என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mobilephone"

    • ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டில் இயங்கும் என்று கூறப்படுகிறது.
    • வெளியீட்டு தேதி குறித்து விவோ இன்னும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    விவோ V60 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. விவோ V சீரிஸ் ஸ்மார்ட்போன் மலேசியாவின் SIRIM சான்றிதழ் வலைத்தளத்திலும் TUV SUD தளத்திலும் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இது புதிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்பதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்துகின்றன.

    இவை கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ V50 மாடலின் தொடர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட விவோ S30 போன்ற வன்பொருள் அம்சங்களுடன் இது அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டில் இயங்கும் என்று கூறப்படுகிறது.

    இதுவரை அறிவிக்கப்படாத விவோ V60, SIRIM மற்றும் TUV வலைத்தளங்களில் V2511 என்ற மாடல் நம்பரை கொண்டுள்ளதாக Xpertpick தெரிவித்துள்ளது . SIRIM சான்றிதழ் தொலைபேசியின் பெயரை உறுதிப்படுத்துகிறது, அதே நேரத்தில் TUV பட்டியல் 90W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று தெரிவிக்கிறது.

    இந்த சான்றிதழ் வலைத்தளங்களில் ஸ்மார்ட்போனின் தோற்றம், விவோ V60 விரைவில் ஆசிய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்பதைக் குறிக்கிறது. இருப்பினும், அதன் வெளியீட்டு தேதி குறித்து விவோ இன்னும் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

    கடந்த டிசம்பர் 2024 இல் சீனாவில் அறிமுகமான விவோ S20-இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக விவோ V50 பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறையை பின்பற்றி, வரவிருக்கும் விவோ V60 ஸ்மார்ட்போன் மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட விவோ S30-ஐ அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். இது ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    விவோ S30 ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் 1.5K (1,260×2,800 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளேவை 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 பிராசஸரில் 12 ஜிபி வரையிலான ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. இதில் 50MP பிரைமரி சென்சாருடன் மூன்று கேமரா யூனிட் கொண்டுள்ளது. இதில் 50MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது 90W பாஸ்ட் சார்ஜிங் வசதி, 6,500mAh பேட்டரி கொண்டுள்ளது.

    • டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொன்றும் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன.
    • டைனமிக் கிரே, கீக் பிளாக் மற்றும் நியான் சியான் வண்ணங்களில் கிடைக்கிறது.

    டெக்னோ போவா 7 5ஜி சீரிஸ் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வரிசையில் டெக்னோ போவா 7 5ஜி மற்றும் டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி மாடல்கள் அடங்கும். இவை மீடியாடெக் நிறுவனத்தின் டிமென்சிட்டி 7300 அல்டிமேட் சிப்செட் கொண்டிருக்கின்றன. இத்துடன் 8 ஜிபி ரேம், 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரி கொண்டுள்ளன.

    இரு ஸ்மார்ட்போன்களின் குறிப்பிடத்தக்க அம்சமாக இவற்ரின் பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு புதிய மல்டி-பங்ஷனல் டெல்டா லைட் இன்டர்பேஸ் ஆகும். இவை பல இந்திய மொழிகளை ஆதரிக்கும் டெக்னோவின் "Ella AI" உடன் வருகிறது. புதிய போவா 7 5ஜி சீரிஸ் 4x4 MIMO மற்றும் VOWiFi டூயல் பாஸ் போன்ற கனெக்டிவிட்டி மேம்பாடுகளை ஆதரிக்கிறது.

