் பழைய ஸ்மார்ட்போனினை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ. 3,000 மதிப்புள்ள உடனடி தள்ளுபடி, ரூ. 5,000 வரை தள்ளுபடி பெறலாம்.

    மறுபுறம், ரியல்மி GT 7T ஸ்மார்ட்போன் 8GB RAM + 256GB மாடல் ரூ. 34,999 விலையில் கிடைக்கிறது. இதன் 12GB+256GB மற்றும் 12GB+512GB மாடல்கள் விலை முறையே ரூ. 37,999 மற்றும் ரூ. 41,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஐஸ்-சென்ஸ் பிளாக், ஐஸ்-சென்ஸ் புளூ மற்றும் ரேசிங் யெல்லோ வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ரியல்மி நிறுவனம் ரூ. 3,000 வங்கி தள்ளுபடி மற்றும் ரூ. 6,000 வரை (எக்சேஞ்ச் தள்ளுபடி) வழங்குகிறது.

    ரியல்மி GT 7 சீரிஸ் மாடல்களை வாங்குபவர்கள் ஒன்பது மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை சலுகை பெறலாம். ரியல்மி GT 7-க்கான மாத தவண ரூ. 4,444-இல் தொடங்குகின்றன, மேலும் ரியல்மி GT 7T-க்கு ரூ. 3,889 ஆகும். அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ. 1,199 வரை கேஷ்பேக் கிடைக்கும்.

    ரியல்மி GT 7, ரியல்மி GT 7T அம்சங்கள்

    ரியல்மி GT 7 மற்றும் GT 7T இரண்டும் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ரியல்மி UI 6.0 உடன் வருகின்றன மற்றும் 32MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளன. இவை 120W சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. அவை நான்கு வருட OS அப்டேட் ஆறு வருட செக்யூரிட்டி அப்டேட் பெறும்.

    இந்த ஸ்மார்ட்போனில் 6.78-இன்ச் 1.5K (1,264×2,780 பிக்சல்) AMOLED டிஸ்ப்ளே 6,000 nits பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. மறுபுறம், ரியல்மி GT 7T அதே அளவிலான பீக் பிரைட்னஸ் மற்றும் ரிப்ரெஷ் ரேட் உடன் 6.80-இன்ச் (1,280×2,800 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

    இந்தியாவில் மீடியாடெக் டிமென்சிட்டி 9400e சிப்செட், ரியல்மி GT 7 ஸ்மார்ட்போனில் அறிமுகமாகியுள்ளது, அதே நேரத்தில் ரியல்மி GT 7T, டிமென்சிட்டி 8400-மேக்ஸ் சிப்செட் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் அதிகபட்சம் 12 GB ரேம் மற்றும் 512 GB வரை மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரியல்மி GT 7 ஸ்மார்ட்போனில் 50MP Sony IMX906 சென்சார், 50MP S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8MP OV08D10 அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. ரியல்மி GT 7T ஸ்மார்ட்போனில் 50MP Sony IMX896 சென்சார் மற்றும் 8MP OV08D10 அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா உள்ளது.

    • 13MP பிரைமரி கேமரா மற்றும் 5MP செல்ஃபி கேமரா மற்றும் ஏஐ சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது.
    • 4GB RAM மற்றும் 128GB மெமரி, யூனிசாக் T606 சிப்செட் கொண்டுள்ளது.

    லாவா போல்ட் N1 மற்றும் லாவா போல்ட் N1 ப்ரோ அடுத்த மாதம் இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கும். லாவா இன்னும் வெளியீட்டு தேதியை முறையாக அறிவிக்கவில்லை என்றாலும், புதிய போல்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை தேதி மற்றும் அம்சங்களை ஆன்லைன் வலைத்தளமான அமேசான் இந்தியா வெளியிட்டுள்ளது.

    அதன்படி புதிய லாவா ஸ்மார்ட்போன்கள் யூனிசாக் சிப்செட் மற்றும் 5,000mAh பேட்டரிகளுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. லாவா போல்ட் N1 டூயல் கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் லாவா போல்ட் N1 ப்ரோ மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

    லாவா போல்ட் N1, போல்ட் N1 ப்ரோ விலை

    இந்தியாவில் லாவா போல்ட் N1 மற்றும் லாவா போல்ட் N1 ப்ரோவின் அறிமுகத்தை விளம்பரப்படுத்த அமேசான் தனது வலைத்தளத்தில் ஒரு பிரத்யேக லேண்டிங் பக்கத்தை உருவாக்கியுள்ளது. ஜூன் 4 முதல் லாவா போல்ட் N1 ரூ.5,999 தொடக்க விலையில் வாங்குவதற்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், லாவா போல்ட் N1 ப்ரோ ஜூன் 2 முதல் ரூ.6,699 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும்.

    இ-காமர்ஸ் வலைத்தளத்தில் உள்ள பட்டியல் அவற்றின் வண்ணங்கள் மற்றும் அம்சங்கள் பற்றிய விவரங்களை வழங்குகிறது. லாவா போல்ட் N1 6.75-இன்ச் HD+ டிஸ்ப்ளேவுடன் ரேடியன்ட் பிளாக் மற்றும் ஸ்பார்க்லிங் ஐவரி வண்ண விருப்பங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.

    இது 13MP பிரைமரி கேமரா மற்றும் 5MP செல்ஃபி கேமரா மற்றும் ஏஐ சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் IP54 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை கொண்டிருக்கிறது.

    லாவா போல்ட் N1, 4GB RAM மற்றும் 64GB மெமரி, ஆக்டா-கோர் யூனிசாக் சிப்செட் கொண்டிருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 10W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

    லாவா போல்ட் N1 ப்ரோ IP54 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இத்துடன் ஸ்டெல்த் பிளாக் மற்றும் டைட்டானியம் பிளாக் வண்ணங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இது 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.67-இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இத்துடன் 4GB RAM மற்றும் 128GB மெமரி, யூனிசாக் T606 சிப்செட் கொண்டுள்ளது.

