என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெக்னோ போவா"

    • டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொன்றும் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன.
    • டைனமிக் கிரே, கீக் பிளாக் மற்றும் நியான் சியான் வண்ணங்களில் கிடைக்கிறது.

    டெக்னோ போவா 7 5ஜி சீரிஸ் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிசையில் டெக்னோ போவா 7 5ஜி மற்றும் டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி மாடல்கள் அடங்கும். இவை மீடியாடெக் நிறுவனத்தின் டிமென்சிட்டி 7300 அல்டிமேட் சிப்செட் கொண்டிருக்கின்றன. இத்துடன் 8 ஜிபி ரேம், 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி கொண்டுள்ளன.

    இரு ஸ்மார்ட்போன்களின் குறிப்பிடத்தக்க அம்சமாக இவற்ரின் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு புதிய மல்டி-பங்ஷனல் டெல்டா லைட் இன்டர்பேஸ் ஆகும். இவை பல இந்திய மொழிகளை ஆதரிக்கும் டெக்னோவின் "Ella AI" உடன் வருகிறது. புதிய போவா 7 5ஜி சீரிஸ் 4x4 MIMO மற்றும் VOWiFi டூயல் பாஸ் போன்ற கனெக்டிவிட்டி மேம்பாடுகளை ஆதரிக்கிறது.

    டெக்னோ போவா 7 5ஜி, போவா 7 ப்ரோ 5ஜி அம்சங்கள்:-

    டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1.5K (1,224×2,720) AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 4,500 nits பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. புதிய டெக்னோ போவா 7 5ஜி மாடலில் 6.78-இன்ச் Full-HD+ (1,080×2,460 பிக்சல்கள்) LTPS IPS பேனல் கொண்டுள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை டெக்னோ போவா 7 5ஜி மற்றும் போவா 7 ப்ரோ 5ஜி மாடல்களில் 4nm முறையில் உருவாக்கப்பட்ட மீடியாடெக் டிமென்சிட்டி 7300 அல்டிமேட் பிராசஸரால் இயக்கப்படுகின்றன. இத்துடன் 256 ஜிபி UFS 2.2 ரக ஸ்டோரேஜ் கொண்டுள்ளன. இதன் ப்ரோ வேரியண்ட் 8 ஜிபி LPDDR5 கொண்டுள்ளது. அதே வேளையில், பேஸ் மாடலில் 8 ஜிபி LPDDR4 RAM உடன் வருகிறது.

    இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைஓஎஸ் 15 உடன் வருகின்றன. மேலும் இந்தி, மராத்தி, தமிழ் மற்றும் பல இந்திய மொழிகளை ஆதரிக்கும் Ella AI சாட்போட்டை வழங்குகின்றன.

    புகைப்படங்கள் எடுக்க டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா மற்றும் ஒரு லைட் சென்சார் கொண்டுள்ளது. இதன் ப்ரோ மாடலில் 64MP சோனி IMX682 பிரைமரி கேமரா மற்றும் பின்புறத்தில் 8MP இரண்டாம் நிலை சென்சார் உள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 13MP செல்பி கேமரா கொண்டுள்ளது.

    டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொன்றும் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. அவை 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகின்றன. இதன் ப்ரோ மாடல் 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் வழங்குகிறது.

    இந்தியாவில் டெக்னோ போவா 7 5ஜி, போவா 7 ப்ரோ 5ஜி விலை, கிடைக்கும் தன்மை

    இந்தியாவில் டெக்னோ போவா 7 5ஜி விலை 8 ஜிபி + 128 ஜிபி ஆப்ஷன் விலை ரூ. 12,999 இல் தொடங்குகிறது. அதே நேரத்தில் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் கீக் பிளாக், மேஜிக் சில்வர் மற்றும் ஓயாசிஸ் கிரீன் வண்ணங்களில் வருகிறது.

    இதற்கிடையில், டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ரேம் மற்றும் சேமிப்பு உள்ளமைவுகளுக்கு முறையே ரூ. 16,999 மற்றும் ரூ. 17,999 விலையில் கிடைக்கிறது. இது டைனமிக் கிரே, கீக் பிளாக் மற்றும் நியான் சியான் வண்ணங்களில் கிடைக்கிறது.

    டெக்னோ போவா 7 5ஜி மற்றும் போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஜூலை 10 முதல் இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என்று நிறுவனம் கூறியது.

    ×