    டெக்னோ போவா 7 5ஜி, போவா 7 ப்ரோ 5ஜி அம்சங்கள்:-

    டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் 1.5K (1,224×2,720) AMOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் 4,500 nits பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. புதிய டெக்னோ போவா 7 5ஜி மாடலில் 6.78-இன்ச் Full-HD+ (1,080×2,460 பிக்சல்கள்) LTPS IPS பேனல் கொண்டுள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை டெக்னோ போவா 7 5ஜி மற்றும் போவா 7 ப்ரோ 5ஜி மாடல்களில் 4nm முறையில் உருவாக்கப்பட்ட மீடியாடெக் டிமென்சிட்டி 7300 அல்டிமேட் பிராசஸரால் இயக்கப்படுகின்றன. இத்துடன் 256 ஜிபி UFS 2.2 ரக ஸ்டோரேஜ் கொண்டுள்ளன. இதன் ப்ரோ வேரியண்ட் 8 ஜிபி LPDDR5 கொண்டுள்ளது. அதே வேளையில், பேஸ் மாடலில் 8 ஜிபி LPDDR4 RAM உடன் வருகிறது.

    இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைஓஎஸ் 15 உடன் வருகின்றன. மேலும் இந்தி, மராத்தி, தமிழ் மற்றும் பல இந்திய மொழிகளை ஆதரிக்கும் Ella AI சாட்போட்டை வழங்குகின்றன.

    புகைப்படங்கள் எடுக்க டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா மற்றும் ஒரு லைட் சென்சார் கொண்டுள்ளது. இதன் ப்ரோ மாடலில் 64MP சோனி IMX682 பிரைமரி கேமரா மற்றும் பின்புறத்தில் 8MP இரண்டாம் நிலை சென்சார் உள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 13MP செல்பி கேமரா கொண்டுள்ளது.

    டெக்னோ போவா 7 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொன்றும் 6,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. அவை 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகின்றன. இதன் ப்ரோ மாடல் 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் வழங்குகிறது.

    இந்தியாவில் டெக்னோ போவா 7 5ஜி, போவா 7 ப்ரோ 5ஜி விலை, கிடைக்கும் தன்மை

    இந்தியாவில் டெக்னோ போவா 7 5ஜி விலை 8 ஜிபி + 128 ஜிபி ஆப்ஷன் விலை ரூ. 12,999 இல் தொடங்குகிறது. அதே நேரத்தில் 8 ஜிபி + 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் கீக் பிளாக், மேஜிக் சில்வர் மற்றும் ஓயாசிஸ் கிரீன் வண்ணங்களில் வருகிறது.

    இதற்கிடையில், டெக்னோ போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ரேம் மற்றும் சேமிப்பு உள்ளமைவுகளுக்கு முறையே ரூ. 16,999 மற்றும் ரூ. 17,999 விலையில் கிடைக்கிறது. இது டைனமிக் கிரே, கீக் பிளாக் மற்றும் நியான் சியான் வண்ணங்களில் கிடைக்கிறது.

    டெக்னோ போவா 7 5ஜி மற்றும் போவா 7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஜூலை 10 முதல் இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என்று நிறுவனம் கூறியது.

    • ஹானர் மேஜிக் V5 ஸ்மார்ட்போன் ஜூலை 2 ஆம் தேதி சீனாவில் வெளியிடப்படுகிறது.
    • ஹானர் மேஜிக் V5 மடிக்கப்பட்ட நிலையில் 8.8 மிமீ தடிமன் கொண்டிருக்கும்.

    ஹானர் மேஜிக் V5 ஜூலை 2 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் ஹானர் நிறுவனம் அதன் வடிவமைப்பு மற்றும் அம்சங்களை வெளிப்படுத்தும் டீசர்களை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறது. சமீபத்திய சமூக வலைதள பதிவில், ஹானர் பிரான்டு வரவிருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா வழங்குவதை உறுதிப்படுத்தி இருக்கிறது.

    புதிய ஹானர் மேஜிக் V5 ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. மேலும் 6,100mAh பேட்டரியைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெய்போவில் வெளியாகி இருக்கும் புதிய டீசரில், ஹானர் மேஜிக் V5 மாடலில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 64-மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வரவிருக்கும் மாடல் சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டுள்ளது என்று நிறுவனம் கூறியது. கடந்த ஆண்டு ஹானர் மேஜிக் V3 ஸ்மார்ட்போன் 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் லென்ஸ் கொண்டிருந்தது.

    பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் தவிர, ஹானர் மேஜிக் V5 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைடு ஆங்கிள் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    ஹானர் மேஜிக் V5 ஸ்மார்ட்போன் ஜூலை 2 ஆம் தேதி சீனாவில் வெளியிடப்படுகிறது. இதில் 6,100mAh பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்- டான் கோல்ட், சில்க் ரோடு டன்ஹுவாங், வெல்வெட் பிளாக் மற்றும் வார்ம் ஒயிட் என நான்கு வண்ண விருப்பங்களில் விற்பனை செய்யப்படும். இது 12GB + 256GB, 16GB + 512GB, மற்றும் 16GB + 1TB மெமரி வெர்ஷன்களில் கிடைக்கும்.

    ஹானர் மேஜிக் V5 மடிக்கப்பட்ட நிலையில் 8.8 மிமீ தடிமன் கொண்டிருக்கும். இது உலகின் மிக மெல்லிய மற்றும் இலகுவான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும். இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராராகன் 8 எலைட் சிப்செட் வழங்கப்படுகிறது. மேலும், இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    • ஸ்மார்ட்போன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பையும் பெறுகிறது.
    • ஸ்மார்ட்போன் சைபர் சில்வர், ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் ஃபேண்டம் பிளாக் வண்ணங்களில் விற்பனை செய்யப்படும்.

    போக்கோ F7 5G இந்தியாவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளிலும் வெளியிடப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட், 6,000mm sq வேப்பர் கூலிங் சேம்பர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சியோமியின் ஹைப்பர் ஓஎஸ் 2.0 கொண்டிருக்கிறது.

    போக்கோ F7 5G அம்சங்கள்:

    போக்கோ F7 5G ஸ்மாரட்போன் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.83-இன்ச் 1.5K (1,280x2,772 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் HDR10+ சப்போர்ட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பைப் பெறுகிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் 12 ஜிபி வரை LPDDR5X ரேம், 512 ஜிபி வரை UFS4.1 மெமரி, ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 பிராசஸர் உள்ளது. போக்கோ F7 5G ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 2.0 உடன் வருகிறது. மேலும் நான்கு ஆண்டுகளுக்கு முக்கிய ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஆறு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி பேட்ச் பெறும் என்று சியோமி உறுதியளித்துள்ளது.

    இத்துடன் கூகுள் ஜெமினி மற்றும் சர்க்கிள் டு சர்ச் (Circle to Search) உள்ளிட்ட பல AI அம்சங்களையும், AI நோட்ஸ், AI இன்டர்ப்ரெட்டர், AI இமேஜ் என்ஹான்ஸ்மென்ட், AI இமேஜ் எக்ஸ்பான்ஷன் மற்றும் பல அம்சங்களுக்கு சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    கேமராவை பொருத்தவரை, போக்கோ F7 5G ஸ்மார்ட்போனின் பின்புறம் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ராவைடு லென்ஸ், 20MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பையும் பெறுகிறது.

    போக்கோ F7 5G இன் இந்திய வெர்ஷன் 7,550mAh பேட்டரி, 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இது பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

    கனெக்டிவிட்டிக்கு இந்த ஸ்மார்ட்போன் 5G, 4G, Wi-Fi 7, ப்ளூடூத் 6.0, GPS, NFC மற்றும் ஒரு USB டைப்- சி போர்ட் ஆகியவற்றை கொண்டிருக்கிறது.

    விலை விவரங்கள்:

    இந்தியாவில் போக்கோ F7 5G ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 31,999 இல் தொடங்குகிறது. இதன் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 33,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 1-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் சைபர் சில்வர், ஃப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் ஃபேண்டம் பிளாக் வண்ணங்களில் விற்பனை செய்யப்படும்.