    கேமராவை பொறுத்தவரை லாவா போல்ட் N1 ப்ரோ மாடலில் 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று லென்ஸ்கள் உள்ளன. இது 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஓப்போ A5x 5G ஸ்மார்ட்போன் டூயல் சிலம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கலர்ஓஎஸ் 15 கொண்டிருக்கிறது.
    • ஸ்மார்ட்போன் MIL-STD தர மிலிட்டரி கிரேடு சான்று பெற்றுள்ளது.

    ஓப்போ A5x 5G ஸ்மார்ட்போன் நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 4GB வரை RAM மற்றும் 128GB வரை ஸ்டோரேஜ் உள்ளது. இது 1,000nits பிரைட்னஸ் கொண்டுள்ளது.

    நிறுவனத்தின் தகவலின்படி, ஓப்போ A5x 5G அதன் முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது 160 சதவீதம் அதிக உறுதி மற்றும் ஃபிளாக்ஷிப் கிரேடு ரீ-இன்ஃபோர்ஸ் செய்யப்பட்ட கிளாஸ் உடன் வருகிறது. இது IP65 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போ் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    இந்தியாவில் ஓப்போ A5x 5G விலை

    இந்தியாவில் ஓப்போ A5x 5G மாடலின் 4GB + 128GB விலை ரூ. 13,999 இல் தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளூ மற்றும் லேசர் ஒயிட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் மூலம் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் ரூ.1,000 உடனடி கேஷ்பேக் மற்றும் மூன்று மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகையை பெறலாம்.

    ஓப்போ A5x 5G அம்சங்கள்

    ஓப்போ A5x 5G ஸ்மார்ட்போன் டூயல் சிலம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கலர்ஓஎஸ் 15 கொண்டிருக்கிறது. இது 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 1,000nits பிரைட்னஸ் கொண்ட 6.67 இன்ச் 1604x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே கைவிரல் ஈரமாக இருக்கும் போதும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் 6nm முறையில் உருவாக்கப்பட்ட மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4GB வரை LPDDR4x RAM மற்றும் 128GB UFS 2.2 மெமரி வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 32MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார் என டூயல் கேமரா செட்டப் உள்ளது. முன்புறம் 5MP செல்ஃபி கேமரா உள்ளது.

    கனெக்டிவிட்டியை பொறுத்தவரை ஓப்போ A5x 5G-யில் 5G, டூயல் 4G VoLTE, Wi-Fi 5, ப்ளூடூத் 5.1, GPS, GLONASS மற்றும் USB Type-C ஆகியவை அடங்கும். இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் MIL-STD தர மிலிட்டரி கிரேடு சான்று பெற்றுள்ளது. மேலும், IP65 தரச்சான்று கொண்ட வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டணட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஓப்போ A5x 5G, 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான வசதியுடன் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    • ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 2.0 கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் 181 கிராம் எடை கொண்டது.

    சியோமி சிவி 5 Pro ஸ்மார்ட்போன் சியோமி 15S Pro உடன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்திய சிவி மாடல் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட் மற்றும் 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, லெய்கா பிராண்டிங் மற்றும் மூன்று கேமரா சென்சார்களை கொண்டுள்ளது.

    சீனாவில் சியோமி சிவி 5 Pro விலை 12GB + 256GB மாடல் CNY 2,999 (இந்திய மதிப்பில் ரூ. 35,700) இல் தொடங்குகிறது. 12GB + 512GB மாடலின் விலை CNY 3,299 (இந்திய மதிப்பில் ரூ. 39,300), அதே நேரத்தில் உயர்நிலை 16GB + 512GB RAM மாடல் CNY 3,599 (இந்திய மதிப்பில் ரூ. 42,800) இல் பட்டியலிடப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் பிளாக், செர்ரி பிளாசம் பிங்க், ஐஸ்ட் அமெரிக்கானோ, நெபுலா பர்பிள் மற்றும் வைட் நிற ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது.

    சியோமி சிவி 5 Pro அம்சங்கள்

    சியோமி சிவி 5 Pro ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் 1.5K (1236×2750 பிக்சல்) டிஸ்ப்ளே 120Hz ரிப்ரெஷ் ரேட், 3200 nits பிரைட்னஸ், HDR10+ மற்றும் டால்பி விஷன் உடன் வருகிறது. மைக்ரோ-கர்வ்டு OLED டிஸ்ப்ளே 1.6mm சீரான, குறுகிய பெசல்கள் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பைக் கொண்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் 4nm முறையில் உருவான ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16GB வரை LPDDR5X RAM மற்றும் 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 2.0 கொண்டுள்ளது.

    கேமராவை பொருத்தவரை சியோமி சிவி 5 Pro மாடலில் லெய்கா பிராண்டின் மூன்று கேமரா சென்சார்களை கொண்டுள்ளது. இதில் f/1.63 மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50MP கேமரா, 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ராவைடு-ஆங்கிள் லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் f/2.0, ஆட்டோ-ஃபோகஸ் ஆதரவுடன் 50MP கேமரா உள்ளது.

    சியோமி சிவி 5 Pro ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 67W வயர்டு சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5G, டூயல் 4G VoLTE, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, Beidou, Galileo, GLONASS, GPS, NavIC, NFC மற்றும் USB Type-C கனெக்டிவிட்டியுடன் கிடைக்கிறது.

    இது IR சென்சார், டால்பி அட்மாஸ் ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 181 கிராம் எடை கொண்டது.

    ×