    • ஹானர் மேஜிக் V5 மடிக்கப்பட்ட நிலையில் 8.8mm தடிமன் கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • ஹானர் மேஜிக் V5 அறிமுகம் ஜூலை 2 ஆம் தேதி சீனாவில் நடைபெற உள்ளது.

    ஹானர் மேஜிக் V5 அடுத்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு, சீன நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதில் அதன் வடிவமைப்பு மற்றும் வண்ண விருப்பங்களை வெளிப்படுத்துகிறது.

    வரவிருக்கும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்களையும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஹானர் மேஜிக் V5 மெல்லிய டிசைன் கொண்டிருக்கும். மேலும் 16 ஜிபி வரை ரேம் மற்றும் அதிகபட்சம் 1TB ஸ்டோரேஜ், நான்கு வண்ண விருப்பங்களில் விற்ப்பனைக்கு வரும்.

    ஹானர் மேஜிக் V5 சிறப்பம்சங்கள்:

    ஹானர் நிறுவனம் அதன் வெய்போ மற்றும் சீனா வலைதளத்தில் ஹானர் மேஜிக் V5 வடிவமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த போன் டான் கோல்ட், சில்க் ரோடு டன்ஹுவாங், வெல்வெட் பிளாக் மற்றும் வார்ம் ஒயிட் (சீன மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது) வண்ண விருப்பங்களில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி + 256 ஜிபி, 16 ஜிபி + 512 ஜிபி மற்றும் 16 ஜிபி + 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹானர் மேஜிக் V5 மடிக்கப்பட்ட நிலையில் 8.8mm தடிமன் கொண்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் இது உலகின் மிக மெல்லிய மற்றும் இலகுவான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்றும் கூறப்படுகிறது. மடிக்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போன் எடை குறித்த விவரங்களை ஹானர் வழங்கவில்லை. மடிக்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போன் வரவிருக்கும் விவோ X ஃபோல்ட் 5 ஐ விட மெல்லியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மடிக்கும்போது 9.2mm தடிமன் கொண்டிருக்கும்.

    ஹானர் மேஜிக் V5 அறிமுகம் ஜூலை 2 ஆம் தேதி சீனாவில் நடைபெற உள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மற்றும் 16 ஜிபி ரேம் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் IPX8-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பு மற்றும் 66W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,100mAh பேட்டரி இருக்கும். இந்த கைபேசியில் 6.45-இன்ச் LTPO OLED கவர் திரை மற்றும் 8-இன்ச் 2K இன்னர் டிஸ்ப்ளே வழங்கப்படலாம்.

    • 13MP பிரைமரி கேமரா மற்றும் 5MP செல்ஃபி கேமரா மற்றும் ஏஐ சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது.
    • 4GB RAM மற்றும் 128GB மெமரி, யூனிசாக் T606 சிப்செட் கொண்டுள்ளது.

    லாவா போல்ட் N1 மற்றும் லாவா போல்ட் N1 ப்ரோ அடுத்த மாதம் இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கும். லாவா இன்னும் வெளியீட்டு தேதியை முறையாக அறிவிக்கவில்லை என்றாலும், புதிய போல்ட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை தேதி மற்றும் அம்சங்களை ஆன்லைன் வலைத்தளமான அமேசான் இந்தியா வெளியிட்டுள்ளது.

    அதன்படி புதிய லாவா ஸ்மார்ட்போன்கள் யூனிசாக் சிப்செட் மற்றும் 5,000mAh பேட்டரிகளுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. லாவா போல்ட் N1 டூயல் கேமரா சென்சார்களை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் லாவா போல்ட் N1 ப்ரோ மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

    லாவா போல்ட் N1, போல்ட் N1 ப்ரோ விலை

    இந்தியாவில் லாவா போல்ட் N1 மற்றும் லாவா போல்ட் N1 ப்ரோவின் அறிமுகத்தை விளம்பரப்படுத்த அமேசான் தனது வலைத்தளத்தில் ஒரு பிரத்யேக லேண்டிங் பக்கத்தை உருவாக்கியுள்ளது. ஜூன் 4 முதல் லாவா போல்ட் N1 ரூ.5,999 தொடக்க விலையில் வாங்குவதற்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், லாவா போல்ட் N1 ப்ரோ ஜூன் 2 முதல் ரூ.6,699 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும்.

    இ-காமர்ஸ் வலைத்தளத்தில் உள்ள பட்டியல் அவற்றின் வண்ணங்கள் மற்றும் அம்சங்கள் பற்றிய விவரங்களை வழங்குகிறது. லாவா போல்ட் N1 6.75-இன்ச் HD+ டிஸ்ப்ளேவுடன் ரேடியன்ட் பிளாக் மற்றும் ஸ்பார்க்லிங் ஐவரி வண்ண விருப்பங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.

    இது 13MP பிரைமரி கேமரா மற்றும் 5MP செல்ஃபி கேமரா மற்றும் ஏஐ சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் IP54 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை கொண்டிருக்கிறது.

    லாவா போல்ட் N1, 4GB RAM மற்றும் 64GB மெமரி, ஆக்டா-கோர் யூனிசாக் சிப்செட் கொண்டிருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 10W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

    லாவா போல்ட் N1 ப்ரோ IP54 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இத்துடன் ஸ்டெல்த் பிளாக் மற்றும் டைட்டானியம் பிளாக் வண்ணங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இது 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.67-இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இத்துடன் 4GB RAM மற்றும் 128GB மெமரி, யூனிசாக் T606 சிப்செட் கொண்டுள்ளது.

    கேமராவை பொறுத்தவரை லாவா போல்ட் N1 ப்ரோ மாடலில் 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று லென்ஸ்கள் உள்ளன. இது 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஸ்பீக்கர் மற்றும் சிம் ட்ரே ஆகியவை அடிப்பகுதியில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
    • பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே மற்றும் பின்புற பேனலின் மேல் இடது புற மூலையில் கேமரா சென்சார்களை கொண்டுள்ளது.

    கடந்த ஆண்டு வெளியான சியோமி 15 சீரிஸ்-இன் மேம்பட்ட வெர்ஷனாக சியோமி 16 சீரிஸ் இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி வருகின்றன.

    அந்ச வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் CAD ரெண்டர் புதிய ஸ்மார்ட்போன் வடிவமைப்பைக் குறிக்கிறது. கசிந்த ரெண்டரில் சியோமி 16 மூன்று பின்புற கேமரா சிஸ்டத்துடன் காணப்படுகிறது. ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த தோற்றம் அதன் முந்தைய மாடலை போலவே காட்சியளிக்கும் என்று தெரிகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் டூயல் டோன் டிசைன் மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    டிசைனை பொருத்தவரை புதிய ஸ்மார்ட்போனின் தோற்றம் சியோமி 15 மாடலுடன் ஓரளவு ஒற்றுமையைக் கொண்டுள்ளது. இதில் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே மற்றும் பின்புற பேனலின் மேல் இடது புற மூலையில் கேமரா சென்சார்களை கொண்டுள்ளது. கேமரா பிரிவில் மூன்று சென்சார்கள், ஒரு LED ஃபிளாஷ் மற்றும் லைக்கா பிராண்டிங் காணப்படுகிறது. இத்துடன் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் ஸ்மார்ட்போனின் இடது புறத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    புதிய ஸ்மார்ட்போனின் ரெண்டர்களில் இந்த மாடல் டூயல் டோன் டிசைன் கொண்டிருக்கும் என்றும் சற்று வட்டமான விளிம்புகள் மற்றும் அனைத்து பக்கங்களிலும் குறுகிய பெசல்களை கொண்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஸ்பீக்கர் மற்றும் சிம் ட்ரே ஆகியவை அடிப்பகுதியில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    புதிய சியோமி 16 ஸ்மார்ட்போன் சியோமி 16 Pro உடன் செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட்டுடன் வரும் முதல் போன்கள் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறும் ஸ்னாப்டிராகன் நிறுவனத்தின் உச்சி மாநாட்டில் குவால்காம் நிறுவனம் இந்த பிராசஸரை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சியோமி 16 ஸ்மார்ட்போனில் 6.32-இன்ச் பிளாட் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 3 கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்களை கொண்டிருக்கலாம்.

    ஏற்கனவே வெளியான தகவலின்படி, சியோமி 16 இன் பேட்டரி திறன் சுமார் 7000mAh ஆக இருக்கும். சியோமி 16 மற்றும் சியோமி 16 Pro மாடலில் சமீபத்திய சிலிக்கான்-கார்பன் (Si/C) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஹானர் 400 மற்றும் ஹானர் 400 ப்ரோ இரண்டும் 7,200mAh பேட்டரி மூலம் செயல்படும்.
    • ஹானர் 400 சீரிசின் உலகளாவிய வேரியண்ட்கள் வெவ்வேறு பேட்டரி திறன்களைக் கொண்டுள்ளன.

    ஹானர் நிறுவனம் சீன சந்தையில் ஹானர் 400 மற்றும் ஹானர் 400 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனிற்கான புதிய டீஸர்களை ஹானர் பிராண்டு பகிர்ந்துள்ளது. டீசர்களில் புதிய ஸ்மார்ட்போன் சிரீஸின் பேட்டரி மற்றும் சிப்செட் விவரங்கள் தெரியவந்துள்ளது.

    இரண்டு ஸ்மார்ட்போன்களும் அவற்றின் முந்தைய சிரீசை விட கணிசமாக பெரிய திறன் கொண்ட பேட்டரிகளை வழங்கும் மற்றும் ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டிருக்கும். ஹானர் 400 சீரிஸ் வெளியீடு வருகிற 22-ந்தேதி சீனா தவிர்த்த மற்ற சந்தைகளில் நடைபெறும்.

    ஹானர் 400 சிரீஸ் சீனாவில் வருகிற 28-ந்தேதி மாலை 7:30 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 5:00 மணி) வெளியிடப்படும் . புதிய வரிசையில் மெட்டல் ஃபிரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் சிப்செட்கள் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெண்ணிலா ஹானர் 400 ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டில் இயங்கும். ஹானர் 400 ப்ரோ "புதிய தலைமுறை ஸ்னாப்டிராகன் ஃபிளாக்ஷிப் சிப்" பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 SoC ஆக இருக்கலாம்.

    ஹானர் 400 மற்றும் ஹானர் 400 ப்ரோ இரண்டும் 7,200mAh பேட்டரி மூலம் செயல்படும். இது கடந்த ஆண்டு வெளியான ஹானர் 300 தொடரின் 5,300mAh பேட்டரியிலிருந்து குறிப்பிடத்தக்க மேம்படுத்தலாக இருக்கும்.

    ஹானர் 400 தொடர் சிறப்பம்சங்கள்:

    ஹானர் 400 சீரிசின் உலகளாவிய வேரியண்ட்கள் வெவ்வேறு பேட்டரி திறன்களைக் கொண்டுள்ளன. ஹானர் பிரிட்டன் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளபடி, ஹானர் 400 மற்றும் ஹானர் 400 ப்ரோ 6,000mAh பேட்டரிகளைக் கொண்டுள்ளன. ப்ரோ மாடல் 100W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் வெண்ணிலா மாடல் 80W வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

    ஹானர் 400 ப்ரோ ஸ்மார்ட்போன் லூனார் கிரே, மிட்நைட் பிளாக் மற்றும் டைடல் ப்ளூ ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. பின்புறத்தில் 200MP பிரைமரி சென்சார், 50MP டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 12MP அல்ட்ரா-வைட் சென்சார் கொண்ட மூன்று கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 50MP செல்ஃபி கேமரா உள்ளது. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்சண்ட் வசதிக்காக இந்த போன் IP68 + IP69 சான்றளிக்கப்பட்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டில் இயங்கும்.

    ஹானர் 400 டெசர்ட் கோல்ட், மிட்நைட் பிளாக் மற்றும் மீடியோர் சில்வர் நிறங்களில் கிடைக்கும். இது 200MP பிரைமரி கேமரா மற்றும் 12MP அல்ட்ரா-வைட் கேமரா உள்ளிட்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 50MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது மற்றும் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 SoC கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் IP66-தரச் சான்று பெற்றுள்ளது.

    ஹானர் 400 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 5,000-நிட் பீக் பிரைட்னஸ், 1,280x2,800 பிக்சல்கள் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட்கொண்ட டிஸ்ப்ளேக்களைக் கொண்டதாக பட்டியலிடப்பட்டுள்ளன.

    ஹானர் 400 மற்றும் ஹானர் 400 ப்ரோ ஆகியவை மே 22 ஆம் தேதி ஐரோப்பிய சந்தைகளில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

    • 18 வயது பூர்த்தியடையாத இளம் வயதினருக்கும் எளிதாக மொபைல்போன்களில் ஆபாச படங்கள் கிடைக்கிறது.
    • ஸ்பெயினில் வசிக்கும் 15 வயதிற்குட்பட்டோரில் பாதிப் பேர் ஆபாச இணையதளங்களில் படங்கள் பார்க்கின்றனர்.

    இப்போது கையில் உள்ள மொபைல்போன்களில் வழியாக ஆபாச இணையதளங்களில் பலரும் ஆபாச படங்களை பார்க்கின்றனர். 18 வயது பூர்த்தியடையாத இளம் வயதினருக்கும் எளிதாக மொபைல்போன்களில் ஆபாச படங்கள் கிடைக்கிறது.

    இந்நிலையில், 18 வயதிற்கும் குறைவான இளம்வயதினர் இணையதளங்களில் ஆபாச படங்கள் பார்ப்பதை தடுத்துநிறுத்தும் வகையில் பார்ன் பாஸ்போர்ட் என்ற புதிய அம்சம் ஸ்பெயின் நாட்டில் அறிமுகமாகவுள்ளது.

    ஸ்பெயினில் வசிக்கும் 15 வயதிற்குட்பட்டோரில் பாதிப் பேர் ஆபாச இணையதளங்களில் படங்கள் பார்க்கின்றனர் என்று தெரிவித்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பார்ன் பாஸ்போர்ட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார்.

    இதன்படி ஸ்பெயின் நாட்டில் வசிப்பவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த பார்ன் பாஸ்போர்ட்ஆப்பை பதிவிறக்கம் செய்யவேண்டும். அந்த ஆப் அவர்களது வயதை உறுதிப்படுத்தும். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை கொண்டு அவர்களது வயது சரிபார்க்கப்படும். விரைவில் இந்த ஆப் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பயனாளர்களின் வயது சரிபார்க்கப்பட்ட பின்பு, அவர்களுக்கு மாதந்தோறும் 30 கிரெடிட்களை வழங்கும். ஒவ்வொரு கிரெடிட்டும் ஆபாச இணையதளங்களை அணுகுவதற்கு QR குறியீட்டை உருவாக்கும்.

    • 2014-ம் ஆண்டில் 25 கோடி சந்தாதாரர்கள் மட்டுமே இணையதள சேவையை பயன்படுத்தினர்.
    • தற்போது இணையதள சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 97.44 கோடியாக உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, அனைத்து செல்போன் நிறுவனங்களும் கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதி கட்டணத்தை உயர்த்தின. அது மத்திய அரசுக்கு தெரியுமா? இதனால் செல்போன் பயன்படுத்துவோருக்கு ரூ.34,000 கோடி கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டண உயர்வை மத்திய அரசால் தடுக்க முடியாதா? என்றார்.

    அப்போது, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்தார். அவர் கூறியதாவது:

    செல்போன் கட்டணம் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 5ஜி சேவையை வேகமாக அறிமுகப்படுத்துவதற்கு போட்ட முதலீடே அதற்கு காரணம்.

    ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அந்த முதலீட்டை திரும்ப எடுக்க வேண்டி இருக்கிறது. 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட 22 மாதங்களில் 98 சதவீத மாவட்டங்களில் 82 சதவீதம் பேரை சென்றடைந்துள்ளது.

    நம் நாட்டில் 2014-ல் 90 கோடி செல்போன் சந்தாதாரர்கள் இருந்தனர். இன்று 116 கோடி செல்போன் சந்தாதாரர்கள் உள்ளனர். கடந்த 2014ல் 25 கோடி சந்தாதாரர்கள் மட்டுமே இணையதள சேவையை பயன்படுத்தி வந்தனர். இன்று இணையதள சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 97.44 கோடியாக உயர்ந்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டில் ஒரு ஜிபி பிராட்பேண்ட் (வேகம்) இணையத்தின் விலை ஒரு ஜி.பி.க்கு ரூ.270 ஆக இருந்தது. இது தற்போது ஒரு ஜிபிக்கு ரூ.9.70 ஆக குறைந்துள்ளது.

    நுகர்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது கட்டணங்களை கண்காணிப்பது அவசியம். போட்டியை ஊக்குவிக்கும் அரசின் கொள்கைகளே இந்தக் கட்டண குறைவுக்கு காரணம். இந்த குறைவு, குறிப்பாக கிராமப்புறங்களில் செல்போன் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறது.

    தொலைதொடர்பு சேவைகள் அனைத்து குடிமக்களுக்கும் மலிவு விலையில் கிடைப்பதை அரசு உறுதி செய்து வருகிறது. உலகிலேயே இந்தியாவில்தான் அழைப்பு கட்டணமும், டேட்டா கட்டணமும் மலிவாக உள்ளது என தெரிவித்தார்.

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த நோக்கியா 8110 4ஜி மொபைல் போனின் விற்பனை இந்தியாவில் துவங்கியது. #nokia8110


     
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 8110 4ஜி ஃபீச்சர் போன் மாடலை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், இதன் விற்பனை இந்தியாவின் பிரபல விற்பனையாளர்கள் மற்றும் நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    முன்னதாக நோக்கியா 8110 4ஜி மொபைல் போன் 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நோக்கியா மொபைலில் 2.4 இன்ச் QVGA வளைந்த டிஸ்ப்ளே, இன்ட்யூட்டிவ் டேக்டைல் மெக்கானிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு அழைப்புகளை ஏற்கவும், நிராகரிக்கும் ஸ்லைடரை பயன்படுத்தலாம்.

    நோக்கியா 8110 4ஜி மொபைலில் 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 205 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கூகுள் அசிஸ்டன்ட், கூகுள் சர்ச், கூகுள் மேப்ஸ், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற செயலிகள் வழங்கப்பட்டுள்ளது. நோக்கியாவின் பிரபல ஸ்னேக் கேம் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இந்த மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.



    நோக்கியா 8110 4ஜி சிறப்பம்சங்கள்:

    - 2.4 இன்ச் 320x24 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
    - 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல்-கோர் குவால்காம் 2015 பிராசஸர்
    - அட்ரினோ 304 GPU
    - 512 எம்.பி. ரேம்
    - 4 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கை ஓ.எஸ். சார்ந்த ஸ்மார்ட் அம்சம்
    - 2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - ட்ரிப் பாதுகாப்பு (IP52)
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 2.0
    - 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    நோக்கியா 8110 4ஜி மொபைல் பிளாக் மற்றும் எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் புதிய நோக்கியா மொபைல் விலை ரூ.5,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×